Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது அந்த நாட்;டில் வாழுகின்ற மக்களை வென்றெடுக்கக் கூடிய வகையிலேயே அமையப்பெற வேண்டும். இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளேன் என்று கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று அமெரிக்காவும் ஜெனீவாவும் கூட 13ஆவது திருத்தச் சட்டம் தான் சரியென ஏற்றுக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில், எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காணவேண்டுமென்பதே யதார்த்தமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற மன்னார் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். …

  2. ஐ.நா நிபுணர்குழுவும் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு! – நிதியுதவி வழங்கவும் கோரிக்கை. [Wednesday, 2014-03-26 08:01:55] இலங்கை தொடர்பா ஐ.நா விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் நிறுவப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2010ம் ஆண்டு தருஸ்மான் தலைமையில் இந்த விசேட நிபுணர் குழு நிறுவப்பட்டு விசாரணை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் குழுவே யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணைகள் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்தும் எனவும், 2009ம் ஆண்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு போ…

  3. இன்று ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும் போரின் போது இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதையும் மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் வந்து ஆவணப்படத்திற்கான தகவல்களை சேகரிக்கும்போது தமிழ் மகா பிரபாகரன் இராணுவத்தினரால் கைது செய்யப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=829242783726772449

  4. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சந்திப்புகளுக்கு அழைக்கும் இராணுவத்தினர், தேடப்படும் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று குறிப்பிட்டு மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவர் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் வடக்கில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு பிரதேச ரீதியாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றது இராணுவம். துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும…

  5. தொழில் நடவடிக்கையின் பொருட்டு தெஹிவளையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் சேர்ந்து 27 பேர் வரையில் கடந்த இரு வாரங்களுக்குள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத ஆரம்பத்தில் பளையில், தமிழீழத்தின் காவலர்கள் என்ற துண்டுப்பிரசுரத்தை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன்பின்னர் கோபி என்கின்ற சந்தேக நபரைத் தேடுவதாகத் தெரிவித்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அதன் தொடர்ச்சியாக பலரைக் கைது செய்து வருகின்றனர். கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி பயங்க…

  6. (Hafees) அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் கண்டியிலிருந்து புதிய சுற்றுலா அணுகு முறை ஒன்றை பொருளதார அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது. அதிவேக வீதி அபிவிருத்திகள் இல்லாத காரணத்தால் உள்ளூர் சுற்றுலா மையங்களுக்குச் செல்லவதற்கு 'ஆகாய மார்க்க சுற்றுலா" முறையொன்று வெளிநாட்டுச் சுற்றுலாத் துறையினருக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று கண்டி போகம்பறை மைதானத்திருலிருந்து இது ஆரம்பமானது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய முதல்நாள் நிகழ்வில் 130 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாத்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு ஹெலிபொப்டரில் 25 பேர் வீதம் செல்லக் கூடியதாக அமைந்துள்ளது. இது தொடர்பாக டெ…

  7. 20 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் அகப்பட்டார் பிறேமதாஸாவின் மகள் துலாஞ்சலி! [Wednesday, 2014-03-26 08:28:09] இருபது இலட்சம் ரூபா பெறுமதியான, 5000 ரூபா நாணயத்தாள்களை வங்கியில் வைப்பிலிட முயன்ற முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் மகள் துலாஞ்சலி ஜெயக்கொடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.20 இலட்சம் பெறுமதியான 5000 ரூபா நாணயத்தாள்கள் 400 ஐ இவர் கொழும்பு கறுவாத்தோட்டத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். http://seithy.com/breifNews.php?newsID=106486&category=TamilNews&language=tamil

    • 3 replies
    • 1.4k views
  8. அரசாங்கத்தைக் காப்பாற்ற மகாநாயக்கர்களும் களமிறங்குகின்றனர்! – ஜெனீவாவுக்கு அறிக்கை அனுப்ப திட்டம். [Tuesday, 2014-03-25 18:58:35] இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கில், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடனான அறிக்கை ஒன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. நேற்று வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே, மகாநாயக்கர்கள் இந்தமுடிவை எடுத்துள்ளனர். நாட்டின் உண்மையான நிலைமை குறித்தும், யுத்தத்தின் பின் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருவது குறித்தும், மனிதஉரிமை மீறல்கள் இங்கு இடம்பெறவில்லை. என்று சுட்டிக்காட்டியும், சுயாதீன விசாரணை அவசியமற்றது என்பதைச் சுட்டிக்காட்…

  9. மட்டக்களப்பில் தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு! [Tuesday, 2014-03-25 11:57:35] தமிழ் யுவதிகளை இராணுவப் படையில் இணைந்து கொள்ளுமாறு கோரி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆலங்கேணி, ஈச்சந்தீவு, உப்பாறு, சின்னத்தோட்டம் முதலான பகுதிகளில் அறிவிக்கப்பட்டு வருவதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இளம் யுவதிகளே உங்களுக்கு விருப்பமான தொழில் என்று தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இலங்கை இராணுவத்திற்கு தமிழ் பயிலுநர் பெண் சிப்பாய்களை ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை திருகோணமலை 22 ஆவது படைமுகாமில் நடைபெற்று வருகின்றன. தகைமைகளாக திருமணம் செய்யாத …

  10. 2016 இல் ஜனாதிபதி தேர்தல் புதன்கிழமை, 26 மார்ச் 2014 07:46 அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016 இல் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அக்குறஸ்ஸவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104516-2016-.html

  11. யுத்தம் குறித்து முழுமையாக விசாரிக்க தயார்! - என்கிறார் மகிந்த ராஜபக்ஷ. [Wednesday, 2014-03-26 08:49:44] ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாளிகாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, 30 வருட காலம் இந்த நாட்டில் கொடூரமான யுத்தம் நிலவியது. இந்த யுத்தத்தில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்களென அனைத்து இன மக்களும் கொல்லப்பட்டனர். இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமல்ல. இது இனவாத யுத்தமுமில்லை. அன்று பிரபாகரன் என்ற பயங்கரவாதி ஏற்படுத்திய பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எமது பொறுப்பாக அமைந்தது. இரண்டு மணித்தியாலங்களில் வட…

  12. வடகிழக்கு மக்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் மலையகத்தில் கூட பெரும்பான்மையோர் தமிழ் மக்களை ஓரளவு மரியாதையுடன் நடத்தினார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெள்ளவத்தை சண்முகாஸ் உணவகத்தில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந…

  13. பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா? - தாயும் ரி.ஐ.டியால் கைது! [Monday, 2014-03-24 21:30:17] பரந்தன் புகையிரதப் பாதையோரம் மீட்டெடுக்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அதனை விரைந்து அரச செலவில் அடக்கம் செய்ய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் அடையாளம் காணப்படாத சடலங்கள் இருவாரங்கள் கடந்தும் உரிமை கோரப்படாவிட்டால் அதன் பின்னரே உரிய நீதிமன்ற அனுமதி பெற்றப்பட்டு அரச செலவில் புதைக்கப்படுவது வழமையாகும். எனினும் குறித்த சடலத்தை அடையாளம் காட்டுவதில் காட்டப்பட்டுவரும் முனைப்பு சந்தேகத்தினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. குறித்த சடலம் புகையிரத விபத்தில் உயிரிழந்…

  14. 83 வயது மூதாட்டியை பிடித்து நாலாம்மாடியில் விசாரிக்கிறது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! [Tuesday, 2014-03-25 18:57:25] News Service விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் வைத்து நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 83 வயதான திருமதி. ராசமலர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=106446&category=TamilNews&language=tami…

  15. மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமின்றி அரசுடன் பேச முடியாது! – சுரேஸ் பிறேமச்சந்திரன் திட்டவட்ட அறிவிப்பு. [Tuesday, 2014-03-25 18:44:24] மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எவ்விதமான முன் நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முடியும் என கடந்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எனினும், மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு இன்றி பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமைத்துவம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும், மாகா…

  16. கிளிநொச்சியில் தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூஷிகாவையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேக நபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவரை விடுவிப்பதற்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தயார் ஜெயகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரைத் துரத்திச் சென்றபோது, அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சந்தேக நபருக…

  17. நாட்டில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக பலவிடையங்கள் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் அரங்கேறிவரும் இந்நிலையில் மிகுந்த நூதனமாகவும் சில விடையங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே ஹலால் சான்றிதழை விலக்கியுள்ள உபாலி நிறுவனம் அதன் சொக்லேட் உற்பத்திகளில் ஒன்றான ‍‍‍‍‍Megical Moments எனும் உற்பத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள சொக்லட்களிள் பன்றியின் உருவத்தை ஒத்த உருவங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களாலும் பெரிதும் நுகரப்படும் குறித்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களிள் இவ்வாறான விரும்பப்படாத செயற்பாடுகள் இடம்பெறுவது கவலையளிக்க கூடிய விடயமாகும். குறித்த நிறுவனம் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமானால் முஸ்லீம்களாலும் மதிக்ககூடிய நிலமை உருவாகும். இருந்தபோதும் முஸ்லீம்களால் உண…

  18. (எம். நியூட்டன்) இராணுவத்தினரால் தேடப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலான சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று கைது செய்துள்ளனர். அத்துடன் இளைஞர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தருமபுரம் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுப்படுகின்றவர்கள் தொடர்பாக வட பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சிலவற்றை குறிப்பிட்ட சிலபகுதிகளில் மர்ம நபர்கள் கிழித்தெறிந்துள்ள…

  19. மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு இன்று காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டியுள்ளார். பொரள்ளை கனத்தை மயானத்திலுள்ள தனது தாயாரின் கல்லறைக்கு அருகிலேயே தனது கல்லறையை தேர்ந்தெடுத்து அடிக்கல்லையும் நாட்டியுள்ளார். அடிக்கல்லை நாட்டும் முன்னர் மதவழிபாடுகளும் இடம்பெற்றன. தனது மறைவுக்கு பின்னர், சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Pics By : J. Sujeewakumar) http://www.virakesari.lk/?q=node/362418

  20. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இருந்து திரும்பிய அவர் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த தீர்மானம் மூலம் அமெரிக்கா கொடுக்கும் அழுத்தங்களுக்கு சிறிலங்கா பணிந்து விடாது. எல்லா வழிகளிலும் எதிர்த்துப் போராடும். ஜெனிவா செல்வதற்கு முன்னர் ஒரு தூதுவரை நான் சந்தித்த போது, கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தம்மை சந்தித்து, தீர்மானத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டார். அமெரிக்கா போன்ற பலம்வாய்ந்த …

  21. ஜெனிவாவில் இன்று கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் - சுவிற்சர்லாந்து இளையோர் அமைப்பு அழைப்பு! [Tuesday, 2014-03-25 10:56:33] எங்கள் உடன் பிறப்புக்களே! மீண்டும் ஒரு அறவழி போர்! “நம் இன விடுதலையை நாமாகவே போராடி பெறவேண்டும்”. தீர்க்க தரிசனம் மிக்க தலைவன் நம் முன் ஈழத்தை கைகளில் தந்துள்ளான். உலக அங்கீகாரத்துக்க நாம் போராடுவோம் வாரீர்! உறங்கியது போதும் விழி! புரட்சி முரசுடன் எழு தமிழா! எம்மினம் இற்றைக்கு 60 ஆண்டுகளாக இனவாத சிங்கள அரசால், அரசபடையால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. 2009 நம் இனத்தின் வளர்ச்சியை திட்டமிட்டு அழித்தொழித்தது உலகு. கேட்பார் அற்று வீதிகளில் தூக்கி எறியப்பட்டோம். துரத்தி துரத்தி சுடப்பட்டோம். பாலியல் கொடுமை செய்து பின் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டோம். தடுக்…

  22. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நிர்வாக நிலையியல் வழிகாட்டு முறைகளுக்கு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வடக்கு மாகாண தலைமைச் செயலர் விஜயலக்சுமி சமர்ப்பித்த அடிப்படை உரிமைமீறல் மனு மீதான விசாரணையின் போதே, சிறிலங்கா உயர்நீதிமன்ற அமர்வு இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ், மற்றும் நீதியரசர்கள் கே.சிறிபவன், சத்திய ஹெற்றிகே ஆகியோரைக் கொண்ட அமர்வே, இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நேற்று இந்த தடை உத்தரவை வழங்கியுள்ளது. தனது பணியில் வடக்கு மாகாண முதல்வர் குறுக்கிடுவதாகவும், தன்னைப் பதவியில் இருந்து அகற்ற முனைவதாகவும் குற்றம்சாட்டி, வடமாகாண தலைமைச்செயலர் விஜயலக்சுமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த …

  23. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவில், 'விரிவான சுதந்திர விசாரணை'க்கான காலவரையறையை நிர்ணயித்து, இந்தியாவின் ஆதரவை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கான இறுதியான தீர்மான வரைவு, அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் நேற்று உறுப்பு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில், இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் முன்னைய வரைவுகளில் இல்லாத வகையில், நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப்பகுதி என்ற புதிய காலவரையற…

  24. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிக்கிறதாம்! – அமைச்சர் ஹக்கீம் கூறுகிறார். [Monday, 2014-03-24 08:48:20] அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதுடன், சில நடவடிக்கைகளை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கூட்டணி கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் காங்கிரஸிற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வகட்சிப் பேரவையின் தலைவராக கடமைய…

    • 3 replies
    • 503 views
  25. Started by தமிழரசு,

    வெள்ளவத்தை சண்முகாஸ் உணவகத்தில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதையும் முன்னணியின் வேட்பாளர்களையும் முக்கியஸ்தர்களையும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலாம் http://tamil.dailymirror.lk/--main/104398-2014-03-24-16-57-19.html

    • 1 reply
    • 491 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.