ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகளவானவர்கள் பொருளாதாரப் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அண்மையில் கடலில் வைத்து மீட்கப்பட்ட 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட நாட்களாக கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அண்மையில் மேற்கு அவுஸ்திரேலியாவின் குர்டெய்ன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு;ள்ளனர். இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் வ…
-
- 0 replies
- 295 views
-
-
இன்றைய தினம் ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என்னுடைய உளமார்ந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் உவகையடைகின்றேன். றம்ழான் மாதம் முழுவதும் பகல் வேளைகளில் உண்ணாமல், பருகாமல் பசித்திருந்து, இரவு வேளைகளில் இறைவனை நின்று வணங்கி ஒரு உன்னதமான கடமையினை நீங்கள் எல்லோரும் நிறைவேற்றி அதன் இறுதியில் பெருநாளைக் கொண்டாடுகின்றீர்கள். இந்துக்களும் கிறீஸ்தவர்களும் கூட விரதங்களுக்கு முக்கிய இடம் அளிக்கின்றார்கள்.வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி வைத்து வாழ்தல் கிறீஸ்தவ பண்பு.நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் எதுவும் உண்ணாமல் நீராகாரம் மட்டும் சிலகுறிப்பிட்ட வேளைகளில் அருந்தி நவராத்திரி ஒன்பது நாட்களையும் கந்த சஷ்ட…
-
- 0 replies
- 688 views
-
-
ஞானசார தேரர் , சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்க! 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள்! [Monday 2014-07-28 08:00] பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்யுமாறு கோரி 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள் அமெரிக்காவிலுள்ள முகநூல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தகவலகள் வெளிவந்துள்ளன. பொதுபல சேனாவின் முகநூலினை தடைசெய்யுமாறு கோரி சுமார் 50 இலட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், பங்களாதேஷ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோருடன் அடிப்படைவாதிகள் ஒன்றிணைந்தே இந்தக் கார…
-
- 0 replies
- 467 views
-
-
உலக நாடுகளில் மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கையில் இலங்கை மீது கடும் கண்டனங்கள் இடம்பெறலாம்? 28 ஜூலை 2014 உலக நாடுகளில் மத சுதந்திரம் குறித்த அதன் அறிக்கையை அமெரிக்கா வெளியிடவுள்ள அதேவேளை குறிப்பிட்ட அறிக்கையில் இலங்கை நிலவரம் குறித்து கடும் கண்டனங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வெளிவிவகார செயலரால் வெளியிடப்பட உள்ள அறிக்கையில் இலங்கையில் 2013 இல் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பொது பல சேனா உட்பட ஏனைய தீவிர பௌத்த மத அமைப்புகள் குறித்தும் அவற்றால் மத சுதந்திரத்திற்கு உருவாக கூடிய ஆபத்துக்கள் பற்றியும் தெரிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ht…
-
- 0 replies
- 320 views
-
-
வெளி அழுத்தங்கள் வெற்றி தருமா? – வீரகேசரி தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருக்கின்றன. நாளாந்த வாழ்க்கையில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கோ அல்லது புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கோ உரிய சாதகமான நிலைமைகளைக் காணமுடியவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய திசையை நோக்கிய அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்குரிய அறிகுறிகளும் தென்படவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறிக்கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் மட்டுமே தீர்வுக்கான பேச்சுக்கள் நடத்தப்படும். நாடாளுமன்ற…
-
- 0 replies
- 358 views
-
-
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக விருப்பமின்றி பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்த நேரிடும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்றத் தேர்தல்களை முன்னதாக நடாத்த நேரிடலாம் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சுப் பதவிக்கான கடமைகளை செய்யாது சிலர் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குற்றம…
-
- 1 reply
- 611 views
-
-
இலங்கைத் தமிழர்களைச் சொல்லி அரசியல் செய்ய காங்கிரசும் தயார்!? இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினை குறித்து இந்தியாவில் விசாரணை நடத்த வரும் ஐ.நா. குழுவுக்கு, பாஜக அரசு விசா வழங்கி, விசாரணை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை கடற்படையினரின் தவறான அணுகுமுறையால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஜூன் மாதம் முதல், இதுவரை 258 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் கூட…
-
- 0 replies
- 1k views
-
-
மறைப்பதற்கு எதுவும் இல்லை’; சாட்சியமளிக்கத் தயார் – எரிக் அறிவிப்பு! சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழு முன்பாக தாம் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். “மறைப்பதற்கு எதுவும் இல்லை. எனக்கு என்ன தெரியுமோ அவற்றை சிறிலங்கா அரசாங்க ஆணைக்குழு முன்பாக பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால், தகவல்களை வழங்குவதற்கு நான் முன்வருவேன்” என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஐ.நா விசாரணைக் குழு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilleader.com/?p=38120
-
- 0 replies
- 455 views
-
-
தோல்வியைத் தழுவும் இலங்கை அரசின் இராஜதந்திரப்போர்! - கொழும்பு ஆங்கில வாரஇதழ். [sunday 2014-07-27 20:00] இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர போர், தோல்வியடைந்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததாக கூறப்பட்ட பின்னர், போர்க்குற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணையோ அல்லது சர்வதேச விசாரணையோ நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.படையினரின் வெற்றியை பாதித்து விடலாம் என்ற அடிப்படையில் இந்த கருத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும் பின்னர் ஒரு கால கட்டத்தில் உள்நாட்டு விசாரணையை அரசாங்கம் ஏற்படுத்தப் போவதாக கூறியது. அதனை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சர்வதேச விசாரண…
-
- 1 reply
- 526 views
-
-
சர்வதேச பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் கட்டாய தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதேபோல் சர்வதேச பாடசாலைகளில் இதிகாசங்கள் மற்றும் அவரவர் சமய விடயங்கள் தொடர்பிலும் கற்பிக்கப்படும் எனவும் இது தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/News_More.php?id=631453262727881713
-
- 1 reply
- 395 views
-
-
கிளிநொச்சி மாணவிகளுக்கு டக்ளஸ் அறிவுரை- குளோபல் தமிழ் செய்தியாளர்:- கிளிநொச்சி மத்திய கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு இன்று நடைபெற்றது. இங்கு வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணர்த்தனவை மாணவிகள் வணக்கம் என்று கூறி வரவேற்றனர். தமிழில் வணக்கம் என்று கூறுவதை விட சிங்களத்தில் ஆய்போவன் என்று கூறினால் அமைச்சர் பந்துல குணர்த்தன சந்தோசப்படுவார் என்று குறித்த மாணவிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை கூறினார். சிங்கள அமைச்சர்களை நாங்கள் சந்தோசப்படுத்த வேண்டும் என்றும் அதற்காக இப்படியான விடயங்களை செய்தால் அவர்கள் மிக சந்தோசப்படுவார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/artic…
-
- 2 replies
- 640 views
-
-
கூட்டமைப்பை பிளவுபடுத்தும் அரசின் முயற்சி ஒரு போதும் பலிக்காது! - சம்பந்தன் சூளுரை [sunday 2014-07-27 20:00] ஏனைய கட்சிகளைப் பிரித்து, தனிமைப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த அரசாங்கம் நினைக்கின்றது. கூட்டமைப்பை பிளவுபடுத்தும், அரசாங்கத்தின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்த விவகாரம் தொடர்பிலும் எந்தவித பிளவுமின்றியே தனது ஒருமித்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. …
-
- 0 replies
- 247 views
-
-
தமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பின் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசு இல்லையேல் , தமிழனுக்கு எதும் இல்லை என்ற நிலை இலங்கை தீவில் உருவாகிவிட்டது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையை தனி மனித உரிமைபிரச்சனையாகவும் , மனிதவுரிமை பிரச்சனையாகவும் சுருக்கிவிடும் முயற்சியில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது . ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத்துக்கு வெறுமனே புனர்வாழ்வும் , பொருளாதார அபிவிருத்தியையும் சிங்கள பேரினவாத அரசோ அல்லது சர்வதேச நாடுகளோ பேசிப் பயனல்ல , மாறாக ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அதிகாரத்தை தாமே நிர்ணயிக்கும…
-
- 0 replies
- 554 views
-
-
ஐ.நா குழுவை விட, ஜனாதிபதியின் நிபுணர் குழு ஆபத்தானது! - துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை. [sunday 2014-07-27 09:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவை விடவும் ஆபத்தானது என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த விசாரணைக் குழு, ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவை விடவும் பத்து மடங்கு ஆபத்தானது என துறைசார் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 432 views
-
-
அவுஸ்திரேலியா வரும் இலங்கை அகதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் புதிய திட்டம்! [sunday 2014-07-27 13:00] அவுஸ்திரேலியா வரும் இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தராமல், அவர்களை கைது செய்து இந்தியாவிடமே ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக அவுஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் வழங்கலாமா அல்லது இலங்கையிடமே ஒப்படைக்கலாமா என்பது குறித்து இந்தியாவே முடிவு செய்து கொள்ளட்டும் எனவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 157 இலங்கை அகதிகள், இந்தியாவில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றுள்ளனர். இவர்களை கைது செய்த அவுஸ்திரேலியா கடற்படை போலீசார், சுமார் ஒரு மாதம் வரை அவர்கள்…
-
- 0 replies
- 380 views
-
-
அரசைக் கவிழ்க்கும் நோக்கம் இல்லை! - இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கூறுகிறது. [sunday 2014-07-27 09:00] ஊடகவியல் கல்வியை கற்பதற்கான உரிமை தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்படுவதாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 'ரைட்ஸ் நௌவ்' என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற ஊடக கற்கைநெறி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை அல்ல என்று ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் அ. நிக்ஸன் தெரிவித்தார்.கொழும்பு இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார். 'டிஜிற்றல் ஜேர்னலிசம்' என்ற ஊடக பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொ…
-
- 0 replies
- 409 views
-
-
விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி? [sunday 2014-07-27 09:00] இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சிங்கள வாரப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமைப் பதவியை தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார். சம்பந்தனின் பூரண ஆசீர்வாதத்துடன் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பந்தனின் வயது முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு புதிய தலைமை ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுக…
-
- 4 replies
- 556 views
-
-
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அளிப்பேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேரடியாக யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தான் காணாது விட்டாலும் ஐக்கிய நாடுகள் சபை சாட்சியம் அளிக்குமாறு தன்னைக் கோரினால் வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற நடவடிக்கைகள் பற்றி சாட்சியம் அளிக்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். http://www.onlineuthayan.com/News_More.php?id=851893263127384026
-
- 4 replies
- 420 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார். ஐ.நா விசாரணைக்குழு நியூயோர்க், ஜெனிவா, பேங்கொக் ஆகிய நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதுடன் அதற்கான சத்திய கடிதம் ஒன்றும் அவர் வழங்கியுள்ளார். அத்துடன் வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்பம் முதல் இறுதி வரை செய்திகளை சேகரித்து வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவர…
-
- 0 replies
- 300 views
-
-
கடற் பறவைகளின் முட்டைகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் 4 பேரை தலைமன்னார் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். ஊருமலை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பறவைகளின் முட்டைகள் 452 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை மற்றும் தலைமன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் இந்தியாவின்இ ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இம் முட்டைகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=120853263227470003
-
- 0 replies
- 415 views
-
-
இலங்கையில் அருகிவரும் இனமான புனுகுப் பூனையை சமனல வனாந்தரத்தில் பிடித்து தம்வசம் வைத்திருந்த டி.எஸ். சோமசிறி என்பவருக்கு, இரத்தினபுரி நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய, இன்று(27) 25,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் இவ்வினம் உலகிலேயே அருகிவரும் இனமாக சிவப்பு அறிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/119658-2014-07-27-09-38-38.html
-
- 0 replies
- 588 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்தால், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள அனைத்துலக சட்ட நிபுணர்களை சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். “காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் செயல்முறைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சந்தேகங்கள் உள்ளன. ஆனால், அனைத்துலக ஆலோசனைக் குழுவைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து ஆலோசிக்கப்படும். வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்பதா இல்லையா என்பதை சிறிலங்கா அரசாங்கமே முடிவு செய்யும் என்று சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அப்படியானால் அவர்களிட…
-
- 0 replies
- 195 views
-
-
அளுத்கம நோக்கிய சமாதானப் பேரணிக்கு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தல்! - இடையில் நிறுத்தினர் பொலிசார். [sunday 2014-07-27 09:00] ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட சமாதான யாத்திரையை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அளுத்கம, பேருவளை, தர்கா நகர் நோக்கி சென்ற சமாதான யாத்திரையே பொலிஸாரால் நேற்றுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் சமாதான யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மோதல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான குழுவினர் கொழும்பு நாராஹேன்பிட்டியில் இருந்து வஸ்கடுவ வரை சென்றிருந்தனர். அங்கு மோதல் ஒன்று ஏ…
-
- 0 replies
- 308 views
-
-
வரம்பு மீறிச் செயற்படுகிறதாம் அமெரிக்கத் தூதரகம்! - இராணுவப் பேச்சாளர் விசனம். [sunday 2014-07-27 09:00] காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய, இவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. புலம்பெயர்ந்த - புலிகளுக்கு ஆதரவான ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது அடிப்படையற்றது என்றும் ரூவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நம்பகமான தகவல்கள் கிடைத்தால் அமெரிக்க தூதரகம…
-
- 0 replies
- 196 views
-
-
வடக்கு மாகாணத்துக்கு விசேட நிதி கிடையாது news வடக்கு மாகாணத்துக்கு எது வித விசேட நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படாது. ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்திக்கு 850 மில்லியன் ரூபா வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் 50 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களைப் போன்றே வடக்குக்கும் நிதி ஒதுக்கப்படும் எனவும் விசேட நிதி எதுவும் வழங்கப்படாது எனவும் அந்த அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஒன்பது மாகாணங்களின்தும் மீன்பிடி அமைச்சர்களுக்கும், மத்திய அரசின் மீன்பிடி அமைச்சர் மற்றும் செயலாளர்களுக்கும் இடையில் கடந்த மாதம் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் …
-
- 2 replies
- 1.2k views
-