Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ அழுத்தங்களை நீக்கி கோப்பாபுலவு மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்க - சிவசக்தி ஆனந்தன் 21 அக்டோபர் 2013 கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்ற கிராமமான கேப்பாப்புலவு மக்களின் அடிப்படை வசதிகள், பூரணப்படுத்தப்படாமல் மக்கள் அவதிப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த 27.09.2012 அன்று ஆனந்தகுமாரசாமி மற்றும் கதிர்காமர் முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட 165 குடும்பங்களும் வெளிப்பதிவினூடாக குடியேறிய 185 குடும்பங்களுமாக குடியேறியுள்ள 350 குடும்பங்களில் அனேகமானோர் தற்காலிக கொட்டகை வீடுகளிலிலே வசித்து வருகின்றனர். இவர்…

  2. காணிகளை பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சிறுவயது திருமணங்கள் நடைபெறுவதாக 'ராவண சக்தி' இயக்கம் நேற்று திங்கட்கிழமை கூறியது. றம்புக்கன் ஓயா திட்டத்தின் கீழ் காணி வழங்குதலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த திருமணங்கள் இடம்பெறுவதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 'றம்புக்கன் ஒயா திட்டத்தில் விவசாய நோக்கத்திற்காக அரை ஏக்கர் காணிமட்டுமே ஒருவருக்கு வழங்கப்பட்டது' என ராவண சக்தியின் செயலாளர் இத்தகந்த சத்ததிஸ்ஸ கூறினார். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மகஜரை கையளிப்பதற்காக சத்ததிஸ்ஸ நீர்ப்பாசன அமைச்சுக்கு பல கிராம வாசிகளையும் அழைத்துக்கொண்டு நேற்று திங்கட்கிழமை வந்திருந்தார். நிலப்பற்றாக்குறை காரணமாக மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 1100 …

  3. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வது தொடர்பாக தற்போது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு வழங்குவது உள்ளிட்ட யோசனைகள் அடங்கிய திட்டமொன்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாபாவின் தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்டு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைக்கப்பட்ட இந்த குழு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் மற்றும் அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும் யோசனையொன்றை தயாரித்துள்ளது. சிறைக் கைதிகள் மட்டுமன்றி சிறைச்சாலை அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த யோசனைகள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக…

    • 0 replies
    • 551 views
  4. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என இந்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்ற…

    • 16 replies
    • 992 views
  5. தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் - இரா.துரைரெட்ணம் 21 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியத்திற்காக செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதயசுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையின் அவசியம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் நல்லாட்சி முறைமைக்கான தலைமைத்துவத்தை உருவாக்க முன்னின்று உழைப்பதை விடுத்து ஒருகட்சி சார்ந்த பக்…

  6. மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை –TNA 21 அக்டோபர் 2013 மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டுமென அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தனர். பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ரீ.யோகராசா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமது கட்சி ஆதரளிக்காது என கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ம…

  7. "தமிழ் இளைஞர், யுவதிகளை குடும்பப்பெண்களைத் துன்புறுத்தித் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் எமக்கு வேண்டாம். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருக்க இலங்கை அரசு நினைக்குமானால் இறுதியில் பெரும் விபரீதங்களைத் தான் அது சந்திக்கும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. "வடக்கு, கிழக்கில் தமிழ் இளம் யுவதிகளை குடும்பப்பெண்களை இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்துள்ளனர் என்பதற்கு நீதிமன்றில் சான்றுகள் உள்ளன. இதை இராணுவப் பேச்சாளர் மறுதலிக்க முன்வருவாரா?'' என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. வட மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் அதிகாரம் சர்வதேசத்திற்கு இல்லை. எமது நாட்டில் பாதுகாப்பைப்…

  8. நிலத்தை பறிகொடுத்தால் கலாசாரத்தையும் இழப்போம்; அரியநேத்திரன் எம்.பி. தெரிவிப்பு எமது நிலம் பறிபோனால் கலாசாரம், ஒழக்க விழுமியங்களை இழந்து தமிழ் மக்கள் ஏனைய கலாசாரங்களுக்குள் மூழ்கும் துர்ப்பாக்கிய நிலை உருவாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு சென்.யோசப் குழந்தை யேசுவின் பாலர் பாடசாலையின் பெற்றோர் தின விழா சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அறிவு என்பது மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கின்ற ஒன்றாகும். அதனை செயற்படுத்தும் விதத்தில் தான் அதன் முக்கியத்துவம் வெளிப்பட…

  9. கனகபுரம், முழங்காவில், தேராவில்; துயிலும் இல்லங்களில் முகாம் அமைக்க முயற்சி கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்தீவு தேராவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் திடீரென படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நேற்றுமுன்தினம் பிற்பகலில் இருந்து குறித்த துயிலும் இல்லங்களைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டு அங்கு படைமுகாம்களை அமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையில் இந்த மாத அமர்வு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் மூலம் துப்புரவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆயினும் குறித்த தீர்மா னத்தின்படி சிரமதானம் செய்யச் சென்ற போது மாவீரர் துயில…

  10. அமெரிக்க தடையை மீறி இரகசியமாக ஈரானிடம் எண்ணெய் வாங்குகிறது சிறிலங்கா [ திங்கட்கிழமை, 21 ஒக்ரோபர் 2013, 07:56 GMT ] ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ள போதிலும், மூன்றாவது தரப்பு மூலம், சிறிலங்கா தொடர்ந்தும் ஈரானிடம் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இந்தநிலையிலேயே, அமெரிக்காவின் தடையையும் மீறி, அனைத்துலக கடற்பரப்பில் வைத்து, ஈரானிய மசகு எண்ணெயை, சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலமாக, வாங்கி வருகிறது. சிறிலங்காவில் உள்ள சபுகஸ்கந்தை எரிபொருள் …

  11. செல்வ நகரில் சிரமதானம் செய்யப்பட்டது கர்பலா கிராம முஸ்லிம் மையவாடிக் காணியல்ல: பிரதேச சபை செயலாளர் 21 அக்டோபர் 2013 2ஆம் இணைப்பு:- ஆரையம்பதி செல்வ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சிரமதானம் செய்யப்பட்ட காணி கர்பலா கிராம முஸ்லிம் மையவாடி காணியல்ல என ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் திருமதி. கே. ஜே. அருள்பிரகாசம் தெரிவித்தார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில், ஆரையம்பதி செல்வ நகர் கிழக்கு கிராமத்திலுள்ள காணியொன்றை கர்பலா கிராம முஸ்லிம் மையவாடி காணியெனக் கூறி கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிலர் அத்து மீறி நுழைந்து சிரமதானத்தில் ஈடுபட்டதாகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (21.10.13) திங்கட்கிழமை கருத்து தெரிவித்த அ…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்படும் - எதிர்க்கட்சிகள் 21 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. குறிப்பாக ஈ.பி.டி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கந்தசுவாமி கமலேந்திரன் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். வட மாகாண அபிவிருத்திப் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கமலேந்திரன் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முரண்பாட்டு அரசியலை வட மாகாணசபை எதிர்க்கட்சி பின்பற்றப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamil…

  13. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் - IUSF 21 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் மாதத்தில் போராட்;டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலவச கல்வி முறைமை நிதி ஒதுக்கீட்டு குறைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சலுகைகள் வழங்குதல், மாணவர் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற காரணிகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் எதிர்வரும் மாதத்தில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்த…

  14. பௌத்த பிக்குகளுக்கான முதலாவது நீதிமன்றம் கண்டியில் 21 அக்டோபர் 2013 பௌத்த பிக்குகளுக்கான முதலாவது நீதிமன்றம் கண்டியில் அமைக்கப்பட உள்ளது. நாளைய தினம் இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட உள்ளது. பௌத்த பிக்குகளுக்கு எதிரான மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வழக்குகளே இவ்வாறு இந்த நீதிமன்றில் விசாரணை செய்யப்பட உள்ளது. கண்டி, அனுராதபுரம் மற்றும் காலியில் இவ்வாறான நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. பௌத்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன. ஏனைய நீதிமன்றங்களில் போன்று வழக்கு விசாரணகைள் காலம் தாழ்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97910/language/ta-IN/article.aspx

  15. நான்கு பேர் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளனர் 21 அக்டோபர் 2013 கலவெல பிரதேசத்தில் நான்கு பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளனர். பெண் அவரது தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அவசர சேவைக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் , காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பெற்றோல் ஊற்றி நான்கு பேர் மீதும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் இரண்டாவது கணவரே இந்தக் கொடூரச் செயலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnew…

  16. பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை புறக்கணிக்கக் கூடாது – பிரயன் மல்ரோனி 21 அக்டோபர் 2013 கனடா, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை புறக்கணிக்கக் கூடாது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரயன் மல்ரோனி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அமர்வுகளை புறக்கணிப்பது உசிதமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள் மக்களை சரியான விதத்தில் நடாத்த வில்லை அல்லது ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்து அமர்வுகளை புறக்கணிக்கத் தொடங்கினால், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும் என அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் பல நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 53 …

  17. செனல்4 ஆவணப்படத்தை காட்சிப்படுத்திய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மலேசியா வாபஸ் பெற வேண்டும 21 அக்டோபர் 2013 பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் ஆவணப்படமொன்றை காட்சிப்படுத்திய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரி;க்கை விடுத்துள்ளது. தணிக்கை சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளாது ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. புசாட் கோமாஸ் என்ற மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர் லென ஹென்ரிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோ பயர் ஸோன் எனப்படும் ஆவணப்படம் கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நாளைய தினம் ஹென்…

  18. கொமன்வெல்த் மாநாட்டில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து, சிறிலங்கா அரசாங்கம் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்திலே, வடக்கு மாகாண முதல்வரை கொமன்வெல்த் மாநாட்டில் பொருத்தமான நிகழ்வு ஒன்றில் உரையாற்ற அல்லது ஒரு உரையை சமர்ப்பிக்க அழைப்பதற்கான சாத்தியம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளையும் வடக்கில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதையும் வெளிப்படுத்த முடியும் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கருத்து வெள…

    • 13 replies
    • 888 views
  19. கொழும்பில் தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத குழுவினரால், குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோரும் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவத்தில், முழுப்பெயர், முகவரி, தேசிய இனம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், தொழில் முகவரி, பணிசெய்யும் காலம் உள்ளிட்ட பல விபரங்கள் கோரப்பட்டுள்ளன. போர் நடந்த காலங்களில் கொழும்பில் வசிக்கும் தமிழர்கள், இதுபோன்று அடிக்கடி படிவங்களை நிரப்பி ஒப்படைக்க வேண்டியிருந்தது. சிறிலங்கா காவல்துறை, இராணுவம், காவல்துறை, விமானப்படை, கடற்படைப் புலனாய்வுப் பிரிவுகள் தனித்தனியாக இத்தகைய படிவங்கள் மூலம் விபரங்களை சேகரித்திருந்தன. எனினும்…

  20. அன்பான தமிழ் உறவுகளே..! இக்குழந்தை தரணிகா உட்பட ஐநாவால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், மாற்றுத்துணி வசதிகள் ஏதுமின்றி துபாயில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 12 ஈழத்தமிழ் தொப்புள் கொடி உறவுகளையும் திருப்பி இலங்கைக்கு அனுப்பாமல் காப்பாற்ற ஐநாவிற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். —————————————————————– துபாயில் வதைக்கப்படும் ஈழ அகதிகள் பற்றிய பதிவு: http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/394-un-washing-its-hands-of-destitute-sri-lankan-tamil-refugees-in-dubai மின்னஞ்சல் அனுப்ப மற்றும் தொடர்புகளுக்குரிய முகவரிகள். * melissa FLEMING Head Communications Service Spoksperson for the High Commissioner Tel: (41 22) …

  21. கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள் குறித்து கவனம் செலுத்தப்படாவிட்டால், யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உடன்பாடு இல்லாத காரணத்தினால் இந்தக் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்ற நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் இரணைமடுக்குளத்தின் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத்…

    • 53 replies
    • 3.7k views
  22. காணொளி: இலங்கை கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9662:2013-10-20-18-23-05&catid=1:latest-news&Itemid=18

  23. வட மாகாண தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்தார்கள். இதனாலேயே நாம் எதிர்பார்த்ததை விட அமோக வெற்றி பெற்றுள்ளோம். அதே நேரத்தில் போரின் அழிவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், கணவன்மார்களை இழந்த விதவைகளின் வாழ்வாதாரத்தையும் கட்டி காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் உண்டு என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் மேலும் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள கணவனை இழந்த விதவை தாய்மார்கள்…

  24. பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று நம்பகரமாகத் தெரிய வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு அவர் நேரில் பயணங்களை மேற் கொள்வதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுநலவாய மாநாடு அடுத்த மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோர் இலங்கை வருகின்றனர். பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற பின்னர், இளவரசர் சார்ள்ஸ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் க…

  25. சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஊடுருவல் தொடர்பான விவகாரத்தில், பொதுவான நிலைப்பாட்டை எட்டுவதற்கு சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உடனடியாக கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இந்தக் கூட்டத்தைக் கூட்டும் படி, சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார். வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அமைச்சுப் பதவிகளுக்காக கடந்த வியாழக்கிழமை அதிபர் செயலகத்தில் பதவியேற்றுக் கொண்ட பின்னரே, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். வடக்கு மாகாண முதல்வரையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூறிய சிறிலங்கா அதிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.