ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
-எஸ்.ரவீந்திரன் களுவாஞ்சிக்குடி, களுதாவளை கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை, கரைவலை மீன்பிடி ஊடாக நங்கூரப்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான சூரை மீன்கள் பிடிபட்டன. பிடிபட்ட மீன்களுடன் மீனவர்கள் சந்தோஷமாக காணப்படுவதை படங்களில் காணலாம். http://tamil.dailymirror.lk/--main/75749-2013-07-20-09-31-27.html
-
- 6 replies
- 586 views
-
-
தமிழீழத்தை அடைவதற்கான ஆயுதப் போராட்டத்தை வேலுப்பிள்ளைப் பிரபாகரனே முன்னெடுத்தார் எனவும், தற்போது தமிழீழ அரசியல் போராட்டத்தை முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் முன்னெடுத்த தயாராவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23521
-
- 14 replies
- 783 views
-
-
மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள மண்முனை வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட எருமைத்தீவு விவசாய நிலத்தைக் கைப்பற்றி காத்தான்குடி மாநகரசபையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்திற்கும் மட்டக்களப்பு மாநகரசபைக்கும் சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பையுடைய எருமைத்தீவு பிரதேசத்தை காத்தான்குடி நகர சபையுடன் இணைத்து காத்தான்குடி மாநகரசபையை உருவாக்கும் முயற்சியில் காத்தான்குடியில் உள்ள அரசியல்வாதியொருவர் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரியவந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய …
-
- 0 replies
- 469 views
-
-
தகாத உறவை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி, கல்கமுவ பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை கிராம மக்கள் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது. குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மொன்னக்குளம் அல் அஸ்னா ஜூம்மா பள்ளிவாசலில் வைத்து இந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. இதன் போது தலையில் காயமடைந்த நிலையில் அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் தமிழ் இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் இதனை குடும்பத்தினர் எதிர்த்து வருவதாகவும் காதலரை பார்த்து விட்டு, திரும்பி கொண்டிருந்த போது தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று தலைமுடியை துண்டித்துடன் கைகளை கட்டி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண்கள் கைதுசெய்யப்பட்டு, இன்று கல்க…
-
- 22 replies
- 1.5k views
-
-
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய தீர்மானம் அடுத்த வருட இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். மேலும். http://tamilworldtoday.com/?p=23587
-
- 1 reply
- 583 views
-
-
யாழ். பரமேஸ்வரா பகுதியில் புதையுண்டிருந்த நிலையில் இரண்டு பெட்டி துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=23640
-
- 0 replies
- 489 views
-
-
வட மாகாணத்தில் இடம்பெயர்ந்து தற்போது தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=23592
-
- 0 replies
- 537 views
-
-
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய தீர்மானம் அடுத்த வருட இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். மேலும்,http://tamilworldtoday.com/?p=23587
-
- 0 replies
- 586 views
-
-
விடுதலைப் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கக் கூடும் எனவும், முஸ்லிம் அடிப்படைவாத அச்சுறுத்தல்கள் குறித்து அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் இந்தியா இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=23368
-
- 5 replies
- 556 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நீதியாக – நியாயமாக நடத்துகிறதா என்பதைப் பொறுத்தே, வரும் நொவம்பர் மாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பாரா என்பது முடிவு செய்யப்படும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில், கொழும்பு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இதுபற்றித் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்விளைவாக, முன்னர் எதிர்பார்க்கப்பட்டது போன்று, வரும் நொவம்பரில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கொமன்வெல்த் உச்சிமாநாட்டை சுமுகமாக நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந…
-
- 0 replies
- 615 views
-
-
-எஸ்.கே.பிரசாத் நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு கடும் சித்திர வதைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பிரதீபன் என்ற நபரே இவ்வாறு கடத்தப்பட்டு கடும் சித்திரைவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். கடத்திய நபர்கள் நெடுங்கேணியில் உள்ள வீடொன்றினுள் வைத்து இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நெருப்பில் கம்பியை சூடாக்கி அவரின் முதுகு மற்றும் மார்புப் பகுதியில் சுட்டு காயப்படுத்தியுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/75747-2013-07-20-09-21-55.html
-
- 0 replies
- 644 views
-
-
வட மாகாணத்தை குட்டி ஜப்பானாகவோ - சிங்கப்பூராகவோ மாற்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்- டக்ளஸ் 19 ஜூலை 2013 ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன், பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியேற்றவும், வடக்கு மாகாணத்தை மூன்று வருடங்களுக்குள் குட்டி ஜப்பானாகவோ, சிங்கப்பூராகவோ மாற்றி, பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுமாயின், வரலாற்றில் எடுத்தது போல் தவறான தீர்மானங்களை எடுக்காது, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடபகுதி மக்களை கேட்டுக்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அமைச்சர் டக்ளஸ் த…
-
- 11 replies
- 743 views
-
-
விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழ் நாட்டில் தலைத்தூக்கக் கூடும் எனவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் கவனமாக இருக்குமாறும் இந்தியா இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், இலங்கையின் அதிகாரிகளிடம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகாயா தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள அவர், இந்த நிலைமையில், இந்தியாவும் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்;திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார் எனவும் தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEdit…
-
- 2 replies
- 738 views
-
-
வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள் போராளியுமான தேவராசா பிரதீபன் (வயது26) என்ற குறித்த இளைஞர் கடந்த மாதம் 15ம் திகதி வீட்டிலிருந்த சமயம் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து மூன்று தினங்களின் பின்னர் அதே நபர்களினால் வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார். விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டிருந்த 3 தினங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 515 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கதவை மூடமுடியாது - தேர்தல் ஆணையாளர் [ சனிக்கிழமை, 20 யூலை 2013, 01:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வரும் செப்ரெம்பரில் நடக்கவுள்ள வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைத் தேர்தலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு கதவை மூடப் போவதில்லை என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகளை தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கக் கூடாது என்று சில கட்சிகள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் வலியுறுத்தியுள்ளன. சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகளை தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கக் கூடாது என்று தாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, அ…
-
- 0 replies
- 436 views
-
-
சம்பந்தனின் கோபாவேசம் மீண்டும் கட்டுக்குள் வந்த பத்திரிகைகள் 19 ஜூலை 2013 சில ஊடகங்களின் விசமத்தனங்களையும் அதன் முக்கயஸ்த்தர்களின் கூட்டுப் பொறுப்பின்மையையும் சம்பந்தன் கண்டித்துள்ளார் - வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை தமிழத்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தெரிவு செய்துள்ளதை எதிர்த்து சில பத்திரிகைகள் மேற்கொண்டு வரும் விசமத்தனமான விமர்சனங்களை நிறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அறிவுறுத்தியுள்ளார். கூட்டுப்பொறுப்புடன் தமிழத்தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக இந்த நாளேடுகள் செயற்படுவது ஆரோக்கியமானது அல்ல என சம்பந்தன் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றின் நிர்வாக இயக்குநருடன் தொடர்பு கொண…
-
- 0 replies
- 374 views
-
-
TNAயின் பையில் இருந்து தற்போது, விடுதலைப்புலிகள் வெளியில் குதித்துள்ளனர் - சிறிவிமல தேரர் 20 ஜூலை 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பையில் இருந்து தற்போது, விடுதலைப்புலிகள் வெளியில் குதித்துள்ளதாக கெட்டம்பே விகாராதிபதி கெப்பட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் சில கருத்துக்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் பயங்கரவாதம் மூலம் பெற முயற்சித்ததை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பெற முயற்சித்து வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்காக நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ஆயிரக்கணக்கான படையினர் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை. நாட்டின் …
-
- 0 replies
- 336 views
-
-
வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் - TNA - முடியாது நிரந்தரமாக்குவோம் - அரசாங்கம் 20 ஜூலை 2013 வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்துமாறு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள அரசாங்கம், இராணுவ முகாம்களை நிரந்தர முகாம்களாக அந்த பகுதிகளில் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. வடக்கில் இருக்கும் இராணுவ முகாம்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகள் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வருகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் எந்த நாடுகளுடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை என்பதே அரசாங்கத்தின் திட்டவட்டமான நிலைப்பாடாக இருந்து வருகிறது. …
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்கா உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டு 20 ஜூலை 2013 அமெரிக்கா நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மைக்கல் ஏர்வின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல், இராணுவ பிரசன்னம், தேர்தல் கண்காணிப்பு, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்…
-
- 0 replies
- 276 views
-
-
இரட்டைக் குடியுரிமை குறித்த உத்தேச சட்ட வரைவு, சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிப்பு 20 ஜூலை 2013 இரட்டைக் குடியுரிமை குறித்த உத்தேச சட்ட வரைவு, சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பில் உத்தேச சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச சட்டம் தற்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்தவர்கள் புதிய சட்டம் அமு…
-
- 0 replies
- 385 views
-
-
வட மாகாணசபைத் தேர்தல் யாழ் மாவட்டம் தவிர்ந்த TNAயின் மாவட்ட ஒதுக்கீடுகள் நிறைவு 19 ஜூலை 2013 இறுதி முடிவு 21ல் வவுனியாவில் - இணைப்பு 2 புதிய தகவல்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்றுமாலை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசு கட்சிக்கு 03 வேட்பாளர்களும், தமிழ…
-
- 0 replies
- 321 views
-
-
நெஹ்ரூ தீவுகளில் இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இந்த கலகத்தில் 500க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்களுக்கு, http://tamilworldtoday.com/?p=23531
-
- 1 reply
- 441 views
-
-
யாழ்ப் பல்கலைக்கழகத்தின் மாணவச் சங்க முன்னாள் செயலாளர் தர்ஷனன் பரமலிங்கம் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=23559
-
- 0 replies
- 397 views
-
-
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பாக்கருக்கு 10 வருட வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=23525
-
- 0 replies
- 572 views
-
-
மத்திய மாகாணத்தில் அரசாங்கம் இம்முறை மண் கவ்வும் என்பது உறுதி எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் இந்த அரசாங்கம் மண்ணைக் கௌவுவது உறுதியென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ´மத்திய மாகாண சபைக்கான தேர்தல் வருகின்ற செப்டெம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 58 உறுப்பினர்களை தெரிவு செய்யும் மத்திய மாகாண சபையில் 31 உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி உள்வாங்கும். இந்த வெற்றியில் ஜ.தொ.காங்கிரஸ் பாரிய பங்களிப்பை செலுத்தும். மலையக பெருத்தோட்ட மக்களுக்கு இந்த அரசினால் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுரிமைக்கான காணி, நியாயமற்ற சம்பளம், அதன் நேரடி தாக்கமான பொருளாதார பி…
-
- 0 replies
- 274 views
-