Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாணத்தை சிறந்த பூமியாக கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கில் பல துறைகளிலும் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாங்கள் கேட்டதை மக்கள் தந்து விட்டார்கள். இப்போது மக்கள் கேட்டதை நாங்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக கடுமையாக உழைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த மாபெரும் மக்கள் ஆணையை ஏற்று அந்த ஆணைக்கு ஏற்ப செயற்படுவதே இனி எங்கள் பணி எனவும் அவர் கூறினார். வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் உச்ச நீதின்ற நீதியரசரு…

  2. கூட்டமைப்பின் பெருவெற்றியின் அர்த்தம்தான் என்ன? தாமரை காருண்யன் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருக்கிறது. கிடைத்திருக்கும் வெற்றியினைக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததை விட அதிகமான பெருவெற்றி எனத்தான் கூறவேண்டும். இக் கட்டுரை எழுதப்படும்போது தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியிருக்கவில்லை. எனினும் இதுவரை வெளிவந்திருக்கும் முடிவுகளை அவதானிக்கும்போது குறைந்தது மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான ஆசனங்களை கூட்டமைப்பு தம்வசப்படுத்தும் என்பதில் ஜயம் ஏதும் இல்லை. கூட்டமைப்பின் இந்த வெற்றியினை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்துவது? இந்தப் பெருவெற்றி மாகாணசபை முறைமைக்கோ, கூட்டமைப்பின் அரசியல் பாதைக்கோ அல்லது கூட்டமைப்பின் இயங்குதிறனுக்க…

  3. காணொளி :வடக்குத் தேர்தல் வெற்றி தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9322:2013-09-22-15-29-33&catid=1:latest-news&Itemid=18

  4. தீவகத்தில் ஈ.பி.டி.பி யினர் தமது தேர்தல் தோல்வியை தாங்கமுடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள். நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் வரலாறு காணாத தேர்தலில் வரலாறு வெற்றியை பெற்று இருக்கிறது.. இதில் ஈ.பி.டி.பி படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பாக இவர்களது கோட்டை என்று மார்தட்டிக் கொண்டு திரிந்த தீவகத்தில் தோல்வி அடைந்தது குறித்து மன விரக்தியில் உள்ள ஈ.பி.டி,பி னர் புளியங்குடல் ஊர்காவற்றுறை, வேலணை ,தம்பாட்டி , சாட்டி , நாரந்தனை, போன்ற பகுதிகளில் இதுவரைக்கும் கடந்த 3 மணித்தியாலங்களுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னின்று உழைத்த 26 பேருக்கு பொல்லுத்தடிகளால் தாக்கியுள்ளனர் . இதனால் தீவாக மக்கள் பேரும் அல்லல்ப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களுக…

  5. பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்கா அரசு தமிழ்மக்களை அழித்தது இதற்கு பன்னாடுகள் துணைபுரிந்தன ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடிய இனம் பன்னாட்டிற்கு நான் தெரியப்படுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் நான் பலசாவல்களை எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ளேன் இந்தவெற்றி அனந்தியின் வெற்றியல்ல போரினால்பாதிக்கப்பட்ட இந்த மக்களின் வெற்றி இந்த மக்கள் எதற்கு அங்கிகாரம் அளித்திருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது மக்களின் பிரச்சனையினை மையப்படுத்தித்தான் நான் அரசியலுக்கு வந்தேன் பட்டம் பதவி என்பது எனக்கு தேவையில்லை மக்களுக்கான சேவையினை நான் தொடர்ந்து செய்யவுள்ளேன் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்வடமாகாணசபையில் ஒருபெண் வேட்பாளர் அனந்தி சசிதரன் இந்த கருத்தினை வெளி…

  6. வடக்கு மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகள், அரசாங்கம் நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட காண்பித்து வரும் முனைப்பை பறைசாற்றி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதனை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடைபெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சுதந்திரமான முறையில் …

  7. வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, 'இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்' என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள், மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் ந…

  8. வட மாகாணசபைத் தேர்தலின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் காலத்தில் தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்;தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் விதி மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து …

  9. "தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து தெற்கு மக்கள், தெற்கு அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்ம்" விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில விடயங்களில் அரசாங்கத்துடன் இணைந்தே தமது மாகாணசபை செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்பதன் மூலம்…

  10. இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது. இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒர…

  11. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மகிந்த நாளைய தினம் அமெரிக்கா செல்லவுள்ளார். 68வது பொதுச்சபை மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள அவர், அதில் உரையாற்றவிருப்பதாக ஊடக இணைப்பாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. மஹிந்தவின் இந்த விஜயத்தின் போது, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உடன் செல்கிறார். http://www.pathivu.com/news/27049/57//d,article_full.aspx

  12. முடிந்த வட மாகாண சபை தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. வட மாகாணசபைக்கான மொத்தமுள்ள 38 ஆசனங்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையை பெற்றுள்ளது. தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டுவிட்ட தென்றும் தமிழ் மக்களுக்கு தேவை அபிவிருத்தி மட்டுமே என்றும் இறுமாப்புடன் கூறிவந்த மகிந்த ஆட்சியாளர்களின் மகிந்த சிந்தனையையும் கோத்தபாய போர்முலாக்களையும் தாண்டி தமிழ் மக்களுடைய உரிமைக்குரல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அமோக வெற்றியடையச் செய்திருப்பதன் மூலம் தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். …

    • 3 replies
    • 1.7k views
  13. மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும் மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள – பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது குறித்தே தமிழர் தரப்பு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையும் அதன் விளைவான அவலமும் எம்மை அரசியலே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது. இதன்விளைவாக சிங்கள நிகழ்ச்சி நிரலை தெளிவாக வழி நடத்துபவர்களாக நாம் மாறியிரு…

  14. தமிழர்கள் அரிசிக்கும் பாணுக்கும் மயங்கிவிட வில்லை என்பதை வடக்கு மக்களின் வாக்களிப்பு காட்டுவதாக சிங்கள மக்கள் பலர் தெரிவித்துளு;ளனர். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு கிடைத்திருக்கிற வெற்றி சிங்கள மக்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. வடக்கு தேர்தல் குறித்து சமூக வலைத்தளஙங்கலே கருத்துத் தெரிவித்த, சிங்கள மக்கள பலர் தமிழர்கள், அரிசிக்கும் பாணுக்கும் மயங்கிவிட வில்லை என்றும் அவர்கள் தங்களது உரிமைக் குரலை துணிந்து பதிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வழமைபோல சிங்கள இனவாதிகள் தமிழர் மீது, ''நம்பிக்கை துரோகிகள்'' என்றும் வடக்குக்காக அரசாங்கம் செய்த நல்லவிடயங்களை அவர்கள் கணக்கில் எடுக்காத சந்தர்ப்பவாதிகள் என்றும் வசை பாடியுள்ளனர். http://tamilwor…

    • 0 replies
    • 473 views
  15. கிளிநொச்சியில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் திடீரென ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதால் பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் இயல்பு நிலையில் இருந்த கிளிநொச்சி பிரதேசத்தில் தற்பொழுது பதற்றம் நிலவுதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகர வீதிகளில் சைக்கிள்களில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களாக இவ்வாறான ரோந்து நடவடிக்கைகளை இராணுவத்தினர் மட்டுப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஏ-9 வீதியிலேயே குறிப்பிட்ட படையினர் காலையில் ரோந்தில் ஈடுபடுவது வழக்கம். இதேவேளை கிளிநொச்சியில் உள்ள பல கிராமங்களிலும் இராணுவத்தினர் இவ்வாறு ரோந்து நடவ…

  16. தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு பின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மாகாண சபை சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. நாம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம். இது அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து கொள்ளபோகிறோம் என்று அர்த்தமல்ல. மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட பல எதிர்கால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய பின்னர் புதிய மாகாண சபை பதவ…

  17. இக்கட்டுரை வாசிக்கப்படும்போது தேர்தல் முடிவுகள் அநேகமாகக் கிடைத்திருக்கும். கூட்டமைப்பிற்கே வெற்றி கிடைக்கும் என்ற எடுகோளின் மீதே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. அப்படியொரு வெற்றி கிடைத்தால் தாங்கள் இரண்டு தளங்களில் போராடப் போவதாக அவர்கள் வாக்குறுதியளித்திருக்கின்றார்கள். முதல் தளம் உள்நாட்டில், ஆளுநரின் அதிகாரங்களிற்கு எதிரானது என்றும், மற்றைய தளம் அனைத்துலக அரங்கில் ஒரு ராஜதந்திரப் போர் என்றும் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறார்கள். ராஜதந்திரப் போர் என்பதை கூட்டமைப்பு ஒரு பிரசார உத்தியாகப் பாவிக்கின்றதா? இல்லையா என்பது பற்றி உரையாடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, இப்பொழுது தமிழ் அரசியலைப் பொறுத்த வரை ராஜதந்திர வழிமுறைக்குள்ள முக்கியத்துவம் பற்றி உரையாடுவ…

  18. கிளிநொச்சியில் இராணுவத்தினர் திடீரென ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். தேர்தல் முடிவடைந்த பின்னர் சற்று இயல்புக்குத் திரும்பிய கிளிநொச்சி தற்பொழுது பதட்டத்துடன் உள்ளது. கிளிநொச்சி நகர வீதிகளில் சைக்கில்களில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களாக இவ்வாறான ரோந்து நடவடிக்கைகளை இராணுவத்தினர் மட்டுப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஏ-9 வீதியிலேயே குறிப்பிட்ட படையினர் காலையில் ரோந்தில் ஈடுபடுவது வழக்கம். இதேவேளை கிளிநொச்சியில் உள்ள பல கிராமங்களிலும் இராணுவத்தினர் இவ்வாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் கிரா…

  19. - வைகோ இலங்கையில் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள் சிங்கள அராஜக அரசுக்கு எதிரான தமிழ் மக்கள் தீர்ப்பு ஆனால், மாகாண சபை ஈழத் தமிழர்களுக்கு தீர்வைத் தராது என வைகோ தொிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கை வருமாறு: இலங்கையில் நேற்றைய தினம் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில், 28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது. கொலைகார ராஜபக்சே கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் 4 இடங்கள், முல்லைத் தீவில் 4 இடங்கள், வவுனியாவில் 4 இடங்கள், கிளிநொச்சியில் 3 இடங்கள், மன்னாரில் 3 இடங்கள் ஆக 28 தொ…

  20. இலங்கையில் நேற்று இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இலங்கையைப் பாராட்டுகின்றோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; தேர்தல்கள் இடம்பெற்ற மூன்று மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றமையானது ஜனநாயக நடைமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். தேர்தல் வன்முறைகள் தொடர்பில் தொடர்ந்தும் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம். அதேவேளையில் வெவ்வேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்கள…

  21. வட மாகாண சபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபைக்கான கூட்டங்கள் நடத்துவதற்க்கான இடங்கள் எதுவம் இதுவரை தெரிவு செய்யப்படாத நிலமையே காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபை 1990 ம்ஆண்டு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருகோணாமலை மாவட்டத்தில் ஆளுனரின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு கிழக்கு மாகாண சபை தனிமனித முடிவுகளின் அடிப்படையில் இயங்கி வந்தது. 2007ம்ஆண்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டபோதிலும் கூட வட மாகாண சபை யாழ் மாவட்டத்திற்க்கு மாற்றப்பட்டு தினைக்களங்கள் யாவும் தனியார் இல்லங்களில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் வட மாகாண ஆளுனரின் வதிவிடம் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டப்பட்டதுடன் கொழும்பிலும் கூட விடுதி அமைக்கப்பட்…

  22. சிறீலங்கா கடற்படையினரால் மன்னார் கடற்பரப்பிற்குள் பிரவேசித்ததாக தெரிவித்த நான்கு படகுகளும் 20 தமிழக கடற்தொழிலாளர்களையும் கைதுசெய்துள்ளார்கள். இராமேஸ்வரம் பாம்பன் பகுதியினை சேர்ந்த குறித்த தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை குறித்த பகுதிக்கு சென்ற சிறீலங்கா கடற்படையினரல் அவர்களை கைதுசெய்துள்ளார்கள் கைதுசெய்யப்ப்ட அனைவரையும் தலைமன்னார் காவல்துறையிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளார்கள். http://www.sankathi24.com/news/33482/64/20/d,fullart.aspx

  23. காணொளி : வடக்குத் தேர்தலின் வெற்றி பற்றி தந்தித் தொலைக்காட்சியின் பெட்டகம் காணொளி.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9321:2013-09-22-13-09-08&catid=1:latest-news&Itemid=18

  24. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிற…

  25. வடமேல் மாகாணசபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வடமேல் மாகாணத்தின் குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 705188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 34 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 257011 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 12 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயகக்கட்சி மொத்தமாக 46114 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, 3 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மொத்தமாக 27860 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜே.வி.பி. மொத்தமாக 19624 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, ஒரு ஆசன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.