Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன், வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் இரவில் தங்குவற்காகச் சென்றபின்னர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்திச் சென்ற நான்குபேரில் ஒருவர் தமிழ் பேசியதாகவும், அவரே தன்னுடைய கைத்தொலைபேசியைக் கொடுத்து வீட்டிற்குக் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்துமாறு கூறியிருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் விவரித்தார்.புதன்கிழமை இரவு வழமைபோல சகோதரியின் வீட்டில் படுப்பதற்காக தனது மகன் சென்றதாகவும்,…

  2. இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது. இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உறுதிப்படுத்தினார். வவுனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பில், அரச படைகளின் கொடூரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இம்முறை ஜெனிவாவில் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உற…

    • 10 replies
    • 621 views
  3. ஆனையிறவு தொடருந்து நிலையத்துக்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இதன்படி, ஆனையிறவு தொடருந்து நிலையம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து திரட்டும், 15.5 மில்லியன் ரூபாவைக் கொண்டு, புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. சிறிலங்கா கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த புனரமைப்புத் திட்டத்துக்கான யோசனைக்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் உதவியைப் பெறுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படும் போது, ஆனையிறவு தொடருந்து நிலையத்தின் பெயரை சேனஹசக்க த…

  4. வடமராட்சியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன் கடத்தப்படவில்லையெனவும் அவர் பொய் கூறி முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் இருந்ததாகவும் பருத்தித்துறைப் பொலிஸார் இன்று (29) தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த 26ஆம் திகதி அவ்விளைஞனின் தந்தையினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், தனது மகன் தனக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னை 4பேர் கொண்ட கும்பல் வானில் கடத்திச் செல்வதாகக் கூறியதாக முறைப்பாட்டில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்படி இளைஞன் முள்ளிவளைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (28) சென்று சரணடைந்ததுடன், தான் காணாமற்போனதாக…

  5. இலங்கை இராணுவக் கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது பாதுகாப்பு அமைச்சு. இராணுவ உயர் அதிகாரிகள் பலருக்கு ஜனவரி முதல் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டப் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவத்தில் நடந்த மிகப்பெரும் உள்ளக இடமாற்றம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவத் தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி ம…

  6. -எஸ்.கே.பிரசாத் யாழ். இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய ரென்சில் கொப்பேக்கடுவவின் நினைவு தூபியைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர். ஊர்காவற்துறை வீதியில் இருந்து அராலிக்கு செல்லும் காட்டுப் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபி உள்ளது.இதனை நாள்தோறும் அதிகளவான தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். 1992ஆம் ஆண்டு அராலி வீதியின் ஊடாக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது விடுதலை புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார். குறித்த இடத்தில் அவர் பயணித்த வாகனத்தின் எஞ்சிய பாகங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தில் நினைவுத்தூபியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.da…

  7. கனடாவில் இலங்கைக்கு எதிராக இரகசிய பேச்சுவார்த்தை [sunday, 2013-12-29 09:08:36] இலங்கைக்கு எதிராக கனடாவில் இரகசிய பேச்சுவார்த்தையொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. தமிழ் புலம்பெயர் தரப்பினரால் இந்த பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் எவ்வாறான விடயங்கள் பேசுவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் வவுனியாவில் கூடி ஆராய்ந்துள்ளனர். சில தகவல்களை திரட்டி எடுத்துச் செல்ல கூட்டத்தில் தீர்மான…

  8. பா.ஜ.க தனி ஈழத்தை வலியுறுத்துகிறது என்கிறார் தமிழருவி மணியன்:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் பா.ஜ.காவின் எல்லாச் செயற்பாடுகளையும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பா.ஜ.கா தனி ஈழத்தையே தீர்வாக வலியுறுத்துவதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் எவரும் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை எனவும் அவர்கள் ஈழ இனப்படுகொலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முதுகின் பின்னாலிருந்து சௌகரியங்களை வழங்கியவர்கள் எனக் குற்றம் சாட்டினார். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்தது என்று தெரிவித்த அவர் காங்கிரசும் அதற்கு உடந்தையாக இருந்தது என்றார். காங்கிரஸை வீழ்த்தவே பா.ஜ.காவில் இணை…

  9. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பகிரங்க கருத்துப் பரிமாறல் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் அதன் பக்க நியாயங்களை முன்னிலைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் வாய்மொழிமூல அறிக்கை ஒன்றை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருத மு…

  10. ஒட்டுசுட்டான் மக்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்திவரும் வெடுக்குநாறி சுடலை அமைந்த பகுதியில் தற்போது ராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் தமது முக்கிய கடமையை ஆற்றுவதில் பெரும் இடையூறை எதிர்நோக்கியுள்ளனர். அப்பகுதி மக்களின் தகவலையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று இவ்விடயத்தை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுசுட்டானில், குறித்த வெடுக்குநாறி சுடலையை அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். இறுதிப்போரின் பின்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது அப்பகுதியில் ராணுவத்தினர் முகாம் அமைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதன் பின் தாம் இது குறித்து பலரிடம் அறிவித்தும், இது வரை…

  11. :47 0 COMMENTS -நவரத்தினம் கபில்நாத் இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு நேற்று சனிக்கிழமை எரியூட்டப்பட்டுள்ளது. வவுனியா சுந்தரப்புரப் பகுதியிலுள்ள குறித்த பெண்ணின் வீடே ஏரியூட்டப்பட்டுள்ளது. அண்மையில் குறித்த குடும்பத்தை சேர்ந்த யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணின் தாயும் சகோதரர்களும் வசித்து வருகின்ற வீடு எரியூட்டப்பட்டுள்ளது. எனினும் சம்பவம் இடம்பெற்ற வேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருற்ததுடன் ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர்.இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் வீட்டில் காணப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு தற்காலிக கொட்டகை ஒன்று வவுனியா மாவட…

  12. அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 22 ஆம் திகதி மங்கள சமரவீர வீட்டில் நடைபெற்ற இராபோசனத்தின் பின்னர் நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதும் ரணில் மற்றும் சந்திரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தனியான அறையொன்றில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை நிறுத்தினால் வெற்றிப் பெறும் விதம் குறித்து மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டவர்களாக ரணில் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். …

  13. நாட்டை ஆள்வது சம்பந்தனா? ஜனாதிபதியா? : பொதுபலசேனா நாட்டை ஆள்வது சம்பந்தனா,ஜனாதிபதியா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. பௌத்த மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இருந்தும் கூட்டமைப்பை நாடுவது ஏன் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில் பிற மதத்தவரின் ஆதிக்கங்களை ஒரு போதும் நாம் விடமாட்டோம் முஸ்லிம் தீவிரவாதத்தை பரப்புவதைப் போல் இந்து பிரிவினை வாதமும் தலை தூக்குகின்றது எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டில் இன்று கூட்டமைப்பின் பேச்சே அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விடவும் சம்பந்தன்இ விக்கினேஸ்வரன் ஆகியோரின் கருத்துக்களே அதிகமாக பே…

  14. விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல்ரீதியில் துன்புறுத்தியப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஒலி வடிவில் கேட்க‌ http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131228_tamilprabakaran.shtml

  15. யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்களையும் பொலிஸ் காவலரண்களையும் அதிகரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய காலமாக கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களை விட மேலதிகமான பொலிஸ் நிலையங்களை ஏற்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பொலிஸாரின் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். குடாநாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இடப் பற்றாக்குறை காணப்படுகிறது. சில பொலிஸ் நிலையங்கள் வாடகைக்கு எடுக…

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி கூட்டமைப்பினர் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், நிலைமைகள் குறித்து ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவி…

  17. இலங்கையின் அரச தலைவர்கள் மற்றும் இராணுவ தலைவர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதிக்கவும் பொருளாதார ரீதியான தடைகளை ஏற்படுத்தவும் பிரித்தானியா யோசனை முன்வைக்க உள்ளதாக தெரியவருகிறது. ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்று முன்வைக்கப்பட உள்ளது. பிரித்தானியா தலைமையிலான நாடுகளின் இந்த யோசனையில், பிரித்தானியாவின் முதலீடுகளை இலங்கையில் குறைப்பது, அரச மற்றும் இராணுவ தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிப்பது, டொலர்களின் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களை குறைப்பது உட்பட பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2012 மற்றும…

  18. (எஸ்.ஆர். விஜயரட்ணம்) வனராஜா கெந்தகொல்லை (வோர்லி) தோட்டத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தை தம்மிடம் கையளிக்குமாறு தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனராஜா கெந்தகொல்லை (வோர்லி) தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தை கடந்த இரண்டு வருடங்களாக பொது ஆலயமாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். தற்போது அதன் பூசகர் தமக்கு சொந்தமான ஆலயம் என தோட்ட மக்களிடம் கூறியதை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்பன் ஆலயத்தை தோட்ட மக்களிடம் கையளிக்கும் படியும் அல்லது அவ்வாலயத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறும் கூறி கெந்தகொல்லை 300 க்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பதற்ற நிலை தொடர அவ்விடத்துக்கு நோர…

  19. வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அந்நகர மக்கள் இன்று வெற்றி பெற செய்துள்ளனர். கடந்த வாரம் வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து பேரையும் இன்று பொதுமக்கள் சபைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்தனர். 400வாக்கு பெற்ற குலநாயே வி.வி.ரிக்கு தவிசாளரா? தமிழரசுக்கட்சியே தரங்கெட்டவர்களை தூக்கி எறி, பதவி மோகத்தால் நல்லவர்களை பழிவாங்காதே போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கி…

  20. ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டுவரப்படக்கூடிய சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான தீர்மானத்தை தவிர்த்துக்கொள்வதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனையை முன்வைத்து இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முயற்சிப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. எனினும் யுத்தம் முடிந்ததில் இருந்து இன்னும் 1,46,679 பேர் காணாமல் போனோர் பட்டியலில் இருக்கின்றனர். யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் நடந்து கொண்ட விதம் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த வேண்டியதிற்கான ஆதாரத்தை அதிகரித்து வரு…

  21. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது. மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது. மன்னார் நீதிவானின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் குறித்த மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பமாகியது. இதன் போது மனித புதை குழி காணப்படுகின்ற இடத்தைச்சுற்றியுள்ள வீதி உடைக்கப்பட்டு மனித புதை குழி தோண்டப்பட்டது. இதன் போது மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் போது மீட்கப்பட்ட மனித எச்சங்களை சம்பவ இடத…

  22. பாரா­ளு­மன்ற தெரிவுக் குழுவின் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­களும் கிடைக்கப் போவ­தில்லை. மாறாக 13ஆவது திருத்­தத்­தினை முற்­றாக அழிக்கும் செயற்­பா­டா­கவே அது அமையும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தே­சத்­தி­ட­மி­ருந்து தம்மைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­கா­கவே அர­சாங்கம் எம்மை பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு அழைக்­கின்­றது. அர­சாங்­கத்தை காப்­பற்­று­வ­தற்­காக தமிழ் மக்­களை காவு கொ டுக்க நாம் தயா­ரில்லை எனவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், அர­சாங்கம் நாட்டில் சமா­தா­னத்­தினை எதிர்­பார்த்­தி­ருந்தால் எம்­முடன் இரு­த­ரப்புப்…

  23. ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­தா­விட்டால் பொரு­ளா­தா­ரத்­த­டையை தவிர்க்­க­மு­டி­யா­தி­ருக்கும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்­டத்­தொ­டரில் இலங்­கையின் மனித உரி­மைகள் விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வி­ருக்­கின்ற நிலையில் அதற்கு முன்­ப­தாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். தவறும் பட்­சத்தில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கு­லக நாடு­களின் பொரு­ளா­தார தடையை எதிர்­கொண்­டே­யாக வேண்டும் என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் செய­லா­ளரும் சிரேஷ்ட அமைச்­ச­ரு­மான திஸ்ஸ வி­தா­ரண தெரி­வித்தார். கட்­சியின் 78ஆவது வரு­டாந்த கூட…

  24. ஜெனீவாவிலே நடக்கவிருக்கும் கூட்டத்தொடரின்போது நவநீதன்பிள்ளை உட்பட அனைத்து சர்வதேச நாடுகளும் கொண்டுவரவிருக்கும் நெருக்கடியான பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாமையினாலே தற்போது த.தே.கூட்டமைப்பினரை பேச அழைக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா கூறினார். நேற்று பெரியகல்லாறு வாசகர் வட்டத்தின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வானது பெரிய கல்லாறு பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஞா.அற்புதராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வாரசா, சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா மற்றும் ஆலயங்களின் பிரதம கர்த்தாக்கள், உயர் அதிகாரிகள், கிராம மக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.