Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த இரு வாரங்களாக வட மாகாணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் மேடைப் பேச்சில் இருந்து வரும் வார்த்தைகளை கேட்கும் போது மக்களாகிய எமக்கு பஞ்சாமிர்தம் உண்ணுகின்றோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடந்த சில வாரங்களாக, எமது தேசியத் தலைவர் ஒரு மாவீரன் மற்றும் புலிகள் அமைப்பின் தியாகங்களை பற்றி மேடைகளில் பேசும் போது மக்களாகிய எமக்கு மெய்சிலிர்ந்து ஆனந்த கண்ணீர் வரவைத்தார்கள். ஆனால் இது வாக்குகள் எடுப்பதற்கு மட்டும்மான அரசியல் தந்திரமாக இருந்தால் மக்களாகிய எமக்கு பெரும் ஏமாற்றம்மாக இருக்கும். புலிகள் அமைப்பின் தியாகங்களும் மற்றும் மக்களின் தியாகங்களிற்கும் பின் தான் இந்த மேற்குலகத்திற்கு தமிழ் மக்களின் …

  2. நேர்மையுடனும் – துணிச்சலுடனும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் வீர நடைபோட்ட ஒரு ஊடகப் போராளி பிரியந்த இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான்.பொழியப்பட்ட விமானக் குண்டுகள் மத்தியிலும் வந்துவிழுந்து வெடித்துச் சிதறிய எறிகணைகள் மத்தியிலும் கூடாரச் சேலைகளை கிழித்துப் பாய்ந்த தொலைதூரவேட்டுக்கள் நடுவிலும் நின்று விடுதலைக்குரலை ஒலித்தவன் அவன்; புலிகளின்குரல் வானொலியின் சிங்கள சேவையின் கட்டுப்பாட்டாளராகவும் பிரதம ஒலிபரப்பாளனாகவும் கடமையாற்றியவன் அவன். செய்தி வாசிப்பாளன், நிகழ்ச்சித் தயாரிப்பாளன், நாடக இயக்குநர், நடிகன் எனப் பல முனைகளில் வானொலிப் பணியாற்றிவன். நெருப்பின் நடுவில் நின்ற போதும் விடுதலைக் குரலை சிங்கள மக்களின் செவிகளுக்கு எடுத்துச் சென்றவன் இவன். எங்கள் உரிமைப்…

  3. இனஅழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் பெருந்திரளாக திரண்ட மக்கள் ஈகைபேரொளி செந்தில்குமரனுக்கு வணக்கம் செலுதியதுடன் பேராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும் என்னும் தலைவர் பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு இணங்க பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா முன்றலில் இன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றனர். கடும் மழையினையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். அண்மையில் ஜெனீவா முன்றலில் தன்னுடலை தீக்கிரையாக…

  4. இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதற்காக இலங்கையில் பிறந்த ரிமோன் டயஸ் என்பவருக்கு நேர்மையான செய்தியிடல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பற்றி ஒரு பக்கச் சார்பாக பாதகமாக எழுதப்படும் செய்திகளை கண்காணிக்கும் ஊடக கண்காணிப்பு அமைப்பு, இந்த வருடத்திற்கான 2,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பினாங் பெல்ட் விருதை இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த ரிமோன் டயஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது பரிசு பெரும் கட்டுரைகள் ஜெருஸலம் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/82707-2013-09-16-13-56-50.html

  5. வட மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் சூடு பிடித்துள்ள இன்றைய தினத்தில் பலவேறு விதமான செய்திகள் தினமும் வந்து கொண்டிருப்பினும் கூட உண்மையில் ஊரில் என்ன நடக்கிறது. வெற்றி பெறப்போவது யார் என்பது உள்ளிட்ட கேள்விகளை முன் வைத்து கனடிய பல்கலாச்சார வானொலி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் நடராஜா ஆனந்தராஜ் அவர்களிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முழு விபரமும் இங்கே. நேர் கண்டவர் : கந்தசாமி கங்காதரன். வட மாகாண சபைத் தேர்தல் நடக்க இருக்கின்ற சூழ்நிலையில் நகர சபைத் தலைவராக நீங்கள் இருந்து கொண்டிருக்கின்ற வல்வெட்டித்துறை பகுதியிலும் , சுற்று வட்டாரங்களிலும் எப்படி கள நிலவரம் இருக்கின்றது என்று பகிர்ந்து கொள்ள முடியுமா? வல்வெட்டித்துறையினைப் பொறுத்த வரையிலே தமி…

  6. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக மக்களை உந்துவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். "வட மாகாணசபைத் தேர்தலும் புலம்பெயர் மக்களின் நிலைப்பாடும்" எனும் தொனிப்பொருளில் சுவிஸில் இடம்பெற்றிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றிலேயே காணொளிப் பரிவர்த்தனையூடாக இவ்வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். தாயகத்தில் உள்ள உறவுகளை தொடர்பு கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு அவர்களை தூண்டுமாறு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை காணொளிப் பதிவின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்…

  7. புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா. டெல்லி: ஒரு தனியார் தொலைகாட்சி தொடரில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என வலியுறுத்தப்பட்டது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேபாளத்தை சேர்ந்த பலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர். கவுதம புத்தர், கி.மு.563 ஆம் ஆண்டு நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். இந்த நிலையில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என்று தனியார் தொலைக்காட்சி கூறியது. அதே சமயம், புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உ…

  8. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் ஒருவர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். ஒலிபெருக்கியின் மூலம் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது எனவும் அவ்வாறு செயற்பட்டமையினாலேயே கைது செய்யப்பட்டார் எனவும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 463 views
  9. அடுத்தமாதம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், சிறிலங்கா அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் நொவம்பர் மாதம், கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பதற்கு, சிறிலங்காவிடம் மூன்று நிபந்தனைகள் குறித்து அழுத்தம் கொடுக்க புதுடெல்லி தயாராகி வருகிறது. அடுத்தமாத முற்பகுதியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான, உயர்மட்டக் குழு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின்போது, சிறிலங்கா அரசாங்கத்திடம், சல்மான் குர்ஷித் இந்த மூன்று நிபந்தனைகளையும் வாய்மொழியாகத் தெரிவிப்பார் என்று …

  10. -சுமித்தி தங்கராசா நடைபெறவுள்ள தேர்தலில் வன்முறை மூலம் வெற்றி அடைய வேண்டிய தேவை எமக்கில்லை. தேர்தலில் நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிக்கே மதிப்பு இருக்கின்றது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பிரதேசவாத மற்றும் இனவாத சக்திகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என்றும் அவர்; கேட்டுக்கொண்டார். யாழ். தொழில்நுட்ப வளாகத்தில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'யாழ்ப்பாணத்தில் வாழும் எனது அன்புக்குரிய நண்பர்களே! உங்கள் தாய்மொழி மூலம் உங்களுடன் உரையாட முடியாததற்கு வெட்கப்படுகின்றேன். கவலைப்படுகின்றேன்…

  11. இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவர…

  12. புத்தளம், நுரைச்சோலையில், நவ சம சமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார். வடமேல் மாகாணசபைத் தேர்தலில், தேசிய ஐக்கிய முன்னணியின் கீழ் போட்டியிடும் தமது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக, துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், புத்தளம் மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் மருத்துவர் பெரொஸ் காயமடைந்துள்ளார். அரசாங்க தரப்பு குண்டர்களே தம்மீதும், தமது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20130916109056

  13. -எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார். பிரித்தானிய மகாராணி எலிஸெபத்தின் பிரதிநிதியாக இலங்கை வரும் சார்ள்ஸ், மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரித்தானிய இளவரசரின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பில் ஆராயும் விசேட மாநாடொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் தலைமையிலான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டு பிரதிநிதிகள் குழவினர் கலந்துகொண்டனர். இந்த குழுவினர் ம…

  14. 2006 - 2008 காலப்பகுதியில் ஆழ்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா முழுமையான உதவிகளை வழங்கியது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "தி ஒஸ்ரேலியன்" நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "இலங்கை கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க முடிந்தது போரில் ஒரு திருப்பமாக அமைந்தது. 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் இத்தகைய 12 மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை அழித்திருந்தோம். அமெரிக்கர்கள் எமக்கு மிகமிக உதவியாக இருந்தனர். பெரும்பாலான இந்தக் கப்பல்களின் இருப்பிடம் குறித்து அமெரிக்கர்களே எமக்குத் தகவல் தந்தனர். விடுதலைப் புலிகள் பெரும்பாலான ஆயுதங்களை வெளி…

    • 48 replies
    • 4.8k views
  15. சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பெண் புலிகளை இழிவுபடுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான சிவகாமி 13.09.2013 அன்று இரவு 9 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரன் ஆதாரமற்ற தகவல்களை இதுபோன்ற நேரலை நிகழ்ச்சிகளில் சொல்லக் கூடாது என்கிறார். உடன் விவாதத்தில் பங்கு கொண்ட வழக்குரைஞர் அருள்மொழி, திலகவதி ஐ.பி.எஸ், ஆகியோரும் கடும் எதிர…

  16. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திலலேயே நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் வட மாகாண சபை தேர்தலுக்கான பிரசார பணிகளில் ஜனாதிபதி நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டார். இதன்பின்னர் இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு கே.பியை சந்தித்து கலந்துரையாடியதுடன் செஞ்சோல…

  17. புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் சமசமாஜக் கட்சியின் தலவரான கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது இவர் மீதும் இவரது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இனந்தெரியாத குழுவொன்றே இவர்களைத் தாக்கினர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B…

  18. “நாங்கள் எங்கள் மக்களின் விடிவுக்காக எங்கள் மக்களின் இலட்சியப் பணிக்காக அவை கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கிளிநொச்சி ஜெயபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், போராட்டம் என்பது ஆயுதத்தை எடுத்துச் சுடுவது மட்டுமல்ல. அந்தப் பணிக்கு நாங்கள் உங்களை அழைக்கவில்லை. அகிம்சை ரீதியாக இராஜ தந்திர ரீதியாக சர்வதேசத்தின் மனச் சாட்சிகளை உலுக்கி எங்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு பணியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். இந்தப் பணிக்கு உங்களிடம் நாங்கள் ஆணை கேட்கிறோம். வடக்கு மாகாண சபைய…

    • 0 replies
    • 446 views
  19. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக பணியாற்றிய கனபதிப்பிள்ளை ஏகாம்பரம், அந்தக் கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளார். இதனைக் கீழே காணலாம் http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 555 views
  20. “இந்த மண்ணிலே நாங்கள் ஒரு சமஸ்டி அமைப்போடு வாழ விரும்புகிறோம். அதை இந்த சிங்களம் தரத் தவறினால் மீண்டும் ஒரு இடி இடிக்கும். அது சாத்வீகப் போராக வெடிக்கும். அப்போரில் நாங்கள் வெல்வோம்” என கிளிநொச்சி அம்பாள்குளம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் பசுபதிப்பிள்ளை சூளுரைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் மாலை 4 மணியளவில் மங்கள விளக்கேற்றல், உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே வேட்பாளர் பசுபதிப்பிள்ளை இதனைத் தெரிவித்தார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உற…

  21. தமிழரும் சிங்களவரும் கணவன் - மனைவி உறவு போன்றவர்கள் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. த ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது. எனினும் த ஹி…

    • 2 replies
    • 971 views
  22. ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானித்தவர் செல்வா அவர்கள்தான். தமிழ் நாடு இதனை முடிவுசெய்யவில்லை என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள…

  23. -ஏ.எச்.ஏ. ஹுஸைன் கிளிநொச்சி புகையிரத கடவையில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து போக்குவரத்து பொலிஸாரின் சாமர்த்தியத்தினால் தவிர்க்கப்பட்டது. கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள கனகபுரம் ரயில் கடவையிலேயே இந்த அனர்த்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்தது. ரயில் வருவதற்கான சமிக்ஞை காண்பிக்கப்பட்டு கடவையும் 'தடுப்பு – STOP' மூடப்பட்டது. அதனை கவனத்தில் கொள்ளாத பயணிகளோ அந்த தடுப்புகளுக்கு இடையில் தங்களுடைய வாகனங்களுடன் ஒரேடியாக சென்றுள்ளனர். இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸார். விரைந்து செயற்பட்டு தடுப்பை மீறி செல்பவர்களை தடுத்துநிறுத்தினர். இதனையடுத்தே ரயில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளது. http://tamil.dailymir…

  24. திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சுவீகரித்து விகாரை அமைக்கவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் படை முகாம்களை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புல்மோட்டைப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் இதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள 13 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அரிசிமலை, பொன்மலைக்குடா, கொக்கிளாய், வீதிப் பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான காணிகளை தொல் பொருள் ஆய்வு, விகாரை அமைத்தல், படைமுகாம் விஸ்தரித்தல், பூஜாபூமி வேலைத் திட்டம் ஆகியவற்றைக் காரணங்காட்டி சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை சுவீகரிக்கும் நோக்கில் நில…

  25. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினருமே சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ளது அதனால் அது பற்றி பேசுவது பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்பட்டால் புலிகளக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் அரசாங்த்திற்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்துமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளினால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.