Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அணி வென்ற உலகக்கிண்ண பரிசளிப்பு விழாவை இருட்டடிப்பு செய்தது கனேடிய தொலைக்காட்சி? [Wednesday, 2014-04-09 09:09:18] ஐசிசி 20க்கு 20 உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கான விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்ப முடியாமல் போனதற்காக கனடா வின் ஸ்போட்ஸ்நெட் தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி, வெற்றி பெற்ற பின்னர் குறித்த நிறுவனம் தமது நேரலை ஒளிபரப்பை நிறுத்தி வேறு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இது தொடர்பாக ரசிகர்களிடம் இருந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து, கனடாவின் ஸ்போட்ஸ்நெட் நிறுவன பேச்சாளர் செபஸ்டியன் காட்டியா, இந்த தவறு குறித்து தாம் ரசிகர்களிடம் மன்னிப்பை கோருவதாக தெரிவித்துள்ளார். எனினும் ஒளிபரப்பு நிறுத்…

  2. முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் திட்டம்! – கொழும்புக் கூட்டத்தில் ஆலோசனை. [Wednesday, 2014-04-09 09:27:03] நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதகாலத்திற்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துள்ளதாக தெரியவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்க…

    • 1 reply
    • 646 views
  3. இன்றைய முக்கியச் செய்திகள் http://www.youtube.com/watch?v=kxtCgwjzqjU&feature=youtu.be

    • 0 replies
    • 630 views
  4. இலங்கையில் ஐ.நாவின் தோல்வியை மீண்டும் ஒப்புக்கொள்கிறார் பான் கீ மூன்! [Tuesday, 2014-04-08 18:43:46] இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோல்வி கண்டதை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்ததனை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரூவான்டா இனச் சுத்திகரிப்பு இடம்பெற்ற 20 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவும், அதனை தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய பொறிமுறைமையை உரு…

  5. சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - EU 09 ஏப்ரல் 2014 சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. சாட்சியங்கள் மற்றம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. எனினும், சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த கவல்களை இரகசியமாக பேண வேண்டியது அவசியமானது எனவும், அவர்களது தகவல்களை வெளியிடுவது ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்…

  6. தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'கத்தி' திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால் அத்திரைப்படத்துக்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில தினங்களுக்கு முன் சந்தோஷ் சிவன் என்ற கேரள சினிமா இயக்குநர் இயக்கிய 'இனம்' என்ற திரைப்படத்துக்கு தென்னிந்திய தமிழர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அத்திரைப்படம் வெளியிடுவதை அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி தடைவிதித்தார். இலங்கைத் தமிழர்களை அத்திரைப்படம் மோசமாக சித்தரிப்பதாகக் கூறியே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இனம் திரைப்படம் வ…

    • 2 replies
    • 912 views
  7. நந்தகோபனை கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே கைது செய்ததாகக் கூறுகிறார் பொலிஸ் பேச்சாளர்! [Tuesday, 2014-04-08 18:59:14] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் கருதப்படும் கபிலன் எனப்படும் நந்தகோபன் தற்சமயம் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து மலேசியா தப்பிச் சென்ற நந்தகோபன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்ல முற்பட்ட வேளை மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளியாக …

  8. மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டதனை அடுத்தே அவர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர், அரியாலை, செம்மணி, வண்ணார்பண்ணை மற்றும் நீர்வேலி ஆகிய இடங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றித் தெரியவருவதாவது, மண்டைதீவு 6 ஆம் வட்டாரத்தில் சமுர்த்தி அலுவலகத்தில் அருகிலுள்ள வீட்டிலிருந்த இளம் பெண்ணை, வானில் வந்த ஐவர் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை வீட்டினர் கத்தியுள்ளனர். இதன்போது சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் …

  9. ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களை தடுப்பதற்கே புலம்பெயர் அமைப்புகள் மீது தடை! – என்கிறார் கஜேந்திரகுமார். [Tuesday, 2014-04-08 18:56:42] ஐ.நா விசாரணைகளுக்கான சாட்சியங்களை பெற்றுக் கொள்கின்றமையை தடுப்பதற்காகவே, பல்வேறு அமைப்புக்கள் சிறீலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தெரிவிக்கின்றது. தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உத்தியோகபூர்வமாக சிறீலங்காவிற்கு வந்து விசாரணைகளை நடத்த முடியாத ஒரு சூழலில் ஐ.நா இருக்கின்றது என்றால் மறைமுகமாகவாவது அந்த சாட்சியங்களை வெளிக்கொணர செய்வது அவசியம். அதனை செய்யக்கூடிய மிகச்சிறந்த வழி தமிழர் தாயகத…

  10. அரசைக் கவிழ்ப்பது எப்படி என்று மெதமுலானைக்கு வந்தால் சொல்லித் தருவேன்! – ஜனாதிபதி மகிந்த கூறுகிறார். [Tuesday, 2014-04-08 20:16:30] அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் ஹாவர்ட் போன்ற இடங்களுக்குச் செல்லத் தேவையில்லை, மெதமுலானைக்கு வந்தால் அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை சொல்லித் தர முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மத்திய வங்கியின் 2013ம் வருட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். “மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டியது அவசியம். ஆனால் பலாத்காரமாக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. நாட்டில் அரபு வசந்தம் வருவதாக கூறுகின்…

  11. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய வெற்றியாகும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை ஒட்டு மொத்த தேசமும் அடைந்த வெற்றியாகும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ரசாட் மொஹமட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை விடவும் இலங்கை சிறந்த தியாகத்தை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தொடர்பில் உலக நாடுகள் இலங்கையிடம் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabi…

  12. சிறுபான்மை தமிழ் சமூகத்தின் அமைதியான போராட்டங்களை ஒடுக்கும் நோக்கிலேயே, புலம்பெயர் அமைப்புகள் மீது சிறிலங்கா அரசாங்கம் தடையை விதித்துள்ளதாக, மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தினால், 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், 424 தனிநபர்களும், பயங்கரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாற்று சிந்தனையாளர்களை ஒடுக்கும் நோக்கிலேயே சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்துள்ளது. சிறிலங்காவில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைத்துலக சமூகத்துடன் பேணி வரும் தொடர்புகளை துண்டிப்பதே இந்த தடையின் பிரதான இலக்காகும். தடைசெய…

  13. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான ஐவர் அங்கிய குழுவினர் நாளை தென்னாபிரிக்காவிற்கு பயணமாகவுள்ளனர். இலங்கை தொடர்பிலான செயற்பாடுகளுக்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸை சேர்ந்த சிறப்புத் தூதுவர் ஒருவர் தென்னாபிரிக்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த தூதுவர் இலங்கைக்கு அண்மையில் வருகைதரவுள்ளார். இதனை கவனத்தில் கொண்டு இலங்கையின் தூதுக்குழு ஒன்று கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா சென்று சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது. அதனடிப்படையில் இலங்கைக்கு வருகை தரமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுவார்த்ததை நடாத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரின் அழைப்பின் பேரிலேயே கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா செல்லவுள்ளனர். தலைவர் இரா.…

  14. அமெரிக்காவின் உயர்விருது பெற்ற தமிழ் விஞ்ஞானியும் பௌதிகவியல் பேராசிரியருமாகிய சிவலிங்கம் சிவானந்தன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் யாழ்.றோட்டறிக் கழகத்தின் 73 வது அகவை நிறைவை யொட்டி ‘சாதனையாளர் சிறப்புரை’ நிகழ்வு ஒன்று எதிர்வரும் 15 ம் திகதி யாழ்.இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக எதிர்வரும் 13 ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஞ்ஞானி சிவானந்தம் வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.e-jaffna.com/archives/23850

  15. கனடாவில் வாழும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு அவதூறுப் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கின்றது. அந்தச் செயற்பாட்டுக்கு எதிராகக் கனடா அரசு கிளர்ந்தெழுமா? என கனேடிய நாடாளுமன்றத்தில் நேற்றுக் கேள்வியெழுப்பியுள்ளார் புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒட்டாவா மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போல் டிவர். இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையின் துன்பியல் யுத்தத்தின் போது புரியப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச, சுயாதீன விசாரணைக்கு கனடா வாழ் தமிழ்க் குழுக்கள் வலியுறுத்தி வந்தன. இலங்கை அரசு தவறான குற்றச்சாட்டுக்கள் மூலம் அவர்களை இப்போது குறி வைக்கின்றது. எங்கள் சிவில் சமூகத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீத…

  16. தமிழரசு கட்சியை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. களனி பொல்ஹேன என்னும் இடத்தைச் சேர்ந்த ஒருவரால் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த மனுவில் தமிழரசுக் கட்சி நாட்டில் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்ட கட்சி என தீர்ப்பளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் பிரதிவாதிகளாக கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/…

  17. வவுனியாவில் இளம் பெண்ணின் படம் ஆணொருவருடன் நிர்வாணமாக பேஸ்புக்கில் வந்ததால் குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டானிசூர் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த பெண்ணின் படத்துடன் சேர்த்து ஆண் ஒருவரின் படமும் பேஸ்புக்கில் நிர்வாணமாக வந்ததால் நஞ்சுண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்பெண்ணின் முகத்தை நிர்வாணப் பெண்ணின் படத்துடன் இணைத்து அத்தோடு அப்பெண்ணின் நண்பரான ஆண் ஒருவரின் படத்தையும் இணைத்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர் . குறித்த பெண் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?c…

  18. மட்டக்களப்பிலும் புலிதேடும் அரசாங்கம் கிழக்கையும் கிலிகொள்ள வைக்கிறது- தகவலுக்கு 10 லட்சம்:- 08 ஏப்ரல் 2014 1.கோபி இவர் எல்.டி.டி.ஈ இயக்கத்தின் புலனாய்வுப்பிரிவின்கஜீபன் பொன்னையா செல்வநாயகம்அல்லது காசியன் என அழைக்கப்படுவதுடன்,31 வயதுடைய இந்த நபர் 6 அடி உயரமும் பொது நிறமும் கொண்டவர். 2. அப்பன் இவர் எல்.டி.டி.ஈ இயக்கத்தின் புலனாவுப் பிரிவின் நவரெத்தினம் நவநீதன் அல்லது அப்பன் என அழைக்கப்படுவதோடு 36 வயதுடைய இவர்5 அடி 2 அங்குலம் உயரமுடையவர். 3. தேவன் இவர் ராதா படையணியின் விமானி ஆவதோடு, அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கிய நபர்களில் இவரும் ஒருவர்.இவர் தேவன் என அழைக்கப்படுகிறார். இவர்கள் பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்குமிடத்து 0112451636 எனப்படும் தொலைபேசி இலக்கத்த…

  19. (ஆதவன்) தமிழினப்படுகொலையின் மறுவடிவமாகவே இந்த மண்ணில் தற்போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றிவளைப்புகளும் அச்சுறுத்தல்களும் கைது நடவடிக்கைளும் இளைஞர் மற்றும் யுவதிகள் மீதான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். இலட்சக்கணக்கில் மக்களை கொன்றொழித்துவிட்டு தமிழ் இளைஞர் ,யுவதிகளுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்துவதாக தெரிவித்து அழகி,அழகன் போட்டிகளை நடத்தி பரிசுப்பொருளாக சாராயப்போத்தல்களை இராணுவத்தினர் வழங்கிவருகின்றனர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று மதியம் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாள…

  20. நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர் இலங்கையில் கைது என்கிறது கொழும்பு ஊடகங்கள் 08 ஏப்ரல் 2014 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கபிலன் எனப்படும் நந்தகோபன் என்ற நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரான் மற்றும் மலேசிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கபிலனைக் கைது செய்துள்ளனர். மார்ச் மாதம் 6ம் திகதி கபிலனை இலங்கை அதிகாரிகள் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடியவன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவின் இரண்டு பிரதித் தலைவர்களில் ஒருவராக கபிலன் கடமையாற்றி வந்த…

  21. இலங்கைக்கு இறுதிகட்ட போரின் போது உதவிய இந்திய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த புலனாய்வுக்குழு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல். [Tuesday, 2014-04-08 05:46:00] இலங்கையில் தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் புரிந்த இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2008–09–ம் ஆண்டுகளில் நடந்த இறுதிகட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இந்திய அதிகாரிகளும் துணைபோனதாக கூறி, அவர்கள் மீது சிறப்பு விசாரணை நடத்த வசதியாக புலனாய்வுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று, டெல்…

  22. நவநீதம்பிள்ளையின் விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்காது! -திட்டவட்டமாக அறிவித்தார் பீரிஸ். [Tuesday, 2014-04-08 07:45:42] சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் பேசிய அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சர்வதேச விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசித்து விசாரணை நடாத்த அனுமதிக்கப் போவதில்லை. அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் விசாரணை நடத்த முடியாது” எனவும் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=107157&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 387 views
  23. வடக்கில் நடக்கும் சுற்றிவளைப்புகள், தேடுதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்! – ஜனாதிபதியைக் கோருகிறது கூட்டமைப்பு. [Tuesday, 2014-04-08 07:39:03] வட பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கிறது. கோபி என்பவரின் தலைமையில் விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்துலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து, இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாட…

  24. சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயாரை பார்வையிட விபூசிகா செல்லவுள்ளார். சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விபூசிகா அவரது உடமைகள் எடுப்பதற்காக பாதுகாப்புடன் அவர்களது வீட்டுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட உடமைகளை எடுத்து வருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை அடுத்தே அவர் தர்மபுரத்திலுள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கிளிநொச்சி சிறுவர் நன்னடத்தை அதிகாரி மற்றும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தலைவர்; ஆகியோர் பொலிஸார் சகிதம் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தாயாரை தடுப்பு முகாமுக்கு சென்று பார்த்து வருவதற்கு தேவையான ஆவணங்களை கிராம சேவகரிடம் இருந்தும் விபூசிகா பெற்றுக்கொண்டார். பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளியான…

    • 1 reply
    • 413 views
  25. இலங்கையில் சிறுபான்மையினர் எவருமில்லை! – என்கிறார் ஜனாதிபதி. [Monday, 2014-04-07 19:33:50] நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய ஐக்கிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அனைவருக்கும் ஒரே சமமான உரிமை உள்ளது. அனைவரும் சம உரிமையுடன் சமத்துவமாக வாழ முடியும். இனவாதம் பேசி மக்களை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர்.அது ஒருநாளும் சரிவராது. எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=107138&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 549 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.