ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
விசாரணைகளின் போது சித்திரவதையை ஒரு வழிமுறைகாகப் பயன்படுத்துவதை இலங்கையில் பொலிஸார் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. இலங்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 1500 பேர் தொடர்பான சம்பவங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தொகுத்துள்ளது. இதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, மிகவும் அதிக சித்திரவதைக்கு ஆளான 400 பேர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் பொலிஸாரின் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று அந்த ஆணையத்தைச் சேர்ந்த பசில் ஃபெர்ணாண்டோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்து…
-
- 0 replies
- 325 views
-
-
பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று, இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாத செயல்களில் ஈடுபட 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மகாராஷ்டிர பொலிஸார் எச்சரித்துள்ளனர். மத்திய உளவுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை மகாராஷ்டிர பொலிஸ் விடுத்துள்ளது. தற்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இதற்காக இந்த 8 பேருக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 8 தீவிரவாதிகளில் 4 பேர் பஞ்சாபிகள் ஆவர். மற்றவர்கள் காஷ்மீரிகள் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு பேரையும் யாழ்ப்பாணம் அருகே கடல் பகுதியில் இறக்கி விட பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனனராம். அதாவது எப்படி மும்பைக்கு கடல் மார்க்கமாக 10 …
-
- 0 replies
- 612 views
-
-
ஜான்ஆபிரகாம் நடித்த 'மெட்ராஸ் கபே' படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23�ந்தேதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதில் ஜான் ஆபிரகாம் இந்திய 'ரா' அதிகாரியாக வருகிறார். கதாநாயகி நர்கிஸ் பக்ரி இங்கிலாந்து பத்திரிகை நிருபராக வருகிறார். அஜய் ரத்னம் பிரபாகரன் கேரக்டரில் நடித்துள்ளார். பியூஷ் பாண்டே இந்திய அமைச்சரவை செயலாளராக வருகிறார். லீனா மரியா, டினு ஆகியோர் தமிழ் அகதிகளாக வருகின்றனர். இலங்கையில் அஜய் ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு யுத்த வியூகம் அமைத்து கொடுப்பது போன்றும் அவரை பிடிக்க ஜான் ஆபிரகாம் துப்பறிவது போன்றும் காட்சிகள…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தல் வேட்பாளர் மீது ஆளும் தரப்பு குண்டர்கள் தாக்குதல் அங்கயனின் தந்தையார் இராமநாதனின் வழி நடத்தலிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தல் வேட்பாளர் தம்பிராசா மற்றும் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகிய இருவரும் இன்று பகல்வேளையில் பொது மக்கள் முன்னிலையில் யாழ்.நகரப்பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் வடக்கு தேர்தல் போட்டியிடும் தம்பிராசா காயமடைந்துள்ளார். ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும் சுதந்திரக்கட்சியின் …
-
- 1 reply
- 515 views
-
-
வடக்கு தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது வடக்கு தேர்தல்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தல்களை கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய கொன்சோல் அதிகாரி வீ.மஹாலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் நடத்தப்பட உள்ள தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமான முறையில் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஏதேனும் வன்முறைகள் இடம்பெற்றால் தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Articl…
-
- 1 reply
- 378 views
-
-
அழிந்துபோகிறது வெடிவைத்தகல் கிராமம் - தமிழர்கள் நிலம் இழந்து கொண்டிருக்கும் காலத்தில் வன்னியில் வெடிவைத்தகல் என்ற ஒரு கிராமம் அழிந்து கொண்டிருக்கிறது. இடுகாட்டைப்போல ஆளரவமற்ற ஒரு கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது வெடிவைத்தகல். தமிழ் கிராமங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு தமிழ் கிராமம் மக்கள் இன்னமும் திரும்பாமல் அழிந்துகொண்டிருக்கிறது. காடு மண்டி பாழடைந்த ஒரு கிராமத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக போரில் உடைந்த வீடுகளும் துர்ந்த கிணறுகளும் இன்னமும் இருக்கின்றன. வெடிவைத்த கல் கிராமத்தை அழிவடையச் செய்வதன் பின்னால் பெரும் அரசியல் இருக்கின்றது என்பதற்கு ஆதரமாக அங்கு இராணுவத்தினரே தற்பொழுது உள்ளனர். வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணிப் ப…
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்துக் கொண்டு சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயலில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான பிரதிநிதி சுபினாய் நண்டி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சுமார் 48ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். அவர்களை மீள குடியேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தின் பல மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்கின. எனினும் நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதும், இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் இன்னம் சரிவர நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாங்கத்தின் திட…
-
- 1 reply
- 349 views
-
-
தாம் ஒர் சர்வாதிகாரி கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ஆட்சியின் வாழ்ந்து வரும் பலரே தமக்கு எதிராக சர்வாதிகாரி என்ற பட்டத்தை சூட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.சர்வாதிகாரி என தம்மை குற்றம் சுமத்தக் கூடிய அளவிற்கு கருத்துச் சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதற்காக தம்மை சர்வாதிகாரி என அழைக்கின்றார்கள் என்பது புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பகிரங்கமான முறையில் தம்மை சர்வாதிகாரி என அழைக்கின்றார்கள் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மொழியில் இல்லாத வார்த்தைகளினால் இணைய தளங்களிலும்…
-
- 0 replies
- 357 views
-
-
முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரைப் போன்று அச்சமின்றி தமிழ் மக்களுக்கா நான் என்றும் குரல் கொடுப்பேன் என்று வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கென தனியானதொரு கலை, கலாசாரப் பாரம்பரியம் இருக்கிறது. அதனை மதித்துப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும். எனவே அந்த அரும்பணியை செய்வதற்கு நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- எனது சகோதரர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களுக்காக அச்சமின்றி குரல் கொடுத்தவர். அதேபோன்றுதா…
-
- 0 replies
- 307 views
-
-
"வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துக ளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை" இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தார். "வடமாகாணசபையைக் கைப் பற்றுவது அரசா, கூட்டமைப்பா என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக ஐந்து தேர்தல் தொகுதிகள் திகழ்கின்றன. 14 தேர்தல் தொகுதிகளில் ஐந்தில் கூட்டமைப்புக்கும், நான்கில் அரசுக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது" என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தமிழ் கூட்டமைப்ப…
-
- 4 replies
- 548 views
-
-
மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் திரையிடக்கூடாது. மலேசிய தமிழர்கள் போராட்டத்தில் குதித்தனர் மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட " மெட்ராஸ் காபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் தொலை நகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட இந்த மனுவில் மெட்ராஸ் கபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்சே உதவியுடன் வெளிவந்த இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் வி…
-
- 1 reply
- 368 views
-
-
இலங்கைக் கடற்படையால் அநீதியாகக் கொல்லப் பட்ட 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்பாக இதுவரை இலங்கை மன்னிப்புக் கோரவில்லை. இன்னும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நட்ட ஈடு எதுவும் கொடுக்கப் படவுமில்லை. இன்னும் மீனவர் மீதான இலங்கை கடற்படைத் தாக்குதல் தொடர்கிறது. இந்த சூழலில் எந்த முகத்துடன் காமன்வெல்த் விருந்துக்கு அந்த மீனவர்களதும் பிரதமரான மன்மோகன் சிங்கை அழைக்க இலங்கை அமைச்சர் பீரிஸ் டெல்ஹிக்கு வந்திருக்கிறார்?
-
- 2 replies
- 601 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெற்கில் மைத்துனர்கள் இருப்பதாக கூறினாலும் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமுமே உண்மையான மைத்துனர்கள் என ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. பொருட்களின் விலை அதிகரிப்பு, சம்பள பிரச்சினை, ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை, ஜனநாயக உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வன்முறை,அடக்குமுறை மூலமே பதிலளித்து வருகிறது. இப்படியான பிரச்சினைகளை எம்மால் புறந்தள்ளிவிட முடியாது. அதிகாரத்தை தக்கவைப்…
-
- 2 replies
- 629 views
-
-
இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 480000 மக்களை மனிதாபிமான அமைப்புக்களும் அரசாங்கமும் இணைந்து மீள் குடியேற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நேண்டி தெரிவித்துள்ளார். உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகளவில் பேசுவதனை நிறுத்தி செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் மனிதாபிமான தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம…
-
- 2 replies
- 548 views
-
-
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடில்லி சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை அடுத்த தமிழக மீனவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு டில்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை மீனவர்களிடையே உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அமைச்சரி…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கையில் காணாமல் போனோர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டவர் பலர் புதிய அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் இலங்கையில் ஏற்கனவே காணாமல் போனவர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார் என்று கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நபரின் தாயார், தனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று முறையிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டவர் இலங்கை நீதிமன்றத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது, காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விட…
-
- 0 replies
- 1.2k views
-
-
-மொஹொமட் ஆஸிக் பிக்கு வேடமிட்டு விஹாரைகளுக்குள் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை மாத்தளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். மாத்தளை லக்கல பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சில காலம் பிக்குவாக இருந்துள்ளனர். அதன் பின்னர் துறவரத்தை கைவிட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தனது குடும்பத்தை வாழ வைப்பதற்காக விஹாரைகளுக்கு சென்று கொள்ளையிடுவதாக விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார் மாத்தளை பொல்கொடுவ பிரதேசத்தில் விஹாரை ஒன்றில் 50,000; ரூபாய் பணம் மற்றம் டிஜிடல் கமரா ஒன்று திருடிய சம்பவம் தொடர்பாக இச் சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவ…
-
- 8 replies
- 683 views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மகாநாட்டை சிறிலங்காவில் நடத்தக் கூடாதென வலியுறுத்தி புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமையகத்துக்கு மனுக் கொடுத்துள்ளதாக இன்றைய (20) திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிகள் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசேடமாக, கனடா, ஜேர்மன்,நோர்வே, பிரித்தானியா, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ்,சுவீடன், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் தலவர்களுக்கும் இந்த மனுவின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த சிறிலங்காவில் இந்த மகாநாட்டை நடத்தக் கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் திவய்ன மே…
-
- 1 reply
- 622 views
-
-
மத்தள விமான நிலையத்தை சிலர் நகைச்சுவையாக நோக்குகின்றனர் – மஹிந்த ராஜபக்ஷ மத்தள விமான நிலையத்தை சிலர் நகைச்சுiபாயக நோக்குகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், விமான நிலையத்தின் ஊடாக நாடு அடைந்துள்ள நன்மைகளை எவரும் கண்டுகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப முடியாத விமானங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இன்று அந்த நிலை மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார் கொழும்புத் துறைமுகம் சர்வதேச தரத்தில் காணப்படுவதாகவும் …
-
- 2 replies
- 578 views
-
-
இலங்கை சீனாவில் காலணியாக மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் கொழும்புத் துறைமுக விரிவாக்கல் ஆரம்ப நிகழ்வின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார் . கொழும்புத்துறைமுகத்தின் குறித்த பகுதி தொடர்பில் சீன நிறுவனமொன்று 2048ம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். துறைமுக நடவடிக்கைகளின் அரைவாசி லாபம் சீன நிறுவனத்திற்கே சென்றடையும் என அவர் தெரிவித்துள்ளார். 15 வீத வருமானமே கொழும்புத் துறைமுகத்திற்கு கிட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுக விஸ்தரிப்பு ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globa…
-
- 2 replies
- 751 views
-
-
Sydney Greens candidate Dianne Hiles is hosting a special screening of the film 'No Fire Zone: The Killing Fields of Sri Lanka', a feature documentary which follows the Sri Lankan government’s final offensive in a 26 year war against the rebel forces of the Tamil Tigers. No Fire Zone is a film of record and a call to action: it is a true story of war crimes committed at the end of the Sri Lankan civil war in 2009. More than just a film, No Fire Zone aims to build local campaigns for accountability and justice for the victims of the war crimes committed in Sri Lanka. No Fire Zone was screened at the UN earlier this year before the Human Rights Council passed a resolution a…
-
- 0 replies
- 295 views
-
-
இலங்கைக்குப் பயணிக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவம்பிள்ளையை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்க் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர். இதன்போது வடக்கில் படைக்குறைப்புக்கு அழுத்தம் கொடுக்குமாறும், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மேலும் இந்தச் சந்திப்பில் மனித உரிமை விவகாரங்கள் குறித்தும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை எதிர்பார்க்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தேர்தல் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ள…
-
- 0 replies
- 470 views
-
-
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இதுவரை இதுவரை 137 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம்; அறிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி குருநாகல் மாவட்டத்தில் இருந்து 43 முறைப்பாடுகளும்இ மாத்தளை மாவட்டத்தில் இருந்து 24 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் 28 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் தொடர்பிலான 134 முறைப்பாடு…
-
- 0 replies
- 363 views
-
-
எமது எதிர்கால சந்ததிகள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான வீர மறவர்களதும் பொது மக்களதும் தியாகங்கள் என்றும் வீண்போகாது என்பதை இத்தேர்தலில் பகிரங்கமாக வெளிப்படுத்துவொம் என த.தே.கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். வடமாகண சபைத் தேர்தலில் போட்டியிடும் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கான முதலாவது அறிமுக கூட்டம் நேற்று முந்தினம் செட்டிகுளம் மெனிக்பாமில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார். இந் நிகழ்விற்கு மெனிக்பாம் இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் சி.நிரூபன் தலைமை தாங்கினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரதன், தமிழினத்தின் வரலாற்றில் மற்றுமொரு தேர்தல் திணிக்கப்பட்டுள்ளன. அதை நாம் பலமான முறையில்…
-
- 1 reply
- 408 views
-
-
மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் அது பற்றி கலந்துரையாடி ஜனநாயக வழியில் அவற்றுக்கு தீர்வுகாண தான் எப்பொழுதும் தயாராகவே இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா நகரில உள்ள கிரகறி குளத்திற்கு அருகில் அமைந்துள்ள பூங்காவின் இரண்டாம் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சி நிற பேதமின்றி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியின் போது மக்களிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்க போவதில்லை. அரசாங்கம் இன்றைய தினத்தை விட மறுநாளை சந்தித்தே அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் நடந்து கொண்டே தமது கிராமம் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்திகளை செய்து கொள்ள வேண்டுமேயன்றி, மோதல்களை…
-
- 9 replies
- 568 views
-