Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியக் கடற்படைக் கப்பலொன்று நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கிழக்குக் கடற்பரப்பு தளபதி ரியர் அட்மிரல் ஸ்ரீமவன் ரணசிங்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயானந்த கொலம்பகேயின் வழிகாட்டலின் கீழ் ஐ.என்.எஸ் சிவலிக் என்ற இந்தக் கப்பலில் 50 அதிகாரிகளும் 350 கடற்படை வீரர்களும் வருகைதந்தனர். இந்தக் கப்பல் டிசெம்பர் 29 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும். இக்காலப்பகுதியில் நட்புரீதியான பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரி;வித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91172-2013-11-27-13-10-08.html

  2. அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலை வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப்பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. …

  3. வடமராட்சி கிழக்கின் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலில் படையினரது மினிமுகாம் ஒன்று அமைந்துள்ள நிலையில் அதனை தாண்டி சென்ற இளைஞர்கள் சிலரே சுடரேற்றியதாக கூறப்படுகின்றது. சம்பவத்தையடுத்து அங்கு குவிக்கப்பட்ட படையினர் வீதியால் பயணித்த பொதுமக்கள் மீது சகட்டு மேனிக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இரு இளைஞர்கள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். கட்டைக்காடு பொது விளையாட்டரங்கு- இதனிடையே கட்டைக்காடு பொது விளையாட்டரங்கிலும் மாலை மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் குவிந்த படையினர் வீடுகள் தோறும் பொருத்தப்பட்ட மின்குமிழ்கள…

  4. இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது தொடர்பாக வடமாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்: இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த ஸ்தூபி இருக்கும் சதுக்கத்தில் மரம் நாட்டும் விழா நடத்த எமது வேளாண்மை அமைச்சு உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு என் தலைமைத்துவத்தின் கீழ் அதை நடத்தத் தீர்மானித்திருந்தது. திடீரென்று பொலிசார் தமக்கு ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எந்த ஒரு விழாவினையும் வடமாகாண மக்கள் இம் மாதம் 26, 27ந் திகதிகளில் நடாத்தப்படாது என்று அதில் கூறப்பட்டிருப்பதாகவும் இன்றைய கூட்டத்திற்குத் தாம் பொலிஸ் பாதுகாப்புத் தந்தால் தம்மிடம் கேள்விகள் கேட்ட…

    • 3 replies
    • 1k views
  5. யாழ்.பல்கலைக்கழக சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் நடமாடக் கூடாது என இராணுவத்தினரும் பொலிஸாரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மாலை உலக முழுவதிலும் உணர்வு பூர்வமாக அனுசரிக்கப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக சூழலில் பதற்ற நிலை நிலவுகின்றது. பெருமளவான படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக சூழலில் பிரயாணம் செய்யும் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. இந்நிலையில் பல்கலைக்கழக சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் நடமாடக் கூடாது என இன்று மதியத்திற்கு பின்னர் இராணுவத்தினர் எச்சரித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் நடமாடுகின்றவர்கள் கைது செய்யப்ப…

  6. இலங்கை விவ­கா­ரத்தை ஆராய்­வ­தற்கு தருஸ்மன் குழு எவ்­வாறு அமைக்­கப்­பட்­டது என்­பது தொடர்­பிலும் அதன் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்ட விதம் குறித்தும் நாம் நன்கு அறிவோம். இந்­நி­லையில்,- இலங்கை தொடர்பில் கோரப்­ப­டு­கின்ற சர்­வ­தேச விசா­ரணை என்­பது சுயா­தீ­ன­மா­ன­தாக அமை­யப்­போ­வ­தில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கையும் கிடை­யாது என்று அமைச்சர் மகிந்த சம­ர­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். புலம்­பெ­யர்ந்து வாழும் எட்டு அடிப்­ப­டை­வாத தமிழ் சமூ­கத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­ட­தான நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கம­ரூனின் இலங்கை விஜ­யமும் இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ரணை கோரிக்­கையும் அமைந்­தி­ருந்­த…

  7. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. உயர்மட்ட தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு; செல்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் குறித்த பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இந்த விஜயம் டிசம்பர் மாத ஆரம்பப் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீளத் தொடர வேண்டுமேன தென் ஆ…

  8. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடத்தத் தவறினால், பிரித்தானிய சர்வதேச விசாரணைகளை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டால் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர முடிய…

  9. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்சங்கம் மாவீரர்களுக்கான தனது அஞ்சலியை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் செலுத்தி உள்ளது. இறந்தவர்களுக்காக தமது அஞ்சலியை செலுத்த எவரும் தடை விதிக்க முடியாது என கடந்த வருடம் தாம் குறிப்பிட்டதற்கு இணங்க இம்முறையும் இந்த அஞ்சலியை மிகவும் எழிமையாக மேற்கொண்டதாக ஆசிரியர்சங்கத் தரப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்துள்ளன. யாழ் செய்தித் தாளில் வெளிவந்த செய்தி குறித்து ஏற்கனவே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99568/language/ta-IN/article.aspx

  10. வல்வெட்டித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகள் இன்று அதிகாலை தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் சதீஸின் வீட்டின் மீது இன்று அதிகாலை சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரவெட்டிப் பிரதேசசபை தலைவர் வியாகேசுவின் வீட்டினுள் அதிகாலை 2 மணியளவில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் அவரது வாகனம் என்பவற்றைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீடும் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் சதீஸ்இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கரவெட்டிப் பிரதேச சபையில் நேற்று மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், ஏனைய ச…

  11. "பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணத்தின் அலுவலகத்துள் புகுந்த அம்பிட்டிய சுமங்கள தேரர் அடாவடித்தனம்" மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் புகுந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி, பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் அவரின் உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (27.11.13) காலை பிரதேச செயலகத்துக்குள் சென்று விகாரதிபதி அம்பிட்டிய சுமங்கள தேரர் பட்டிப்பளை பிரதேசத்தில் விகாரை ஒன்றை உடனடியாக பதிவுசெய்து தருமாறு கோரியுள்ளார். அதற்கு பிரதேச செயலாளர் நடைமுறை விடயங்கள் உள்ளது. அது தொடர்பில் பரிசீலனை செய்து பதிவுசெய்வதாகவும் உடனடியாக பதிவுசெய்யமுடியாது எனவும் கோரியுள்ளார். இதன்போது ஆத்திரமடைந்த தேரர், பிர…

  12. புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை அவுஸ்ரேலிய அரசாங்கம் மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளதாக, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் அமைப்புடன் அல் சஹாப் மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பிற்கு அவுஸ்ரேலியாவில் எவ்விதமான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட இடமளிக்க முடியாதென அவுஸ்ரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது. பயங்கரவாதம் அவுஸ்ரேலியாவுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஜூலி பிஷப் எ…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை நியாயப்படுத்தியும் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் மாவீரர் தினத்தில் நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார். இவரது உரையை அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர். பிரபாகரன் தமிழ்,சிங்கள இனத் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தாரென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாய…

  14. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது. வடக்கு மாகாண முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ தெரியப்படுத்தாமல் மாகாண சபையின் ஆளணி மீளாய்வுக் கூட்டத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் தனது தலைமையில் கூட்டினார் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி. அதுமட்டுமல்லாமல் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரான டெனீஸ்வரனின் செயலாளரை அமைச்சருக்குத் தெரியாமலே இடம்மாற்றம் செய்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயற்பாடுகளின் மூலம் அவர் மாகாண சபை நிர்வாகத்தை குழப்பியடிக்க தயாராகிவிட்…

  15. மகிந்த ராஜபக்ஸவின் கட்டவுட்டுக்களும் குடாநாட்டு மக்களின் அவலங்களும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இரண்டாம் இணைப்பு:- மஹிந்தவின்; கட் அவுட்களை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றிரவு கைது செய்யபப்பட்ட அப்பாவி இளைஞர்கள் நால்வரும் மேலதிக விசாரணைக்கென வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸின் வடக்கு தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்; தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியாவிற்கு மேலதிக விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இராணுவத்தினராலேயே கைது செய்யப்பட்டிருந்ததாக இலங்கைப் பொலிஸ் அறிவித்திருந்தது. இது பற்றி மேலும் தெரியவருகையி…

  16. நாட்டின் பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35000 முதல் 45000 மாகக் காணப்பட்டது. எனினும், இந்த ஆண்டில் பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20000மாக வீழ்ச்சியடைந்துள்ளது.பாலியல் தொழில் மையங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சுற்றி வளைப்புக்கள் தேடுதல் காரணமாக எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் வீழ்ச்சி, எயிட்ஸ் நோய்த் தொற்றுப் பரவுவதனை கட்டுப்படுத்தும் எனக் குறிப…

  17. தமிழ் மக்களாகிய எமது புனித நாட்களில் மாவீரர்களை நினைவு கூரும் நாள் மிக முக்கிய நாளாகும் . இந்நாள் எமது ஈழ மண் விடிவிற்காகவும் , சுதந்திர சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி தம்முயிரை ஆகுதியாக்கி , மண்ணுக்கு உரமாகி , எமது உயிருடன் கலந்துவிட்டவர்களின் நினைவு நாளாகும் . உங்களது உயிரிலும் மேலான பிள்ளைகளும் , எமது சக போராளிகளுமான இந்த மாவீரர்களின் தற்கொடை , அர்ப்பணிப்பு , தியாகம் , உணர்வுகள் , கனவுகள் , இலட்சியதாகம் யாவும் எங்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து , சணமும் மறக்கப்பட முடியாதவையாகும் . இப் புனிதர்களை எப்படி மறக்க முடியும் ? . இப்புவியில் தமிழ் மக்கள் வாழும்வரை இவர்களை நினைவு கூர்ந்து , சுடரேற்றி , மலர்தூவி வீரவணக்கம் செலுத்துவது தமிழர்களது தலையாய கடமையாகும் . இம்மாவ…

  18. பாதை தெரிந்த பின்பும் பயணத்தில் ஏன் தயக்கம் ? தமிழீழ நினைவெழுச்சி நாட்களை உணர்வுபூர்வமாக எதிர்கொள்ளும் தருணத்தில், நிகழ்காலநிலவரத்தையும் எதிர்காலம்பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இப்பத்தி அமைகிறது. `மீகாமன் இல்லாத கலமாக’ ஈழத்தமிழினம் தடுமாறிக் கொண்டிருப்பதாக நம்மத்தியில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இன்னொரு புறத்தில் தவறான தீர்மானங்களால் இந்நிலைக்குத் தள்ளப்படடு விட்டோம் என்ற கருத்தும் உள்ளது. வந்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு விட்டு வருந்திக் கொண்ருக்கிறோம் என்று கூறுபவர்களும் உள்ளனர். இக்கருத்துகள் யாவும் அவரவர் பார்வையில் சரியாகத் தென்படலாம். இருப்பினும் வரலாறு முன்னோக்கியே நகரவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள …

  19. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் உச்சக்கட்ட வேகத்தில் நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிலிருந்து சுமார் 1.5 கி.மீ. தூரத்திலேயே இவ்வாறான நிலக்கொள்ளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதேச மக்களின் தகவலை அடுத்து நேற்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிவிட்டு பிரதேச சபை உறுப்பினர் சிவலோகேஸ்வரன் உள்ளிட்ட மக்களில் சிலருடன் நேற்று மாலை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரன், அங்கு இடம்பெறும் நில அபகரிப்பை நேரில் அவதானித்தார். சம்பவ இடத்திற்கு ரவிகரன் சென்றபோது, இரண்டு கொட்டில்களில் இருந்த சிங்களவர்களால் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதையடு…

  20. மன்னார் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு நேற்று ; திங்கட்கிழமை மாலை முதல் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் நாளை 27 ஆம் திகதி புதன் கிழமை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் மன்னார் பணங்கட்டுக்கோட்டு பகுதியில் உள்ள எமிழ் நகர் கிராமத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு(டவர்) கோபுரத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இனம் தெரியாதவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியான புலிங்கொடியினை ஏற்றியுள்ளனர். இந்த நிலையில் குறித்த புலிக்கொடி படைத்தரப்பினரினால் உடனடியாக அகற்றப்பட்டது. -இந்த நிலையில் மாவீரர் தினத்தையொட்டி மன்னார் பகுதியில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் பாதுகாப்புக்கடம…

  21. நேற்றைய தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் காலையில் நெல்லியடி பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவில் காணப்பட்டது:- வடக்கில் முன்னெடுக்கப்படும் இரகசிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வடமத்திய மாகாணசபை பிரிவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றமை உறுதியாகியுள்ளது. NCPQ 4101 என்ற வட மத்திய மாகாண வாகனமே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என நெல்லியடி காவற்துறை நிரையத்திற்கு அருகாமையில் இருந்து குளோபல்தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல் கூறுகிறது. இன்று அதிகாலை வடமராட்சியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் பயன்படுத்திய கெப் ரகவாகனம் வடமத்திய மாகாண பதிவு இலக்கத்தை கொண்டிருந்ததாகவும் அது பின்னர் இன்று காலை நெல்லியடியில் கோத்தபாய ராஜபக்ஸவின் நே…

  22. யுத்தத்தின் பின்னர் நாட்டில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் புரிந்து கொள்ளாமை வருத்தமளிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்திற்குப் பின்னர் பாரிய அபிவிருத்திகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. எனினும், அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. எனினும் யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை பல நாடுகள் பாராட்டியுள்ள நிலையில் இதன…

  23. புலிகளை நினைவு கூருவது தண்டனைக்குரிய குற்றம் – மிரட்டுகிறது சிறிலங்கா அரசாங்கம் Posted by tamil24 on November 26th, 2013 06:53 AM | ஊடக சுதந்திரம் என்ற பெயரில், விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதோ நினைவு கூருவதோ, அவர்களின் பெருமைகளைப் புகழ்பாடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ, ஊக்குவிப்பதோ, நினைவு கொள்வதோ, சட்டவிராதமானது. இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த எச்சரிக்க…

    • 0 replies
    • 373 views
  24. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று (26) மாலை 2 மணிக்கு யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நேற்று உள்ளுர் பத்திரிகை ஒன்றில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்ததாக "மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமே தவிர, தமது மண்ணிற்காக வித்தாகிப்போன மாவீரர்கள் தடை செய்யப்படவில்லை......................" என வெளியாகிய செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - S…

  25. தற்போது சூடான விவாதத்தை உண்டுபண்ணியுள்ள சனல் 04 தொலைக்காட்சி சேவையின் ‘பாதுகாப்பு வலயம், சிறிலங்காவின் கொலை வலயங்கள்’ என்கின்ற காணொலிகளின் இயக்குனரான கலும் மக்ரே [Callum Macrae] தற்போது சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு தொடர்பான செய்தியைச் சேகரிப்பதற்காக சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான கலும் மக்ரே Ceylon Today ஊடகத்திற்கு தனது நேர்காணலை வழங்கியுள்ளார். தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்ததாகவும், அன்பான மக்கள் வாழும் ஒரு அழகான நாடாக சிறிலங்கா உள்ளதாக தான் முதலில் அறிந்ததாகவும் அதுவே சிறிலங்காவுக்கு வருவதற்கு தன்னைத் தூண்டியதாகவும் கலும் மக்ரே தனது நேர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.