Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆட்சியைக் கவிழ்க்க ஐ.நாவின் உதவியை நாடப் போகிறாராம் சரத் பொன்சேகா! [Friday, 2014-04-25 08:27:00] அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஐ.நாவின் உதவியை கோரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.அரசாங்கம் தொடர்ச்சியாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தினால் ஐக்கிய நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பேரவைத் தலைவர் கரு ஜயசூரியவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.மக்களுக்கு விரோதமாக செயற்பட்டு வரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. ஊழல், மோசடிகளை மேற்கொள்ளும் ஆட்சியாளர்களிடமிருந்து மக்களை…

  2. பீரிசை பிரதமராக நியமிக்க ராஜபக்ஷ குடும்பத்துக்குள் இணக்கம்! [Friday, 2014-04-25 16:43:52] ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்த பின்னர், நீண்டகாலமாக அரசாங்கத்திற்குள் இருந்த வந்த பிரதமர் பதவி தொடர்பான பனிப் போர் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், அடுத்த பிரதமர் தாமே எனக் கூறி, அவர்களுக்கு நெருங்கமானவர்களுக்கு விருந்துபசாரங்களை நடத்தியுள்ளனர்.எனினும் தமது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான மற்றும் எந்த நிலைமை ஏற்பட்டாலும் தமது அரசியல் அதிகாரத்திற்கு சவால் விடாத ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. …

  3. வடமாகாணசபை உறுப்பினர்கள் முன்மொழிந்த பிரேரணைகளை நிராகரித்தார் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்! [Friday, 2014-04-25 16:31:01] வடக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றவென உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளில் சில அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி மாகாண சபை மீண்டும் கூடுகிறது. இதில் விவாதிக்கப்பட்டுத் தீர்மானமாக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்த முன்மொழிவுகள் உறுப்பினர்களால் பேரவைச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றையே அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நிராகரித்துள்ளார். தமிழ் இளைஞர் யுவதிகளைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் இணைத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும், வடக்கில் தொடர்ந்…

  4. இராணுவக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை. [Friday, 2014-04-25 16:21:18] மாணவர்கள் மீதான இராணுவக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் நேற்றைய தினம் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தியுள்ளதுடன் மாணவர்களையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர். இதனால் மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக சூழலில் பெரும்பதற்றம் நிலவியுள்ளது. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ் அறிக்கையில்- இது தொடர்பாக நிர்வ…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற சிறப்புரிமைகளை துஸ்பிரயோகம் செய்கின்றனர் – ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற சிறப்புரிமைகளை துஸ்பிரயோகம் செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களுக்கு மறைந்து கொண்டு நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், தம்மை சர்வாதிகாரியாக பிரச்சாரம் செய்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்…

  6. இலங்கையில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் வைப்பிலிடபடுவது தொடர்பில் அரசாங்கத்திடம் உரிய ஆதாரங்கள் உள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதும் நிதி மூலம் மற்றும் வைப்பிலிடப்படும் வங்கிக்கணக்குகள் குறித்து அரசாங்கம் அறிந்துகொண்டதாகவும் 65 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் 19 பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் உருவாகுமாயின் அவை தொடர்பில் விழிப்புடன் இருந்து முளையிலேயே கிள்ளி எறிவதே அரசா்ஙகத்தின் முதன்மை நோக்கம். அரசாங்கம் இந்த விடயம் குறித்து தொடர்ந்து கண்கா…

  7. யாழ்ப்பாணத்தில் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். யாழ் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கோபி, தேவியன், அப்பன் ஆகியோருடன் தொடர்புகள் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

  8. கொழும்பில் 'ஸ்பைடர் மேன்' வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014 14:32 பிரபல்யமான 'ஸ்பைடர் மேன்', கொழும்பு மாநகர சபையின் திடலில் தனது திறமைகளையும் சாகசங்களையும் தனது குழுவினருடன் இன்று காண்பித்தார். இலங்கையில் எடுக்கப்படவிருக்கின்ற திரைப்படத்திற்கு விளம்பர அனுசரணை வழங்குகின்ற சிலோன் தியேட்டர் நிறுவனமே 'ஸ்பைடர் மேன்' குழுவினரை இலங்கைக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/108154-2014-04-25-09-03-33.html

  9. இலங்கையில் தமிழ் பெண்கள் மீதான வல்லுறவுகள்! - ஐ.நா பிரதிநிதி கவலை. [Friday, 2014-04-25 08:50:58] இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள் குறித்து ஐ.நாவின் உயர்பிரதிநிதி சாய்னாப் ஹவா பங்குரா (Zainab Hawa Bangura) கவலை வெளியிட்டுள்ளார்.மோதல்கள் நிலவும் இடங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்புப் பிரதிநிதியான சாய்னாப் ஹவா பங்குரா நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போது, இலங்கையில் குறிப்பாக தமிழ்ப் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்படுவதான அறிக்கைகள் கிடைத்து வருவது தொடர்பாக, ஐ.நா ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்று, இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.அதற்…

  10. : 24 ஏப்ரல் 2014 கொட்டாஞ்சேனை பொலிசார் கூறுகின்றனராம்:- குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்- கொழும்பு கொச்சிக்கடையில் தனியார் வைத்தியர் ஒருவரிடம் மருந்து எடுக்கச் சென்றிருந்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் இன்று வியாழக்கிழமை காலை (24.04.14) காணாமல் போயிருப்பதாக அந்தச் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் அவர் முறையிடச் சென்றபோது, கொழும்பில் அவர்கள் வசிப்பதற்குரிய ஆதாரமாக வாக்காளர் பதிவைக் கொண்டு வந்தால்தான் முறைப்பாட்டடைப் பதிவு செய்யலாம், அல்லது கொழும்பில் வாக்காளராகப் பதிவு உள்ள ஒருவரைக் கூட்டிக்காண்டு வந்தால்தான் முறைப்பாட்டைப் பதிவு செய்ய முடியும் என்று கொட்டாஞ்சேனை பொலிசார் கையை…

    • 4 replies
    • 567 views
  11. நெடியவனின் பிடிவிராந்து உத்தரவு குறித்து நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை 25 ஏப்ரல் 2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பிடப்படும் நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிராந்து உத்தரவு குறித்து நோர்வே அரசாங்கத்திற்கும், இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. சர்வதே காவல்துறையினருடன் இந்த பிடிவிராந்து உத்தரவு குறித்து பேசப்பட உள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. நெடியவன் தற்போது நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நெடியவன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் ச…

  12. இலங்கை சிறுமி வரைந்த ஓவியம் ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அவருக்கும், அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கான விமான பயணச் செலவும் வழங்கப்படும். ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் உலகு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிர…

    • 0 replies
    • 562 views
  13. -எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம் றம்சான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கல்முனை தொகுதி அபிவிருத்திக்காக இவ்வருடம் 161 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை (23) மாலை கல்முனைப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த வருட அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன், தற்போது மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபாவின் இணைப்பில் கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான …

    • 0 replies
    • 425 views
  14. கொழும்பு கொச்சிக்கடையில் தனியார் வைத்தியர் ஒருவரிடம் மருந்து எடுக்கச் சென்றிருந்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் இன்று வியாழக்கிழமை காலை (24.04.14) காணாமல் போயிருப்பதாக அந்தச் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் அவர் முறையிடச் சென்ற போது, கொழும்பில் அவர்கள் வசிப்பதற்குரிய ஆதாரமாக வாக்காளர் பதிவைக் கொண்டு வந்தால் தான் முறைப்பாட்டடைப் பதிவு செய்யலாம். அல்லது கொழும்பில் வாக்காளராகப் பதிவு உள்ள ஒருவரைக் கூட்டிக்காண்டு வந்தால் தான் முறைப்பாட்டைப் பதிவு செய்ய முடியும் என்று கொட்டாஞ்சேனை பொலிசார் கையை விரித்துவிட்டர்களாம். ஆனால் அவர்களின் சொந்த இடமாகிய வவுனியாவுக்குச் சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு கொ…

  15. இலங்கையில் ஒரு பாலின திருமணத்தை சட்ட பூர்வமானதாக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரித்தானிய உதவிக்கான ஒரு நிபந்தனை என்ற வடிவில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாக, கொழும்பில் வியாழக்கிழமை(23) நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வாறாயினும் அரசாங்கம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்காதென அவர் கூறினார். இலங்கையிலுள்ள ஆண், பெண் ஓரின சேர்க்கையாளர்களும் கடந்த பல வருடங்களாக தமக்கு அங்கீகாரம் கோரிவருகின்றனர். இவர்கள் தமது உரிமையின் பால் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வருடாந்தம் கொழும்பில் நிகழ்வுகளை ஏற்பாட…

  16. புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது: - கலாநிதி இராம் சிவலிங்கம் [Monday, 2014-04-14 08:05:44] விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காக போராடும்போது, எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது சந்ததி எம்மை மதிக்குமா அல்லது மன்னிக்குமா? என் வருந்தியவேளை சிங்கள அரசின் அறிக்கை வெளியானது. பதினாறு அமைப்புக்களையும், அவற்றைச் சார்ந்த நாநூற்றி இருபத்தி நான்கு உறுப்பினர்களையும் பயங்கரவாதிகள்…

    • 1 reply
    • 499 views
  17. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி நால்வர், இன்று (24) இரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதிக்குள் நுழைந்து தேடுதல் மேற்கொண்டதில் விடுதியில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. விடுதியினைச் சுற்றி இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக முதலாம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பிலே விசாரணைகளை மேற்கொள்ள வந்ததாக புலானாய்வுப் பிரிவினர் விடுதிக் காப்பாளருக்குத் தெரிவித்துள்ளனர் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/108092-2014-04-24-16-27-32.html

  18. தனியார் பயணிகள் பேருந்தில் ஆபாச பாடல்களை ஒலிபரப்பிய குற்றம் சுமத்தப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து நவநகர் பகுதிக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்திலேயே இவ்வாறு ஆபாச பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் பயணித்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ´பென்ட்ரைவ்´ கருவியை மீட்டுள்ளனர். பின்னர் அதில் பதிவேற்றப்பட்டுள்ள பாடல்களை கேட்டபோது மிகவும் ஆபாச வார்த்தைகள் அடங்கியிருந்ததால் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ருவன் பண்டார குறிப்பிட்டார். - See more at: http://onlineuthayan.com/News_More.…

  19. யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் 2014.03.8ம் திகதி நடைபெற்றது. அதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகளையும், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் விக்னேஷ்வரன் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இவ்வாறு போட்டியிட்டவர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும். மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்தது இதில் மீண்டும் வசந்தி அரசரட்ணத்தையே ஜனாதிபதி இன்…

  20. எதிர்க்கட்சிகள் முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் அடுத்த ஆண்டில் திடீர் நாடாளுமன்றத் தேர்தலையோ, அதிபர் தேர்தலையோ நடத்த தாம் தயார் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று காலை ஊடக ஆசிரியர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எனது பதவிக்காலம் 2016ம் ஆண்டிலேயே முடியவுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் திடீர் அதிபர் தேர்தலை நடத்த நான் திட்டமிடவில்லை. எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்தக் கோரினால், அதுகுறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறேன். முதலில் எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்க வேண்டியுள்ளது. சட்டத்துக்கு மேலானவர்கள் எவருமில்லை. சட்டத்தை மீறினால், எந்த அரசியல்வாதியானாலும், அ…

  21. இலங்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்! - நாடுகடத்தப்பட்ட பிரித்தானியப் பெண் முறைப்பாடு. [Thursday, 2014-04-24 09:31:32] இலங்கைப் பொலிசார் தம்மிடம் லஞ்சம் கோரியதாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பெண் முறைப்பாடு செய்துள்ளார். புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திய பிரித்தானிய பெண்ணான நயோமி கொலமன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். நானும் பௌத்த மதத்தை பின்பற்றுகிறேன். பௌத்த மதத்திற்கு இழிவு ஏற்படுத்த நான் நினைக்கவில்லை. விமான நிலைய அதிகாரிகள் பச்சை குத்தியமை தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை. எனினும், சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு டாக்ஸி சாரதிகளுமே பச்சை குறித்து கேள்வி எழுப்பினர். நீதிமன்ற …

  22. http://www.youtube.com/watch?v=DV79jcCG1TY&feature=youtu.be

    • 0 replies
    • 414 views
  23. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படையினருக்க அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரோந்துக் கப்பல் இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததை படங்களில் காணலாம். (படங்கள்: பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/108042-2014-04-24-10-09-56.html

  24. சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமய முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து நாட்டுக்குள் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் சர்வமதத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். பத்திரிகை ஆசிரியர்களை இன்று வியாழக்கிழமை (24) காலை சந்தித்த ஜனாதிபதி, தனது இந்த தீர்மானம் தொடர்பில் அறிவித்தார். சட்டத்தை மீறிச் செயற்படுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தான் தனிப்பட்…

  25. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு முறைப்படி புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். “இதன் விளைவாகத் தான், அவர்களில் சிலர் ஈழப் போராட்டத்தில் மீண்டும் இறங்கினர். புனர்வாழ்வுத் திட்டங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர், நலன்புரி நிலையங்களில் 280,000 மக்கள் தங்கியிருந்தனர். அவர்களில் 11 விடுதலைப் புலிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு எல்லா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.