ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
தலைவர் பிரபாகரனின் யானை எங்கே? - கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல். [sunday, 2014-03-09 09:49:33] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பராமரித்து வந்த யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர். அவர் புலி, கரடி, யானை என்பனவற்றை வளர்த்து வந்தார். அவர் உயிரிழக்கும் வரை புலியைத் தன்னுடன் வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வளர்த்த யானை மிகவும் அழகானது. அது தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2009 இல் போர் தீவிரம் பெற…
-
- 11 replies
- 1.1k views
-
-
'நாங்களும் தீர்மானத்தை எதிர்த்தால் சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையை கைகழுவி விட்டுவிடும்': சம்பந்தன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார். சர்வதேச விசாரணை என்கின்ற சொற்பதம் அந்தப் பிரேரணையின் முன்வரைவில் இல்லை என்பதற்காக, அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். அமெரிக்காவின் பிரேரணை முன்வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தலைவர் இரா. சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னே…
-
- 1 reply
- 695 views
-
-
புதிய போர்க்குற்ற ஆதார ஆவண காணொளியொன்றினை சனல் - 4 வெளியிட்டுள்ளது. இந்த காணொளி இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் பாலியல் ரீதியான கொடுமைகளை புரிவதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவை தமக்கு வழங்கியுள்ளதாக சனல் - 4 தெரிவித்துள்ளது. இந்த காணொளி ஆதாரம் பற்றி சனல் - 4 பணிப்பாளர் கெலும் மெக்ரே குறிப்பிடுகையில், தான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மோசமான காணொளி ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை செய்துள்ளதற்கான ஆதாரத்தை இந்த காணொளி வெளிப்படுத்துகிறது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் துயரமான இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள்…
-
- 4 replies
- 2.3k views
-
-
போர்க்குற்ற விவகாரத்தில் அமெரிக்கா - இந்தியா இடையே இணக்கம் இல்லை! - இந்திய ஊடகம் தகவல். [Monday, 2014-03-10 15:43:21] போர்க்குற்ற விவகாரத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்ற இந்திய ஊடகம் ஒனறு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை உட்பட்ட பிராந்திய மற்றும் இருதரப்பு விவகாரங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணக்கங்களை வெளியிட்டுள்ளன. எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தடைகள் தொடர்கின்றன. கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் இராஜாங்க உதவி செயலாளர் நிஷா பிஸ்வால், இந்திய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார். ஏற்கனவே இந்தியாவின் அமெரிக்காவுக்கான இராஜதந்திரி தேவ்யானி கொப்ரகேட் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடி…
-
- 0 replies
- 427 views
-
-
நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்தும் போரில் நானும் இணைந்திருப்பேன் என்கிறார் சந்திரிகா! [Monday, 2014-03-10 22:44:50] ‘நான் தற்போது அரசியலில் இல்லை. இருப்பினும், நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்தும் போரில் நானும் இணைந்திருப்பேன்’ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்தார். நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அனைவரும் அதிகாரத்தைக் கோரி நிற்கின்றனர். அரசியல்வாதிகள் களவெடுக்காமலிருக்க பழகியிருந்தால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=105387&category=…
-
- 0 replies
- 244 views
-
-
மாகாணசபைத் தேர்தலை அதிநவீன கருவிகள் மூலம் உளவு பார்க்கிறதாம் அமெரிக்கா! – சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு. [Monday, 2014-03-10 09:40:33] இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இந்த உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென அமெரிக்கத் தூதரகம் 1500 அதி நவீன தொலைபேசிகள் மற்றும் 1500 கமராக்களை தருவித்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு என்ற போர்வையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பில் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. அதி நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்தி உளவுப் ப…
-
- 0 replies
- 307 views
-
-
சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தினார் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான லீ-ஸ்கொட்: [Monday, 2014-03-10 21:01:46] சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தி ஐ நா பேரவையில் பிரித்தானியர் தமிழர் பேரவை இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து ஜெனிவாவில்; தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான லீ-ஸ்கொட் தெரிவிக்கையில்.... ஐ நா பேரவை இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலேயே நாம் இங்கு கூடியுள்ளோம். நீதி நல்லிணக்கச் செயற்பாடுகளை இலங்கை அரசு மேற்கொள்ள ஏலவே தவறியுள்ளமையினால் சர்வதேச சுயாதீனப் ப…
-
- 0 replies
- 835 views
-
-
தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இனவழிப்பு நடவடிக்கைளுக்கு நீதிகோரி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமை ஆணையகத்தின் முன்னார் ஈழத் தமிழர்களால் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (10-03-2014) பிற்்பகல் 1.30 மணியளவில் ''றுய் து மொம்பிரிலியன்'' வீதியில் அமைந்துள்ள பூங்காவில் ஒன்று கூடிய மக்கள், அங்கிருந்த பேரணியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகம் வரை சென்றனர். கொட்டொலிகள் எழுப்பியவாறும், பதாதைகள் தாக்கியவாறும் தமக்கு நீதி வேண்டும் என பல ஆயிரம் மக்கள் பேரணியை கலந்துகொண்டனர். http://www.youtube.com/watch?v=cpe0WnA0CGg பேரணியின் அரங்க நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிச் செயலாளர் மற்றும் தமிழ் இன உண…
-
- 4 replies
- 728 views
-
-
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டாக ஒப்பமிட்ட அறிக்கை அறிக்கை ஒன்று நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு- அமெரிக்கா, பிரிட்டன் முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு நாடான மொண்டினிகாரோ, மெஸிடேனியா, மொறீஸியஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வை ஒட்டி இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள பிரேரணையின் நகலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனமாக பரிசீலனை செய்தது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் கௌரவம், சமத்துவம், நீதியுடன் வாழக்கூடிய …
-
- 2 replies
- 417 views
-
-
அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் பலத்த முரண் நிலை காணப்படுவதற்…
-
- 11 replies
- 1.4k views
-
-
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இன்று நடக்கும், கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கொண்டாடப்படும் கொமன்வெல்த் நாளை முன்னிட்டு, லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சிறப்பு ஆராதனை மற்றும், கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு உபசாரத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்பார் என்று கொமன்வெல்த் செயலகம் முன்னர் அறிவித்திருந்தது. கொமன்வெல்த் அமைப்பின் தலைவர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானிய மகாராணி எலிசபெத்துடன் இணைந்து இந்த நிகழ்வுகளுக்குத் தலைமையேற்கவிருந்தார். எனினும், சிறிலங்கா அதிபரின் லண்டன் பயணம் கைவிட…
-
- 1 reply
- 574 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு தரக் கோரி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தனிப்பட்ட ரீதியாக கடிதங்களை அனுப்பியுள்ளார். பிரித்தானியப் பிரதமர் பணியக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ‘தி கார்டியன்‘ நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய அனைத்துலக அழைப்புகளுக்கு அந்த நாடு திருப்தியான பதில் அளிக்கத் தவறியுள்ளதால், அமெரிக்கா மற்றும் ஏனைய மூன்று நாடுகளுடன், போர்க்குற்றங்கள் குறித்த முழுமையான அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதில் பிரித்தானியாவும் இணைந்து கொண்டுள்ளது. கொமன…
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் போல் மொன்ஞ்சு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த பிரான்ஸ் தூதுவர் இன்று காலை 10.30 மணிக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரை கைதடியில் உள்ள வடமாகாண சபையின் அவைத்தலைவரின் உத்தியோக பூர்வ அலுவலகத்தில் சந்தித்து போருக்குப் பின்னரான வடக்கின் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். சந்திப்பில் வடக்கில் இராணுவப் பிரசன்னம், காணி சுவீகரிப்பு, வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள், ஜெனீவா மாநாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, இன்று காலை 9.30 மணிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந…
-
- 0 replies
- 215 views
-
-
சுப்பிரமணியம் பாஸ்கரன்,நவரத்தினம் கபில்நாத் கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில்,வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்த குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையையும் மகனையும் இன்று காலை மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். ரயில் வந்து கொண்டிருந்த நேரம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினைக் கடக்க முற்பட்ட வேளையிலே இந்தவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்தவிபத்தில், வவுனியா சுந்தரபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் வயது 32 மற்றும் அவருடைய மகனான சத்தியசுதன் டினோயன் ஆகியோரே இதன்போது ஸ்தலத்தியே பலியாகியுள்ளனர். நெடுங்கேணியில் உள்ள அவர்களின்…
-
- 18 replies
- 1.6k views
-
-
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழீழ விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=671762713107839233#sthash.clu3ZSla.dpuf
-
- 16 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி முருகானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சிவசுப்பிரமணியம் கஜானன் (19) என்ற மாணவன் இன்று (09) உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் சோமசுந்தரம் சபாபதிப்பிள்ளை (63) என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மேற்படி பகுதியிலுள்ள ஊர்மனைகளுக்குள் காட்டு யானையொன்று இன்று காலை புகுந்து அங்கிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கியது. இதில் அகப்பட்டுக்கொண்ட சபாபதிப்பிள்ளை என்பவர் யானையின் தாக்குதலில் படுகாயமடைந்து, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஊர்மக்கள்…
-
- 1 reply
- 505 views
-
-
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபு தொடர்பாக மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபுக்கு ஆதரவு தேடும் படலங்களும் அதற்கு எதிராக உறுப்பு நாடுகளின் ஆதரவை தேடும் படலங்களும் ஜெனிவாவில் எதிரும் புதிருமாக இடம்பெற்றுவருகின்ற நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இலங்கை தரப்பிலும் இராஜதந்தி…
-
- 0 replies
- 722 views
-
-
Dr M K Muruganandan Like This Page · 7 hours ago நான் ஒரு அரசியல் ஞானசூனியம் என்று நினைத்திருந்தேன். நம் நாட்டு தமிழ் சிங்கள தமிழ் பத்தரிகைகளை இனங்களிடையே சிண்டு மூட்டும் கைங்கரியம் செய்பவை என்றும் எண்ணியிருந்தேன். தப்புத்தான். இது இன்றைய தினக்குரல் பத்திரிகையின் கார்ட்டுன் படம் ஞானசூனியனுக்கும் புரிந்த உண்மையைத்தான் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் புரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. பத்திரிகை ஆசிரியர்களுக்கும் புரிகிறது. ஊர் உலகத்திற்கும் புரிந்த உண்மை அவர்களுக்கு மட்டும்தான் புரியமாட்டேன் என்கிறது. ஆம் நம் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளைத்தான் சொல்கிறேன். https://www.facebook.com/photo.php?fbid=720323771311742&set=a.…
-
- 22 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 511 views
-
-
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி மறைக்கார் தீவு கிராம முஸ்ஸிம் மக்கள் தமது காணிகளை கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பலவந்தமாக பிடித்து வைத்துள்ளமையினை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை கலை முதல் மறிச்சிக்கட்டி பிரதான வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையினர் மறைக்கார் தீவு கிராம மக்களுக்குச் சொந்தமான வயல் காணி மற்றும் வீட்டுக்காணி என சுமார் 250 ஏக்கர் காணியை அபகரித்திருந்தனர். இந்த நிலையில் இக்கிராம மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். இதனால் இக்கிராம மக்கள் நிறந்தர காணி இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர். இராணுவத்தினரும், கடற்படையினரும் காணியை தன்வசப்படுத்தி…
-
- 1 reply
- 351 views
-
-
Sri Lanka: new video evidence of grotesque violations today. 6.00 pm in channel4 news!!!!!! சிறிலங்காவின் புதிய போர்க்குற்ற ஆதாரம் இன்று மாலை 18.00 மணிக்கு!!!!!!!!சனல்4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது.
-
- 5 replies
- 856 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலைப் புலிகள் எனக் கூறி வெள்ளவத்தை பகுதியில் தமிழ் வைத்தியர் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா பணத்தினையும் 3 பவுண் தங்க நகையினையும் கப்பமாக பெற முனைந்த மூவர் கொண்ட குழுவினரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீன்டும் ஸ்தாபிக்கப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான நிதியினையே தாம் சேகரிப்பதாகவும் கூறி இந்த கப்பம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியரின் முறைப்பாட்டினைத் தொடர்ந்து கப்பத்தொகையினை குறித்த குழு பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களை கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். குறித்த த…
-
- 1 reply
- 283 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையில், சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஏமாற்றம்தான் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வின் ஆரம்ப நாளன்று, உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரை நிகழ்வில் ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் உரையாற்றுவதாக இருந்தது. அவரது உரையும் முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், உக்ரேன் விவகாரம் அவரது ஜெனீவா பயணத்தை தடைப்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஐரோப்பிய நேரப்படி மாலை 04 மணியளவில்…
-
- 5 replies
- 957 views
-
-
பிரான்ஸ் தூதுவர் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்ட பிரான்ஸ் தூதுவர் இன்று மாலை 5.30 மணியளவில் உதயன் பணிமனைக்கு வருகைதந்து பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஈ.சரவணபவன் மற்றும் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். கலந்துரையாடலில், இலங்கையில் ஊடகத்துறையின் தற்போதைய நிலை, உதயன் பத்திரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் நடைபெற்ற பகுதிகளையும் நேரடியாக பார்வையிட்டார். மேலும் போருக்குப் பின்னரான சமகால நிலைமை தொடர்பிலும் , வடக்கு மாகாண சபையின் செயற்பாடு குறித்தும் வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 0 replies
- 246 views
-
-
ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதி பிரான்ஸிகோ இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த சந்திப்பானது எதிர்வரும் மே மாதத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிகோவின் இலங்கை விஜயத்தின் போது தொழிலாளர்களின் நலன்கள்,வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு தேடிச்செல்வோர் தொடர்பாகவும், அவர்களிற்கு ஏற்படும் பிரச்சனைகள்,மற்றும் சட்டவிரோதமான குடியேறிகள் தொடர்பாகவும் அதிகளவில் கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும் பிரான்ஸிகோ வடக்கின் பல்வேறு பிரதேசங்களிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தெரியவருகின்றது. http://www.onlineuthayan.com/News_More.php?id=125142718010469899
-
- 0 replies
- 271 views
-