Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஏராளமான விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக அறியப்படுகிறது, மேலும் பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட புகைப்படம் வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகிறன என்றார். பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த இரண்டு வருடங…

  2. 09 JUN, 2024 | 11:20 AM (நமது நிருபர்) தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நீதிவான் நீதிமன்ற கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளையும் அவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் எனும் குற்றத்துக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் 21.11.2022 அன்று வழங்கிய கட்டளைகளினால் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யும் கட்டளைகள் வழங்கியிருந்ததுடன் அதன் அடிப்படையில் இந்த படகுகள் மயிலிட்டி துறைமுகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. இக்கட்டளைகளுக்கு எதிராக யாழ்ப்பாண மேல் நீதிம…

  3. இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் – அமெரிக்க சிறப்புத் தூதுவர்! நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன்(julie chang) இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான (US United States Ambassador-at-Large for Global Criminal Justice) சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் (Beth Van Schaack) தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் இல…

  4. பாடையில் ஏற்றப்பட்ட பட்டங்கள்- யாழ். வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்! பல்கலைக்கழகத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற பட்டத்தை பிரேதப்பெட்டியில் ஏற்றி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது …

  5. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரு வருடங்களுக்கு நீட்டிப்பதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதனடிப்படையில் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பதவிக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பெரும்பாலான அமைச்சர்கள் அதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு இணக்கம் தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களிலில் பேசப்படுகிறது. அதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்வரும் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நடத்த அரசாங்கம் தி…

  6. தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தயாரிப்பு (ஆதவன்) தமிழ்த் தேசிய இருப்புக்காக, ஐந்து அம்ச யோசனைகளைக் கொண்ட மூலோபாயக் கொள்கை மற்றும் செயற்றிட்ட வரைவைத் தயாரிக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினர் தெரிவித்ததாவது:- * தமிழர் தாயகத்தில் தமிழர் குடிப்பரம்பலை நிலைநிறுத்தலும், பிறப்பு வீதத்தை அதிகரித்தலும், அனைத்துத் தமிழர் கல்வி அடைவுமட்ட உயர்த்தலும் * தாயகக் கிராமங்களில் விஞ்ஞானத்துறை ஆசிரிய வளத்தை அதிகரித்தலும், வளப் பங்கீட்டை உறு திப்படுத்தலும் * தமிழர் பிரதேசங்களில் சுகா தார மருத்துவ சேவைகளை மேம்படுத்தலு…

  7. கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது adminJune 9, 2024 கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்று, போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற நபர் ஒருவர் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றினை பெற்று குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் போலி நாணய தாள்களை அச்சி…

  8. 08 JUN, 2024 | 05:39 PM சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்புக்குள் சென்று, இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அவ்வாறான மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் விடுவிக்கப்பட்டு, நாடு திரும்ப நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா சந்துரு தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (8) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்…

  9. Published By: VISHNU 08 JUN, 2024 | 09:40 PM யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை - 2024" இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது . யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணம், சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, சென்று பொது நூலக முன்பாக நிறைவடைந்தது. சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/185624

  10. 08 JUN, 2024 | 03:51 PM திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய நிலையில் இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜே.எஸ்.அருள்ராஜ் கடந்த வாரம் கடமைகளை வட மாகாண சுகாதார அமைச்சில் பொறுப்பேற்றார். 2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குள் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் பிரவேசித்த இவர் கிண்ணியா உதவி பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மற்றும் சிறிது காலம் திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். https://www.virakesari.lk/article/185593

  11. வர்த்தக பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளினூடாக முதலீட்டுச் சூழலை மேம்படுத்த இலங்கைக்கு உதவுகிறது USAID 08 JUN, 2024 | 11:42 AM சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக வர்த்தக பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளுக்கான (ADR) அணுகலை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது. அமெரிக்க அனுசரணையுடன் இலங்கையிலுள்ள 23 சர்வதேச வர்த்தக மத்தியஸ்தர்கள் பயிற்சியினையும் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்வதற்கு இம்முன்முயற்சி வழிவகுத்துள்ளது. கடந்த மே 29ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஒரு வைபவத்தில், கைகுலுக்கி…

  12. Published By: DIGITAL DESK 3 08 JUN, 2024 | 03:26 PM கண்டி, கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஹரிவதனி” என்ற உயர்தர மாணவி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் (+94 78 171 3389 டிலாந்தினி) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185607

  13. விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது. விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் புதையல் தேடியவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளத…

  14. யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு. க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மாணவி கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் க…

  15. மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் : வெளிநாட்டவர்கள் பங்கேற்பு. இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது. ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு …

  16. Published By: VISHNU 08 JUN, 2024 | 07:51 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மெராெபெனம் தடுப்பூசி போதுமானளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் அவரச கொள்முதல் முறையின் மூலம் 4 இலட்சித்தி 50ஆயிரம் தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்…

  17. Published By: VISHNU 07 JUN, 2024 | 08:23 PM 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 4 பில்லியன் டொலர் கடன்களை பெற்று அரச கடன்களை 100 பில்லியன் டொலர்களாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. சர்வதேச கடன் மறுசீரமைப்பு என்பது கானல் நீராகவே காணப்படுகிறது எனத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன்வைத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.சர்வதேச ந…

  18. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் ஏன் தமிழர்களுக்குத் தீர்வு தர முடியாது? : சாணக்கியன்! தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் தமிழர்களுக்கான தீர்வொன்றை முன்வைக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்பட இல்லை. தொடர்ந்தும் …

  19. புலம்பெயர் தமிழர்களிடம் மோசடி பிரபாகரன் சகோதரர் குற்றச்சாட்டு UPDATED : ஜூன் 07, 2024 01:45 AM கொழும்பு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக கூறி, புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடப்பதாக, பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் தனி நாடு கேட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், 2009ல் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இருப்பினும், பிரபாகரன் உள்ளிட்டோர் உயிருடன் இருப்பதாக அவ்வப்போது த…

  20. Published By: VISHNU 07 JUN, 2024 | 09:42 PM பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185574

  21. 07 JUN, 2024 | 06:29 PM முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலக நிதி அனுசரணையில் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையம் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலை பெருமாள்கட்டு கிராம சேவகர் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (7) காலை திறந்துவைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இப்பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்தார். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் க. அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் உள்ளிட்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர். …

  22. 07 JUN, 2024 | 06:14 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் "எரிக் வாஸ்" (Eric Walsh) இந்துசமயத் தலைவர்களை இன்று வெள்ளிக்கிழமை (07) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோருடன் நாட்டின் இன்றைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடினார். நல்லை ஆதீன முதல்வர் கனடா நாட்டில் வாழும் எம்மக்களைக் கௌரவமாக அங்கு வழிநடத்துவதற்கு நன்றி கூறினார். மேலும், இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய மூவரும் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்ப…

  23. இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்! இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்து. 1989ஆம் ஆண்டு வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாகவே குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அஞ்சலியின் பின் கருத்து தெரிவிக்கையில்,…

  24. 4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, குறித்த 45 வயதுடைய நபர் ஒருவரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…

  25. வெளிநாட்டு மோகம்: ஏமாற்றப்படும் யாழ் இளைஞர்கள்! யாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கிராமப்புற இளைஞர்களை இலக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்…

      • Sad
      • Like
    • 1 reply
    • 290 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.