Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் Marie Harf வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக அடக்குமுறைகள் அதிகரித்துள்ளதுடன் இன மத ரீதியாகவும் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைகளை அமெரிக்கா தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக அவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் Marie Harf தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 455 views
  2. Ilayaraja Sir's Upcoming Kannada Film"Yuddabhumiyalli Ondu Hoovu" based on the real life incident of "Isaipriya" a Srilankan who was raped and murdered by 9 Srilankan soliders: The maestro was in bangalore at Chamundeswari studio to record a song for theKannada film YuddabhumiyalliOndu Hoovu. Maestro is scoring music for five songs.Raja sir said that there was stuff in the story and that's why he readily accepted to score music. Addressing the media, The Maestro said"I like to score music for newcomers. Look at all the top directors, my name would be attached".Having completed 926 films and gearing towards 1000, The Maestro said "It was Music when I came to score my fir…

  3. எந்­த­வொரு நாட்­டுக்கும் அடி­ப­ணி­யாத, வளைந்து கொடுக்­காத அணி­சேரா கொள்­கையே எமது வெளி­நாட்டுக் கொள்­கை­யாகும் என வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரி­வித்தார். எமக்கு சிறந்த சட்டம், நீதிக் கட்­ட­மைப்பு உள்­ளது. எனவே, சர்­வ­தேச விசா­ரணை தேவை­யில்லை என்றும் அமைச்சர் தெரி­வித்தார். நாடா­ளு­மன்­றத்தில் நேற்று சனி க்­கி­ழமை இடம்­பெற்ற வெளி­வி­வ­கார அமைச்சின் குழு­நிலை விவா­தத்­திற்குப் பதி­ல­ளித்து உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரி­வித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், சுதந்­தி­ரத்தை எதிர்­பார்க்கும் அனை­வ­ரி­னதும் தந்தை மண்­டே­லாவின் மறை­வுக்கு எமது அனு­தா­பங்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றோம். எமக்…

  4. நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் றெக்­யன் படுகொலையைத் தொடர்ந்தும் அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்தும் நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் நேற்றுத் திடீரென வெளியேறினர். அங்கிருந்த கட்சி அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் நெடுந்தீவை விட்டு வெளியேறினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த விசேட ஈ.பி.டி.பி குழுவின் தலைமையில் இந்த மூடுவிழா நேற்று நடத்தப்பட்டது. அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின், ஊர்காவற்றுறைப் பிரதேச சபை தலைவர் என்.ஜெயகாந்தன் மற்றும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன்…

    • 21 replies
    • 1.8k views
  5. இங்கிலாந்துக்கான சகல விஸா விண்ணப்ப கட்டணங்களையும் இணையத்தின் மூலமாகவே எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் செலுத்தவேண்டும் என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர்களிலேயே கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது விசா அல்லது மாஸ்டர்காட் பற்று அல்லது கடனட்டைகள் ஆகியவற்றின் ஊடக செலுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92596-2013-12-09-14-46-46.html

  6. மர்மப்பொருட்கள் சில வானிலிருந்து இன்று திங்கட்கிழமை விழுந்துள்ளதாக தம்புத்தேகம, இகிரிவெவ, வெல்யாய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். சுமார் பத்து ஏக்கர் வயற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்துள்ளதாகவும் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்துகொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். வானிலிருந்து விழுந்த மர்மப்பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92604-2013-12-09-16-49-01.html

  7. நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரை உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத நீதி கோரும் விழிப்புணர்வு பேரணி இன்று யாழில் பெண்கள் அமைப்புக்களால் நடத்தப்பட்டது. இந்த பிரசாரம் இன்று காலை 8மணியளவில் நீதிமன்றிலிருந்து ஊர்வலமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியை சென்றடைந்தது. மேலும் இந்த வருடம் பெண்கள்,சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் இடம்பெறுகின்றமையால் இது பெண்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பெண்கள் உரிமைக்காக பணியாற்றும் செயற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் …

  8. வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கென ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளளார். அதன்படி மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய நிகழ்வில் அவரைத் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார். அதன்பின்னர் தேசியக்கொடியை மடு வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.அன்ரனியும், பாடசாலைக்கொடியைத் திருமதி சரோஜினி ரவீந்திரனும் ஏற்றி …

  9. நாட்டில் மஹிந்தவின் குடும்ப ஆட்சி: பிரதமரை கைது செய்ய வேண்டும் - தேரர்கள் ஆக்குரோசம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாகியுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. வரவு - செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு 856 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தீனியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கும் செயற்பாடுகளில் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர்களான சரத் என் சில்வா மற்றும் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் வழங்கிய தீர்ப்பால் உறுப்பினர்கள் கட்சி மாறுவதாகவும் அதனால் கட்சி…

  10. சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்.....

    • 9 replies
    • 975 views
  11. ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை வலுப்படுத்தும் காரணங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானிய நீதித்துறை, இலங்கை அரசாங்கம் தொடர்பில் பிரித்தானியா அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது என்ற பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டை அந்நாட்டு நீதித்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தின் குடியேற்றம், புகலிடம் சபையின் நீதிபதிகள் இருவர் இரண்டு …

  12. இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யசூசி அகாஷி கொழும்பை வந்தடைந்தார். எதிர்வரும் 13ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து பேச்சு நடத்துவுள்ளார். வட மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து தேசிய நல்லிணக்கத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே யசூசி அகாஷியை இலங்கை அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. …

  13. தெரிவு செய்யப்பட்ட செய்தி இணைய தளங்கள் மட்டும் முடக்கப்பட்டு வருவதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. இணைய செய்திகளை முடக்கும் நோக்கில் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காமிரர் இணைய தளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அழைப்பாளர் பெரடி கமகே தெரிவித்துள்ளார். தமிழ்நெற், ஸ்ரீலங்கா கார்டியன், லங்கா ஈ நியூஸ் போன்ற இணைய தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா மிரர் ஊடகத்தின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொண்ட இணைய தளங்களில் ஸ்ரீலங்கா ம…

  14. வுவனியா கற்குளம் பகுதியில் யானைகள் கொண்டு சென்று விடப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் குடியேறியுள்ள பெரும்பான்மையினரே இவ்வாறு யானைகளை கொண்டு சென்று இறக்குவதாக கற்குள மக்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த யானைகள் கிராமத்திற்குள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கற்குளமக்கள் குறிப்பிடுகின்றனர். தமது கிராமத்தினை அபகரிக்கவே இவ்வாறு மேற் கொள்ளப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதியை அண்டி குடியேற்றப்பட்ட கஜபாகுபுரம் போன்ற பகுதிகளிலிருந்தே இவ்வாறு யானைகள் கொண்டு சென்று விடப்படுகின்றன. காட்டு யானைகளை காடுகளில் இருந்து சாய்த்து சென்று இந்தப் பகுதியில…

  15. இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று; இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், நல்லிணக்க செயல்முறை, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இலங்கையின் மட்டுப்படுத்திய வளங்களுடன் ஒப்பிடுகையில் யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி அதிசயமானது என்று யசூசி அகாஷி முன்னர் கூறியிருந்தார் எ…

  16. சென்னை: விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் ஓடினேன் என்றும், அவர்கள் சுயநலத்தில் இருந்தனர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். லங்காசிறி வானொலியின் அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், "வன்னி மக்கள் அழிகிறார்கள்... பிரபாகரனை காப்பாற்றுங்கள்!" என்று தமிழகத்தின் அனைத்து தலைவர்களிடமும் மன்றாடினேன். ஆனால் தமிழகத் தலைவர்கள் பொங்கல் கொண்டாடினார்கள். அவர்களின் அன்றைய சுயநலத்தால்தான் தொடர்கிறது இன்றைய அவலம். ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு பிரதான காரணம் தமிழகக் கட்சிகளின் ஒற்றுமையின்மையே. அது நீடிக்கிறது" என்று கூறினார். http://news.vikatan.…

  17. சமீபத்தில் வலிவடக்கு மீள் குடியேற்றக்குழுவால் நடத்தப்பட்ட அமைதி வழி உண்ணாவிரதப் போராட்டத்தினை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதைத் தடுப்பதற்காக அரசபடைகள் மேற்கொண்ட அனர்த்தங்ளை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. அவற்றில் வெளியே வராத பல சேதிகள் இருக்கின்றன. அமைதி வழிப்போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பேரூந்துகள் அடித்து உடைக்கப்பட்டன . அவற்றினை ஓட்டிச் சென்ற சாரதிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். இதுதொடர்பாக முக்கியமாக மூவர் அரசினால் குறி வைக்கப்பட்டுக் கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன. பேரூந்துகளை ஒழுங்கு செய்தவருடைய வீட்டிற்கு சாதாரண உடை அணிந்த சிறிலங்கா அரச புலனாய்வுப் பிரிவினர் தேடிச் சென்றுள்ளார்கள். இவர்களது வருகை எந்நேரமும் நிகழலாமென்ற…

  18. யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேரூந்து ஒன்றின் மீது நேற்றிரவு தென்மராட்சியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பேருந்தில் பயணித்த சிங்களவர்கள், தடிகள், பொல்லுகளுடன் அந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று மாலை பயணிகளை ஏறிக் கொண்டு தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது இரவு 7 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால், பேரூந்தின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதி உள்பட சிலர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்தே பேருந்தில் பயணித்த சிங்களவர்கள் தடிகள், பொல்லுகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

  19. உணவு விநியோகித்த நிறுவனங்களுக்கான கொடுப்பனவை, முப்படைகளும் செலுத்தத் தவறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணி நிறுவனங்கள் சிலவற்றுக்கு சுமார் பத்து பில்லியன் ரூபா பணத்தை இலங்கை இராணுவம் செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்படையினர் 2.5 பில்லியன் ரூபாவினையும், இலங்கைக் கடற்படையினர் ஒரு பில்லியன் ரூபாவினையும் செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலுவைப் பணத்தைச் செலுத்த அரசாங்கத்திடம் பணம் கோரப்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=98647&category=TamilNews&language=tamil

  20. இத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் "நிரந்தர மக்கள் சபை' இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள், சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் என்பன குறித்து தனது இரண்டாவது விசாரணையை ஆரம்பித்துள்ளது. உலகின் புகழ்வாய்ந்த யூரர் குழுவினரும், சர்வதேச மனித உரிமைகள் குழுவினரும் இன்னும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் இணைந்து இந்த விசாரணையை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்துள்ளன. குறித்த சபையின் இலங்கை மீதான விசாரணைகளின் முதல் அமர்வு 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தது. இதன் இரண்டாவது அமர்வே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வின் போரின் போது பாதிக்கப்பட்டவர்களின் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ள…

  21. ஆனையிறவில் சிறிலங்காப் படையினரால் மற்றொரு போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனையிறவில் சிறிலங்கா படையினர் ஏற்கனவே ஒரு போர் வெற்றிச் சின்னத்தை அமைத்துள்ளனர். இந்தநிலையில், ஆனையிறவுப் பகுதியில், ஹசலக்க காமினி என்று அழைக்கப்படும், காப்ரல் காமினி குலரத்ன என்ற சிறிலங்காப் படைச் சிப்பாயின் உருவச்சிலை அமைக்கப்பட்டு வருகிறது. 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் ஆனையிறவுப் பெருந்தளம் மீது, முற்றுகைத் தாக்குதல் நடத்திய போது, புல்டோசர் கவசஊர்தி மூலம், முன்னரங்க நிலைகளை அழிக்க மேற்கொண்ட முயற்சி, கோப்ரல் காமினி குலரத்னவால் முறியடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த கோப்ரல் காமினிக்கு சிறிலங்காவின் அதிஉயர் விருதான பரம வீர விபூஷண விருது வழங்கப்பட்டது. ஆனையிறவுப் ப…

  22. வட மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை நடைபெறவுள்ள வட மாகாண சபையின் கூட்டத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது முதலாவதும், 2014ம் ஆண்டுக்குமான வரவு- செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெறவுள்ளார். முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான மாகாண நிதி நியதிச் சட்ட வரைவு ஆவணங்களில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ சந்திரசிறி கையொப்பமிட்டு முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார். நாளைய தினம் சமர்ப்பிக்கப்படும் வரவு- செலவுத் திட்டம், விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவுள்ளது. வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக சுமார் 19 ஆயிரத்து 481 மில்லியன் ரூபா நிதியை மத்திய அரசாங்கம்…

  23. கறுப்பின போராளி மண்டேலாவின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்பார்? 20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ஆம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதிகள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன…

  24. யாழ் வருவாரா மன்மோகன்சிங்? இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது என கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. “யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமருக்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. உண்மையில் இந்த அழைப்புக் குறித்து நாம் நாளிதழ்களிலேயே படித்து அறிந்து கொண்டோம்” என்று இந்தியத் தூதரக மத்திய பொது தகவல் அதிகாரியான கௌரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூலமாகவா, அல்லது வெளிவிவகார அமைச்சின் ஊடாகவோ இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். இந்த அழைப்பு இந்தியத் தூதரகம் ஊடாக அனுப்பப்படவில்லை என அவர் குறிப்பிட்…

  25. இன அழிப்பை மறைக்க அரசு நன்கு திட்டமிட்டு சதி; அதற்காகவே இந்தப் போரழிவுக் கணக்கெடுப்பு அமெ.குழுவுக்கு யாழ்ப்பாணத்தில் எடுத்துரைப்பு இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இங்கு இன அழிப்பே நடைபெறவில்லை என்பதைக் காண்பிப்பதற்கே தற்போது அரசு கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. இந்தக் கணக்கெடுப்புக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபைக்குக் கணக்குக் காட்டுவதற்கே தவிர இதனால் பயனேதும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட சதி. இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரும் எடுத்துரைத்தனர். யாழ்.மாவட்டத்துக்கு நேற்று மதியம் வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்க ளத்தின் வெளிவிவகார குழுவின் செனட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.