ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
பண்டாரவளையிலிருந்து பூனாகலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று 300 அடி பள்ள த்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 19 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய விப த்து சம்பவம் நேற்று மாலை 6.40 மணியளவில் பண்டாரவளைக்கும் பூனாகலைக்கும் இடைப்பட்ட மாபிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்றதாக பண்டாரவளை பகுதிக்கு பொறுப் பான பொலிஸ் அத்தியட்சர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மேலும் காயமடைந்த பலரின் நிலைமை கவலை க்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீட்புப்…
-
- 0 replies
- 437 views
-
-
ள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்தக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதி செய்வாய்க்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாவட்டபுரம் கந்த சுவாமி கோவில் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பினை மீறியும் வலிகாம் வடக்கில் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் தொடர்ந்து இடித்தழிக்கப்பட்டு வருவதையடுத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார். http://www.virakesari.com/?q=node/358958
-
- 0 replies
- 560 views
-
-
காணொளி : இலங்கைக்கு எதிராக முற்று முழுதாக பிரித்தானிய வெள்ளையர்கள் முன்னெடுத்த போராட்டம்.. காணொளி யை பார்க்க.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9872:2013-11-05-08-40-26&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 603 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சுடர் ஏந்தியவர்கள் கைது [Monday, 2013-11-04 21:38:15] இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில்cன் தஞ்சாவூரில் அமைய உள்ள நினைவேந்தல் முற்றத்துக்கான நினைவு சுடர் பயணத்தில் ஈடுபட்டவர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈழத்தமிழர் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சையை அடுத்த விளார் என்ற இடத்தில் நினைவேந்தல் முற்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 8ம் திகதி அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியில் அமைக்கப் பெற்றுள்ள இந்த நினைவிடத்திற்கு நினைவுச் சுடரை கொண்டு…
-
- 0 replies
- 415 views
-
-
காணொளி: இலங்கை கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9862:2013-11-04-20-49-21&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 555 views
-
-
http://www.youtube.com/watch?v=OI2t6KtL1y0
-
- 6 replies
- 902 views
-
-
விசுவமடு பாரதிபுரம் முன்பள்ளி மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ளதால், சிறார்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்படுவதாக பிரதேச மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளனர். பாரதிபுரத்திற்கு குறைகேள் மக்கள் சந்திப்பை நடத்தச் சென்றபோதே அப்பகுதி மக்கள் இது தொடர்பில் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். முன்னதாக, ரவிகரனுக்கு அப்பகுதி மக்களால் வரவேற்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. அப்பிரதேச கிராம சேவகர் அவர்களால் தலைமையேற்று நடத்தப்பட்ட நிகழ்வில், கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய ரவிகரன், மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு மக்கள் அளித்த பேராதரவிற்கு நன்றி தெரி…
-
- 0 replies
- 449 views
-
-
நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விக்கினேஸ்வரன் 02 நவம்பர் 2013 பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுநரை மாற்றுமாறும்இ படைக் குறைப்பைச் செய்யுமாறும் வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலியஇ நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். "எங்களுடைய நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப் போகின்றோமா இல்லைய…
-
- 17 replies
- 1.4k views
-
-
2009ல் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை சிங்கள இராணுவம் மீது மனித உரிமை புகார்கள் எழுந்துள்ளது. ஐ.நா சபையின் மனித உரிமை பிரிவு இதனை விசாரணை நடத்தி மனித உரிமை மீறல் அதிகளவு நடந்துள்ளது என்பதை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது. மனிர்களை கொன்று குவித்த இன சுத்திகரிப்பு செய்த நாடு இலங்கை அதனை தண்டிக்க வேண்டும் என உலகம் முழுவதும் குரல்கள் எழும்பி வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்தப்பட வுள்ளன. இதில் கலந்துக்கொள்ள கூடாதுயென பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. மாநாட்டில் கனடா, ஆஸ்த்திரியா போன்ற நாடுகள் கலந்து கொள்ள வில்லை என அறிவித்துள்ளது. அதேபோல் இலங்கiயில் நடைபெறும் க…
-
- 0 replies
- 594 views
-
-
Monday 4th November 2013 நோ பயர் ஸோன் என்கிற தொடர்ச்சியான புலனாய்வு ஆவணப்பபடங்கள் மூலம் இலங்கை அரசின் போர்குற்றங்களை தைரியமாக அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் சேனல்4 தொலைக்காட்சியின் கெல்லம் மெக்ரே என்கிற ஆங்கில ஊடகவியலாளர், தனது புதிய ஆவணப்படத்தை இந்திய தலைநகர் டில்லியில் திரையிட விரும்பினார். நாளைமறுநாள் புதன்கிழமையன்று திரையிட ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அவர் இந்தியா வருவதற்கான விசாவை வழங்காமல் இந்திய அரசு இன்றுவரை மறுத்து வருகிறது. இடையில் இன்னும் இரண்டுநாட்களே உள்ளநிலையில் இந்திய அரசின் இந்த இழுத்தடிப்பு/கழுத்தருப்பு காரணமாக கெல்லம் மெக்ரே திட்டமிட்டபடி தில்லி வருவது சாத்தியமா என்கிற சந்தேகம் வலுவடைந்து வருகிறது. இதில் கூடுதல் விசித்திரம் என்னவென்றால் இவர் எந்த இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருகை தருமாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டெலி அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுற்று அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டார். இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசற்ஸ்தலத்தில் சந்தித்து பேசினார். வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரை அமெரிக்காவின் தூதுவர், தென்கொரிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டவர்கள் கடந்த வாரத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரநிதிநிதியும் அவரை…
-
- 9 replies
- 794 views
-
-
அரசாங்கம் இசைப்பிரியாவின் காணொளியை கணக்கெடுக்கவில்லை : கெஹெலிய [Monday, 2013-11-04 09:50:16] இலங்கையை சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கத்துடனேயே செனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை வீடியோக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுக்கவேயில்லை. செனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை தோல்விகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும்போது இவ்வாறு வீடியோக் காட்சிகளை வெளியிட்டு இலங்கையை அபகீர்த்திக்கு உட்படுத்துவது செனல் 4 நிறுவனத்தின் வழமையாகிவிட்டது. எனவே அதனை நாம் கவனத்தில் கொள்ளவேயில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 742 views
-
-
மேல்மாகாணத்தில் எங்களை பலவீனபடுத்தாதீர்கள் - பிரதான தமிழ் கட்சிகளுக்கு மனோ கணேசன் தெரிவிப்பு 28 அக்டோபர் 2013 மேல்மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் நேரடியாக போட்டியிடுமா அல்லது உங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்குமா என்று என்னை பலர் கேட்கிறார்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த கேள்வியை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடம் கேளுங்கள் என்று நான் சொல்கிறேன். அதேபோல் சேவல் சின்னம் மேல்மாகாணத்தில் களமிறங்குமா என்றும் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கும் நான் என்ன சொல்ல முடியும்? இதுபற்றி சேவலுக்கு சொந்தக்காரரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கேளுங்கள் என்றுதான் நான் கூறியுள்ளேன். சமீபகால வடமாகாண, சப்ரகமுவ மாகாண தேர்தல் வரலாறுகளை எடுத்து பார்த்து, மே…
-
- 37 replies
- 2.2k views
-
-
http://youtu.be/t8-wPGPsHiU வயதுக் கட்டுப்பாடு உள்ளதால் உங்கள் கூகிள் கணக்கினூடு போய் இதனை காணலாம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
காணொளி : இசைப்பிரியாவின் கொலை தொடர்பில் இந்திய ஆங்கிலத் தொலைகாட்சியில் இடம்பெற்ற சூடான விவாதம் காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9854:2013-11-03-22-19-16&catid=1:latest-news&Itemid=18
-
- 4 replies
- 929 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தங்கத் தாம்பாளத்தில் தாங்குவதற்காக பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைக்குப் பயணிக்கவில்லை என பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சர் ஹியூகோ செவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாடு என்பது இலங்கையைப் பற்றியது மட்டுமல்ல எனவும் எனவே இதனை முற்றுமுழுமையாக புறக்கணிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணி, இரண்டாம் எலிசபத்தை, முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் பிரதிநிதித்துவம் செய்வார் எனவும், இதனைத் தவிர பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளதாகவும் சிரேஸ்ட அமைச்சர் ஹியூகோ செவர் தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகள் தொடர்பிலும் கொழும்பு அமர்வில் கலந்துரையாடும் எனவும் அவர் தெரிவித்தார்.…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9771:2013-10-28-09-35-36&catid=332:2012-09-04-07-30-59&Itemid=548
-
- 1 reply
- 618 views
-
-
நாமல் ராஜபக்ச தான் அடுத்த ஜனாதிபதி - ஈரான் தூதுவர் [Monday, 2013-11-04 08:07:05] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாவதனை யாராலும் தடுக்க முடியாது என ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் புய்சால் ராசீன் தெரிவித்துள்ளார். ராஜபக்சாக்கள் இந்த நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவைக்கு பிரதியுபகாரமாக மக்கள் நாமலையும் ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். இன்று கொழும்பை விடவும் ஆச்சரியமிக்க அளவிற்கு அம்பாந்தோட்டை அபிவிருத்தி அடைந்துள்ளது. உலகின் பலம்பொருந்திய நாடுகள் பயங்கரவாதப் பிடியில் சிக்கியிருந்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முயற்சியால் நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆசியாவின் பல நாடுகளில் ஜனாதிபதியை ஆசிய சிங்கம் என அழைக்கின்ற…
-
- 0 replies
- 582 views
-
-
நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எங்கோ ஓர் இடத்தில் சர்ச்சை நிலவி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் 30இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்துள்ள ஹசன் அலி '' முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைத்து இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மக்களால் தகுந்த பாடம் புகட்டப்பட்டது. தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நின்றும் தேர்தலில் படுதோல்வியடைந்த ஆனந்தசங்கரி தனது வேதனைகளை மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப்பிடம் கொட்டித் தீர்த்துள்ளார். தனது தோல்விக்கு காரணம் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் என்று புலம்பியுள்ளார். ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எழுதிய அவரது கடிதம் இதுதான்... 21.10.2013 அதி. வணக்கத்திற்குரிய ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு, ஆண்டகை இல்லம், மன்னார். தமிழ் மக்களின் ஒற்றுமை அன்புடையீர், இனப்பிரச்சனைத் தீர்வ…
-
- 11 replies
- 879 views
-
-
பிரித்தானியாவிற்கு சுற்றுலா வீசாவில் செல்வோர் பிணைப் பணமாக 3000 பவுண்ட்களை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை இரத்துச் செய்யவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆறு ஆபத்தான நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு சுற்றுலா வீசாவில் செல்வோர் 3000 பவுண்ட்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை பிரித்தானியா முன்னர் அறிவித்திருந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா, நைஜீரியா ஆகிய நாடுகளை ஆபத்தான நாடுகள் என பிரித்தானியா முன்னர் பட்டியலிட்டிருந்தது. இந்த நாட்டவர் பிரித்தானியாவிற்கு செல்ல வேண்டுமாயின் பிணை பணம் திட்டமொன்றையும் முன்னர் அறிவித்திருந்தது. ஆறு மாத காலத்திற்கு சுற்றுலா வீசாவைப் பெற்றுக்கொள்வதற்கு பணத்தை வைப்புச் செய்யும் திட…
-
- 0 replies
- 459 views
-
-
3 நவம்பர், 2013 இசைப்பிரியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை தேவை என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். 'பொதுநலவாய மகாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ள வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்லாமல் உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது' என்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 'சேனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது ச…
-
- 22 replies
- 1.8k views
-
-
வடக்கு மாகாணசபையினது கல்வி மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 400 மில்லியன் நிதி செலவிடப்படாது திருப்பப்படவுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. புதிய கூட்டமைப்பின் கல்வி அமைச்சருக்கு மிகப்பெரும் சவாலாக இந்த விவகாரம் அமையப் போவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றுடன் இந்திய அரசினது உதவியுடனும் யுத்த பாதிப்பிற்குள்ளான வடக்கிற்கென இந்நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலும் வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளினிலும் புதிய வகுப்பறைக் கட்டுமானங்கள் மற்றும் திருத்த வேலைகளை செய்விக்க இந்தநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியே திரும்பிச்செல்வது தற்போது நிச்சயமாகியுள்ளத…
-
- 0 replies
- 488 views
-
-
ஆளுநர் சந்திரசிறியை மாற்ற ஆதரவு - ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண 03 நவம்பர் 2013 வடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தார். போர் முடிந்து சமாதானமான சூழ்நிலை காணப்படுகின்ற இந்நிலையில் வடக்கில் இராணுவ ஆளுநர் ஒருவர் இருப்பது அவசியமில்லாத ஒன்றாகும்' என்றும் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளும் காணிகளும் உரியவர்களிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். போர் முடிவடைந்து நான்கு வருடங்களைக் கடந்தும் வடக்கில் இராணுவ அதிகாரியொருவரே ஆளுநராகக்…
-
- 2 replies
- 463 views
-
-
காணொளி : புலம்பெயர் ஈழப் பெண்ணான மாயாவை வாழ்த்தும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜீலியன் காணொளி.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9853:2013-11-03-22-01-54&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 415 views
-