ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
சிறிலங்காவில் இடம்பெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் பங்கெடுத்துக் கொள்ள இருப்பதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி பிரித்தானியா வாழ் தமிழர்களை வைத்துள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து வேட்டையொன்றில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இக் கையெழுத்து வேட்டை கடந்த ஓரு மாத காலத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடா…
-
- 1 reply
- 282 views
-
-
சீனாவின் முக்கிய அரசியல் பிரமுகரான லியு யுன்ஷான் நாளை தினம் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிறிலங்கா வரும் இவர் பிரதமர் தி. மு. ஜயரத்ன மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். மேலும் பிரதமர் தி. மு. ஜயரத்ன முன்னிலையில் சீனா - சிறிலங்கா தொடர்பிலான பல ஒப்பந்தங்கள் கைச் சாத்திடப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இவர் திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கட்டடத் தொகுதி, சுதந்திர சதுக்கம், பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்படத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிடவுள்ளார். இவர் சீன அரசி…
-
- 0 replies
- 293 views
-
-
சுவிஸ் ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முறிந்த நாற்காலி அருகே ஒருவர் தீக்குளித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணிளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீக்குழித்தவர் அருகில் தமிழீழத் தேசியத் தலைவரது படம் இருந்தாகவும் கால்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன. தீக்குளித்தவர் எரிகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். http://goldtamil.com/?p=8081
-
- 28 replies
- 2.8k views
-
-
விடுதலைப் புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருவது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான ஆட்சி முறையாகும். ஆகவே தமிழர்களின் நியாயப்பூர்வமான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு சமஷ்டி முறைமையிலான தீர்வை அரசாங்கம் வழங்காது பிரிவினை வாதத்தை ஒழிக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது அடிமைகளாக்கி அழித்து விட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் பலரும் அரசாங்கத்திற்குள் செயற்படுகின்றனர். இதற்காகவே மீண்டும் விடுதலைப் புலிகள் தொடர்பான பேச்சும் தனி ஈழப் பிரசாரமும் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றது. இது ஏற்புடைய விடயமல்ல என்றும்…
-
- 0 replies
- 268 views
-
-
கெல்லம் மெக்ரே வெளியிட்டுள்ள தகவல் முற்று முழுதான பொய் என்கிறார் சவேந்திர சில்வா : 07 செப்டம்பர் 2013 70 ஆயிரம் பொதுமக்கள் இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்டதாக செனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரே வெளியிட்டுள்ள தகவல் முற்று முழுதான பொய்யான தகவல் என்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மெக்ரே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார். முன்னர் 40 ஆயிரம் என கூறினார். தற்போது அந்த எண்ணிக்கையுடன் மேலும் 30 ஆயிரத்தை சேர்த்துள்ளார். மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 09 ஆம் திகதி தனது வாய்மொழிமூலமான அறிக்கையை முன்வைதற்கு முன்னர் இப்படியான பொய்களை அவர் உலகத்திற்கு கூறிவருகிறார் என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். அதேவேள…
-
- 1 reply
- 663 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணிக்குமாறு GTF கோரிக்கை 07 செப்டம்பர் 2013 இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணிக்குமாறு உலகத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமர்வுகளில் உலகத் தலைவர்கள் பங்கேற்றால் அது பொதுநலவாய கொள்கைகள் கோட்பாடுகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தக் கூடுமென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய இமானுவல் பிதா சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பிலான கடிதமொன்றும் உலகத் தலைவர்களுகு;கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய கொள்கைகளான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உதாசீனம் செய்வதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் பலம் பொருந்திய நபர்களான முன்னா…
-
- 0 replies
- 458 views
-
-
தேர்தல் விஞ்ஞாபனத்தை தெற்கு அரசியல் தலைமைகள் விமர்சனம் செய்யக் கூடாது – சம்பந்தன் 07 செப்டம்பர் 2013 நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தெற்கு அரசியல் தலைமைகள் விமர்சனம் செய்யக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை சில தெற்கு அரசியல் தலைமைகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சிறுபான்மை மக்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் விஞ்ஞாபனத…
-
- 0 replies
- 347 views
-
-
கடும்போக்குவாதம் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – கோதபாய ராஜபக்ஷ 07 செப்டம்பர் 2013 கடும்போக்குவாதம் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கைக்கு மட்டுமன்றில் பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுக்கும் கடும்போக்குவாதம் பாரியளவில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் கடும்போக்குவாதம் குறித்த அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ஹக்கீம் கள நிலைமைகளை அறிந்து கொள்ளாது, கண்மூடித் தனமாக கருத்து வ…
-
- 0 replies
- 285 views
-
-
ஐ.நாவிற்கும் இலங்கைக்குமான ராஜதந்தரப் போர் தொடர்கிறது 07 செப்டம்பர் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பான தனது வாய்மொழிமூல அறிக்கையை நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் முன்வைக்க உள்ளார். இந்த அறிக்கை முன்வைக்கப்பட்ட பின்னர், கூட்டத் தொடரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க இலங்கை இம்முறை விசேட பிரதிநிதிகளை அங்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து ராஜதந்திர தரப்பில் தற்போது பேசப்பட்டு வருகிறது. ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் மாத்திரமே கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளனர். …
-
- 0 replies
- 510 views
-
-
இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக சட்டத்தரணிகள் சவால் 07 செப்டம்பர் 2013 நாட்டின் எந்தவொரு மாவட்டத்திலும் இராணுவத்தை நிலை நிறுத்துவது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக சட்டத்தரணிகள் வழக்குத் தொடர உள்ளனர். நாட்டின் எந்தவொரு மாவட்டத்திலும் இராணுவத்தினரை நிலைநிறுத்தக் கூடிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் வழக்குத் தொடரப்பபட உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் குறித்து ஆராய இரண்டு பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரவித்த…
-
- 0 replies
- 332 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான இனவாதியென ஜே.வி.பியின் அரசியல்சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசியலமைப்பு நடைமுறையில் இல்லையெனவும், 18ஆவது அரசபைப்புத் திருத்தத்தைச் செய்து, தற்போது மகிந்த ராஜபக்ஷவின் அரசமைப்பே நடைமுறையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். காலி நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துரைத்த கே.டி.லால்காந்த, ''இலங்கையர்கள் முன்னைய காலத்தில் சமாதானமாக, சகவாழ்வுடன், ஒன்றுமையாக இருந்தனர். எனினும், கறுப்பு ஜூலையில் அதனை அழித்தொழித்து, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தினர். இவை ஈழப்போராட்டத்திற்கு காரணமாக அமைந்த…
-
- 0 replies
- 631 views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே மாதம் 19ம் நாளை தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்திருந்த, பாதுகாப்புக் கருத்தரங்கில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘போருக்குப் பிந்திய சிறிலங்கா – சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்‘ என்ற தொனிப்பொருளில் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்த்திய உரையில், “ஜனநாயக நாடு ஒன்று வெளிநாட்டு உதவிகளின்றி தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று வழிகாட்டிய நாடு சிறிலங்கா. இதற்காக பிராந்திய நாடுகள் சிறிலங்காவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளன. இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு சிறிலங்கா…
-
- 5 replies
- 608 views
-
-
செய்திகளில் இன மத அடையாளங்களை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்திகள் எழுதும் போதும் சம்பந்தப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் அல்லது சம்பவங்கள் தொடர்பிலான செய்தி பிரசுரத்தின் போது தேவையின்றி இன, மத அடையாளங்கள் வெளிப்படுத்தப்படக் கூடாது. இது தொடர்பிலான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைக்கின்றேன். சில முரண்பாடுகள் மோதல்களின் போது தேவையின்றி இன, மத அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் இன மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் இவ்வாறான இரண்டு மோதல் சம்பவங்கள் எனது தலையீட்டினால் இணக்கப்பாட்டுக் கொண்டு வரப்பட்டது என ஜனாதிபதி தெரிவித்…
-
- 8 replies
- 491 views
-
-
கொழும்பில் இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 'போருக்குப் பின் இலங்கை. சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்' என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து கடும் போக்கு தமிழ் தேசிய எதிர்ப்பாளரான ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் புலிகளை தோற்கடித்தமைக்கு இலங்கைக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை யுத்ததின் மூலம் இலங்கை அரசாங்கம் தோற்கடித்தமைக்கு…
-
- 11 replies
- 2.7k views
-
-
நியூ யோர்க் ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் கூட்டத் தொடரின் முதலாம்நாளில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் , எதிர்ப்பினை காட்டுவதற்கு வட அமெரிக்கத் தமிழர்கள் அணதிரளத் தயாராகி வருவதாக தெரியவருகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பொங்குதமிழ் என்ற முழக்கத்துடன், இந்த ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக அறியமுடிகின்றது. ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத் தொடர் வரும் செப்ரெம்பர் 24ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 4ம் நாள் வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டும் சிறிலங்கா அரசுத் தலைவருக்கு பொதுச்சபையில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், நாடுகடந்த தம…
-
- 1 reply
- 626 views
-
-
தமிழ் மக்களுக்கான அவசர அறிவித்தல் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்புகளும், கவனயீர்ப்பு நிகழ்வுகளும், வீதிமறிப்பு போரட்டங்களும், சர்வதேசமெங்கும் முன்னெடுக்கப்பட்டது. இன்று நான்கு ஆண்டுகள் கடந்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியோ, தமிழர்களுக்கான சுயநிர்ணய அரசியல் தீர்வையோ வழங்காத போதிலும் உகத்தமிழர்களின் பல்வேறுபட்ட போராட்டங்கள் காரணமாக சர்வதேச சமூகம் தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்றன. இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடும் பேரெழுச்சியோடும் உலகத்தமிழினம் கவனயீ…
-
- 1 reply
- 481 views
-
-
இலங்கைத்தீவுக்கு பயணம் செய்திருந்த பிரென்சு செனற்சபை உறுப்பினரான Nathalie Goulet அவர்கள் , சிறிலங்காவுக்கு இராணுவத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்- மக்கள் பிரதிநிதிகள் கடும் அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளனர். முப்பது வருட ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளினால் சேதமாக்கப்பட்ட வடக்கின் பகுதிகளை சிறிலங்கா இராணுவத்தினர் துரிதமாக மீள்கட்டியெழுப்பி வருவதோடு, இலங்கையின் சமாதானத்திற்கும் அபிவிரித்திக்கும் இராணுவத்தினரின் பங்கு "வெற்றிக்கதை" (success story)என சிறிலங்கா இராணுவ மற்றும் அரச கட்டமைப்புக்கு Nathalie Goulet அவர்களினால் சூட்டப்பட்ட புகழாரம் தொடர்பிலேயே, தங்களுடைய கடும் அதிருப்பதியை குறித்த செனற் உறுப்பினருக்கு வெளிப்படு…
-
- 0 replies
- 473 views
-
-
தமிழ் பேசும் அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனின் கருத்து சரியானதே என்று மக்கள் உணருகின்ற அளவுக்குப் போரின் பின்னரான அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன'' என்று தெரிவித்துள்ளது ஜே.பி.வி. வடக்கு மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக அரசு அநுராத புரம் மற்றும் அம்பாந்தோட்டை பகுதி மக்களை அங்கு குடியேற்றி பிரச்சினைகளைத் தீவிரப் படுத்துகின்றது என்கிறது அந்தக் கட்சி. ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற் றது. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அங்கு தெரிவித்ததாவது: கொழும்பில் தனிச் சிங்கள ஆட்சியே நிலவுகின்றது. இதனால், இதற்கு நிகரான தமிழர…
-
- 5 replies
- 564 views
-
-
ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில் பரீட்சார்த்த பயணமொன்று இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மணித்தியாலயத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திலேயே இந்த பரீட்சார்த்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, ரயில்வே பொது முகாமையாளர் டீ.ஏ.பி.ஆரியரத்ன மற்றும் வடக்கு ரயில் பாதை நிர்மாணப்பணிக்கு பொறுப்பான இந்தியாவின் ஐகோன் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் எஸ்.எல்.குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டனர். இந்த பயணத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகிய…
-
- 1 reply
- 391 views
-
-
தமிழ் மக்களுக்கான அவசர அறிவித்தல் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்புகளும், கவனயீர்ப்பு நிகழ்வுகளும், வீதிமறிப்பு போரட்டங்களும், சர்வதேசமெங்கும் முன்னெடுக்கப்பட்டது. இன்று நான்கு ஆண்டுகள் கடந்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியோ, தமிழர்களுக்கான சுயநிர்ணய அரசியல் தீர்வையோ வழங்காத போதிலும் உகத்தமிழர்களின் பல்வேறுபட்ட போராட்டங்கள் காரணமாக சர்வதேச சமூகம் தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்றன. இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடும் பேரெழுச்சியோடும் உலகத்தமிழின…
-
- 1 reply
- 271 views
-
-
மண்டேலாவைப் போலவே பிரபாகரனும் ஒரு இனவிடுதலை போராளி. வியாழக்கிழமை, செப்டம்பர் 5, 2013 "மண்டேலாவும் வெள்ளையர்களை குண்டு வைத்துக் கொலை செய்தவர் தான். ஆனால், இன்று மண்டேலாவை அகில உலகமே மாமனிதராகப் போற்றுகிறது'' ஆனால் பிரபாகரனை தீவிரவாதி எனக் கூறுகின்றார்கள். . இது ஏன் நவ நீதம் பிள்ளைக்கு கூட விளங்கவில்லை? இவ்வாறு கூறியுள்ளார் கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ன. . அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட விக்கிரமபாகு மேலும் தெரிவித்ததாவது, , இலங்கை வந்திருந்த நவிப்பிள்ளை, அரசிற்கு எதிராக மாத்திரம் குற்றங்களை சுமத்தி விட்டுச் சென்றுள்ளனார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இவர் …
-
- 5 replies
- 745 views
-
-
சிங்களவர் ஏன் தீவிரவாதிகளானார்கள்? இந்தக் கேள்வியை கேட்டிருப்பவர் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய! அவரைப்பற்றி ‘இந்து நாளிதழ்‘ஆசிரியர் ராம் ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் முக்கிய விடயமொன்றைத் தெரிவித்திருந்தார். சிலமாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட விபரமாக இருந்தாலும் இங்கு அதனை எடுத்துக்கொள்வது பொருத்தமானதெனக் கருதுகிறோம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவர் அவரின் சகோதரர் கோதபாய என்பதை, அவர்தெரிந்துகொள்வது அவசியம் என்று ராம் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்று அடிக்கடி நிருபணமாகிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மகாநாட்டில் கோதபாய இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலையும் அவரே தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழர்களும், முஸ்ல…
-
- 0 replies
- 517 views
-
-
ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முதலாவது நாள் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் வரும் செப்ரெம்பர் 24ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 4ம் நாள் வரை நடைபெறவுள்ளது. பொதுச்சபைக் கூட்டத்தின் பொதுவிவாதத்தின் முதலாவது நாள் அமர்வில், முதலாவதாக பிறேசில் அதிபரும், அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உரையாற்றவுள்ளனர். இந்த அமர்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 27ம் நாள் உரையாற்றவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வரும் 28ம் நாளே உரையாற்றுவார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் நாள் அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் மன…
-
- 0 replies
- 549 views
-
-
சிறீலங்காவில் சிங்கள ராணுவ வெறியர்கள் தமிழர்களை மிகக் கொடூரமாக தலையில் சுட்டுக் கொலை செய்தது போல, சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட ராணுவத்தினரை, புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான கொலைகளுக்கு உலகெங்கும் ஒரே மொழிதான் என்பதை இந்த வீடியோ காட்சி உணர்த்துகிறது. சிறீலங்கா இனவெறி ராணுவத்தினரின் கோல்ட் பிளட் மர்டர் இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில் சிரிய புரட்சிப் படையினர் அதே பாணியிர் நடத்தியுள்ள கொடூரக் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. http://www.sankathi24.com/news/32897/64//d,fullart.aspx
-
- 0 replies
- 337 views
-
-
எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டை அடுத்து இலங்கை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும்போது அதில் மேர்வின் சில்வா அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமைச்சர் மெர்வின் சில்வா, தற்போது அரசியலில் சங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மகன் மாலகவின் நடவடிக்கைகள் தொடர்பில் மேர்வின் சில்வாவுக்கு அரசாங்க உயர்மட்டத்தில் இருந்தும், அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் இருந்தும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக, கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்றோர் மேர்வினின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட…
-
- 2 replies
- 671 views
-