Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலேசியாவில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மலேசியாவில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1999ஆம் ஆண்டு, அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், கைதானவருக்கு தொடர்புடையவர்களாக கருதப்படும், மேலும் 4 பேர், செர்ந்தாங், செண்ட்டுல், சுங்காய் பெஸி மற்றும் மத்திய கோலாலம்பூரிலிருந்து கைது செய்துள்ளதாக மசேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம், மே 15- ம் தேதி, இதே சந்தேகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 7 பேரும் மலேசியாவில் பதுங்கியிருந்து இலங்கை, மலேசிய…

  2. வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கபப்ட்டுள்ளவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://virakesari.lk/articles/2014/07/05/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%8…

    • 0 replies
    • 410 views
  3. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்வதற்கு எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதுடன், நாங்களும் பெற ஆவலாய் உள்ளோம். ஆனால் மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் தற்போதைய பெரிய பிரச்சினையாக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று சனிக்கிழமை (05) தெரிவித்தார். கூட்டுறவு ஆய்வு மகாநாடு (2014) யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலங்களில் புலிகள் சார்பான நிறுவனங்கள் வடமாகாண மக்களுக்குப் பணம் கொடுப்தை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும், பணம் எங்கிருந்து வருகின்றன என்பதை வெளிநாட்டு…

    • 0 replies
    • 334 views
  4. முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்திலேயே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர். இதன்போது பெண் புலிகளின் சீருடைகள், எலும்புக் கூடுகள், 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40 , சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு என்பன மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் நீதவானின் விசாரணைக்காக இதுவரை எச்சங்கள் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த பகுதியில் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளது பா…

  5. 'அமெரிக்கா இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக பாதுகாப்புச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்' இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட்நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. 'வாக்காளர் கல்வி ஊடாக தேர்தல் ஒத்துழைப்பு' என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த விரும்பும் சிவில் அமைப்புகள் தங்களின் யோசனைகளை முன்வைக்குமாறுயுஎஸ்எயிட் நிறுவனம் வெளியிட்டிருந்த பத்திரிகை விளம்பரத்தை அடுத்து, அதற்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது. இலங்கையில் வாக்காளர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமெரிக்க…

  6. அண்மையில் கொழும்பு அமெரிக்கத் தூதுவராலயத்தில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின விழாவில் இலங்கையரசின் பிரதிநிதியாக துணை ராணுவக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்கிளஸ் தேவானந்தா கலந்துகொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய முழுமையான செய்தி, Govt. Sends Alleged War Criminal To US Independence Day Celebrations July 5, 2014 | Filed under: Colombo Telegraph,News,STORIES | Posted by: COLOMBO_TELEGRAPH Eye-brows were raised at the US Independence Day celebration in Colombo yesterday when the Sri Lankan government sent notorious paramilitary leader Douglas Devananda to attend the ceremony as its representative. US Ambassador and Douglas…

  7. சிறுவயதில் இருந்து தாயகத்தை காதலித்து வந்த ஹம்சாயினி அவர்கள் தாயகப்பாடலை பாடுவதிலும் தாயகப்பாடலுக்கு நடனம் ஆடுவதிலும் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார். அத்தோடு அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் தமிழ்மொழியை கற்றுவந்த இவர் தாயகம் சமூகம் சார்ந்த கவிதைகளையும் எழுதிவந்தார் இத்தோடு தமிழ் இளையோர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்து தமிழ் இனத்திற்காக பணியாற்றி வந்தார்.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=3ls-QOxP2vo 2006 ஆம் ஆண்டு ஒஸ்லோ மாநகரத்தேர்தலுக்காக தொழிவாளர் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டு 2007 ஆம் ஆண்டு நேர்ர்வே தமிழர் ஒருங்கிணைப்புப் குழுவின் ஆதரவோடு ஒஸ்லோ தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு 2200 வாக்குகளோடு நாற்பத்தி நா…

    • 5 replies
    • 556 views
  8. வவுனியாவில் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்களை வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சா. கர்ணன் பட்டியலிட்டுள்ளார். வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது வவுனியா பிரதேசத்தில் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் விபரம் கோரப்பட்டபோதே அவர் பட்டியிலை வெளியிட்டார். தொடர்ந்தும் பட்டியிலை சமர்ப்பித்த உதவி பிரதேச செயலாளர், காணி முறைப்பாடுகள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை காணி சுவீகரிப்பு உத்தியோகத்தருக்கு தாம் மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இதுவரை வவுனியா மாவட்டத்தில் பல தனியார் மற்றும் அ…

    • 0 replies
    • 434 views
  9. பிரபாகரனுடன் சேர்ந்து முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடாத்தியிருந்தால் இந்நாட்டின் வரலாறே மாற்றப்பட்டிருக்கும். இந்நாடு இன்று இரு கூறுகளாகப் பிளவுபட்டிருக்கும். அதனைத் தடுப்பதற்கு நமது முஸ்லிம்கள் ஒன்றுபட்டு பிரபாகரனுக்கு எதிராகச் செயற்பட்டனர். எமது முஸ்லிம்கள் ஒரு போதும் தனி ஈழம் வேண்டுமென்று கேட்கவில்லை. எமது நாட்டுக்கு அதிகளவு உதவிகளையும் அந்நிய செலாவணியையும் பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் நாடுகளேயாகும் என்று கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேசத்திலுள்ள பல பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் அண்மையில் நகர முதல்வரின் காரியாலயத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும…

    • 6 replies
    • 1k views
  10. போரின் போது பாலியல் வல்லுறவு தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வில்லியம் ஹேக் மாநாடு ஒன்றை நடத்திய நிலையில் இலங்கைப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்தவுள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற இந்த பெண், பிரித்தானியா செல்லும் முன்னர் இலங்கை சிறையில் வைத்து இலங்கைப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற அடிப்படையிலேயே இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர் சிறையில் இருந்த போது தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்தநிலையில் பிரித்தானிய உள்துறை அ…

  11. சொந்த இடத்தில் குடியேற்றாவிட்டால் தீக்குளித்த உயிரை மாய்ப்போம் - கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் கண்ணீருடன் கதறல் ஜூலை 5, 2014 எமது சொந்த இடங்களை அரசு தர மறுத்தால் தீக்குளித்து எம் உயிர்களை மாய்த்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களை தமது சொந்த இடத்தில் மீளக்குடியேற்றுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை நடத்திய போராடத்டத்தின்போது அவர்களின் ஆவேசக்குரல்கள், அழுகுரல்கள், கண்ணீரைப் பார்த்து அங்கு கூடிநின்ற பலரும் கண்கலங்கினர். மேற்படி மக்களின் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. …

  12. வீசா இன்றி பயணம் செய்யக்கூடிய மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை 05 ஜூலை 2014 வீசா இன்றி பயணம் செய்யக் கூடிய மோசமான நாடுகளின் வரிசைப் பட்டியலில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் ஹென்லி அன்ட் வீசா வரையறை சுட்டி நிறுவனத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, மிக மோசமான 20 நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, எரித்திரியா, பலஸ்தீனம், சூடான். நேபாளம், லெபனான், கொசோவோ, சிரியா, தென் சூடான், லிபியா, மியன்மார், ஈரான், வடகொரியா, அங்கோலா மற்றும் டிஜிபோட்டி உள்ளிட்ட நாடுகளும் மிக மோசமான நாடுகளின் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் தமது நாட்டு பிரஜைகள் சுதந்திர…

  13. சிறீலங்காவில் தஞ்சம் அடைந்துள்ள பாக்கிஸ்தானியர்களை நாடுகடத்த வேண்டாம் என்று ஐ.நா அறிவித்துள்ளது! ஜூலை 4, 2014 சிறீலங்காவில் தஞ்சம் அடைந்துள்ள பாக்கிஸ்தானின் சிறுபான்மை இனத்தவர்களான அகமதியர்களை சிறீலங்கா அரசாங்கம் நாடுகடத்த வேண்டாம் என்று ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த யூன் மாதம் பாக்கிஸ்தானின் சிறுபான்மை இனத்தவர்களான 142போ் சிறீலங்காவில் கைதுசெய்துள்ளார்கள். இவர்களை நாடுகடத்தவுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ள நிலையில் அவர்களை நாடுகடத்தவேண்டாம் என்று ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் நேற்று அறிவித்துள்ளது.அத்துடன் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.http://www.sankathi24.com/news/43338/64//d…

  14. கிளிநொச்சியில் இடம்பெற்று வரும் நில அபகரிப்புக்கு எதிராகவும், கிளிநொச்சி, பரவிப்பாஞ்சன் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தக் கோரியும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கெடுத்தது. அத்தோடு, பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். “எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, இராணுவமே எங்கள் பொருளாதார வளங்களைச் சுரண்டாதே, இந்த மண் எங்களின் சொந்த மண்” உள்ளிட்ட கோஷங்களை முன்வைத்த பதாகைகளை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் தாங்கியிருந்தனர். http://4tamil…

  15. (ஆதவன்) விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காகப் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம், இப்போது விடுதலைப் புலிகளின் நினைவுதினங்களையும் அபகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீளக்குடியேற அனுமதிக்கக்கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும், விடுதலைப்புலிகள் தங்களது தற்கொலைப் போராளிகள் நினைவாக ஜீலை 5ஆம் த…

  16. என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார். மேற்படி எல்லேப் போட்டிகள் நாளை சனிக்கிழமை (05) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகவுள்ளன. இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி வடமாகாண முதலமைச்சருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அந்நிகழ்வில் தான் கலந்துகொள்ளவில்லையென முதலமைச்சர் தெரிவித்ததாக ஐங்கரநேசன் தெரிவித்தார். 'நாங்கள் தனிநபராக தனிப்பட்டவர்களாக எந்தவொரு இராணுவத்தினருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவம் அதிலிருந்து வெளியேறும் வரைக்கும் தமிழர் நிலங்களில் இருந்து வெளியேறுமாறு சொல்லிக் கொண்டிருப்போம்…

  17. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை பகிடிவதைக்கு உட்படுத்தி அவரை கடத்திசென்று கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரனை குற்றவாளியாக இனங்கண்ட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி கடத்திசெல்லும் போது இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன் சிரேஷ்ட மாணவனாவார். பிரதிவாதியான பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன், 2004 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டதால் அவர் இல்லாமலே வழக்கு விசாரணைக்கு நடைபெற்றது…

  18. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமையைக் கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளை காலை 11 மணியளவில் கிளிநொச்சி கச்சேரிக்கு முன்பாக இரண்டாம் கட்டப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள நூற்றுக் கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாதுள்ளனர். பல ஆண்டுகளாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களின் மீள் குடியமர்வை வலியுறுத்தி கடந்த மே 28ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நடாத்தப்பட…

  19. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே பொறுப்பு கூறவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார். இராணுவ வெளியேற்றம் மற்றும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகள் இணைந்து நடாத்திய கவனயீர்ப்புப் போராட்டம் கிளி . மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் இதற்கு ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவே பொறுப்புக் கூறவேண்டும். வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் இன்னும் முடிந்…

  20. வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவருக்கான வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அரசினால் வரிவிலக்கழிக்கப்பட்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் டெனீஸ்வரன் ஆகியோருக்கான 4 வாகனங்கள் இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி குறித்த வாகனங்கள் நாளை ஆளுநரினால் வழங்கப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்கு என வரவு செலவுத்திட்டத்தில் தலா 58 இலட்சம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்தே குறித…

  21. ஸ்கைப் மூலம் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிடுகிறது இலங்கை அரசு! [Friday 2014-07-04 07:00] ஐ.நா விசாரணைக் குழுவின் முன் ஸ்கைப் மற்றும் தொழில் நுட்பங்களினூடாக சாட்சியமளிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்ட ஏற்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சிலர் ஸ்கைப் மற்றும் தொழில் நுட்ப வசதிகளின் மூலமாக ஐ.நா விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் அவ்வாறான எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.எனவே அவ்வாறான முயற்சிகள் ஏதும் நடந்தால் அந்த சமயத்தில் அது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி ஆராய்ந்து தே…

  22. -ரொமேஸ் மதுசங்க இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  23. பொது பல சேனாவுக்கும் கோட்டாவுக்கும் தொடர்பில்லை: இராணுவம் வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 03:10 0 COMMENTS பொதுபல சேனாவிற்கும் (பி.பி.எஸ்), பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன மற்றும் மதத்தினை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புகள் இருக்கின்றன. ஜனநாயக நாட்டில் ஏனையோருக்கு இடையூறு ஏற்படுத்தா…

    • 5 replies
    • 770 views
  24. நிலைமைகள் மோசமடையாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பான் கீ மூன் இலங்கைக்கு வலியுறுத்து! சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் தொடராமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிலங்காவில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக்கிடம், ஐபிஎஸ் செய்தி நிறுவனம், கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு அளித்த பதிலிலேயே, ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள கோரிக்கை குறித்து, அவர் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் தென் பகுதியில் முஸ்லிம் சமூகத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலர் கவலையடைந்துள்ளார். மத சிறுப…

    • 0 replies
    • 493 views
  25. வெளிநாட்டவர்களுக்கு இலவச சிகிச்சை இல்லை! - இலங்கையில் வருகிறது புதிய கட்டுப்பாடு [Friday 2014-07-04 07:00] இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் நம்முடைய அரச ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்று இலவசமாக பெரிய சத்திரசிகிச்சைகளைக் கூட முடித்துச் செல்கின்றனர். இலவச சுகாதார சேவை இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டுமே உள்ளது. எனவே எமது அரச ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெறும் நோயாளர்கள் தாம் இலங்கை பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை அல்லது அதற்கு சமமான ஆளடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென சுகாதார பணிப்பாளருக்கும், பணிப்பாளர் நாயகத்துக்கும் உத்தரவிட் டிருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.