Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்பட பிரசாரம் ஆக 10, 2014 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்படம் ஒன்றை வெளியிட உள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இவ்வாறு திரைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட உள்ளது. “உடைந்த தேசத்திலிருந்து ஆசியாவின் ஆச்சரியம் நோக்கி” என்ற பெயரில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த திரைப்படத்தில் விபரிக்கப்பட உள்ளது. 30 ஆண்டு கால போரை முடிவுக்குக்கொண்டு வர தடையாக அமைந்த காரணிகள் தொடர்பில் திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்க…

  2. அஹங்கம, உக்ஹல்வல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த தேரர் ஒருவர் காணாமற்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தூக்கிட்ட நிலையில் குறித்த தேரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 45 வயதான தேரர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (அத தெரண - தமிழ்) http://tamil.adaderana.lk/news.php?nid=60211

  3. வவுனியா ஓமந்தைப் பிள்ளையார் கோயிலில் புத்தருக்கு கோயில் கட்டவேண்டும். எனவே புனரமைப்பு பணிகளை கைவிடுங்கள் என்று இராணுவத்தினர், நிர்வாகத்தினரைத் தடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்யும் பொருட்டு ஓமந்தை பிள்ளையார் கோயில் புனரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வசந்த மண்டபம், தீர்த்தக் கேணி என்பன அமைக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்துக்கு சென்ற இராணுவத்தினர், ஆலயக் காணி தங்களுக்கு உரியது என்றும் அதில் தாம் புத்த கோயில் கட்டப்போகிறோம், நீங்கள் புனரமைப்பு பணிகளைக் கைவிடுங்கள் என்றும் மிரட்டியுள்ளனர். எனினும் ஓமந்தைப் பிள்ளையார் கோயில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்தது என்று கூறிய ஆலய நிர்வாகத்தினர், இராணுவத்…

  4. இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை, உயர்பாதுகாப்பு வலயம் எதற்கு? - நாடாளுமன்றில் சம்பந்தன் கேள்வி. [Friday 2014-08-08 09:00] முன்னர் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்களைக் காரணம் காட்டி உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்தீர்கள். இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை. பின்னர் ஏன் நில அபகரிப்பைத் தொடருகின்றீர்கள்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் தனது உரையில், காணிகளை இழந்த மக்களுக்கு ஆட்சியுரிமைச் சட்டமூலம் சாதகமாக அமைந்தால…

  5. ஆபிரிக்காவில் பரவிவரும் இபோலா வைரஸ் காரணமாக லைபீரியாவில் இருக்கும் இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு லைபீரியாவுக்கு இலங்கை பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கையும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். லைபீரியாவில் சுமார் 200 இலங்கை பணியாளர்கள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவர்களை உறவினர்கள் ஊடாக நாட்டுக்கு திருப்யழைப்பதற்கான ஒழுங்குகளை செய்திவருவதாக அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். http://udakam.com/archives/17801

  6. சுகாதாரக் குழுக் கூட்டம் என உத்தியோகத்தர்களை ஒன்று கூட்டிய யாழ்.மாநகர சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் மங்களநேசன் அமைச்சர் டக்ளஸின் புகழ்பாடியதுடன் அடுத்த தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தையும் நடத்தினார். யாழ்.மாநகர சபையின் சுகாதாரக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் சுகாதாரக் குழுத்தலைவர் அ.ம.மங்களநேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர சபையின் ஆட்சிக் காலம் முடியும் இறுதிக் கூட்டமாக இருப்பதால் உத்தியோ கத்தர்களை ஒன்றுகூட்டிய அவர் அங்கு சுகாதாரம் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவிக்காமால் அங்கு தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குற்றஞ்சாட்டுவதாகவும் கடந்த கால அரசியல் தலைவர்களையும், சமயப் பெரியார்களையும் குறை கூறுவதாகவும் அவரது பேச்சு அமைந்திருந்தத…

  7. முன்னாள் இந்திய வெளியூறவு அமைச்சர் நட்வர்சிங் அண்மையில் வெளியிட்டிருக்கும் நூல் சர்ச்சைகளைக் கிளம்பியுள்ளது. ‘ஒரு வாழ்க்கை போதாது’ என்ற தலைப்பிலான அந்த நூலில் ‘சிறிலங்காவின் அவலம்’ என்ற ஓர் அத்தியாயம் உண்டு. அதில், ஈழப் போர் தொடர்பில் அப்போதிருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகளைக் குறித்து நட்வர்சிங் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். ராஜீவ் காந்தி தகுதியான ஆலோசகர்களை தனக்கருகில் வைத்துக்கொள்ளவில்லை என்றும், விடுதலைப் புலிகளைக் குறித்து சரியான மதிப்பீடு இந்தியப் படைத்துறையிடம் இருக்கவில்லை என்றும் முடிவுகளை எடுக்கும் போது ராஜீவ் காந்தி சாகச உணர்வுடன் செயற்பட்டார் என்றும் குறிப்பாக, சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்கும் போது கூட்டுத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பத…

  8. இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நாட்டுக்கு அவமானம்! - ஐதேக கூறுகிறது. [sunday 2014-08-10 09:00] பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை தொடர்பாக இந்தியப் பிரதமரிடம் மன்னிப்பு கோரியது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானம் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதுக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவ்வாறான செயலானது, வெளிவிவகார அமைச்சின் செயற்பாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகிறது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் அரசியல் பேதமின்றி செயற்பட வேண்டும். இதுதவிர, பிற நாடுகள் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இதன்காரணமாக, குறித்த சம்பவத்தின் …

  9. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் அயல் நாடான இந்தியாவை இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற பாரதிய ஜனாதாக் கட்சி இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதில் தெளிவாக இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் விவசாய விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் அலுவலகத் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (09) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சமீபத்தில் நாங்கள் இந்தியாவுக்குச் சென்று பாரதிய ஜனதாக் கட்சியின் செயலாளர் நாயகம் கூட்டிய மாநாட்டில் பங்குபற்றியிருந்தோம். இதன்போது, இலங்கை முஸ்லிம்கள் பற்றிய விடயத்தில் அவர்கள்; தெளிவ…

  10. Started by தமிழரசு,

    தெற்காசிய நீதித்துறையில் சுற்றுசூழல் நீதி என்பது தொடர்பான வட்டமேசை மாநாடு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்: (பட உதவி: ஜனாதிபதி செயலகம்) http://tamil.dailymirror.lk/--main/121216-2014-08-08-08-55-47.html

  11. இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்கள் இன்று மெளனிக்கப்பட்ட நிலையிலும், போரைச் சாட்டாக வைத்து இராணுவம் வடக்கு, கிழக்கைப் பலவிதத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. பயத்தின் காரணத்தால் மக்கள் ஆயுதம் ஏந்தியவரை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். ஜனநாயகம் துளிர் பெற்றிருந்த இந்த நாட்டில் ஆயுத கலாசாரம் படம் எடுத்து ஆடத் தொடங்கி இன்று விசித்திரமான விதங்களில் விதை போட்டுப் பயிராகிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் 'அ' பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இ…

  12. கோத்தபாய போர்க்குற்றவாளி என்றால் ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்! - சவால் விடுகிறார் பிரிகேடியர் வணிகசூரிய. [sunday 2014-08-10 10:00] இலங்கைக்குள் அத்துமீறிய விசாரணைக்கான செயற்பாடுகளை யார் மேற்கொள்வதற்கும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளர் போர்க்குற்றவாளி என்றால் ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதெனின் அவை தொடர்பில் தீர்மானிக்க இலங்கையின் ஆணைக்குழு செயற்பட்டு வருகின்றது. அதையும் மீறி நிபுணர் குழுவினையும் அரசாங்கமே நியமித்துள்ளது. இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்னமும் முழ…

  13. நிதியமைச்சு உத்தரவுக்கு முரணாக முஸ்லிம் நாடுகளிடம் நிதியுதவி கோருகிறார் அமைச்சர் ரிசாத்! - கொழும்பு ஊடகம். [sunday 2014-08-10 09:00] நிதியமைச்சின் உத்தரவுக்கு முரணாக,அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்ந்தும் வெளிநாடுகளிடம் இருந்து நிதி உதவிகளைப் பெற முயற்சிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து திட்டம் ஒன்றுக்காக 130 மில்லியன் ரூபாவை அமைச்சர் கோரியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் அவர், வடக்கில் உள்ள முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்காக பஹ்ரெய்ன், சவூதி அரேபியா மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளிடம் நிதியுதவி கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துரைத்துள்ள அமைச்சர் ரிசா…

  14. போர்க்குற்றச் சாட்சியங்களை கூட்டமைப்பு மூலமும் வழங்கலாம்! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் [sunday 2014-08-10 09:00] இறுதிப்போர் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க விரும்புவோர், சரியான தொடர்புகள் கிடைக்காவிடின், சாட்சியங்கள் தொடர்பிலான ஆவணங்களை தம்மிடம் வழங்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. நியமித்துள்ள நிபுணர் குழுவினர் மேற்கொண்டு வரும் விசாரணையை நாம் வரவேற்கிறோம். அந்த குழுவிடம் சாட்சியமளிப்பத…

  15. எனது பொறுமையை பலவீனமாக கருதினால் விளைவு விபரீதமாகும்! - கூட்டமைப்பை எச்சரிக்கிறார் ஜனாதிபதி. [sunday 2014-08-10 10:00] எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் அலரி மாளிகையில் வைத்து, அரசார்பு தமிழ் நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டுமொரு பேச்சுவார்த்தையை நடத்தத் தயாராக உள்ளதா? என்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார். இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர…

    • 1 reply
    • 624 views
  16. மேற்குலகிற்கு எதிரான உணர்வுகள் இலங்கையில் தீவிரமடைவதற்கான வாய்ப்புள்ளதால் தனது பிரஜைகளை மிகக்கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுதொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான எச்சரிக்கையொன்றை அமெரிக்கா விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில், இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஐ.நா. மற்றும் மேற்குலகுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், காஸா நிலவரம், சிவில் சமூகத்தினருக்கு எதிரான நெருக்கடிகள், பத்திரிகையாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் போன்றன இலங்கையில் அதிகரித்துள்ளன. அத்துடன் அமெரிக்க நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போன்றவற்றுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறன. எனவே இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் தங்களது பாதுகாப்பை …

  17. ஆபிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா எனப்படும் வைரஸ் நோய் காரணமாக, லிபியாவில் தொழில் புரியும் இலங்கையர் 200 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/121326-200-.html

  18. ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014 - 10:50 மணி தமிழீழம் | வேந்தன் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் பாரிய சிங்களக் குடியேற்றங்கள்! திருகோணமலையில் உள்ள, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு புதிய வீதி ஒன்று அமைக்கப்படுவது, அந்தப் பகுதியில் பாரிய சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று தமிழ் மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. திருகோணமலை - அனுராதபுரம் வீதியில், இருந்து பிரிந்து செல்லும் வீதி வழியாகவே, கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான போக்குவரத்து நடைபெறுகிறது. தற்போது, அதற்குப் பதிலாக அதே வீதியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் சந்தா புர வீதி என புதிய வீதியொன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பாதையில் சுமார் 1000 ஏக்கர் வரையான அரச காணிகள…

  19. போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனை நிச்சயம்! - என்கிறார் இராணுவத்தளபதி [sunday 2014-08-10 10:00] நம்பகமான போர்க்குற்ற விசாரணைகளின் போது எவராது குற்றம் இழைத்தவராக கண்டுபிடிக்கப்பட்டால், உரிய தண்டனை வழங்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்ற விசாரணைக்காக புதிய வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்துக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. இலங்கை இராணுவம் ஒழுக்கமுள்ள இராணுவம் என்ற அடிப்படையில் அது தமது கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றும். உலகில் வேறெங்கும் செயற்படாத மிகவும் அபாயகரமான இயக்கத்துடன் இலங்கை இராணுவம் சண்டையிட…

  20. ஜனாதிபதி அழைத்தால் அரசியலுக்கு வருவேன்! - மீண்டும் பச்சைக்கொடி காட்டுகிறார் கோத்தபாய [sunday 2014-08-10 10:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுமதியளித்தால் அரசியலில் ஈடுபடுவேன் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அழைத்தால் அரசியலில் ஈடுபடுவேன். இல்லையென்றால் நாட்டுக்காக தொடர்ந்தும் ஏனைய வழிகளில் சேவையாற்றுவேன். அரசியலில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்ததன் பின்னரே எங்கு எவ்வாறு போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்க முடியும். ஜனாதிபதியின் சகோதரர் என்ற போதிலும் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிழையாக பயன்படுத்த மாட்டேன். மக்…

  21. இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது - கேர்ணல் ஹரிகரன்:- 10 ஆகஸ்ட் 2014 “சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்காதது. மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் குறித்த வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்காததுமே இலங்கை அரசாங்கத்தின் பாரிய இரு தவறுகள் என இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி கேர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இந்த இரு தவறுகள் காரணமாக ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகிழ்சியற்ற சூழுல் நிலவுகின்ற போதிலும் தமிழர்கள் தமிழீழம் சாத்தியம…

  22. கோவையில் இன்று (10.8.2014) பொருளியல் மாநாட்டில் ராஜபக்சேவின் இலங்கை அரசின் கைக்கூலி தமிழின துரோகி சுப்பிரமணியன் சாமி பேசக்கூடாது,கோவைக்குள் நுழையக்கூடாது என வலியுறுத்தி இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/33036/57/60/d,article_full.aspx

    • 0 replies
    • 304 views
  23. அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை சர்வதேச செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டனர். நெல்சன் அழைக்கப்படும் தமிழர் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது. அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். விடுதலைப் புலிகளுக்கு நீ பணம்கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா என கேட்…

    • 22 replies
    • 1.3k views
  24. 2013ம் ஆண்டில் முப்படையினரின் சம்பளங்களுக்காக 73 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது 2013ம் ஆண்டில் முப்படையினரின் சம்பளங்களுக்காக 73.17 பில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது. இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் சம்பளக் கொடுப்பனவிற்காக இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்தி; மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு அமைச்சிற்கு பாரியளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற …

    • 0 replies
    • 260 views
  25. முகமாலைவாசியாகிய சபரகமுவ பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன் சந்திரகுமார் சுதர்சன் ரீஐடியினரால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பல்கலைக்கழக விடுதியில் வைத்து தாக்கப்பட்டிருந்த இந்த மாணவன் இரத்தினபுரி வைத்தியசாலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் குணமடைந்துள்ளதாகக் கூறி வைத்தியர்கள் அவரை பலாங்கொடை வைத்தியசாகை;கு அனுப்பி வைத்திருந்தனர். அங்கி;ருந்து அவர் வெளியில் செல்ல முயன்றபோது, வைத்தியசாலை பொலிசார் அவரைக் கொண்டு சென்று விசாரணை செய்ததுடன், சபரகமுவ பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் மேல் விசாரணைக்ககாக ஒப்படைக்கப்பட்டிருந்தார். அந்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற ரீஐடியினர் அவரை இன்று பகல்…

    • 0 replies
    • 369 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.