Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மூலம், பல்வேறு உதவிகளை முல்லைத்தீவில் உள்ள, 'வேதாந்த மன்றம்' என்ற, இந்து சமய கலாசார அமைப்பு செய்து வருகிறது. சிகிச்சைக்காக சென்னை வந்துள்ள, இந்த அமைப்பின் தலைவர் மங்களம்மாள், இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, இந்தியா மூலமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு, மின்சாரம், சாலை, போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. நடை பிணமாக வருமானத்திற்கு வழியின்றி, தமிழர்கள் தவிக்கின்றனர். போருக்கு பிறகு, ஒவ்வொரு வீட்டிலும், இரண்டு, மூன்று பேர் வரை காணாமல் போய் உள்ளனர். இருப்…

    • 0 replies
    • 565 views
  2. வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்னமும் உறுதிசெய்யவில்லை. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/114566-2014-06-16-21-55-18.html

  3. ளுத்கமை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர். கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த முக்கிய சந்திப்பில் ஈரான், கட்டார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீல…

  4. ஐ.நா.வை அனுமதிப்பதா இல்லையா : இன்றும் நாளையும் விவாதம் news ஐ.நா. மனித உரிமை விசாரணை குழுவை விசாரணை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது. குறித்த விவாதத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றும் (17) நாளையும் பாராளுமன்றத்திற்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் எனவும் ஆளும் தரப்பு எம்.பிக்களின் வெளிநாட்டு பயணங்களையும் ரத்துச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அலுவலகம் தெரிவித்தது. போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைமீறல்கள் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த மனித உரிமை குழுவொன்றை ஐ.நா.மனித உரிமை பேரவை நியமித்தது. இக்க…

  5. ஆனையிறவுக்கு அருகில் போரினாலும் இயற்கையினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் வருகின்றார்கள் என்றும் மற்றைய நேரங்களில் தங்களைக் கவனிப்பதில்லையெனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். மேற்படி கிராமத்திற்கு திங்கட்கிழமை (16) விஜயம்செய்த அமைச்சர் அங்குள்ள வயல்கள், குளங்கள் மற்றும் பாடசாலையைப் பார்வையிட்ட பின்னர் அக்கிராமத்து பொதுமக்களைத் தட்டுவன்கொட்டி பொதுநோக்கு மண்டபத்தில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். இதன்போதே மக்கள் இவ்வாறு தெரிவித்ததாக அமைச்சர் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், 'மிகப…

  6. பதுளையிலும் கலவரம் 16 ஜூன் 2014 பதுளையிலும் இன்றைய தினம் கலவரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா உறுப்பினர்கள் பதுளை நகரில் உள்ள முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பதுளை நகரில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னதாக பதுளை நகரில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆடை வர்த்தக நிலையங்களில் ஆடை மாற்றும் அறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொதுபலசேனா போராட்டம் நடத்தியுள்ளனர். இதேவேளை, தாக்குதல் சம்பவத்தில் எவ…

  7. -நா.நவரத்தினராசா யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப்பிரிவின் 18 ஆவது பிறந்த தினத்தினையொட்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இராணுவத்தினர் பூசை வழிபாடுகளில் செவ்வாய்க்கிழமை (17) ஈடுபட்டனர். இந்தப் பூசை வழிபாடுகளில் பலாலி படைத்தளத்தின் உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் கலந்துகொண்டனர். இந்தப் பிறந்ததின நிகழ்வினையொட்டி இராணுவத்தினர் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் சமூக சேவைப் பணிகளை முன்னெடுத்தனர். tamilmirror

  8. நான் யாரையும் துரோகி என்று சொல்லவில்லை. ஆனால் இன்று சொல்கிறேன் வடக்கு மாகாணத்துக்குக் கிடைக்கவேண்டிய அதிகாரங்களையும் அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். - இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் அடங்கிய குழுவினர், துணுக்காய் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது- நான் துரோகி என்று சிலரைக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்தன. இதுவரை நான் யாரையும் அப்படிக் குறிப்பிடவில்லை. ஆனால் இன்று இந்த இடத்தில் அதைக் குறிப்பிடுகின்றேன். அதற்கான கார…

  9. புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 16:24 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராகேஷ்சிங் கடந்த ஜூன் 5ஆம் திகதி வெளியிட்ட அரசாரணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படு…

    • 22 replies
    • 2.1k views
  10. -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட மல்லாவி பொதுச்சந்தையிலுள்ள கடைகளுக்காக 27 மில்லியன் ரூபா செலவில் புதிய கடைத்தொகுதி அமைக்கப்பட்டு வருவதாக துணுக்காய் பிரதேச சபை இன்று செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தது. இச்சந்தையில் மீன் மற்றும் மரக்கறிகள் விற்பனை செய்யும் பகுதி அமைக்கப்பட்டு 2012ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புதிய கடைத்தொகுதி அமைக்கும் பணி நெல்சிப் திட்டத்தின் கீழ் 2013ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பிரதேச சபை தெரிவித்தது. tamilmirror

    • 0 replies
    • 482 views
  11. எஸ்.தியாகு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எதிர்வரும் புதன்கிழமை காலை வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அதற்கு முன்பதாக அவர் தனது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை விடுக்காவிட்டால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் டாக்டர் சிதத் விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக கொழும்பு சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (16) சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன மற்றும் அரச மருத்துவ வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு இடையில…

    • 0 replies
    • 326 views
  12. ல்லையேல்... இஸ்லாமிய தமிழர்களுக்கான இன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாததாகிவிடும்! [Tuesday, 2014-06-17 11:06:48] எப்போதாவது நடந்தே தீரும் என்ற தமிழ் மக்களது எதிர்பார்ப்பு, இப்போது ஆரம்பமாகியுள்ளது. இதைக் கொண்டாட முடியாது. அதிக சோகத்தையும் வெளிப்படுத்த முடியாது. எதிர்த்துக் குரல் எழுப்பவும் முடியாது. ஏனென்றால், நாங்கள் கொல்லப்படும்போதோ... எரிக்கப்படும்போதோ... தொலைக்கப்படும்போதோ... குதறப்படும்போதோ... அவர்கள் எங்களுக்காக வாயைத் திறக்கவே இல்லை. இன்னமும் மோசமாக... சிங்கள எசமானர்களது வேட்டையில், அவர்களும் கணிசமான அளவில் பங்கேற்றிருந்தார்கள். இந்த வேளையில், ஜெர்மனிய சிந்தனையாளரான மார்டின் நீய்மொய்லர் அவர்களது 'முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந…

    • 0 replies
    • 489 views
  13. பொலிவியா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமாதானத்திற்கான விசேட விருது ஒன்றை வழங்க உள்ளது. சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான விசேட விருது ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவுள்ளது. பொலிவியாவின் இல் முன்டோ என்னும் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜீ77 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது பொலியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஜீ77 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பொலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் பற்றி பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. htt…

    • 15 replies
    • 915 views
  14. - எம்.றொசாந்த் யாழ். மாவட்டத்தின் வளலாய் பகுதி மக்களை அவர்களின் சொந்தக் காணிகளிலிருந்து நடுத் தெருவுக்கு அனுப்பிவிட்டு, வலி. வடக்கு மக்களை கொண்டுவந்து வளலாய் பகுதியில் குடியேற்றுவதன் ஊடாக இந்த இரண்டு தரப்பு தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே அரசாங்கமும் இராணுவமும் முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றக் கோரியும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசித்துவரும் மக்களை வளலாய் பகுதியில் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக திங்கட்கிழமை (16) காலை கண்டனப் போ…

  15. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயில் தேரினை சுற்றி வேலி அமைத்துள்ளதாக ஆலய பரிபாலன சபை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் நகரில் அமைந்து செல்வமுத்து மாரியம்மன் ஆலயம் சுமார் 120 வருட பழமை வாய்ந்தது. இக்கோயில் அமைந்துள்ள இடமும், அதனைச் சூழவுள்ள நிலப்பரப்பும் தனக்கு சொந்தமானதென உரிமை கோரிய தனி நபர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை(13) கோயிலின் தேர் நிறுத்தி வைக்கப்படும் காணியினை சுற்றி முட்கம்பிகளினால் சுற்று வேலியொன்றை அமைத்துள்ளார். இந…

    • 0 replies
    • 418 views
  16. யாழில் குழுமோதலில் ஒருவர் வெட்டிக்கொலை - உரும்பிராயில் பதற்றம்! [Monday, 2014-06-16 23:16:34] யாழ். கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து இன்று திங்கட்கிழமை (16) இரவு நடத்திய வாள் வெட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி யாகியதுடன், இருவர் படுகாய மடைந்து மாலை யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இதில் கோண்டாவிலினைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியதுடன், சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகியோரும், உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (20), எம்.நிராஜன் (23) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இது பற்றித் தெரியவருவதாவது: சுகிர்தன் இன்று (16) பிற்பகல் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் …

  17. வடமாகனசபை உறுப்பினர்களே! வடமாகன முதலமைச்சர் அவர்களே ! வடமாகனசபை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது வடமாகான மக்கள் முதலமைச்சர் என்ற அதிகாரத்தினையும் மாகானசபை உறுப்பினர்கள் என்ற பதவிகளையும் உங்களிற்கு கொடுத்த நாட்கள் முதல் இன்று வரைக்கும் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? சிங்கள தேசத்திடம் எழுதிக்கொடுக்கப்படாத அடிமை சாசனம் கிழித்து எறியப்படுமா என்ற ஏக்கத்துடனும். இதுவரைகாலமும் நாங்கள் பட்ட அவலங்கள் இனி எமது பிள்ளைகளுக்கு நிகழ்ந்துவிடாது என்ற சிறு நம்பிக்கையுடனும் நாட்கள் நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் வடமாகான முதலமைச்சர் என்ற அதிகாரத்தில் உள்ள சீ. வீ விக்கினேஸ்வரன் மத்திய அரசு எமக்கு தடைகள் போடுகின்றது என்றும் மாகணசபைக்குரிய அதிகாரங்களை கொடுக்க…

    • 2 replies
    • 1k views
  18. -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுனிக்குளம் நீர்ப்பாசனக்குளத்தின் புனரமைப்பு பணிகள் இவ்வருடத்தின் ஜனவரி மாத இறுதியில் முடிவடைந்துள்ளதாக அம்மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று திங்கட்கிழமை (16) தெரிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்களில் ஒன்றான இக்குளம் கடந்த 30 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்தது. இந்நிலையில் 'முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்தல்' என்னும் திட்டத்தின் கீழ், இக்குளத்தை புனரமைப்பதற்கு 2012ஆம் ஆண்டு 600 மில்லியன் ரூபா நிதி கிடைத்தது. இந்நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தில் 320 மில்லியன் ரூபா செலவில் இக்குளம் புனரமைக்கப்பட்டதுடன், எஞ்சிய நிதியில…

    • 0 replies
    • 587 views
  19. இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது - இந்திய அமைச்சர் 16 ஜூன் 2014 இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது சாத்தியமற்றது என இந்திய மத்திய அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமேன தமிழக மாநில அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து தமிழக சட்ட மன்றில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொருளாதாரத் தடைகளை விதிப்பது சாத்தியமற்றது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினைக்கு நிர…

    • 2 replies
    • 1.1k views
  20. புதூர் நாகதம்பிரான் ஆலய தூபியில் இருந்து சொட்டும் நீர்! - கோடையில் வியப்பான சம்பவம். Top News [sunday, 2014-06-15 18:52:14] புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வசந்த மண்டபத்தின் மேற்பகுதியிலிருந்து, நீர் வடிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக வசந்த மண்டபத்தின் மேற்பகுதியில் நாக சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு கீழாக ஒரு வகை நீர் சொட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது அங்கு பக்தர்கள் அதிகளவில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந் நிலையில் இப் பகுதியில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந் நீர் சொட்டும் பகுதியில் வெள்ளை நிறத்தில் மா தன்மையான ஒரு பொருள் காணப்படுவதோடு நீர் கீழே விழும் இடம் வெண்ணிறமாக மாறி வருகின்ற…

    • 7 replies
    • 880 views
  21. ஈழத்தமிழர்களின் நிலத்தை சிறீலங்கா அரசு ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்து ஐ.நா முன்னிலையில் பொது வாக்கெடுப்பை நடத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழ் ஈழத்தில் -தமிழர்கள் மீது நடந்த இனப்படுகொலை -சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது ! மனித உரிமை சின்னாபின்னப்படுத்தப்பட்டது ! பெண்ணுரிமை சீரழிக்கப்பட்டது ! குழந்தைகள் உரிமை கொன்று புதைக்கப்பட்டது ! பாலச்சந்திரன் மரணமே சாட்சியாய் நிற்கிறது ! உலகமே இதை மௌனமாய் வேடிக்கைப்பார்த்தது ! ஜனநாயகத்தைப் பேணி பாதுகாப்பதாகத் துடித்து நடிக்கும் வல்லரசாகிய எத்தர்கள் தமிழீழ விடுதலையை முடிந்தவரை தடுக்கிறார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்தது திட்டமிட்ட இனப்ப…

    • 0 replies
    • 532 views
  22. புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்! - நமீபிய பிரதமரிடம் கோரினார் ஜனாதிபதி மகிந்த Top News [sunday, 2014-06-15 19:19:14] News Service நாடுகளில் புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு எதிராக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமீபியாவிடம் ஆதரவு கோரியுள்ளார். நியாயப்படுத்த முடியாத வெளிச்சக்திகள் உட்பட தடைகளை வெல்வதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டும் என நமீபிய பிரதமர் ஹேகே கீயிங்கோப்பிடம் ஜனாதிபதி கூறினார். வெளிநாட்டு தலையீடுகளுக்கு உள்ளான நாடுகளின் நிலைமைகள் முன்பிருந்ததைவிட மோசமாகியுள்ளது. அவற்றில் குழப்பம் ஏற்பட்டதே கண்ட விளைவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கும் நபீபிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு, பொலிவியாவிலுள்ள லொஸ் தாஜிபொஸ் ஹோட்டலில் இடம்பெற்றதாக ஜனா…

  23. யாழ்ப்பாணத்தில் 1.2 பில்லியன் செலவில் பிரமாண்ட கலாசார நிலையம்! - இந்தியா அமைக்கிறது. [Tuesday, 2014-06-10 09:05:55] பாரம்பரிய கலாசார அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் மிக நவீன வசதிகளுடன் கூடிய கலை மற்றும் கலாசாரம் தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் வகையிலான கலாசார நிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கலாசார நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் இந்தியாவின் சார்பில் இந்தி…

    • 42 replies
    • 2.6k views
  24. கூட்டமைப்புக்குத் தடை news யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நடத்தப்பட்ட 3 நிகழ்வுகளிலும் வடக்கு மாகாணசபை ஆளும் தரப்பினர் எவரையும் அழைக்கக் கூடாது என்று கொழும்பு அரச அமைச்சர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் எவருமே அழைக்கப்படவில்லை. என்று பல்கலைக்கழகத் தரப்பினர் கூறியுள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீட வளாகத் தில் நேற்றுக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்த நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டக்ளஸ், மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோர் அழைக்கப்பட்டனர். வடக்கு மாகாண சபை …

    • 2 replies
    • 1.3k views
  25. ஏறாவூரில் இஞ்சி செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள். அமோக விளைச்சலும் அதிகளவு வருமானமும். மட்டக்களப்பு - ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் 17 கிராமசேவையாளர் பிரிவுகள் உள்ளன. இங்கு இஞ்சி செய்கை அதிக ஆர்வத்துடன் செய்கை பண்ணப்படுவதாகவும் அதன் அமோக விளைச்சலும் நம்பமுடியாத இலாபமுமே இந்த ஆர்வத்திற்கு காரணம் என்று விவசாய போதனாசிரியை M.H முர்சிதா ஸிரின் கூறுகிறார். ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் இதுவரை சுமார் 60 குடும்பங்கள் இஞ்சி செய்கையில் ஈடுபடுகின்றனர். குறைந்தது ஒரு கொள்களனில் இஞ்சி செய்கையில் ஈடுபடுபவர்களும் இருக்கின்றனர். கூடியளவு 1500 கொள்களன்களில் இஞ்சி செய்கையில் ஈடுபடுபவர்களும் இருக்கின்றனர். சமீப சில நாட்களுக்கு முன்னர் 1500 கொள்களன்களில் இஞ்ச…

    • 0 replies
    • 6.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.