Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் நம்முடைய கையில் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் சார்க் நாடுகளின் அமைப்பின் தலைவர் என்ற முறையிலேயே நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜபக்சே மட்டுமின்றி சார்க் அமைப்பில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவை தனிப்பட்ட முறையில் பா.ஜ.க விருந்துக்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்த சார்க் நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டதில் அதில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளத…

    • 2 replies
    • 1.2k views
  2. நிர்மாணத்துறை, பொதுச்சேவைகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வடமாகாண சபையை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும்' என வடமாகாண சபையின் உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். 'சிறுபான்மையினர் அனைவரும் இணைந்து ஒரு தலைமையின் கீழ் போராட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரைவச் செயலகத்தில் வியாழக்கிழமை(22) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'ஐ.நா அறிக்கையின் படி முள்ளிவாய்க்காலில் 70,000 மக்கள் மாண்டு…

    • 0 replies
    • 482 views
  3. இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மாலை கொழும்பில் கூடி விரிவாக ஆராய்ந்தது. இந்தியா சென்று சுமார் மூன்று வார காலம் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., நேற்று பிற்பகலில் கொழும்பு திரும்பியிருந்தார். அதனையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளின் மூத்த தலைவர்களும் சம்பந்தன் தலைமையில் இன்று மாலை கொழும்பில் கூடினர். தற்போதைய அரசியல் நிலைவரங்கள், இந்தியத் தேர்தல் முடிவுகளை அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு ஆகியவை குறித்து அவர்கள் விரிவாக ஆராய்…

    • 0 replies
    • 402 views
  4. இலங்கை தொடர்பில் ஐ.நா.மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமைய விசா­ரணை நடத்­து­வ­தற்­கான குழு­வினை நிய­மிக்கும் பணியில் ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ளார். அடுத்­த­மாதம் முதல் வாரத்தில் விசா­ரணை குழு தொடர்­பான அறி­விப்பை நவ­நீ­தம்­பிள்ளை வெளியி­ட­வுள்­ள­தாக இரா­ஜ­தந்­தி­ர­வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு இலங்கை ஒத்­து­ழைக்­க­வேண்­டு­மென்று மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் சில தினங்­க­ளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. இதேபோல் விசா­ரணை குழு தொடர்­பான அறி­விப்பை நவ­நீ­தம்­பிள்ளை வௌியிட்­டதும் இந்த விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு அமெ­ரிக்கா, கனடா, பிரிட்டன் …

    • 0 replies
    • 337 views
  5. புத்திரின் படத்தை பச்சை குத்தியதற்காக நாடு கடத்தப்பட்ட பெண் ஒரு கோடி ரூபா நஷ்டஈடு கேட்டு உயர்நீதிமன்றில் வழக்கு! புத்த பகவானின் படத்தைப் பச்சை குத்தியிருந்தார் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பிரிட்டிஷ் பெண்ணான நயோமி மிச்செல் கொல்மென் (வயது 37) சார்பில், ஒரு கோடி ரூபா நஷ்டஈடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தான் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர் என்றும், புத்த பகவான் மீது தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் தாமரை மலரில் புத்தர் அமர்ந்திருப்பது போன்ற சித்திரத்தைத் தாம் தமது வலது கையின் தோள்பட்டையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும், இது போன்று புத்தரின் பக்தர்கள் பலர் தங்களின் தேகத்தில் புத்தரி…

    • 3 replies
    • 673 views
  6. பா. கிருபாகரன், டிட்டோகுகன் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை உடனடியாக வழங்காது விட்டால் இவ்வருட இறுதியில் அரசுக்கு பேராபத்து காத்திருக்கின்றதென எச்சரித்த ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, நரேந்திர மோடி, ஜெயலலிதாவின் பெருவெற்றி இலங்கை அரசுக்கு ஆபத்தாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்தார் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. www.thinakkural.lk/article.php?local/dou9cnduke899447ce08754221460avxtm0b2dbacfc5535f94e68433gnfzk#sthash.sNnGn34t.dpuf

  7. போர் குற்றம் புரிந்தவர்கள்; அமெரிக்காவுக்கு வருகை தர தடை மே 22, 2014 இலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சால் அடையாளம் காணப்படும் எவரும் அமெரிக்காவுக்கு வருகை தருவதன் மீது தடைகளை விதிக்கும்படி அந்தத் திணைக்களத்தைக் கேட்டுக்கொள்ளும் தீர்மான வரைவு ஒன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் ஹோல்ட் தம் சார்பிலும் ஒகையோவைச் சேர்ந்த ஜோன்சன் மற்றும் தேர்னி சார்பிலும் தாக்கல் செய்த இலங்கை தொடர்பான தீர்மான வரைவு வெளியுறவுத்துறைக் குழுவின் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மான வரைவு நீதித்துறைக் குழுவின் கவனத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. …

    • 1 reply
    • 783 views
  8. குளோபல்தமிழ்ச்செய்தியாளா் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தடைகளை தாண்டி யாழ்.பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று நடத்தியுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரை நாலாம் மாடிக்கு அழைப்பதன் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் நிகழ்வினை தடுத்து நிறுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் பிசுபிசுத்துப்போயுள்ளது. இன்று காலை 11.15மணியளவில் ஒன்று குவிந்த மாணவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் கைலாசபதி அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக அனைவரும் முள்ளிவாய்க்காலில் பலியாகிய அனைத்து உறவுகளிற்கும் மௌன அஞ்சலியை செலுத்தியதுடன் தொடர்ந்து சுடரேற்றி பிரார்த்தித்தனர்.அதன் பின்னராக அனைவரும் அமைதியாக கலைந்து சென்றிருந்தனர். முன்ன…

    • 8 replies
    • 1.2k views
  9. சமாதான காலத்தில் ஈபிடிபியினர் நாள் தோறும் கொல்லப்பட்டனர். அதனால் வருடத்தின் 365 நாளும் துக்க தினம் அனுஸ்டிக்க வேண்டுமல்லவா எனக் கூறினார்; ஈபிடிபி சார்பு எதிர்கட்சித்தலைவர் தவராசா. ஆனால் அவர்களில் பலர் உள்வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களென கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் மற்றும் கஜதீபன் பதிலடி கொடுத்தனர். வடக்கு மாகாண சபையின் 9ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில்; ஆரம்பமாகிய வேளை சிவாஜிலிங்கம் தன்னால் எடுத்து வரப்பட்ட மெழுகுதிரிகளை அனைவரிடமும் வழங்கி தீபமேற்றி மௌன அஞ்சலிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனையடுத்து கூட்டமைப்பு உறுப்பினர்களால் சபையில் கறுப்புப்பட்டி அணிந்து தீபமேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்…

    • 3 replies
    • 588 views
  10. பாக்கியசோதி சரணவமுத்து ஐ.நா பதவியொன்றுக்காக விண்ணப்பம்:- மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர மத்திய நிலையத்தின் தலைவரும், முன்னணி மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பதவியொன்றுக்காக விண்ணப்பம் செய்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன நிபுணர் பதவிக்காக அவர் விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நிர்வாகத்தின் கீழ் இந்த பதவி வழங்கப்பட உள்ளது. சட்டவிரோத தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான விசேட பிரதிநிதியாக செயற்படும் நோக்கில் வி;ண்ணப்பித்துள்ளார். பாக்கியசோதி உள்ளிட்ட பத்து பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்…

  11. தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக வடக்கின் மற்றுமொரு தமிழ் கட்சியான ஈ.பி.டி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் பாராளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் 94 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போதைப் பொருளின் ஊடாக தனது அடிப்படையை உருவாக்கிக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஓர் கட்சி பாராளுமன்றில் போதைப் பொரு…

  12. பயங்கவராதத்தை எதிர்கொள்ள இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். இதனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு முற்றாக அழித்துவிட்டிருக்கிறது. அந்த அரசை நாடு சிறப்பிக்க வேண்டும்' என்று…

    • 2 replies
    • 810 views
  13. மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 201 Twitteroogle+ நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூத…

  14. வடக்கில் உள்ள தமிழ் மக்களின் உடல்களில் இராணுவத்தினரின் இரத்தம் ஓடுவது பெருமைக்குரிய விடயமாகும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- வடக்கில் நடைபெறும் இரத்த தான நிகழ்வுகளை இராணுவம் குழப்புவதாக சில ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லை. ஆனால் வடக்கில் தமிழ் மக்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக இராணுவத்தினரே இரத்த தான நிகழ்வுகளை அடிக்கடி ஏற்பாடு செய்துவருகின்றனர். கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழ் மக்களுக்காக வடக்கில் இராணுவத்தினர் 10 ஆயிரம் பொயின்ட் இரத்தம் வழங்கியுள்ளதுடன். கடற்படையினர் 2 ஆயிரம் பொயின்ட் இரத்தத்தையும் விமானப் படையி…

  15. மீன் மணக்கும், மீன் விற்ற பணம் மணக்காது என்பார்கள் மனித குலத்தையே சீரழிக்கும் வகையில் நடத்தப்படும் போதை வஸ்து தொழில் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணத்தில் தமது உல்லாச பயணங்களையும், சுயலாப அரசியலையும் நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது போதை வஸ்து பாவனைக்கு எதிராக பேசுகின்றனர் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எது உண்மை எது பொய் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக நான் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளின் முன்பாகவும், வட மாகாண ஆளுனரின் முன்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பகிரங்க விவாதம் நடத்த விரும்பி அவர்களை அழைக்கின்றேன் என நாடாளுமன்றில் இன்று(21) உரையாற்றும் போது அவர…

    • 1 reply
    • 570 views
  16. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என இலங்கை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை – OHCHR 21 மே 2014 சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை என ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மே;றகொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயலகள் தொடர்பில் விசாரணை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த விசாரணைக்குழுவினை நியமிக்க உள்ளார். இந்த விசாரணைகை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ச்சியாக அறிவித்து வரும் போதும், உத்தியோகபூர்…

    • 1 reply
    • 479 views
  17. கப்பலொன்று கவிழும்போது முதலில் அதிலுள்ள எலிகள் தான் வெளியே பாய்ந்து செல்லும். அதேபோன்று இன்று அராசங்கமென்ற கப்பல் மூழ்கப் போகிறது என்பதை புரிந்துகொண்டு அமைச்சர்களான விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் வெளியே பாய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்களென்று ஐ.தே.க. கட்சியின் கேகாலை மாவட்ட எம்.பி. கபீர் ஹாசீம் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கபீர் ஹாசிம் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒருவருக்கு மயக்கப்படுத்தும் பொருள் சரீரத்திற்கு கேடுவிளைவிப்பதோடு, மனிதனுக்கு மன ரீதியான பாதிப்பும் ஏற்படுகிற…

    • 0 replies
    • 646 views
  18. இலங்கை அரசையும் கூட்டமைப்பையும் பேசுமாறு வலியுறுத்தும் புதிய தீர்மானம்! - அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. [Thursday, 2014-05-22 09:45:36] இலங்கையில் ஐக்கியத்தையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி இலங்கை அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் வலியுறுத்திக் கோரும் பிரேரணை ஒன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ருஷ் ஹோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணை, விடுதலைப் புலிகளுடனான தனது கடந்த கால உறவை ஏற்றுக்கொண்டு, மீள்நல்லிணக்கத்துக்கான தனது பற்றுறுதியை வெளிப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப…

  19. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- இணைப்பு - 2 முதற் பதிவேற்றம்- 19-05-2014 - 15:37 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர். இது தொடர்பில் உஷாளினியின் பெற்றோர் தெரிவிக்கையில் 'இறுதிப்போரின் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற் போயிருந்தார். மீள் குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல…

    • 11 replies
    • 998 views
  20. கிளிநொச்சி கிளாலியில் குடிதண்ணீர் நெருக்கடி! குடிதண்ணீருக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இயக்கச்சியிலுள்ள கிணறு திடீரென மாசடைந்துள்ளதால் கிளாலிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் கடந்த ஒரு வார காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிதண்ணீரைத் தேடி அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளர். எனினும் மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளைத் தாம் ஆராய்ந்து வருவதாகப் பிரதேச சபையினர் அறிவித்துள்ளனர். இயக்கச்சியிலுள்ள கிணற்றில் தண்ணீர் திடீரென மாசடைந்து பாவனைக்குதவாது மாறியுள்ளது. இது குறித்து சுகாதாரப் பகுதியினருக்கு அறிவிக்கப்பட்டது. தண்ணீரைப் பரிசோதனை செய்த சுகாதாரப் பிரிவினர் அதைப் பயன்படுத்த வேண…

    • 0 replies
    • 425 views
  21. மோடியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது – கெஹலிய இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடி பணியாது சுயமாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஓர் மத்திய அரசாங்கம் இந்தியாவில் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வலுவான ஆட்சி நிறுவப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் மோடி அரசாங்கத்திற்கு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/107094/Default.a…

  22. இலங்கையிலிருந்து மாதாந்தம் 200 , 000 இளநீர் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலும் உள்நாட்டு சந்தைக்கே இளநீர் விநியோகிக்கப்பட்டதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். வருடாந்தம் சுமார் 6500 இளநீர் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போது சர்வதேச சந்தையில் இளநீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இங்கிலாந்து , சுவிற்சர்லாந்து , ஜேர்மன் , பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கே அதிகளவில் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளிலும் இலங்கையின் இளநீருக்கு கேள்வி அதிகரித்துள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நி…

    • 0 replies
    • 415 views
  23. -வடிவேல்-சக்திவேல் மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மகிழூர் கிராத்தில் உருவாக்கப்பட்ட கஜமுகன் மொழி சங்கத்தினுடைய சிங்கள வகுப்புக்கள் செவ்வாயக்கிழமை (20) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் உத்தியோகப்பூர்வமாக ஆரப்பித்து வைக்கபட்டன. மொழித்திறனை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மும்மொழி திட்டத்தின் கீழ் கிராமங்கள் ஊடாக மொழிச்சங்களை நிறுவி 10 ஆண்டு திட்டத்தின் கீழ் மும்மொழிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே மேற்படி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதித் திட்டப்பணிப்பாளர் பாக்கியராசா, கிராம உத்தியோகஸ்…

    • 0 replies
    • 469 views
  24. எரிப்போம், உடைப்போம், அழிப்போம்; கூக்குரல் வந்து 24 மணி நேரத்துள் அழிந்தது அழுத்கம வர்த்தக நிலையம்! 13ம் திருத்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மாகாணசபைக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதி, கல்வி, உள்ளூராட்சி ஆகிய துறைகளுடன் சட்டம், ஒழுங்கு ஆகிய விடயங்களையும் கொண்டாள்கிறார் என்று அவரது அமைச்சு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் பற்றிய அதிகாரபூர்வ பிரகடனம் கூறுகிறது. அரசியல் சட்டத்தில் இடம் இருந்தாலும், சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரங்களை நீங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவது இல்லை. அதுபற்றி இங்கே நான் பேசப்போவது இல்லை. இது பற்றி பேசும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைக்கும் என நான் நம்புகிறேன். போலிஸ் அதி…

  25. இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்துப் பேச, இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப்பெற்ற நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் அமோக வெற்றிப் பெற்ற அதிமுக பொதுச் செயலாளல் ஜெயலலிதாவிற்கும் யாழ்பாணத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுதியுள்ளார். இந்தக் கடிதங்களில் கூறியிருப்பதாவது: 'இலங்கையில் போர் முடிவுற்றவுடன் அமைதி திரும்புவதற்கு பதிலாக, இல…

    • 1 reply
    • 567 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.