Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், மத்திய அரசின் ரகசிய சதி வேலை இந்திய கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், மத்திய அரசின் ரகசிய சதி வேலை என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ´´இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசுதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது. 2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு தகவல்கள் தந்தும், புலிகளுக்கு வந்த 14 கப்…

  2. கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வாகனங்கள் பல அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர். நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற 23 ஆவது பொதுநலவாய மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட ஊடக மத்திய நிலையத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் யாருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லையெ பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91450-2013-11-30-05-57-10.html கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட…

    • 11 replies
    • 831 views
  3. தமிழர் வாழும் வடக்கிலும் மத்தியிலும் இந்து கோவில்களுக்கு அச்சுறுத்தல்! இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுவருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கூறியுள்ளது. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் இந்துக்களின் வழிபாட்டிடங்களில் வழிபாடுகள் நடத்த முடியாத அளவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடந்துவருவதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தெரிவித்தார். அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள இந்து ஆலயங்களை மூடி வைத்திருக்காது பூஜைகள் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்றும் கந்தையா நீலகண்டன் கூறினார். இந்த …

  4. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தக் கூட்டு யோசனையினை கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே இலங்கைக்கு எதிராக இரண்டு யோசனைகளை கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் மேற்படி மூன்று நாடுகள் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் 23 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில் கொண்டு வரப்படவிருப்பதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனையை கொண்டு வருவதற்காக பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வில்லியம்…

  5. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 65 ஆயிரம்பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா முதன் முறையாக தெரிவித்துள்ளது. பொது மக்கள், விடுதலைப் புலிகள், இராணுவத்தினர் என அனைவரும் இந்த எண்ணிக்கைக்குள் அடங்கி இருப்பதாகவும் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பில் வெவ்வேறான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்தியா இந்தப் புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழு இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர் என அறிவித்திருந்தது. போருக்கு முன்னர் வன்னியில் இருந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவர…

  6. பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். வலி.வடக்கு மக்களைச் சொந்த நிலத்தில் குடியமர்த்திய பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். போர்கால இழப்பீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அரசு நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது உயிரிழப்பு, காயம், காணாமற்போனமை, சொத்தழிவு தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் மக்கள் குடியமர்வதற்கு வி…

  7. சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்துள்ள இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு இணங்கியுள்ளது. இதனையடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி நாளை திங்கட்கிழமை 02.11.13) இலங்கை செல்கிறார். அவர் மறுநாள் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில் இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு…

  8. தற்போதைய அரசாங்கத்தை எதிர்வரும் 20 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாகவும், எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் தற்போது எதிர்கட்சிகள் கூறுகின்றன. எனினும் இவை அனைத்தும் அடிப்படையற்ற கருத்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியில் இருந்ததைப் போலவே, எதிர்வரும் 20 வருடங்களுக்கும் நிலையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=97954&category=TamilNews&language=tamil

  9. திறமையற்றவர்களை திறமையானவர்களாக மாற்றுவது கல்வியின் பொறுப்பாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திறமையான பிள்ளைகளை மட்டும் தேர்ந்தெடுத்து உள்வாங்கிக் கொள்வது சில பாடசாலைகளின் வழக்கமான செயலாகிவிட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளைகளின் நலிந்த நிலையை நீக்கி அவர்களுக்குள் திறமையை ஊட்டி நல்ல பிரஜைகளாக அவர்களை மாற்ற வேண்டியது கல்வியின் ஊடாக இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஹொரண பகுதியில் இடம்பெற்ற பாடசாலை கட்ட திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரிவெனா கல்வி இந்நாட்டுக்கு முக்கியமானதென ஜனாதிபதி கூறியுள்ளார். பிக்குகள் சமீபத்திய சமூகம் குறித்து தெளிவை பெற வேண்டியதோ…

  10. தமிழீழ விடுதலைப் பதவியில் இருந்து விலகினாலும் நாடாளுமன்றத்தில் நான் அறிவித்தது போல் நவம்பரில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் அரசு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்காவிட்டால் சாகும் வரையிலான போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிலையில் ரெலோ இயக்கத்தின் தலைமைப்பதவியில் இருந்து விலகினால் போராட்டம் கைவிடப்படுமா எனக்கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பாக செல்வம் எம்.பி மேலும் தெரிவிக்கையில், நான் கடந்த நான்கு வருடம் அரசுக்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கொட…

  11. இலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் பயிற்சி பெற வருமாறு இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலியில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக ஜோஷி இலங்கை சென்றுள்ளார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து டி.கே. ஜோஷி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு இலங்கை ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்: கடற்படை தொழில்நுட்பங்கள் தொடர்பான நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் பயிற்சியை இலங்கை கடற்படையினருக்கு அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற உலக அளவில் பெரும் போட்டி நிலவுகிறது. இதில், இலங்கைக் கடற்படையினருக்கு…

    • 5 replies
    • 373 views
  12. யாழ்.பொதுசன நூலகத்திற்கான பிரதம நூலகராக தனது ஆதரவாளரான முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரியொருவரை நியமிக்க அமைச்சர் றிசாத் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பொதுநூலகத்தின் பிரதம நூலகராக இருந்து வரும் இமெல்டா ஓய்வு பெறும் காலம் அண்மித்துள்ள நிலையில் எந்தவித அடிப்படை தகுதியுமற்றவரான நிசாத் என்பவரை நியமிக்க அமைச்சர் றிசாத் அழுத்தங்னை பிரயோகித்து வருவதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளாக சென்றிருந்த சிங்களவர்கள் சிலர் நூலகத்தில் அடாவடிகளில் ஈடுபட்டமைக்கு கடும் எதிர்ப்பு உள்ளுரில் கிளம்பியிருந்த நிலையில் நூலகத்தில் தமது பிடியினை இறுக்கிக்கொள்ள ஆளுநர் சந்திரசிறி அமைச்சர் றிசாத்தின் ஆலோசனையினில் அவசர அவசரமாக புத்தளத்திலிருந்து …

    • 0 replies
    • 585 views
  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமி;ழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்டவீரர் என ஸ்ரீதரன் பாராளுமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கான கட்சியின் தீர்வுத் திட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட…

    • 19 replies
    • 1.1k views
  14. கவிஞரும் யாழ் கள உறுப்பினருமான ஜெயபாலன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக முகப்புத்தகம் வாயிலாக அறிந்தேன். இந்தச் செய்தியை கள உறுப்பினர் என்ற வகையில் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இது குறித்த மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் இணைக்கவும்

      • Like
    • 264 replies
    • 33.1k views
  15. பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வரும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்த கொண்ட பிரித்தானியா பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் பிரித்தானியா இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என …

  16. தமிழ்லீடர் இணையக் குழுமத்தினரின் வெளியீடான அரவிந்த குமாரனின் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை, எக்மோர் சென். அன்ரனீஸ் அரங்கில் தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலர் வைகோ கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் செயலர் பொ. மணியரசசன், மே. பதினேழு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி, ம.திமுக . மல்லை சத்தியா, இமயம் தொலைக்காட்சியின் கட்டுப்பாட்டாளர் ஜெபராஜ், மற்றும் தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு மாணவர்கள், தோழமை மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரோடு ஈழ ஆதவாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்த…

  17. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவுள்ள பிரித்தானியா! [saturday, 2013-11-30 19:16:19] News Service பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வரும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்த கொண்ட பிரித்தானியா பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவ…

  18. சிங்கள பேரினவாத கட்சிகளுக்கும் முன்னிலை சோசலிச கட்சிக்கும் கொள்கை அளவில் வித்தியாசம் இல்லை:- கட்சியில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்:- பழ றிச்சர்ட் இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன் - முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு பகிரங்கக்கடிதம் 2 புதியமொந்தையில் பழைய கள்ளா? நடராஜா குருபரன் - முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு ஓர் பகிரங்கக்கடிதம் -1 இந்த 2 கட்டுரைகளையும் 2013ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நான் எழுதியபோது சமூக வலைத் தளங்களிலும் இணையங்களிலும் புளொக்குகளிலும் எனக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கும் எதிராக கடுமையான தாக்குதல்களையும் சேறடிப்புகளையும், விமர்…

  19. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி அரசையும், படையினரையும் ஆத்திரமூட்டும் - வெறுப்பூட்டும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது: போருக்குப் பின்னரான நல்லிணக்க நடவடிக்கைகளை வேண்டுமென்றே சதி செய்து குழப்புவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடருக்கு முன்னர் வடக்கில் குழப்ப நிலைய…

  20. இலங்­கையில் பயங்­க­ர­வாதம் முழு­மை­யாக அழிக்­கப்­பட்­டி­ருக்கா விட்டால் அது இலங்­கைக்கு மட்­டு­மல்ல முழு தெற்­கா­சி­யா­வுக்கும் ஆபத்­தா­ன­தா­கவும், அச்­சு­றுத்­த­லா­க­வுமே அமைந்­தி­ருக்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் சபையில் தெரி­வித்தார். சர்­வ­தேச ரீதியில் சில நாடுகள் இலங்கை மீது சுமத்தும் குற்­றச்­சாட்­டுக்­களும், விமர்­ச­னங்­களும் ஆதா­ர­மில்­லாத பக்­கச்­சார்­பா­னவை என்றும் அமைச்சர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு–- செலவுத் திட்ட விவா­தத்தில் உரை­யாற்றும் போதே வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்…

  21. (ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்) தமிழ் மக்கள் தொடர்பில் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்ற வெளிநாடுகள் நினைத்திருந்தால் அன்று யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். எனினும் அரசாங்கத்தைப் பாவித்து பிரபாகரனை கொன்றொழிக்கும் தேவை அவர்களுக்கு இருந்தது. இங்கிருப்பது உள்நாட்டின் எமது பிரச்சினையாகும். எனவே அந்நிய தலையீடுகளின்றி நாமே எமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம். இதற்காக தமிழ் மக்களுக்கும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அவர…

  22. ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவெட்டி, கொடிதூக்கி மலைகளும் ஆகியவற்றின் சுற்றுப்புற பிரதேசங்களிலுள்ள சிறு மலைகளும் உடைக்கப்பட்டு வளங்கள் சூறையாடப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் இயற்கைச் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், விவசாய அமைப்புப் பிரதிநிதிகள், மற்றும் பொது மக்களின் தகவலையடுத்து நேற்று அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனுக்கு முதலில் அங்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் சிறிது நேர வாக்குவாதத்தின் பின்னர் உள்ளே சென்ற அவர் குறிப்பிட்ட சம்பவங்களை நேரில் கண்டு ஆராய்ந்தார். அங்குள்ள மலைகளின் பாறைகள் உடைக்கப்பட்டு மிக வேகமாக வளங…

  23. Fazeer சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அத்தனோல் அடங்கிய ஏழு கொள்கலன்களை கைப்பற்றியுள்ள சுங்கப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஒருகொடவத்தையில் உள்ள சுங்க பரிசோதனை மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் இரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை ஒன்றின் போதே குறித்த ஏழு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுங்கப் ஊடகப் பேச்சாளர், சுங்க நிவாரண சேவைகள் பணிப்பாளர் லெஸ்லி காமிணி குறிப்பிட்டார். தார் பெரல்கள் அடங்கிய கொள்கலன்கள் என அடையாளப்படுத்தப்பட்டு கடந்த 27ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டிருந்த இந்த கொள்கலன்கள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது திறக்கப்பட்ட ஒரு கொள்லனில் தார்…

  24. போரின் இறுதி நாட்களில் மத்திய அரசாங்கம் இராணுவ பலத்தை இச் சிறிய நாட்டிற்குள் 3 இலட்சம் வரை அதிகரித்துள்ளது. போர் முடிந்த பின்னரும் வடக்கில் இராணுவத்தை நிறுத்தியுள்ளதால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் எமது மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தொழில்வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். காணியின்றி தொழிலின்றி வேறு வழியின்றியே எமது மக்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். விஸ்வமடு விவசாய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன அரிசி ஆலையை நேற்று மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டவிரோதமாக எமது மக்கள் அவுஸ்…

  25. இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் புதுடில்லியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/91452-2013-11-30-06-09-31.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.