ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
28 JUN, 2024 | 11:19 AM நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் வியாழக்கிழமை (28) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிககளும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த கடற்படை மாலுமிக்கு அஞ்சலி செலுத்தினர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து, படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை மாலுமி உயிரிழந்தார். காங்கேசன்துறை கடற்பட…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மடுவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல்! Published By: VISHNU 28 JUN, 2024 | 01:34 AM மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அட…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்களும் 156 மெகாவோட் நிலத்தடி சூரிய சக்தி பேனல்களும் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், கூரை சூரிய சக்தி பேனல்கள் மூலம் 1,000 மெகாவாட்களுக்கு மேல் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்படும். மின்சார சபையின் நீண்டகால உற்பத்தித் திட்டத்தின்படி, அடுத்த 4 ஆண்டுகளில் கூரை சூரிய சக்தி பேனல்கள் மூலம் தேசிய மின் அமைப்புடன் ஒவ்வொரு ஆண்டும் 150 மெகாவாட் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வருடத்தின்…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 JUN, 2024 | 05:56 PM இலங்கையில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள அமெரிக்கா இந்த நடவடிக்கைகளிற்கு அரச அதிகாரிகள் ஆதரவளிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2023 ம் ஆண்டு மத சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது, உள்ளுர் பெரும்பான்மை மதசமூகத்தின் உறுப்பினர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த மத சிறுபான்மையினத்தவர்கள் அவர்களிற்கு அரச அதிகாரிகள் ஆதரவளித்ததாக தெரிவித்தனர். பௌத்த கிராமங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் அல்லது மதவழிபாட்…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி. வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்தி, அவர்களையும் மனிதர்களாக எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்து நடைபவனி ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை இந்த நடைபவனி சென்றடைந்து அங்கு நிறைவு பெற்றிருந்தது. சுமார் 50 பேர் வரையில் இந்த நடைபவனியில் கலந்து கொண்டனர். யாழ் சங்கம் என்கின்ற இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பணியாற்றுகின்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இவ் ஊர்வலத்தில் திருநங்கைகள் அதிக அளவில் கலந்து கொண்டதோடு தமது உரிமைகளை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகளை உடைய மனிதப் பிறப்புகளை என…
-
-
- 8 replies
- 629 views
- 1 follower
-
-
6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது. கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, இந்த விடயங்கள் தொடர்பான விபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. துணை கணக்காய்வாளர் ஜெனரல் எம்.எஸ். நயன குமார இந்தத் தகவலை குழுவில் தெரிவித்துள்ளார். பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் தவறான செயற்பாடுகளினால் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், முப்படையினருக்கு அதிகளவான ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைச் செலவுகளும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவ…
-
- 1 reply
- 470 views
- 1 follower
-
-
27 JUN, 2024 | 07:24 PM வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகை தந்த பெண்ணையும வீதி ஓரங்களில் நிற்கும் நாய்களை பராமரிப்பதற்கு காப்பகத்தை தனது காணியில் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நோர்வே நாட்டில் இருந்து வருகை தந்த பெண்மணி ஒருவர் வவுனியாவில் வீதி ஓரங்களில் பராமரிப்பின்றி காணப்படும் நாய்களை தனது செலவில் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை தனது காணியில் மேற்கொண்டு வந்தபோது குறித்த செயற்பாட்டினால் கிராமத்தில் வாழும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்து இப்பகுதியைச் சூழல் உள்ள மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி …
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
அமைச்சர் பவித்திராவின் விடத்தல்தீவு குறித்த வர்த்தமானி அறிவித்தலிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை 27 JUN, 2024 | 02:56 PM விடத்தல்தீவு இயற்கை சரணாலய பகுதியின் ஒரு பகுதியை இறால்பண்ணை திட்டத்திற்கு ஒதுக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மீன் வளர்ப்பு தொழில்பூங்காவை அமைப்பதற்காக, மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முடிவிற்கு வருவதாக மே மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியிருந்தது. எனினும் அரசாங்கத்தின் மு…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் பரபரப்பு; கடத்தப்பட்டு 24 நாட்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சரண் கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிசாரிடம் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கராஜன் ஜெயக்குமார் என்பவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை, காணாமல் போனதாக தேடப்பட்ட குறித்த நபர் வெட்டுக்காயங்களுடன் அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்ததுடன், வெவ்…
-
-
- 1 reply
- 398 views
-
-
மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி! மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பே…
-
-
- 7 replies
- 628 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 01:32 PM கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/187095
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 JUN, 2024 | 12:23 PM இந்தியாவின் அதானி நிறுவனம் முன்னெடுத்துள்ள மின் உற்பத்தி திட்டங்களில் பாரிய நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. மன்னார் பூநகரியில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி கிறீன்ஸ் எனேர்ஜி நிறுவனத்திற்குஅரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையின் வலுசக்தி துறையின் காற்று வலுசக்திதுறையை ஜனாதிபதியும் அமைச்சர் காஞ்சன விஜயசேகரவும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதால் பாரிய அளவிலான நிதிமோசடி இடம்பெறுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 09:57 AM யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளது. நேற்றைய தினம் அதிகாலை குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் குழந்தையினை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். குழந்தையினை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மரணம் தொடர்பிலான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
27 JUN, 2024 | 10:41 AM இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜப்பான் வரவேற்றுள்ளது. 2023 இல் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு ஓசிசியை ஆரம்பித்துவைத்ததன் மூலம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஜப்பான் பிரதான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தது. பரிஸ் கிளப் நாடுகள் பரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளிற்கு இடையில் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஒருங்கிணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகின் முதலாவது குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 JUN, 2024 | 04:57 AM தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதுடன், தமிழர்தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான ஒரு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பா.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெற்விங் (Jetwing) விடுதியில் பொதுநலவாய அமைப்பின் தென் ஆசியப் பகுதிக்க…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
சட்ட மா அதிபராக மீண்டும் சஞ்சய் ராஜரத்தினம் – ஜனாதிபதி விசேட அனுமதி! சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்ட மா அதிபரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது . அதேசமயம் ஏற்கனவே அவருக்காக ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசியலமைப்பு சபை இன்று விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது. இந்த பின்னணியிலேயே அரசியலமைப்பு சபையின் முடிவை புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2024/1389718
-
- 1 reply
- 419 views
- 1 follower
-
-
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள் விடுமுறையை அறிவிப்போம். அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 1998 ஆம் ஆண்டுமுதல் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களிடம் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையளித்தோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பின்னர் ஏமாற்றப்பட்டோம். இது காலம் காலமாகத் தொடர்கின்றது. இன்றைய கால கட்டத்தில் வாழ்வதற்…
-
- 4 replies
- 313 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். இலங்கை கடந்த 2022ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என்ற வங்குரோத்து நிலைமையை அறிவித்திருந்தது. தற்போது இலங்கை அந்த நிலைமையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டிருப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கான விசேட சலுகைகள் பலவற்றை அறிவிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304441
-
- 2 replies
- 393 views
- 1 follower
-
-
26 JUN, 2024 | 04:53 PM ஆசனவாயிலிலும் பயணப் பொதிகளிலும் சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 06 இலங்கையர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்முனை, மூதூர், கொழும்பு-10, கலகெடிஹேன மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதன் போது …
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 07:22 PM கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இலங்கை 26ஆம் திகதி புதன்கிழமை பீஜிங்கில் இறுதி உடன்பாட்டை எட்டியது. சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் சற்று முன்னர் பீஜிங் மற்றும் கொழும்பில் நடைபெற்றன. இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை பெற்றுக்க…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
பெண் பணியாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரி! திருகோணமலையில் பலவந்தமாக பெண் பணியாளரை முத்தமிட்ட அதிகாரிக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எழுத்தாளர் ஒருவரை கட்டித்தழுவி முத்தமிட்ட குற்றத்துக்காக நிறுவனத்தின் மனித வள மேலாளருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அவருக்கு மூன்று பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7இலட்சத்து 50ஆ யிரம் ரூபா இழப்பீடு மற்றும் அரசுக்கு 75 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு …
-
- 0 replies
- 452 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 10:34 AM யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவன் தொடர்பான தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்…
-
- 0 replies
- 262 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 12:38 PM யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் தொடர்பான கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, போத்தல் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவு வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அது கழிவகற்றும் வாகனம் ஊடாக சாவகச்சேரியில் உள்ள குப்பை மேட்டினை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், தமது நகைகள் தவறுதலாக குப்பையோடு போடப்பட்டதனை உணர்ந்த உரிமையாளர்…
-
- 0 replies
- 182 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 04:16 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர். 50 வருடங்களாக புனரமைக்கப்படாத இந்த வீதியால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற போதிலும் மிக மோசமான நிலையில் வீதி பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐவர…
-
- 0 replies
- 229 views
-
-
26 JUN, 2024 | 05:15 PM புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது . வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் . புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குறித்த கம்பனியின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். …
-
- 0 replies
- 207 views
-