Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு அரசாங்கம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மாறாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற மாற்று பொறிமுறைமை ஒன்றின் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை திரட்டி பழையவற்றை தோண்டி எடுப்பதனால் பிரிவினையே அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடு அதிகரிக்குமே தவிர, …

    • 6 replies
    • 726 views
  2. வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல் கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தினில் இன்று காலை நடைபெற்றிருந்தது.பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பணியாளர்கள் சகிதம் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.பேரவையின் முகப்பு வாசலில் பொங்கல் பொங்கி பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது. இதனிடையே தமிழர் பொங்கலான தைப்பொங்கல் இன்று வடகிழக்கெங்கும் அமைதியாக கொண்டாடப்பட்டுள்ளது.ஆலயங்களிலும் வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.சனசமூக நிலையங்கள் விளையாட்டுக்கழகங்களென பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. http://www.pathivu.com/news/29064/57//d,article_full.aspx

  3. (மாத்தறை நிருபர்) எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் வேலை திட்டங்களை இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அல்லாது போனால் 2020ம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என எய்ட்ஸ் நோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்ட நிபுணர் டாக்டர் சிசிர லியனகே காலியில் வைத்து இத்திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சுகாதார அதிகாரிகள் சுகாதார பரிசோதகர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த கூட்டம் காலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. தொடர்ந்து அவர் உரையாற்றும் போதுஎச்.ஐ.வி தொற்றியவர்களுள் கடந்த 25 வருட காலங்களில் 1808 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர். தன்னின சேர்க்கை கொள்வது தற்போது எமது நாட்டில் மிக வே…

  4. யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு உழியர்களால் இன்று தமிழ் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் பண்பாட்டு உடைகளை அணிந்தபடி தமிழர் திருநாளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். இதேவேளை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களால் தைப் பொங்கல் பொங்கப்பட்டது. கடந்த பல வருடங்களின் பின்னர் மாணவர்கள் வளாகத்தில் பொங்கல் கொண்டாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பாகைகள் அணிந்து தமிழர் பண்பாட்டு அடையாளங்களுடன் மாட்டு வண்டிகளில் வந்த மாணவர்கள் தைப் பொங்கல் கொண்டாடினர். குளோபல் தமிழ் செய்தியாளர் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/1…

  5. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை 23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகார…

  6. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடெல்லி செல்லும் அவர், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகப் பிரமுகர்களுடனும் ரணில் சந்திப்பு நடாத்த உள்ளார். தென், மேல் மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் ரணில் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயம் முக்கியமானதாக கருதப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=101356&category=TamilNews&language=tamil

  7. 'கிழக்கில் முதலிடுவோம்' எனும் தொனிப்பொருளிலான மாநாடொன்று எதிர்வரும் வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப, கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்வில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்: முதலீட்டாளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  8. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என சிறிலங்காவிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மற்றும் சமாதான, சகவாழ்வுக்கும் உடன்பாடுகள் எட்டப்படல் அவசியமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது... மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றினை நடத்திக் குற்றாவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இவ்வாறானதொரு விசாரணையை அமெரிக்கா ஊக்கவிக்க பின்னிற்கமாட்டாது. போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டீபன் ராப், தனது சிறிலங்கா விஜயத்தின் போது யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களுடனான…

  9. மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இவ் விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். அரசாங்கத்தின் கபடத்தனத்தினை தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் அரசாங்கம் சுயாதீனமான பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் விடயத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறாக நடந்து கொள்கின்றது. இன்று த…

  10. இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பெண் நடன கலைஞர்களை இலங்கையில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வீசா வரைமுறைகளை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். பொரலை பகுதியில் இயங்கி வரும் இரவு நேர விடுதி ஒன்றில் நடனமாடுவதற்காகக் குறித்த கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் பயண வீசாவில் வந்து இலங்கையில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை தற்போது குடிவரவு துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.pathivu.com/news/29051/57//d,article_full.aspx

  11. தனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை முள்ளியவளையில் வைத்து பொலிஸாரால் கடந்த 12 ஆம் திகதி அபகரித்து சென்றுவிட்டதாக வடமாகாணசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளியவளை கணுக்கேணி கிழக்கில் இலவச கண்ணாடி வழங்குவதற்கான பரிசோதனைகளை வவுனியாவிலுள்ள வைத்தியசாலை மற்றும் கொழும்பிலுள்ள விஷன் கெயாருடன் இணைந்து கடந்த ஞாயிறன்று மேற்கொண்டிருந்தோம். அதில் 150 பேர் பங்குபற்றியதுடன் 93 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். இதேவேளை, அழிந்துபோகின்ற எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலைநிகழ்ச்சியொன்றையும் அதே தினத்தில் நடத்தினோம். இந்த …

  12. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை 23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகார…

  13. வடக்கில் அரசாங்கத்திற்கு ஏற்றமாதிரியே குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது : சுரேஷ் எம்.பி உண்மைகளை மூடி மறைத்து அரசாங்கத்திற்கு தேவையான விதத்திலேயே தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தினால் குடிசன மதிப்பீடு வடக்கில் மேற்கொள்ளப்பட்டது. எனவே இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடக்கில் சர்வதேச நிறுவனங்களை வெளியேற்றி சாட்சியமில்லாத யுத்தத்தை அரசாங்கமே நடத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டினார். தொகை மதிப்பு புள்ளி விபரத்திணைக்களத்தின் புள்ளி விபரத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விமர்சிப்பது அவர்களது உண்மைகளை மூடி மறைப்பதற்கே என அம…

  14. மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இவ் விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். அரசாங்கத்தின் கபடத்தனத்தினை தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் அரசாங்கம் சுயாதீனமான பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் விடயத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறாக நடந்து கொள்கின்றது. இன்று தமிழர்களு…

  15. சிங்­கள – ஆங்­கில ஊட­கங்­களில் தமிழர் பிரச்­சினை மூடி மறைக்­கப்­ப­டு­வது நாட்­டுக்கே உரிய சாபக்­கேடு : கூட்­ட­மைப்பு இலங்­கையில் தமிழ் மக்கள் எதிர்­கொண்டு வரு­கின்ற பிரச்­சி­னைகள், அவல நிலை­மைகள், இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போதான குற்­றங்கள் மற்றும் தற்­போது புதி­தாக உரு­வெ­டுத்­தி­ருக்கும் மன்னார் மனித புதை குழி விவ­காரம் உள்­ளிட்­டவை தொடர்பில் சிங்­கள மற்றும் ஆங்­கில ஊட­கங்­களில் வெளி­யாகும் இன­வாத ரீதி­யான திரி­பு­ப­டுத்­தல்கள் அல்­லது மூடி மறைப்­புகள் அனைத்தும் இந்­நாட்டின் சாபக்­கே­டு உள்ளது என்று தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கடும் விசனம் தெரி­விக்­கின்­றது. தமிழ் ஊட­கங்­களைத் தவிர்ந்த ஏனைய ஊட­கங்­களில் மூடி மறைக்க முய­லப்­ப­டு­கின்­ற­த…

  16. இறுதிப்போரின்போது கொத்தணி, இரசாயனக் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக அண்மையில் அமெரிக்க அதிகாரிகளிடம் ஆயர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு எதிர்வினையாக இலங்கையின் ஐலண்ட் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கொத்தணிக் குண்டுகளை வாங்கும்படி அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டுவாக்கில் தமக்குப் பரிந்துரைத்ததாக ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு.. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664 திருத்தப்பட்ட காரணம்: எழுத்துப்பிழை

    • 8 replies
    • 1.4k views
  17. தைப்பொங்கலை கூட மறந்து விட்டனர் யாழ் மக்கள் என்று யாழ் நகர் நவீன சந்தை தொகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் வியாபாரத்துக்கென பொருட்களை கடைகளில் வாங்கிக் குவித்துள்ள வர்த்தகர்கள் வியாபாரம் இல்லாது பெரும் நெருக்கடிக்காளாகியுள்ளனர். இந்த நிலையில் நகர்க்கடைகள் யாவும் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும் பண்டிகைக் காலங்களில் கிராமப்புறங்களில் கூடுதல் நடைபாதைக் கடைகள் அமைக்கப்படுவதால் நகர்ப்புறக் கடைகளை மக்கள் புறக்கணிப்பதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர், நாங்கள் ஒரு வாரத்துக்கு முன் பொங்கலுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி குவித்துள்…

  18. -ஏ.எச்.ஏ.ஹுஸைன், தேவ அச்சுதன், வடிவேல் சக்திவேல் 'ஈழத்தின் வலியை உணர்ந்தவர்களில் நானும் ஒருத்தி. உணர்ந்ததை விட மனதில் அனுபவித்திருக்கின்றேன். உறக்கமில்லாத பல இரவுகளை நான் கழித்திருக்கின்றேன். போர் இடம்பெற்றபோது நிம்மதியில்லாத நாட்களாக என் வாழ்நாளில் பல நாட்களை நான் தொலைத்திருக்கின்றேன். விரக்தியின் விழிம்புக்குக் கூட நான் சென்றதுண்டு. உறவுகளிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத அந்த ஓலங்கள் இன்றும் என் மனத்திரையில் ஊமையாகி விட்டிருக்கின்றன' என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய பீட விரிவுரையாளரும் பொதுவைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி மகேஸ்வரன் உமாகாந் எழுதிய 'ஈழத்தின் வலி', 'மாவிலாறிலிருந்து நந்திக் கடல் வ…

    • 1 reply
    • 1k views
  19. "சிலர் தொடர்புகொண்டு உதவி செய்யலாம் என்று சொல்லுகினம். கணவரை விடுவிக்க உதவுங்கோ. அது போதும் எங்களுக்கு. அதுதான் எங்களின்ர கோரிக்கை.'' சிவாஜினி: வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம்தானே இருந்தது. அப்ப எல்லாரும் அவைக்குக் கீழதானே வேலை செய்தவை? என்ர மனுசனும் அப்பிடித்தான் வேலை செய்தவர். அவருக்குத் தச்சு வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்திலதான் அவர் 1999ஆம் ஆண்டில இருந்து இறுதி போர் நடக்கும் வரைக்கும் வேலை செய்தவர். அதுதான் அவர் செய்த பிழையா இருக்கவேணும். தாங்கள்தான் இயக்கம் எண்டு சொல்லிக் கொண்டிருந்த எத்தினையோ பெரிய ஆக்கள் எல்லாம் இப்ப அரசாங்கத்தில அமைச்சரா இருக்கினம். என்ர புருசனப்போல ஒண்டும் தெரியாத உடம்பு ஏலாத ஆக்கள்தான் அவைக்குக…

  20. மகிந்தருக்கு வக்காளத்து வாங்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித். மன்னார் மற்றும் யாழ்;ப்பாண பேராயர்களினால் சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் இலங்கை அரச படையினர் இரசாயன ஆயுதங்களையும், கொத்தணி குண்டுகளையும் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் ரெப்பை சந்தித்த மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்க…

  21. இலங்கை ஒரு சிறிய நாடு. இந்த நாட்டில் 5 இனங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியாவில் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனினும் அவர்கள் பிரிவினை வாதத்தையோ தனிநாட்டையோ கோரவில்லை. ஆனால் இலங்கையில் 03 மில்லியன் மக்கள் வாழும் இந்த சிறிய நாட்டில் தனிநாட்டைக் கோருவது பிரிவினையையே ஏற்படுத்தும் என பிரதமர் டீ.எம்.ஜயரட்ன யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ். துர்க்கா மணிமண்டபத்தில் முத்திரை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்து மதத்தினரும் பௌத்த மதத்தினரும் ஒரே சமய பழக்கவழக்கங்களை உடையவர்கள். இந்து மதத்தில் இருந்து பழக…

  22. தாக்கப்பட்ட தேவாலயம் ஒன்று இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன. எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தேவாலயங்களின் குறைந்தது இரண்டின் மீதான தாக்குதலிலாவது கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு தேவாலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த தேவ…

  23. மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் வரும் 20-ம் தேதி தமிழக-இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 163 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள மகாபோதிக்கு வந்து அங்கிருந்து இலங்கை புறப்படுகின்றனர். நல்லெண்ண அடிப்படையில் தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுதலை செய்திருப்பதன்மூலம், மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தையும் சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.maalaimalar.com/2014…

  24. மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டன. இதனை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் உறுதிப்படுத்தினர்.மேற்படி இரு மாகாண சபைகள் கலைக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல்கள் ஆளுநர்களால் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு மாகாண சபைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவிலேயே கலைக்கப்பட வேண்டிய போதும் முதலமைச்சர்களின் வேண்டுகோளுக்கமைய மேல் மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் உரிய காலத்திற்கு முன்பாகவே கலைத்துள்ளனர். இதன் படி, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு புதிய மாகாணசபைகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் மார்ச் மாத இறுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணசபை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.