Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 5 என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303681

  2. வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள் : தமிழ் மக்களுக்கு நாமல் எச்சரிக்கை! வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும், ஆரம்பம் முதலே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த…

  3. Published By: DIGITAL DESK 7 13 JUN, 2024 | 11:02 AM கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழிய…

  4. 13 JUN, 2024 | 07:12 AM இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/185965

  5. யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்! யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் குறித்த கும்பல் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலிஇ பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றையதினம் (வியாழக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறைக் கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டியை அடித்து உடைத்து, வீட்டின் வரவேற்…

  6. Published By: VISHNU 13 JUN, 2024 | 04:34 AM (இராஜதுரை ஹஷான்) தமிழர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவார். 13 ஆவது திருத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஆகவே தேசியம் தொடர்பாக பெரும்பான்மையினத்தவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  7. Published By: VISHNU 13 JUN, 2024 | 02:58 AM வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16பேர் 8 படகுகளுடன் 12 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல், ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர் கட்டைக்காட்டிலிருந்து 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை 12 ஆம் திகதி புதன்கிழமை காலை…

  8. Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 12:50 PM அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர். மேலும் இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களில…

  9. (இராஜதுரை ஹஷான்) நாட்டில் கணினி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வயது மற்றும் தொழிற்றுறை முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணினி அறிவு தொடர்பில் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஆண்களின் கணினி அறிவு 40.9 சதவீதமாகவும், பெண்களின் கணினி அறிவு 37.2 சதவீதத்தா…

  10. 12 JUN, 2024 | 05:06 PM இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த…

  11. 12 JUN, 2024 | 05:24 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) சித்தார்த்தன் எம்.பி.,யின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஒன்றரை மணிநேரத்துக்கும் மேல…

  12. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும், அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வை நடைமுறைப்படுத்து, அதிபர் ஆசிரியர்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை வழங்கு, மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நாடாளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட…

  13. 12 JUN, 2024 | 12:44 PM யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவர் இன்று புதன்கிழமை (12) அதிகாலை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று இவரை மோதியுள்ளது. இதன்போது இவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்…

  14. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 03:50 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185925

  15. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 11:47 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளது. உலக பெளத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பணியகம் ஆகியன இணைந்து இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (11) நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தன. உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளையின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுரவின் தலைமையில் கொழும்பு மயூ…

  16. Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 11:42 AM போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (11) மாலை ஏழு மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர். சந்திப்பில் நல்…

  17. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:36 AM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார சீர்த்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185886

  18. இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது. இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக், சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை கடன் மறுசீரமைப்பில் போதுமான மற்றும் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும்,…

  19. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:26 AM யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/185885

  20. இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025) செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://t…

  21. 12 JUN, 2024 | 11:24 AM ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை கொண்டுசென்ற அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 38 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லையென படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி கொண்டுசென்ற போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்ட வெருகல் படுகொலையின் 38வது நினைவுதினம் இன்று புதன்கிழமை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்று நாட்டில் நி…

  22. 11 JUN, 2024 | 05:37 PM திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக மலை உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன. ஆனால் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாறை உடைப்பு இயந்திரம் வேலைகளை ஆரம்பித்த போது அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று எதிர்ப்பை தெரிவித்து மலை உடைப்பு வேலைகளை தடுத்து நிறுத்தினர். …

  23. 11 JUN, 2024 | 07:11 PM மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் ஒரு குழு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் இன்று, செவ்வாய்கிழமை (11), கையளித்தது. இலங்கை குடியரசிற்க்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச உணவுத் திட்டத்தின் துணைப் பணிப்பாளர்/ ஜெரார்ட் ரெபெல்லோ மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் பின் அப்துல்லா அல்-கலாஃப் போன்றோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர் . உலக உணவுத் திட்டமானது இப்பேரீத்தம் பழங்களை 200,…

  24. 11 JUN, 2024 | 07:08 PM வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகள் எல்லையிட்டு அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர். அவர்கள் வசித்த பிரதேசம் அனைத்தும் பற்றை காடுகள் நிறைந்ததாக காணப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த பகுதியை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் வன வளத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து வனவள திணைக்களத்தினர் இன்ற…

  25. 11 JUN, 2024 | 05:35 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் சட்டவிரோத இயங்கி வந்த மாடு வெட்டும் கொல்களமொன்றை சவகச்சேரிப் பொலிஸார் முற்றுகையிட்டதுடன் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை மீட்டுள்ளனர் . இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளதுடன் மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் குறித்த சட்டவிரோதமாக இயங்கி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.