Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் நோக்கம் மற்றும் அந்த சமாதான முயற்சிகள் பின்னணி குறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய செவ்வி. உங்களின் தென்னாபிரிக்கப் பயணத்தின் நோக்கம் என்ன? அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே நாம் அங்கு சென்றோம். தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு, அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவே இது. கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் கொமன்வெல்த் மாநாட்டின் பக்க நிகழ்வாக தென்னாபிரிக்காவின் முன்முயற்சியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அப்போது தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா எனது தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…

    • 1 reply
    • 626 views
  2. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம்சாட்டி வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வவுனியா நகரில் உள்ள இந்த வர்த்தகருக்குச் சொந்தமான வணிக நிறுவனத்தையும் சிறிலங்கா காவல்துறையினர் முத்திரையிட்டு மூடியுள்ளனர். இந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியில் கனடா, இந்தியா, ஏனைய பல நாடுகளில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அல்லது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களினதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்புகளை வைத்துள்ள மேலும் பல …

  3. சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, சிறில் ரமபோசா, அடுத்த மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் உள்ள தமிழ்ச் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான, இணக்கப் பேச்சுக்களில் இந்தியா, நோர்வேயை அடுத்து மூன்றாவது நாடாக தென்னாபிரிக்கா நடுநிலை வகிக்கும் முயற்சியில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, சிறில் ரமபோசா, அடுத்த மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் …

  4. -சொர்ணகுமார் சொரூபன் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய வடக்கு மாகாணசபை தமது கைகளை மீறிப் போய்விட்டதென கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் நடத்தப்படும் சொன்டா கிளப்பினால், யாழ். அரியாலை கிழக்கு பகுதியில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 15 வீடுகள் பயனாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை (20) கையளிக்கப்பட்டன. மேற்படி வீடுகளை பயனாளிகளிடம் கையளித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மிக நீண்டகாலமாக அடிப்படைத் தேவைகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் அரியாலை கிழக்குப் பக…

    • 1 reply
    • 741 views
  5. ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பணிகளை நிறைவேற்றி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் போட்டியில்லை. இந்த குறையை தீர்ப்பத்றகு இரண்டு குழுக்கள் நாட்டில் செயற்படுகின்றன. ஒன்று ஊடகங்கள் மற்றையது ஆளும் கட்சியின் ஒரு சில குழுக்கள். புத்தி கூர்மையுடன் அரசாங்கதை வழிநடத்தும் எதிர்க்கட்சியாக ஊடகங்கள் திகழ்கின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் குழப்பங்களை செய்யும் தரப்பாக ஆளும் கட்சியின் ஓர் தரப்பினர் செயற்படுகின்றனர். இதன் ஓர் கட்டமே அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்தையின் தலையில் உள்ள நுளம்பை பெரிய பந்து ஒன்றினால் தாக்கிய மகன் பற்றி கிராமத்து கதைகளில…

  6. விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்? 21 ஏப்ரல் 2014 விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருளாளரைக் கைது செய்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், நீண்ட விசாரணைகளின் பின்னரே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேக நபருக்கு சொந்தமான விளையாட்டுக் கழகம் ஒன்றை காவல்துறையினர் முடக்கியுள்ளதாகவும், வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து குறித்த நபருக்கு பாரியளவில் பணம் கிடைக்கப்பெறுவதாக விசாரணைகளின் மூலம் தெரிய…

    • 1 reply
    • 896 views
  7. இலங்கையில் புதிய வகை உயிரிய-உரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேயிலை செய்கையில் 50 வீதமளவு இரசாயன உரத்தின் பாவனையைக் குறைக்க முடியும் என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது பயோஃபில்ம்(biofilm) என்கின்ற கூட்டு நுண்ணுயிரிகளின் படலத்தை ஒரு தொழிநுட்பமாகப் பயன்படுத்தி இந்த விவசாய உரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டி அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத்துறைப் பேராசிரியர் காமினி செனவிரட்ன தெரிவித்தார். 'குறிப்பாக பக்டீரியாக்கள், ஃபங்கஸுகள் போன்ற நுண்ணுயிரிகள் அடங்குகின்ற தொழிநுட்பம் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இதன்மூலம் பெருமளவு உயிரிய இரசாயனம் கிடைக்கிறது' என்றார் பேராசிரியர் காமினி செனவிரட்ன. கடந்த 10 ஆண்டுகாலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாக உரு…

    • 2 replies
    • 515 views
  8. பிரித்தானிய பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. புத்தரின் உருத்தை பச்சை குத்தியிருந்த நபர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். பிரித்தானிய பெண் ஒருவர் தனது கைகளில் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரித்தானிய பிரஜையை கைது செய்த விமான நிலைய அதிகாரிகள், நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்துள்ளனர். பௌத்த மதத்தினை இழிவுபடுத்தும் வகையில் பச்சை குத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 37 வயதான மிச்சல் கால்மன் என்ற பெண்ணே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். மிரியான தடுப்பு முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைத்து உடனடியாக நாடு கடத்துமாறு மேலதிக நீதவான் ரீ.எம்.ரீ. பண்டார உத்தரவிட்டு;ள்ளார் http://g…

    • 0 replies
    • 363 views
  9. உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார். பொல்கஹவெலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்தத் தொழிற்சாலையினை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைசச்ருமான கலாநதி சரத் அமுனுகம, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இலங்கையில் உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து கார்கள் மற்றும் வாகனங்களை நிர்மாணிக்கும் ஒரேயொரு தொழிற்சாலை இதுவாகும். இத்தொழிற்சாலையில் மாதாந்தம் 2800 வாகனங்களை பொருத்தக்கூடியதாக இருக்கும் என மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் தலைவர் கலாநிதி லோரன்ஸ…

    • 3 replies
    • 682 views
  10. "வன்முறை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம்." மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2014 யாழ்ப்பாண மாவட்டம் 21.04.2014 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் இணைத் தலைவரின் தலைமையுரை குருர் ப்ரம்மா.............! இணைத் தலைவரவர்களே, அமைச்சர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேசச் செயலாளர்களே, மற்றைய சக அலுவலர்களே! இணைத்தலைவராக நான் பங்குபற்றும் முதற் கூட்டமிது. இங்கு வந்திருக்கும் அனைவரையும் உளமாற வரவேற்று எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் யாவர் மனதிலும் ஒரு கேள்வி எழக்கூடும். அதாவது சுமார் ஆறு மாதங்கள் பதவியில் இருந்த பின்னர் நான் ஏன் இந்தக் கூட்டத்த…

    • 1 reply
    • 502 views
  11. புலிகள் இயக்க சந்தேகநபர் தப்பியோட்டம்! - வவுனியா மருத்துவமனையில் இன்று அதிகாலை சம்பவம். [Monday, 2014-04-21 08:52:56] விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரே தப்பிச் சென்றுள்ளார். நோய் காரணமாக சிகிச்சைக்காக குறித்த புலிச் சந்தேகநபர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போதே சந்தேக நபர் இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. http://seithy.info/breifNews.php?newsID=107821&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 589 views
  12. மகத்தான முதலீட்டு வாய்ப்பு உள்ளது என்கிறார் தூதர்:- யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் என்பன இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையாத நிலையில் மலேசிய முதலீட்டாளர்களுக்கு மகத்தான வாய்ப்புள்ளதாகவும், போருக்கு பின்னர் மலேசியாவுக்கு மகத்தான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் இலங்கைக்கான மலேசிய தூதுவர் அஷ்மி சைமுதீன் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதை உறுதியாக்கியுள்ளது என அவர் கூறினார். போர் நடைபெற்ற காலத்திலேயே மலேசிய நிறுவனங்கள் தொலைத் தொடர்பு மற்றும் உட்கட்மைப்பு வசதிகளில் முதலீடுகளை செய்திருந்தன. தற்போது மேலும் அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதுடன் அதனை…

  13. ஜனாதிபதி மஹிந்தவின் தகவல்களை புலிகளுக்கு பரிமாறும் நபராக செயற்பட்டேன் - எரிக் சொல்ஹெய்ம்:- 21 ஏப்ரல் 2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தகவல்களை, செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பரிமாறும் நபராக செயற்பட்டதாக இலங்கை;ககான முன்னாள் நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல்வேறு செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானப் முனைப்புக்களுக்கு நோர்வே எவ்வாறு ப…

  14. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு நேற்றுத் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவிப்பொருள்களை வழங்கும் நோக்குடன் இவ்விரு ஆயர்களும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு அமைச்சும் உரிய அனுமதியை வழங்கியிருந்தது. இதன்படி நேற்றுக் காலை தமிழ்க் கைதிகளைப் பார்வையிடுவதற்கு மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை அநுராதபுரம் சென்று, அங்குள்ள ஆயரையும் அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் செல்வதற்க…

    • 1 reply
    • 331 views
  15. மனோ கணேசன் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் மத்தள விமான நிலையமும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதல்ல என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டு அபிவிருத்தித் திட்டங்களும் மக்களுக்கு மேலும் சுமையாக அமையுமே தவிர, நன்மைகள் ஏற்படாது என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்ததாகவும், தாக்குதல்கள் மூலம் இந்த கருத்து நிரூபணமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையை மக…

  16. தேசிய கொள்கையுடன் தொடர்புபட்ட விடயமென கூறப்பட்டுள்ளது:- அரசினது நில ஆக்கிரமிப்புகளிற்கு எதிராக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரேரணைகளை கொண்டுவர கூட்டமைப்பு எடுத்த முயற்சிகளை இலங்கை அமைச்சர் டக்ளஸ் நிராகரித்துள்ளார். இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபியினர் இடையிலான கருத்து மோதல்கள் பிடுங்குப்பாடல்களுடன் கூடிய குழப்பங்களால் சொல்லிக் கொள்ளத்தக்கதான எந்தவொரு முடிவும்; எடுக்கப்படாமல் மீண்டும் அடுத்த மாதம் கூடுவதான அறிவிப்புடன் கலைந்துள்ளது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். இது பற்றி மேலும் தெரியவருகையில் பலத்த இடைவெளியின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மு…

  17. http://www.youtube.com/watch?v=PhRlHnx3Kc0&feature=youtu.be

    • 0 replies
    • 335 views
  18. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஆளுகைக்குள்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் அமைந்துள்ள பொதுச்சந்தைக்குரிய காணியை சிறீலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ளதாகவும், பொதுமக்களின் பாவனைக்குரிய அக்காணியில் இராணுவத்தினருக்கான நலன்புரி வாணிபத்தை (Srilanka Army Welfare Shop) அமைத்து இராணுவ பராமரிப்புக்கும் பாதுகாப்பு பணிகளுக்கும் செலவிடுவதற்காக பெருந்தொகை பணம் சம்பாதித்து வருவதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றம் தெரிவிக்கின்றார். இந்த விடையம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொதுமக்களின் வியாபார நடவடிக்கைகளுக்குரிய பொதுச்சந்தை பயன்பாட்டுக்குரிய காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தி அதில் தமது கடைகளை அமைத்து இலாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் எம…

    • 0 replies
    • 366 views
  19. காவி உடையில் குற்றம் செய்வோரைத் தண்டிப்பதற்கான நேரம் வந்து விட்டது! - பிரதமர் டி.எம்.ஜயரட்ண [Monday, 2014-04-21 09:40:24] காவி உடை அணிந்து கொண்டு பௌத்த விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கென புதிய சட்டம் ஒன்றைத் தாம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றார் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கிறார். கண்டியில், வித்தியா சாஹர மகா பிரிவேனாவில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். " காவி உடையை விரும்பியவர்கள் யாரும் அணிந்து கொள்ளும் சுதந்திரம் இன்று உள்ளது. எந்தச் சட்டமும் இதைத் தடுக்காது. ஆனால் சிலர் அதனை பௌத்தத்தை அழிப்பதற்காகப் பயன்படுத்த முனைகிறார்கள். அத்தகையோர் தவறு செய்கின்றமை கண்டுபிடிக்கப்பட்ட…

  20. விசாரணைக் குழுவை அறிவிக்க முன் மூனுடன் பேசுவார் நவநீதம்பிள்ளை news இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்படவுள்ள ஐ.நா. விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவா…

  21. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார். ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விசாரணைக் குழு மற்றும் அதில் இடம்பெறுவோர் பற்றிய விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும், அடுத்தமாதம் எந்த நேரத்திலும் இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு முன்…

  22. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில ஐரோப்பாவில் நுழையத் தடை! - பயணத்துக்கு ஏற்றவையல்லவாம். [sunday, 2014-04-20 19:38:11] ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் சில விமானங்கள், பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்பதால், ஐரோப்பாவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச விமான போக்குவரத்து தரத்திற்கு அமையதாக பழைய விமானங்களை இலங்கை விமானச் சேவை பயன்படுத்தி வருவதே இந்த தீர்மானத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 4- ஆர். ஏ.டி.ஏ. என்ற ஏ. 340 ரக விமானம் ஐரோப்பிய வான் பரப்பிற்குள் நுழைய அண்மையில் தடைவிதிக்கப்பட்டது. 24 வருடங்களுக்கு முன்னர் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அது பயணிகள் போக்குவரத்து…

    • 9 replies
    • 901 views
  23. நாட்டில் இல்லாத பிரச்சினையை உருவாக்க முனைகின்றனர்! - ஜனாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு. [sunday, 2014-04-20 10:09:13] மதங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதும், சமயங்களின் சுதந்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதும் எமது பொறுப்பு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராந்துரு கோட்டை மகாவலி பிரதேச பி, சீ வலயத்தில் வாழும் 5,500 பேருக்கு காணி உறுதி வழங்கும் வைபவம் மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். ஜனாதிபதி அங்கு உரையாற்றிய போது, இப்போது இல்லாத பிரச்சினைகளை புதிது புதிதாக உருவாக்குகின்றனர். நல்லிணக்கம் பற்றிக் கூறுகின்றனர்.மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் அதை ஏற்படுத்…

  24. கதிர்காமத்தில் விபத்து ; ஐவர் சாவு news கதிர்காமம், திஸ்ஸ வீதியில் தெட்டகமுவ வாவிக்குள் வானொன்று இன்று சனிக்கிழமை அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த வானிலிருந்து ஐந்து வயது சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வேறுயாராவது இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தேடப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 19 ஏப்ரல் 2014, சனி 9:25 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=159292889419683092#sthash.vquQwPRy.dpuf

  25. பொய் உள்ள இடத்தில் உண்மையான அமைதி பிறக்காது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலியினை ஒப்புக்கொடுத்த போது சனிக்கிழமை (19) தெரிவித்தார். நீதி இல்லாத இடத்திலும் குழப்பமான சூழ்நிலை ஏற்படும் உண்மை ஏற்கப்பட்டு நடந்த விடயங்களுக்கு எல்லாம் பொறுப்பு கூறப்படும் பட்சத்திலேயே உண்மையான சமாதானம் பிறந்து நல்லிணக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஒற்றுமை, நல்லிணக்கம் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித பலனும் இல்லை. எமது நாட்டிற்கு மாற்றம் தேவை, அதை உலக நாடுகள் அறிந்திருக்கின்றது. எமக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.