Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. க.ருத்திரன் மட்டக்களப்பு, பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் வியாழக்கிமை(22)இடம்பெற்றது. சங்காபிஷேக நிகழ்வுகள் யாவும் சிவஸ்ரீ சே.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. பாற்குட பவனியானது புதுக்குடியிருப்பு வாழைச்சேனை ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி விபுலானந்த வீதிவழியாக ஆலயத்தினை சென்றடைந்தது. இதன்போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது. tamilmirror

  2. குமரன் பத்மநாதனின் பாதுகாப்பு வாகனத்தை கோண்டாவில் மக்கள் சுற்றிவளைத்தனர்! [sunday, 2014-05-25 15:01:06] கோண்டாவில் வீடொன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மக்கள் சுற்றி வளைத்தனர் - சந்தேகத்திற்கிடமாக வீடொன்றின் முன்பதாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினால் அச்சங்கொண்ட ஊர்மக்கள் திரண்டு சுற்றிவளைத்த சம்பவமொன்று இன்றிரவு கோண்டாவில் பகுதியில் நடந்துள்ளது.. எனினும் அந்த வாகனம் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிற்கு பாதுகாப்பிற்காக வந்தவர்களுடையதென பின்னரே தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. வலி.வடக்கின் தையிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பமொன்று குறித்த கோண்டாவில் பகுதியில் வசித்து வருகின்றது. அக்குடும்பத்தின் திருமணநிகழ்வில் கலந்…

  3. மன்னார் தீவையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் புகையிரத பாலத்திற்கான நிர்மாண வேலைகள் சௌத்பார் கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. பெருநிலப்பரப்பான வங்காலையூடாக மன்னார் தீவை நோக்கி இப்பாலம் அமைக்கப்படுகின்றது. மன்னார், சௌத்பார் புகையிரத நிலையத்தை குறித்த புகையிரதப்பாதை வந்தடையும். இப்பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றபோதிலும், நீர் ஓட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பால வேலைகளை துரிதகதியில் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர். தற்போது கடலினுள் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நீர் ஓட்டம் குறைவடையும் பட்சத்தில் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படும் எனவும் பணியாளர்கள் கூறினர். (எஸ்.றொசேரியன் லெம்பேட்) tamilmirror

  4. -நா.நவரத்தினராசா யாழ்.மாவட்ட பிரதேச சபைகளின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வலி.தெற்கு (உடுவில்) பிரதேசசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடமாகாண சபை கல்வி அமைச்சர் த.குருகுலராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி மற்றும் வலிகாமம், தீவகம், தென்மராட்சி மற்றும் கிளிநொச்சி பிரதேச சபைகளின் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, தற்போது பதிவு செய்யப்படும் தேர்தல் வ…

    • 0 replies
    • 269 views
  5. - வி.தபேந்திரன் கைதடி வடக்கு அண்ணாமார் ஆலயத்தில் கிராமிய குலதெய்வ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்றது. இதன்போது, பொங்கல் பலகாரங்கள் செய்து படையல் படைத்து கிராமிய நடனங்கள் ஆடி மக்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டனர். வருடாவருடம் வைகாசி (தமிழ்) மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இருந்து ஆரம்பமாகும் இந்த குலதெய்வ வழிபாடு வைகாசி மாதத்திலுள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும். அதன்படி இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கிராமிய குலதெய்வ வழிபாடு இடம்பெற்றது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/111760-2014-05-25-07-49-18.html

    • 0 replies
    • 715 views
  6. நிர்மலா சீதாராமன்.| கோப்புப் படம். பிரதமராக பாஜக தலைவர் நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளதற்கு எழும் ஆட்சேபங்களை பாஜக நிராகரிக்கிறது. சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு ஜனநாயகத்தின் மகிழ்ச்சிமிகு கொண்டாட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கானதாகும்.இந்த கண்ணோட்டத்தில்தான் இந்த அழைப்பை நாம் கருதவேண்டும். புத…

    • 13 replies
    • 1k views
  7. யுத்த குற்றவாளிகளை தண்டிக்கும் வகையிலான யோசனை திட்டமொன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிப்பு 25 மே 2014 இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வகையிலான யோசனைத் திட்டமொன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அடையாளப்படுத்தப்பட்ட நபர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக் கூடாது என தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினை நியமிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியவர்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈட…

  8. காட்டில் தேன் எடுக்கச் சென்ற இருவர் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை(24) மாலை மட்டக்களப்பு வாகரை கட்டு முறிவு காட்டில் இடம்பெற்றுள்ளது. பால்சேனை கதிரவெளியைச் சேர்ந்தவர்களான கி.ஜெயரெட்ணம் வயது (38) க.குணலிங்கம் வயது(30) ஆகிய இருவரே கரடியின் தாக்குதலுக்குள்ளாகி கதிரவெளி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மேலும் தெரிவித்தனர். வழமைபோன்று தேன் எடுக்கும் தொழிலுக்கு அடர்ந்த காட்டிற்கு சென்ற வேளை குட்டி ஈன்ற கரடி ஒன்று மேற்படி நபர்களை கண்;டதும் கோபம் கொண்டு தாக்கியுள்ளது. இதில…

    • 0 replies
    • 291 views
  9. திருமலை, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனமானது, நல்லிணக்கத்திற்கு முரணானது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மூதூர் கல்வி வலயப் பணிப்பாளர் நியமனத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பி.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'திருகோணமலை மாவட்டத்தில் அதிக தமிழ் பாடசாலைகளைக் கொண்ட மூதூர் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, நிருவாக குளறுபடிகள் காரணமாக முறையான விசாரணைக்குட்பட வேண்டிய சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர், மூதூ…

    • 0 replies
    • 470 views
  10. இலங்கை இந்திய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை:- 25 மே 2014 இலங்கை இந்திய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ளார். பதவியேற்பு நிகழ்வுகளின் பின்னர், நாளை மறுதினம் பெரும்பாலும் இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தியாவிற்கு விஜயம் செய்யும் சகல வெளிநாட்டுத் தலைவர்களுடனும் மோடி சிறு சந்திப்புக்களை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறத…

  11. சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே அழைப்பதை தவிர்ப்பது குறித்து இரவுக்குள் பாஜக தரப்பு முடிவெடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கெடு விதித்துள்ளார். எதிர்ப்பை மீறி ராஜபக்சேவை வரவழைத்தால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ சூசகமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். வரும் 26-ந் தேதி டெல்லியில் மோடி பதவியேற்க இருக்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைப்பதைத் தவிர்க்க மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லியில் முகாமிட்டு போராடிக் கொண்டிருக்கிறார். பாஜகவுக்கு 'கெடு'- ராஜபக்சேவை அழைத்தால் டெல்லியில் போராட்டம்: வைகோ சூசக எச்சரிக்கை!! இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் இது தொடர்பாக வைகோ வலியு…

  12. மோடி பதவியேற்பில் முஸ்லிம் தலைவர்களுக்கே முக்கியத்துவம்;மகிந்தவுக்கு அல்ல! - என்கிறது ஆங்கில ஊடகம். [saturday, 2014-05-24 09:14:48] இந்தியப் பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேடமாக அழைக்கப்படவில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனை இல்லாது செய்வதற்காக, அமெரிக்கா வழங்கிய ஆலோசனையின் படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலைவர்களை அழைக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.எனினும் அவர்களை மாத்திரம் அழைத்தால் சிக்கல் ஏற்படும் என்ற நிலையில், சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கும் போர்வையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தல…

  13. நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் செல்வோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு பள்ளத்தில் தள்ளப்படுவோம் என தமிழ் தேசிக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்க தரப்பால் தெரிவுக்குழு மூலமே தீர்வு என தொடர்ச்சியாக கூறப்பட்டு வரும் நிலையில் தமிழ் தேசிக்கூட்டமைப்பின் இன்றைய நிலை என்ன என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் போச்சுவார்த்தை நடைபெறவேண்டும். அதனூடாக தீர்வை எட்டுகின்றபோது அதனை நாடாளுமன்ற தெரிவு குழுவுக்கு போட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுமானால் அதனை பரிசீலிப்பதற்கு நாம் தயார் என தெரிவித்திருந்தோம். அந்தவகையில் தமிழ் தே…

    • 1 reply
    • 647 views
  14. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவை அழைத்ததன் மூலம், தமிழக மக்களின் உணர்வுகளை தேசிய ஜனநாயக கூட்டணி புண்படுத்திவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான ஷகீல் அகமது கூறியுள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவியேற்பு விழாவிற்கு யாரையெல்லாம் அழைப்பது என்பதை நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே தங்களின் எண்ணம் என்று கூறினார். மேலும், தமிழர்களின் நலனைக் கருத்திற் கொண்டு நரேந்திர மோடி இந்தக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு கொடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என்றும், அவர் வருகையை எதிர்ப்பதாகவு…

  15. ஸ்ரீலங்காவின்ட இராணுவப் பேச்சாளரின்ட பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அண்டைக்குப் போயிருந்தன். மனுசன் அடிச்சுச் சொல்லுது. சவாலாய் விடுறாராம். முள்ளிவாய்க்கால் நினைவுகாலத்தில இராணுவம் சுத்தி வளைப்பு செய்யேல்லயாம். கோயில எல்லாம் சுத்திவளைக்கேல்லயாம். பாதுகாப்புச் செய்தவையாம். உவையளின்ட பாதுகாப்பு என்ன பாதுகாப்பு நடவடிக்கை என்ன எண்டு எங்களுக்குத் தெரியும்தானே. சக்தி ரி.வியில உவையள் பாதுகாப்புச் செய்யிற வீடியோக்கள் வந்தது. துப்பாக்கியை ஏந்திக் கொண்டு திரியிறத காட்டினவையள். அது என்னத்துக்காம்? ஒருவேளை முள்ளிவாய்க்கால் நினைவுநாளில மக்களுக்கு பாதுகாப்பு குடுக்க நிண்டவையளோ? அப்ப ஏன் அண்டைக்கு கிளிநொச்சி கிருஷ்ணன் கோயில் முதல் எல்லாக் கோயிலின்ட நாலு பக்கமும் காவல் நிண்டவை. கிருஷ்…

    • 0 replies
    • 429 views
  16. கருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்கு செல்லும் பெண்கள் கருத்தரித்த நிலையிலும் குழந்தையுடனும் நாடு திரும்புவது அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் கூறுகின்றது. கடந்த இரு வருட காலப்பகுதியில், கருவுற்ற நிலையிலும் குழந்தையுடனும் சுமார் 300 பெண்கள் வரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும் சட்டப் பிரச்சினை காரணமாக அழைத்து வர முடியாதவர்களும் அதிகம் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியத்தின் துணை பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறுகின்றார். இந்தப் பெண்களை பொறுத்தவரை கணவன் மனைவியாக சென்று கர்ப்பமுற்றவர்களும் அதில் இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. கூ…

    • 0 replies
    • 701 views
  17. இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி, தமது பதவியேற்பு சமயத்தில் அல்லது பதவியேற்பு முடிந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கக்கூடும் என புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டன. பதவியேற்பு விழாவுக்கு 'சார்க்' நாடுகளின் தலைவர் என்ற முறையில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். அவ்வாறு அழைப்பு அனுப்பப்பட்டமைக்கு எதிராகத் தமிழகத்தில் பெரும் உணர்வலைகள் கிளர்ந்திருக்கின்றன. நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்கும் சமயத்தில் அல்லது பதவியேற்ற கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் புதுடில்லிக்கு அழைத்து, அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கும் இராஜதந்திர ரீதியிலான கௌர…

    • 1 reply
    • 830 views
  18. யாழ். குடாநாட்டில் புதிதாக நிறுவ பிரேரிக்கப்பட்ட நான்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சூழல் அதிகார சபை மறுப்பு தெரிவித்துள்ளது. நீர் நிலைகளுடன் தொடர்புடைய நான்கு திட்டங்களாக இவை அமைந்திருந்ததுடன், இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு, சூழல் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்படுத்தலை பெற்றுக்கொள்ளும் வகையில், குறித்த திட்டங்கள் பற்றிய பிரேரணைகள் மத்திய சூழல் அதிகார சபையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், குறித்த திட்டங்களுக்கு அமைய தொழிற்சாலைகள் யாழ்ப்பாண குடா பகுதியில் நிறுவப்படின், குடாநாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடுமென குறிப்பிட்டு, இந்த திட்டங்களை மத்திய சூழல்…

  19. டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை சமாளிக்கும் வகையில் தம்முடன் இலங்கை வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அழைத்துவர அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் 26-ந் தேதி நடைபெறும் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கிறார். ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்ப்பை தணிக்கும் வகையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடமாகாணத்தின் முதல்வரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விக்கினேஸ்வரனை தம்ம…

    • 5 replies
    • 797 views
  20. இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இளைஞர் யுவதிகள், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு - சேறும் சகதியுமான கிடங்கொன்றுக்குள் விடப்பட்டுள்ள காட்சி அடங்கிய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியிருந்தன. இந்த படத்தில் மிகவும் ஆழமான பகுதியில் மேலாடையின்றி கைகள் கட்டப்படாத நிலையில் இளைஞர் ஒருவர் காணப்படுகிறார். அந்த இளைஞர் பருத்தித்துறையைச் சேர்ந்த பேரம்பலநாதன் பிரதீபன் (வயது - 35) என்பவர் என்று அவரது உறவினர் அடையாளப்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்…

    • 1 reply
    • 685 views
  21. மோடி பதவியேற்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார் மகிந்த ராஜபக்ச! [Friday, 2014-05-23 09:09:53] நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த நிகழ்வில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாய், பூட்டான் பிரதமர், சேரிங் தொப்கை, நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா, மாலைதீவு அதிபர் அப்துல்லா யமீன், அப்துல் கயூம், மொறிசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.பாகிஸ்தான் பிரதமர் இந்த அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்கவில்லை. அதேவேளை பங்களாதேஸ் எதிர்க்கட்சித் தலைவர் கலீதா சியா, மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலை…

  22. வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்றுநிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் அடிப்படையான மாற்றங்களை அரசாங்கம் செய்கிறது. இந்த நிலைமைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இந்திய மத்திய அரசு இதுவிடயத்தில் முக்கிய கவனம் தெலுத்தவேண்டும். அத்துடன் உங்களையும் உங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை எமக்கு விரைவாக ஏற்படுத்தித் தரவேண்டும் என நாம் வேண்டுகின்றோம். இந்தியப்பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித…

  23. கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்! ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம் - "கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" - இப்படி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தலைமையிலான கட்சி பெரு வெற்றியீட்டியமையைப் பாராட்டித் தாம் வரைந்த கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார் அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- கௌரவ செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் அம்மணி …

  24. சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹலம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஒருவரையே குறித்த விகராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமி தற்போது நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட விகராதிபதி தொடர்பில் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். www.ilankainet.com

    • 0 replies
    • 619 views
  25. சென்ற 14 ஆம் திகதி வெசாக் விடுமுறை தினத்தன்று பிறந்த குழந்தைக்கு தகப்பன் இல்லையென்று கூறி, பச்சிளம் குழந்தையின் கழுத்தை உடைத்து காட்டிற்குள் வீசிய தா(பே)ய் ஒருத்தியை எகலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். மின்னான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 18 வயது யுவதியொருத்தியே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். தனது தன்னிச்சையான தனத்தின் காரணமாவே குறித்த யுவதி கருத்தரித்துள்ளதாகவும், அதுபற்றி வீட்டார் மற்றும் உற்றார் சுற்றத்தோர் விசாரித்தபோது அவர்களைத் திட்டித் தீர்த்தாகவும் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. மே 14 ஆம் திகதி அதிகாலை குறித்த யுவதி வீட்டின் பின்பக்கமாகவுள்ள காட்டிற்குச் சென்று பிள்ளையைப் பிரசவித்துள்ளதுடன், தொப்புள் கொடியையும் அறுத்து பிள்ளையின…

    • 0 replies
    • 589 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.