Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம் பெற்று வருகின்றன. ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த மாதம் 14 ஆம் திகதி, கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டது. இதன் பின்னர் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து. ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து பரீட்சார்த்தமான ரயில் சேவை கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரை நீடிக்கப்பட்டுள்ளது. பளை வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் ப…

  2. விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை விடுதலை : 15 அக்டோபர் 2013 சுவிஸ் பிரஜையும் பேர்ன் மாநிலத்தில் 'தாய் வீடு' பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் என்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டே சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதி மன்ற நீதிபதி லலித் ஜயசூரிய அவரை இன்று விடுதலை செய்தார். மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத…

  3. வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எழுதிய தமிழ் கடிதம் 16 அக்டோபர் 2013 மனோ கணேசன் தலைவர் - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் - ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டாளர் - மக்கள் கண்காணிப்பு குழு தலைவர் - மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு இணைத்தலைவர் - அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கௌரவ சி. வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சர் - வட மாகாணசபை வடக்கு மாகாணசபை செயலகம் யாழ்ப்பாணம் அன்பின் ஐயா, விடயம்: தமிழ் தடுப்பு காவல் மற்றும் சிறைகூட கைதிகள் வடக்கு மாகாணசபை தேர்தலுடன் ஆரம்பித்த மேலதிக உறுப்பினர் மற்றும் அமைச்சரவை பதவிநிலை நியமன பணிகள் முடிவுக்கு வந்துவிட்டன என நான் நம்புகின்றேன். இந்நிலையில் நிரந்தரமான தேசிய இனப்பிரச்சினைக்க…

  4. தற்போது சுவிஸில் அகதி தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்களை நாடு கடத்துவதை சுவிஸ் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. எற்கனவே சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப் பட்ட தமிழர்கள், தங்கள் முதல் இருந்த மாநிலத்தில்() புதிதாக பதிந்து, தங்களுக்கு சேர வேண்டிய உதவிப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம். வேலை செய்வதற்கான அனுமதி வைத்திருந்தவர்கள், திரும்பி வேலை செய்வதற்கு அனுமதிக்கப் படுகிறது. அடுத்த வருடத் தொடக்கத்தில் சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகளுக்கான திணைக்களம் இலங்கை தொடர்பாக எடுக்கும் உத்தியோக பூர்வமான முடிவிக்குப் பின், சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரும் தமிழர்களின் எதிர்காலம் தெரிய வரும். கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் நீங்கள் தொடர்புகொண்டால் மேலதிக விபரங்கள் தெரியவரும். Fre…

  5. யாழ்ப்பாணத்தில் மாமனிதர் தராகி டி.சிவராம் ஞாபகார்த்த ஊடக கற்கை மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது:- 16 அக்டோபர் 2013 யாழ்ப்பாணத்தில் மாமனிதர் தராகி டி.சிவராம் ஞாபகார்த்த ஊடக கற்கை மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள இம்மையம் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களிற்கு ஊடக வாண்மை விருத்தி கற்கை நெறிகளை முன்னெடுக்கவுள்ளது. ஊடக வாண்மை விருத்தி கற்கை நெறிகளை முன்னெடுக்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் நிதி அனுசரணையினை வழங்க முன்வந்துள்ளது. மாமனிதர் தராகி டி.சிவராம் ஞாபகார்த்த ஊடக கற்கை மையத்தினை உத்தியோகபூர்வமாக மூத்த ஊடகவியலாளர்கள் ராதேயன் மற்றும் ஜயா.சச்சிதானந்தன் ஆகியோர் நாடா…

  6. பௌத்த மதகுருவின் துஷ்பிரயோகம்: வவுனியா இல்லச் சிறுவர்களை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெறுப்பேற்பு! 16 அக்டோபர் 2013 வவுனியா அட்டமஸ்கடவில் பௌத்த மதகுருவால் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்தில் கடந்த ஒன்பதாம் திகதி சிறுவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அவ்விலத்தின் சிறுவர்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை பெறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குறித்த இல்லத்திலிருந்து 10 வயது முதல் 18 வரையான வயதுகளை உடைய 22 சிறுவர்களை இன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெறுப்பேற்றுக் கொண்டது. இந்தச் சிறுவர்களும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய்வதற்கு பரந்த அளவிலான விசாரணைகள் முன்னெ…

  7. நாம் ஒரு சவாலான காலகட்டத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலைச் சந்தித்தோம். 60 ஆண்டுகளாக நாம் சந்தித்த துன்ப துயரங்களை விட இந்த 4 ஆண்டுகளில் கொடூரமான காலகட்டங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்ததன் பின்னர் அவ்வெற்றிக்குப் பங்காற்றிய மக்கள் சந்திப்பொன்று இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதன்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார் ‘பௌத்த பேரின வாத அரசுகளினால் எமது அடையாளங்கள் அழிந்து போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆளும் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்குள்ளும் அரச அ…

    • 0 replies
    • 365 views
  8. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையாகிய பாயும் புலி சின்னத்தை பதித்திருந்தமையானது அவரைப் பார்த்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் சுவிர்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராவார். அண்மையில் தனது மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்த வெள்ளை இனத்தவர் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். குறிப்பாக பருத்தித்துறை, கீரிமலை, அரியாலை போன்ற இடங்களிலுள்ள கடற்கரைகளுக்குச் சென்றிருந்தனர். இது போன்று யாழ்ப்பாணத்திலுள்ள பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். ஈழப் போராட்டம் தொடர்பாக நல்லபிப்பிராயத்தை வெளியிட்ட இவர்கள் தங்களுக்கு போராட்டத்தில் மதிப்பு இருந்…

  9. வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ ‘பெப்சி’, ‘கொக்கோ கோலா’ போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற வடமாகாண விவசாய கமநல கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்தார். எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ ‘பெப்சி’ மற்றும் கொக்கோகோலா’ போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம். எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது. …

  10. வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி!- பொதுபலசேனா எச்சரிக்கை [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 02:01.55 PM GMT ] லங்காசிறீ இணைய வெளியீடு. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வெற்­றி­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் இவ் வெற்­றியை வைத்து பிரி­வி­னை­வாதம் பேசு­வது தவ­று. வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைக்க முயன்றால் அதற்கான பதி­ல­டியை நாம் கொடுப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டை சீர­ழிக்கும் விட­யத்தை யார் செய்­தாலும் அதற்கு நாம் எதிர்ப்­பி­னையே தெரி­விப்போம். கசினோ சூதாட்ட விட­யத்தில் அர­சாங்­கத்தை கடு­மை­யாக எச்­ச­ரிக்­கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­மா­கா­ணத்தில் வர­லாற்று வெற்­றி­யினைப் பெற்­றுள்­ளமை வர­வேற்­க…

    • 2 replies
    • 525 views
  11. முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்கள். பின்னர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்யப் போவதாக அறிவித்தார்கள். தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலே ஜனாதிபதியின் முன்பாக பதவி ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்திருந்தால் இந்த தேர்தலின் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும். மாறாக இனக்கொலையாளியை தோற்கடிப்போம் என்றே தெரிவித்திருந்தனர். எதுவுமற்ற மாகாண சபையில் தாம் போட்டியிடுவதாகவும் இந்தத் தேர்தலில் ஒற்றுமையாக இலங்கை அரசை நிராகரிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இனப்படுகொலையாளியை தோற்கடிப்போம் என்று க…

    • 0 replies
    • 679 views
  12. மேன்மை தங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு, தாங்கள் முதலமைச்சராக பதவியேற்ற தருணம் பார்த்து, வட மாகாண தமிழ்ப் பெண்களின் அவல நிலை குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. (Turning to sex work in Sri Lanka’s north; http://www.irinnews.org/report/98919/turning-to-sex-work-in-sri-lanka-s-north) அதனை தொகுத்து வெளியிட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம், முதலமைச்சரான தங்கள் கடமையை உணர்த்துவதற்காகவே, தக்க தருணம் பார்த்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகின்றது. இன்று வட மாகாணத்தில் வாழும் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். "சமூகத்தில் இழிவாக கருதப் படும்", பாலியல் தொழில் செய்வோரின் எண்ணிக்கை பெருகு…

    • 11 replies
    • 1.3k views
  13. அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் சென்றவர்களை அங்கிருந்து நாடு கடத்துவதை அவுஸ்திரேலியா திடீரென அதிகரித்துள்ளது. கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் 33 பேர் நேற்று செவ்வாய்கிழமை பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தினை வந்தடைந்தனர். அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் இக் குழுவில் எட்டுப் பெண்களும், 25 ஆண்களும், எட்டு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோத மாகஅவுஸ் திரேலியாவிற்குச் சென்றவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு திருகோணமலையிலிருந்து மீன்பிடிப்படகு மூலம் சென்றுள்ளனர…

  14. மஹிந்தவை தலைவராக்கும் பொதுநலவாயத்தின் யோசனையை நியூசிலாந்து எதிர்க்க வேண்டும் - பசுமைக் கட்சி 16 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டhல் நியூசிலாந்து அதனை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து அமைச்சர் மெக்கியூலிக்கு, நியூசிலாந்தின் பசுமைக் கட்சி எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நியூசிலாந்தின் பசுமைக் கட்சி இன்று (16.10.13) விசேட ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஐநாஇ சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் கனடாவுடன் இணைந்து நியூசிலாந்து செயற்பட வேண்டும். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்துவரும் இரண்டு வருட கால தலைவர் பதவியை இலங்கை …

  15. ஜனநாயகம் இல்லாத நாட்டில் பொதுநலவாய மாநாடு நடைபெறுவது கேலிக்கூத்து! - ரணில் காட்டம்!! ஜனநாயகம் துளியளவும் இல்லாத இலங்கையில், பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுவது மிகவும் கேலிக்குரியது என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 'நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மீது திட்டமிட்ட பழிவாங்கும் படலத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டின் மூலம் இலங்கையில் இன்னமும் அரசியல் கைதிகள் உள்ளனர் என உலகிற்குத் தெரியவந்துள்ளது. எனவே, இப்படியான நாட்டில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிகொத்தவில்…

  16. முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்! 14 அக்டோபர் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14.10.13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தியாகங்களிற்கு மதிப்பளிக்கும் முள்ளிவாய்க்காலிற்கு தனது வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் தெரிவித்தார். இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சமாதான நீதவான் டொக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்…

    • 40 replies
    • 2.3k views
  17. தமிழ் உணர்வாளரும், ஆன்மீகவாதியுமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஆன்மீகப் பயணம் ஒன்றை சுவிஸில் மேற்கொண்டுள்ளார். இளம்தலைமுறையினருக்கு தேவாரத்தை பண்ணோடும் பக்தியோடும் போதிக்கும் நோக்கில் தேவாரம் தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்காக இங்கு அவர் விஜயம் செய்துள்ளார். சுவிஸில் உள்ள 23 ஆலயங்களுக்கும் சென்று தேவாரம் குறித்த விளக்கத்தை அவர் வழங்க விருக்கிறார். சுவிஸில் அடுத்தவருடம் மே மாதம் நடைபெறவுள்ள முருக பக்திமாநாட்டின ஆலோசகரான இவர் தாம் செல்லும் ஆலயங்களில் மாநாடு குறித்து விளக்கமும் அளிக்கவிருக்கிறார். ஆலய தரிசிப்பில் செங்காளன் சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துக்கு வருகைதந்தார். இரவு பூசைகளில் அடுத்து அவரை ஆலையப் பரிபாலன சபைத் தலைவர் வே. கணேசகுமார் வரவேற்றார். …

  18. அரச துணையான ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பி தேசவிரோத சக்தியுடன் சேர்ந்தியங்கும் நபர் ஒருவர் அனலைதீவு கிராம சேவையாளரைத் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளார். அனலைதீவு வடக்கு கிராம சேவையாளராக பணியாற்றும் வ.வடிவழகையன் என்பவரே தாக்கிப் படுகாயப்படுத்தப்பட்ட கிராம சேவையாளராவார். தனது திருட்டுச் சம்பவத்தைக் காட்டிக் கொடுத்தமைக்காகவே மேற்படி நபர் கிராம சேவையாளரைப் பழிவாங்கியுள்ளார். மேற்படி கிராம சேவையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த குறித்த நபர் ஒருவர் கொட்டன் ஒன்றினால் கிராம சேவையாளரின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் கிராம சேவையாளரின் தலையில் வெடிப்பு ஏற்பட்டு அவர் படுகாயமடைந்தார். தாக்கிய நபர் கிராம சேவையாளரின் கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துக்கொ…

  19. இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக விடுமுறையில் வந்தபோது கொலை செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான குரம் ஷேய்க் அவர்கள் குறித்த புலன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரிட்டன் இலங்கையை கேட்டிருக்கிறது. அடுத்த மாதம் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் டெவிட் கமெரன் கலந்துகொள்வது, இந்த வழக்கு விசாரணைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக கொழும்புக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஆளும்கட்சி தரப்பு அரசியல்வாதியாவார். இலங்கையில் நடகவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கலந்துகொள்வது குறித்து மனித உரிமை அமைப்புக்களும், சில பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள…

  20. மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பேரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள், தலைவர் ஆர்.சம்பந்தனின் தலைமையில் அவர்களுக்கான வழிகாட்டலை TNA செய்யும்:- சிவசக்த்தி ஆனந்தன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை (16.10.13) வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். வவுனியா சட்டத்தரணி க.தயாபரன் இவர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மற்றுமொரு வவுனியா …

  21. யாழ். விக்டோரியா வீதியிலுள்ள அழகுபடுத்தும் பயிற்சி நிலையமொன்றின் மலசலகூட குழியிலிருந்து இன்று (16.10.13) புதன்கிழமை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 6 மோட்டார் குண்டுகளும், ஒரு ஆர்.பி.ஜி ரக குண்டுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பழைய மலசலகூடக் குழியினை தூர்வாறும் போதே இந்தக் குண்டுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டு இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு சென்ற இராணுவத்தினர் குண்டுகளை மீட்டுச் சென்றனர். குறித்த பகுதி இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டில் அம்முகாம் அகற்றப்பட்டு மக்களிடம் இந்தப் பிரதேசம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97732/lan…

  22. ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்குக் குரல்கொடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு அனைத்திந்தியாவின் கவனத்தையும் ஈழத்தமிழர்பால் ஈர்த்த தோழர் தியாகுவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு நேற்று இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் வேண்டுதலை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட தோழர் தியாகுவிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ்.க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக…

  23. வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றது – அரசாங்கம் 15 அக்டோபர் 2013 வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் ஸ்திரத்தன்மையும் அபிவிருத்தியும் காணப்படுவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியாவின் ராஜாங்கச் செயலாளர் பீட்டர் புரியனை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் தீவிர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.…

  24. யாழ் மாவட்டத்தில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வெகு விரைவில் முற்றுப்புள்ளி - அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் யாழ் மாவட்டத்தில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இன்று காலை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவும், சிறுவர் சபையும் இணைந்து நடத்திய உலக சிறுவர் தின விழா நிகழ்வில் உரையாற்றும் போது அரச அதிபர் இதனைத் தெரிவித்தார். நாளைய தலைவர்களான சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கான அனைத்து அறிவுரைகளையும் வழங்க வேண்டியது ஆசிரியர்,அதிபர் மற்றும் பெற்றோர்களது கடமையாகும். மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விழிப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.