Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். பொன்னாலை வரதராஜா பெருமாளுக்கும் பாதுகாப்பு இல்லை – 03 அக்டோபர் 2013 ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை யாழ். பொன்னாலை வரதராஜா பெருமாள் ஆலயத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் புதன்கிழமை (2.10.13) இரவு கொள்ளையடிக்கப்பட உடுள்ளது. இது குறித்து ஆலைய நிர்வாகிகள் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். ஆலயத்திலிருந்த 150 பவுண் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் இரண்டு உண்டியல்களிலிருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பொன்னாலை வரதராஜா பெருமாள் ஆலயத்தின் குருக்கள் இன்று வியாழக்கிழமை (3.10.13) காலையில் பூஜை செய்வதற்காக சென்ற வேளை மூலஸ்தானத்திற்கு அருகிலுள்ள அறையில் வைக்…

  2. ஜனாதிபதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்ய TNAயின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானம்? 03 அக்டோபர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் ஜனாதிபதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்ய தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளருக்கு நெருக்கமான கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதியின் செயலாளாளர் லலித் வீரதுங்க சம்பந்தனுடன் தொலை பேசியில் உரையாடியதாகவும் விக்னேஸவரன் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக சத்தியப்பிரமானம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் சம்பந்தனுடன் இது தொடர்பாக கலந்துரையாடி தீர்மா…

  3. வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் இருந்து நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியயோர் இல்லத்துக்குச் சென்றார். முதியோர் தினமான நேற்று அவர் அங்கிருந்து முதியோர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அவர்க …

    • 47 replies
    • 3.6k views
  4. கொடும் வெயில் கொதிக்கும் வெம்மையில் தகரக்கூடுகளில் வசிக்கின்றனர் கிளிநொச்சி சிவபுரம் மக்கள். அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர் என்று பிரசாரம் செய்யப்படும் நிலையில் சிவபுரம் கிராமத்தின் காட்சிகள் வன்னியின் உட்பக்கங்களில் மக்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதை அம்பலப்படுத்துகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பிரதேசத்தில் உள்ளது சிவபுரம். ஏ-9 வீதியிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது இக் கிராமம். இந்தப் பகுதியில் உள்ள சுமார் 250 குடும்பங்கள் வசிப்பதற்கு வீடற்ற நிலையில் தகரக் கூடாரங்களிலும் கூரைகளால் வேயப்பட்ட குடிசைகளிலுமே வசித்து வருகின்றனர். சுப்புரமணியம் அன்னலட்சுமி: …

  5. பயங்கரவாதத்தை ஒழித்த எமக்கு கௌரவம் கிடைக்கவில்லை ; கவலை தெரிவிக்கிறது அரசு நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அதன்படி நாட்டில் 30 வருடகாலமாக இருந்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்தமைக்கான கௌரவம் இலங்கைக்கு கிடைக்கவில்லை.மாறாக யுத்தக் குற்றச்சாட்டுக்களே எழுந்துள்ளன. எனினும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் மேற்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கியுள்ளது. அத்துடன் கடத்தல் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்ற…

  6. இலங்கை மீதான நவனீதம்பிள்ளையின் காலக்கெடுவுக்கு அமெரிக்கா ஆதரவு 02 அக்டோபர் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மொழி மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 24ம் அமர்வுகள் அண்மையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. இலங்கை தொடர்பிலான நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் மூலம் இலங்கை நிலைமைகள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள், நீதி…

    • 5 replies
    • 565 views
  7. ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். ஆனைக்கோட்டை பிரதேசத்தில் இன்றிரவு (02) இடம்பெற்றுள்ளது. இன்றிரவு பத்து மணியளவில் யாழ் ஆனைக்கோட்டை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இரு பொலிஸார் மீதே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்தளையைச் சேர்ந்த வஸந்த அபேரத்தின (37) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். ஸ்தலத்துக்கு விரைந்த யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தச் சமபவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்த தாக்குதல் ராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் …

  8. Started by VENDAN,

    Sri Lankan President Mahinda Rajapaksa joined the ranks of slain Libyan President Muammar Gaddaffi, deceased Venezuelan President Hugo Chavez and former Iranian President Mahmoud Ahmadinejad when he used his time at the UN General Assembly’s 68th Session in New York last week to rail against the world’s double standards and moral policing of targeted states and charged that Human Rights was being as a tool for interference in developing states. Few heard the President’s bombastic speech however since many seats in the assembly were empty during the Sri Lankan President’s slot. https://www.colombotelegraph.com/index.php/rajapaksa-addressing-empty-un/

  9. காணி அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே அன்றி மாகாண அமைச்சிற்கு இல்லை என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கண்டி பிரதேச பொதுமகன் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குறித்த மனுவை விசாரனை செய்த பிரதம நீதியரசர் மெஹான் பீரிஸ் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர ஆகியோர் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைய காணி அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது என தீர்ப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்கு கண்டி நீதிமன்றத்தில் முன்னதாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு பின்னர் அ…

    • 3 replies
    • 501 views
  10. மகாத்மா காந்தியின் 144வது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியின் புதிய உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தின் தலைவர் கலாநிதி செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பில் காந்தி சிலையை ஸ்தாபித்தவரும் முன்னாள் த.தே.கூ மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராஜதுரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் உப தலைவரும் சென்ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான மீராசாஹிபு, ரமண மகரிஷி சுவாமி, மட்டக்களப்பு வின்ச…

  11. முன்னாள் EPDPயின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர் EPDPயின் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி "தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கும் முன்னாள் ஈபீடிபியின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர் என்பதுடன் அவர் தற்காலிக ஊழியர்களிடம் பண மோசடி செய்துள்ளார்" என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை (02.10.13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் 'கொள்ளைக்கார குழுத்தலைவரான சுதர்சிங் விஜயகாந் யாழ்.மாநகர சபையின் பொறியியலாளர் ஒருவரிடமும் சுமார் 29 லட்சம் ரூபா பணத்தினை பெற்ற…

  12. முஸ்லிம் சவால்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவர் பெளத்தர்கள்! பொதுபல சேனா எச்சரிக்கை "முஸ்லிம் அடிப்படை வாதிகளின் அபாயகரமான சவால்களுக்கு முகங் கொடுக்கும் அஹிம்சை வாதிகளான பெளத்தர்கள், தமது பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். உணர்வுள்ள பெளத்தர்கள் தமது பிரச்சினைகளுக்கு மோதலினூடாகத் தீர்வு காண்பர்.'' இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொட அத்தே ஞானாசார தேரர். கிழக்கிலுள்ள 10 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள், சவூதி அரேபியாவிலிருந்து உதவிகளைப் பெற்று பெளத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அது மட்டுமல்லாது, தமது சமய நியதிகளையும் இலங்கை அரசமைப்பின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவும் எவ்வி…

    • 0 replies
    • 476 views
  13. கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப் படாவிட்டால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜமால் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புல்மோடையில் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய கிழக்கு மாகாணசபை அரசாங்கம் எவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளையும் …

    • 6 replies
    • 1.5k views
  14. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கடந்த 25ஆம் திகதி, ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும், கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், இலங்கை தொடர்பான, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விப…

    • 0 replies
    • 430 views
  15. தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இனி எவரும் இனவாத அரசியல் நடத்த முடியாது : மனோ கணேசன் கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத நடவடிக்கையையும், நாம் முற்போக்கு சிங்கள சக்திகளுடனும், சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. சபையுடனும் சேர்ந்து முறியடிப்போம். ஒருபக்கம் தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி, மறுபுறம் சிங்கள மக்களுக்கு 13ஆம் திருத்தம், மாகாணசபை முறைமை, அதிகார பகிர்வு கொள்கை ஆகியவை பற்றி திரித்து பேசி பொய்யான தகவல்களை வழங்கி தங்கள் இனவாத அரசியலை ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பொதுபல சேனா, இராவணா சேனா ஆகிய அமைப்புகளின் இனவாத …

    • 0 replies
    • 251 views
  16. 2013 வடமாகாண சபைத்தேர்தல் உரிமைக்கான அங்கீகாரம் சிறிலங்கா அரசாங்கத்தாலும் சர்வதேச ரீதியாகவும் எதிர்பார்கப்பட்ட வடமாகாணசபைத் தேர்தல் கடந்த 21ம் திகதி முடிவடைந்த நிலையில் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் மக்கள் தெளிவான ஒரு செய்தியை வழங்கியுள்ளார்கள். யுத்தம் மக்களை தின்று நான்கு வருடங்கள் கடந்த நிலையில் இடம்பெற்ற ஒரு தேர்தல் இது என்று தான் கூற வேண்டும். அதாவது 21ம் திகதி இடம்பெற்ற வடமாகணசபை தேர்தல் ஒரு இன சமூகத்தின் அங்கீகார அளவீடாக சர்வதேசத்தினால் கணிப்பிடப்பட்டதென்பதை யாவரும் அறிவோம். இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் அதிகப்படியாக மக்கள் வாக்களித்து வரலாற்று சாதனையாக மாற்றியமைத்த தேர்தல் என்றால் அரசிற்கு சாட்டை அடி கொடுத்த இந்த வடமாகாணசபை தேர்த…

    • 0 replies
    • 296 views
  17. ஈ.பி.டி.பி தலைமையிலான யாழ்.மாநகர சபையின் ஆட்சியானது ஊழல் மோசடிகள் நிறைந்தது என்பதை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். மாநகர சபை உறுப்பினர் விஜயகாந் மாநகர சபையின் ரூபா 19 லட்சத்தை மோசடி செய்ததாகவும், கொலை மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதோடு யாழ்.மாநகர சபையிலும் நிர்வாக மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் காசோலைகள் மோசடி செய்ததோடு பலரிடம் கப்பம் கோரியும் வந்துள்ளது தொடர்பாக ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என மேயர் மேலும் தெரிவித்தார். மேலும் மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம்…

  18. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்துகொள்வதற்காக நியூயோர் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை அதிகாலை மத்தல விமான நிலையத்தில் வந்திறங்கினார். ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் சென்று மத்தல விமான நிலையத்தில் வந்திறங்கியமை இதுவே முதற் தடவையாகும். http://tamil.dailymirror.lk/--main/84362-2013-10-02-06-43-33.html

  19. இன்னும் போர் குறித்தே சிந்திக்கும் ஈ.பி.டி.பி பதவியேற்கப்போகும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக பனிப்போர் நடப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில். உண்மையில்லை என்றும், இது வழமை போல் புனையப்பட்டு சோடிக்கப்பட்டிருக்கும் பொய்த்தகவல் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் அவர்கள் விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கந்தசாமி கமலேந்திரனுக்கு ஒரு உண்மை தெரிந்திருக்க வேண்டும். இது பனிப்போரா இல்லை சூரன் போரா என யார் துயரடையப் போகிறார்கள். இதில் ஊடக அறிக்கை ஒரு கேடா? பனிப் போர் நடக்கிறதோ இல்லையோ ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போர் நடக்கிறது என்பதை வடக்குத் தேர்த…

  20. நியுயோர்க்கில் ராஜபக்சவை சந்திக்காதது ஏன்? - மன்மோகன்சிங் விளக்கம் [ புதன்கிழமை, 02 ஒக்ரோபர் 2013, 01:07 GMT ] [ தா.அருணாசலம் ] ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்காக நியுயோர்க் சென்றிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்காதது ஏன் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கமளித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு புதுடெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவரிடம், தங்களைச் சந்திக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் ராஜபக்ச விரும்பியதாகவும், அந்த சந்திப்பை தாங்கள் தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்ப…

  21. கொக்குத் தொடுவாய் காணி அபகரிப்பை விரைவில் தடுத்துநிறுத்த வேண்டும்.. மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 02 அக்டோபர் 2013 கொக்குத்தொடுவாய் கோட்டைக் கேணி பிள்ளையார் கோயில் அருகில்; நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பிரதேசத்திற்கு நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கொக்குத் தொடுவாய் பிரதேசம் அமைந்துள்ளது. இதன் கரையோர எல்லைப் பகுதியில் கோட்டைக் கேணி பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் காணிகள் 1973 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு உப உணவுப் பயிர்…

  22. திருகோணமலை தமிழ்க் கிராமங்களில் படையினா் தமிழா்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்துகின்றனா் 02 அக்டோபர் 2013 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி உட்பட பல தமிழ்க் கிராமங்களில் படையினா் தமிழா்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்துவதாக முறையிடப்பட்டுள்ளது. வடமாகாண சபைத் தோ்தல் முடிவடைந்த நாள் முதல் இந்த நடவடிக்கை தொடருவதாகவும் கிழக்கிலும் தமிழா்கள் ஆட்சி செலுத்த முடியாது என கூறி வருவதாகவும் கூறப்படுகின்றது. இளைஞா்இ யுவதிகளிடம் விசாரணை நடத்துவதாகவும் இரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்று குடும்ப விபரங்களை கேட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இது தொடா்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பாதிக்கப்பட்ட ஒருவா் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. http://www.globalta…

  23. இலங்கையில் சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் அக்டோபர் முதலாம் தேதியான நேற்றைய தினம் சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்புரியச் சென்றிருந்த தனது தாயை மீட்டுத்தருமாறு 7வயது சிறுவனொருவன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவனை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும தியாகராசா அனுலக்ஷன் என்ற இந்தச் சிறுவன் தன்னை பராமரித்து வரும் பாட்டியுடன் சென்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியத்தின் கல்முனை பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரியிடம் இது தொடர்பான எழுத்து மூல மனுவொன்றையும் கையளித்துள்ளார். 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி இவரது தாயாரான தியாகராசா சுகந்தினி (வயது 29) சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் பணிப்…

  24. இனிமேல் தேர்தல்கள் நடக்கும்போது தனது கட்டளையை செயற்படுத்தவல்ல தனி பொலிஸ் அணியை தான் கொண்டிருப்பேன் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் சமயத்தில் தனது கட்டுப்பாட்டில் பொலிஸ் அணியை வைத்திருக்கும் ஆற்றலை ஆணையாளர் வெளிப்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதியான சுனில் வட்டகல இந்த சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளார். எதிர்கால தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தனியான பொறிமுறையை ஏற்படுத்த போவதாகவும் மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்துள்ளார். சில அரச நிறுவன அதிகாரிகள் வாகனங்களை வாட…

  25. Published on October 1, 2013-6:40 pm · No Comments நுணல் என்பது ஒருவகைத் தவளை. வயல்வெளிகளில், தவளைகள் வழக்கமாக் கால்வாய்களில் ஓடும். சிறிய வாய்களைக் கொண்ட குழிகளில், ஓட்டைகளில், பள்ளங்களில் அந்தத் தவளைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகள் இரை தேடி அங்கே வரும். தவளைகள் என்றால் பாம்புகளுக்கு நல்ல விருப்பம். நுணல் என்ற தவளை வகை ” குவா, குவா” என்று கத்தும். அப்படிக் கத்தும்போது, இரவில் இரை தேடி வரும் பாம்புகளுக்கு அவை இருக்கும் இடம் தெரிந்து விடும். அதனால் அந்த நுணல்கள் மாட்டிக்கொள்ளும். பாம்புகள் அவற்றை விழுங்கி விடும். இதுதான் “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழி பிறப்பதற்குக் காரணமாக இருந்தது. கவிஞர் காசி ஆனந்தன் அவர்கட்கு என்ன நடந்ததோ தெரியாது. வாகை தொலைக் கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.