ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
தீர்மானத்தை இலங்கை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும்! – பிரித்தானிய அமைச்சர் அறிவுரை. [sunday, 2014-03-30 08:39:08] ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய சிரேஸ்ட அமைச்சர் பார்னோஸ் வார்ஸீ தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இன்றி உறவினர்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்கி வருகின்றனர். நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை உரிய முற…
-
- 0 replies
- 313 views
-
-
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டு மாகாணங்களிலும் ஆறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் 2441 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1353 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். மேல் மாகாணத்தில் 102 பிரதிநிதிகளை தெரிவு செய்ய அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 2743 வேட்பாளர்களும் தென் மாகாணத்தில் 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1051 பேரும் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு மாகாண சபைகளிலும் 58 இலட்சத்து 98…
-
- 7 replies
- 402 views
-
-
மாணவர்கள் தமது கையொப்பத்தை தமிழில் இடுதல் வேண்டும் news மாணவர்கள் தமிழில் கையயாப்பம் இடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் நடை பெற்ற தமிழ்ச் சங்கத்தின் கரைச்சிக் கோட்டத் தமிழ் சான்றோர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- நான் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்தபோது எனது மருத்துவச் சிகிச்சைக்கென அவரிடமிருந்து காசோலை ஒன்றைப் பெறுவதற்காக சென்றிருந்தேன். காசோலையுடன் இணைக்கப்பட்டிருந்த கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால் அவரது ஒப்பம் சிங்கள மொழியில் இருந்தது. அவர் தனது தாய் மொழியி…
-
- 0 replies
- 456 views
-
-
பிபிசி சிங்களசேவை தயாரிப்பாளர்கள் இருவர் பதவி நீக்கம்! [sunday, 2014-03-30 09:02:07] பி.பி.சி சிங்கள சேவையின் இரண்டு சிரேஷ்ட தயாரிப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக த கொழும்பு டெலிகிராப் தகவல் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்கள் தொடர்பில் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்தன கீர்த்தி பண்டார மற்று எம்.ஜே.ஆர் டேவிட் ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தமைக்காக சிங்கள சேவையில் இரண்டு ஊடகவியாளர்களை ஊடக புனர்வாழ்வு மையத்துக்கு பி.பி.சி அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது .http://seithy.com/breifNews.php?newsID=1067…
-
- 0 replies
- 613 views
-
-
நான்கு மாத குழந்தையை 8 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய்! – வாழைச்சேனையில் சம்பவம். [sunday, 2014-03-30 08:52:41] குடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை இளம் குடும்பப்பெண் ஒருவர் எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது குடும்ப வறுமை காரணமாக நான்கு மாதங்களே நிரம்பிய தனது மூன்றாவது பெண் பிள்ளையை கோரகல்லிமடு என்ற இடத்தில் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளுக்கு எட்டாயிரம் ரூபாவிற்கு வெள்ளிக்கிழமை விற்றுள்ளார். பிள்ளை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக புஸ்பகுமார …
-
- 0 replies
- 725 views
-
-
ஜெனிவா தீர்மானம் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை! [sunday, 2014-03-30 08:48:07] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் பணியகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமாவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படும் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சாளர் கைற்லின் ஹேடன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், “எல்லா இலங்கையர்களுக்கும் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த, அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்கும்படி, இலங்கைக அரசாங்கத்தைக் கோரும், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனிதஉரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பான, ஐ…
-
- 0 replies
- 483 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தமிழீழத்தமிழர்களின் விடுதலை உந்து சக்தியாக இருக்கும் என்று ஒரு சாராரும் அது ஒரு அயோக்கிய தீர்மானம் என்று இன்னொரு சாராரும் வாதாடுவதை பார்க்கிறோம். என்னைப் பொறுத்தவரை கொடும்புயலில் சிக்கி சின்னா பின்னமாகிப் போன படகில் இருந்து கொந்தளிக்கும் ஆள்கடலில் தூக்கி வீப்பட்ட ஒருவனுக்கு மிதவை ஒன்று கிடைத்தை போன்றது தான் இந்த தீர்மானம்.திசை தெரியாத ஆபத்துக்கள் நிறைந்த கடலிலில் அந்த மிதவையை பிடித்துக்கொண்டு தற்காலிகாக அவன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவன் கரை சேர்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக தீர்மானம் தமிழீழ மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையாவிட்டாலும் அது சிங்கள ஆட்சியாளர்க…
-
- 4 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் பரவியது ஹோலி பண்டிகை! - முதல்முறையாக கொண்டாட்டப்பட்டது. [Wednesday, 2014-03-26 08:54:19] யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக 'வண்ணங்களின் பண்டிகை' எனப்படும் 'ஹோலி' சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து இப்பண்டிகையை கொண்டாடினார்கள். முதலில் ஒவ்வொருவரின் நெற்றியிலும் பாரம்பரிய முறையின்படி வண்ணங்களை பூசி பின்பு வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டாடினர். யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் 'இந்தியா கோர்னர்' இல் கற்கும் இலங்கை மாணவர்களும் இப்பண்டிகையில் பங்கு பற்றியிருந்தனர் இந்தியாவில் ஹோலி பண்டிகை மார்ச் மா…
-
- 21 replies
- 1.5k views
-
-
இராஜபக்சேவை பதவி நீக்க வேண்டும்- சர்வதேச நாடுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்! மார் 28, 2014 நீதி விசாரணை சரியாக நடக்க இராஜபக்சேவை பதவி நீக்க வேண்டும்சர்வதேச நாடுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறேன். தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையீடு செய்வதாக இந்தியா கருத்துத் தெரிவித்திருப்பது சர்வாதிகாரிகள…
-
- 3 replies
- 464 views
-
-
ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளரை படுகொலை செய்ய புலிகள் முயற்சித்திருக்கலாம் - ஜெயராஜ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் தீட்டியிருக்கலாம் என பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் தனது அண்மைய பத்தி செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொலை முயற்சி தொடர்பான தகவல்கள் அம்பலமானதைத் தொடர்ந்தே, அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். கோபி என்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை மற்றும் தப்பிச் சென்றமை போன்ற காரணிகளின் மூலம், கொழும்பில் பா…
-
- 5 replies
- 972 views
-
-
யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிப்யில் வாழ்கின்ற மாணவச் சிறார்கள் பலர் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள். பல மாணவர்கள் போசாக்கான உணவின்றி அடிக்கடி பாடசாலைகளில் மயக்கமடைகின்றார்கள். இது பற்றிய செய்திகள் உள்ளூர்ப் பத்திரிகைளில் வெளிவருகின்றன. கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயது மாணவன் ஒருவனை சப்பாத்து அணிந்து பாடசாலைக்கு வருமாறு வகுப்பாசிரியரால் கூறப்பட்ட போது அதற்கு அந்த 7 வயது மாணவச் சிறுவன் கூறியதாவது, ரீச்சர் சப்பாத்து வாங்குவதற்கு இப்ப எங்களிடம் பணம் இல்லை. எங்கட வீட்டில நிக்கிற ஆட்டுக்குட்டி வளரட்டும், வளர்ந்ததன் பின் அதனை விற்றுப்போட்டு சப்பாத்து வாங்கிப் போடுறன். கொஞ்ச நாளைக்குக் பொறுங்கோ ரீச்சர…
-
- 1 reply
- 588 views
-
-
தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் தெரிவித்துள்ளார். தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மீனவர் களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்தப் படும் திகதி பற்றி ஆலோசித்து வருகிறோம். அத்துடன் கச்சத்தீவு இந்தியாவின் பகுதியல்ல அது இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=873092795729609191
-
- 2 replies
- 621 views
-
-
காசாவில் 1600 பேர்தான் இறந்தார்கள் - அங்கு விசாரணையாயின் இலங்கையில் 40,000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்: விசாரணையை வலியுறுத்துகிறார் நவி-பிள்ளளை [saturday, 2014-03-29 21:53:31] News Service ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் நவநீதம்பிள்ளை காசாவில் 1600 பேர்தான் இறந்தார்கள் அங்கே நடவெடிக்கை எடக்கபடுமாயின் ,இலங்கையில் 40,000 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் - எனவே பன்நாட்டுவிசாரணைப்பொறி அமைத்து கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் என்று அல்யசீராவிடம் தெரிவித்துள்ளார் நவநீதம்பிள்ளை. http://seithy.com/breifNews.php?newsID=106723&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 537 views
-
-
அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய தமிழர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலில் காயம்! [saturday, 2014-03-29 19:29:00] அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு கடந்த வருடம் படகு மூலம் சென்றுள்ளார். தற்போது அவர் அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் இலங்கைகு அனுப்பப்பட்டு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்துள்ளார்.திடீரென நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை செய்ய வேண்டும் உடன் வரவும் என அழைத்துக் கொண்டு கொழும்பிலே வைத்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர்.…
-
- 1 reply
- 384 views
-
-
கடைசி நேரத்தில் மூன்று நாடுகள் காலை வாரிவிட்டனவாம்! – கவலையில் இலங்கை அரசு. [saturday, 2014-03-29 07:36:49] இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், இலங்கை தோல்வியடைந்தமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கவலை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தானும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சகல நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் நாட்டின் நிலைமைகள் பற்றி விளக்கமளித்திருந்தோம். 26 ஆம் திகதி இரவு வரை மூன்று முக்கிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தன.…
-
- 2 replies
- 368 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காதது குறித்து அமெரிக்கா ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. வொசிங்டனில், நேற்றுப் பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்தும், இந்தியா எடுத்த நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப், “இதுதொடர்பாக இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், …
-
- 2 replies
- 920 views
-
-
சர்வதேச விசாரணைக்கு எந்த வசதியையும் செய்து கொடுக்க முடியாது! - மஹிந்த சமரசிங்க திட்டவட்டமாகத் தெரிவிப்பு. [saturday, 2014-03-29 07:51:51] ஜெனிவா தீர்மானத்தை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும் செய்து கொடுக்கப் போவதில்லை என்றும் மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2012 மற்றும் 2013 தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தீர்மானத்தை முன்வைத்த தரப்பினருக்கு பெரும்பான்மை வாக்கு கிட்டவில்லை. இம்முறை முடிவுகளை நோக்குகையில் அவ்வாறே தீர்மானத்தை கொண்டு வந்தவர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.47 வாக்குகளில் 23 வாக்குகளே கிடைத்…
-
- 5 replies
- 450 views
-
-
யாழ்.குடாநாட்டில் உள்ள பொலிஸாரின் எண்ணிக்கை போதாமலுள்ளது. அவ்வாறே அவர்களுக்கான வாகன வசதியும் பற்றாக்குறையாகவுள்ளது. அதனாலேயே இங்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இரவு ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன. யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இங்கு நீதிபதிகள், அமைச்சர்கள் வருகை மற்றும் பல தேவைகள் காரணமாக பொலிஸாரைச் சகல இடங்களுக்கும் அனுப்ப வேண்டியுள்ளது. அதனாலும் பொலிஸாரின் எண்ணிக்கை இங்கு போதாமலுள்ளது. அதனாலேயே இங்கு இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுகிறோம்'' என்று தெர…
-
- 2 replies
- 306 views
-
-
பொறுப்புக்கூறல் எப்போதோ நடந்திருக்க வேண்டியது! – என்கிறார் அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் [saturday, 2014-03-29 07:55:04] இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இப்போது அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஐ.நா. மனிதஉரிமைகள் கவுன்ஸிலினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நான் வாழ்த்துகிறேன் என்று அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றொபேட் மெனன்ட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்திற்கான அமெரிக்க மேலவையின் இரண்டு செனட்டர்களில் ஒருவரான றொபேட் மெனன்டஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் நடந்த விடயங்களுக்கான பொறுப்புக் கூறல் என்பது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. இருதரப்பால…
-
- 0 replies
- 303 views
-
-
தீர்மானத்தால் தமிழ்மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை! – மகிந்த அரசுக்கே சிக்கல் என்கிறார் கஜேந்திரகுமார். [saturday, 2014-03-29 07:27:21] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிரான ஒரு தீர்மானமாக அல்லாமல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு தீர்மானமாகவே தாம் கருதுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தாலும் அதனால் இலங்கை தமிழ் மக்களுக்கு பெரிதாக எந்த விதமான பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தமிழோசைக்கு செவ்வி வழங்கிய கஜேந்திரகுமார் பொன்னம…
-
- 0 replies
- 446 views
-
-
வடக்கில் பாடசாலைகளில் இருந்து மாணவா்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் ராணுவத்தினர்! [saturday, 2014-03-29 13:24:25] இலங்கையின் வடபுலத்திலுள்ள பாடசாலைகளில் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களது விவரங்களை இராணுவத்தினர் திரட்டி வருவதாகவும் இதற்கு அதிபர்களை அவர்கள் வற்புறுத்தி மிரட்டி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவிக்கையினில் கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலைகளில் இராணுவத்தினர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமன்றி அதிபர்கள் கூட கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இராணுவத்தினரின…
-
- 0 replies
- 368 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்து விட்டதாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. 5 ஆண்டுகளுக்குப் பின்னரும், சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்துள்ளதுடன், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கவும் மறுத்து வருகிறது. பொறுப்புக்கூறலையும் தாமதப்படுத்தி வருகிறது“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://…
-
- 0 replies
- 352 views
-
-
நவனீதம்பிள்ளையின், விசாரணைகளை நடாத்தும் முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்பட வேண்டும்: - GTF சுரேன் சுரேந்திரன் [saturday, 2014-03-29 07:33:36] யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின், விசாரணைகளை…
-
- 0 replies
- 276 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கைக்கு எதிரானதல்ல என அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தலைமுறைகளாகவே இலங்கை மக்கள் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுளளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கியமானதும், சமாதானமானதுமான நாட்டில் கௌரவமாக அனைத்து இலங்கையர்களும் வாழக்கூடிய பின்னணி உர…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையின் இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை இலங்கை ஜனாதிபதியும் அரசும் நிராகரித்துள்ள நிலையில், வடக்கு மக்கள் அதனை பெருமெடுப்பில் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் செம்மையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர். ஆனால் தீர்மானம் முழுமையாகவும் உறுதியாகவும் நடைமுறைப் படுத்தப்படுவதை அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். இதற்கிடையே இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காம…
-
- 0 replies
- 357 views
-