Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுமியர் துஷ்பிரயோகம் இருவர் விளக்கமறியலில் சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என்ற குற்றச் சாட்டில் இரு வேறு சம்பவங்களில் தொடர்புடைய இளைஞன் ஒருவனும், சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனும், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட் பட்ட சிறுமியொருத்தியின் 61 வயதான தந்தையுமே எதிர் வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/News_More.php?id=438952170513786799

  2. நினைத்ததை முடிப்போம்; 13 திருத்தம் தொடர்பாக சம்பந்தனிடம் ஜனாதிபதி திட்டவட்டம் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் "13' திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு முயற்சியிலும் அரசு முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை. நாங்கள் நினைத்ததை முடித்தே தீருவோம். இதனைத் தெட்டத் தெளிவாக இந்தியாவுக்கும் தெரிவித்துவிட்டோம். வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறும். இதில் கூட்டமைப்பே வெற்றிபெறும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்ற முக்கிய சந்திப்பு ஒன்றின்போதே சம்பந்தனுக்கு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவச…

  3. புகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்துக்குள்ளானது 13 ஜூலை 2013 புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன . இலங்கையர்கள் உள்ளிட்ட 97 பேர் இந்தப் படகில் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் பயணித்த 88 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். படகில் பயணித்த குழந்தையொன்றின் சடலத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படகு உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…

  4. புத்தளத்தில் தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார். 13 ஜூலை 2013 புத்தளம் உடப்பு ஆண்டிமுனையில் வைத்து தமிழ் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார். சொக்கலிங்கம் சேக ரூபன் என்ற வர்த்தகரே இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. . நேற்று வெள்ளிக்கிழமை இரவே இவர் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வர்த்தக நடவடிக்கையை நிறைவு செய்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சிவப்பு நிற காரில் சென்ற இனந்தெரியாதவர்களே அவரை கடத்திச்சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93975/languag…

  5. சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளது 13 ஜூலை 2013 சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்து அதற்கு ஆதரவாக பத்தாயிரம் கையொப்பங்களை திரட்டவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. இணையத்தின் ஊடாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 'உண்மையை வெளிப்படுத்த வேண்டும்' என்ற தொனிப்பொருளிலான மகஜர் ஒன்றை சர்வதேச மன்ன…

  6. முதலமைச்சர் வேட்பாளர் இழுபறி மீண்டும் TNA யின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிற்போடப்பட்டது 13 ஜூலை 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றிரவு 8மணியளவில் (12.07.2013) ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிர…

  7. வடக்கில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள இராணுவத்தினரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22212

    • 0 replies
    • 339 views
  8. யாழ்ப்பாண காவல் நிலையங்களில் விசேட பிரிவுகள் 13 ஜூலை 2013 யாழ்ப்பாண காவல் நிலையங்களில் விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல காவல் நிலையங்களிலும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு இந்த விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. தமிழ் பேசும் காவல் துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் சகல நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. 24 மணித்தியாலங்களும் இந்த விசேட காவல்துறைப் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது…

  9. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியமில்லை – அரசாங்கம் 13 ஜூலை 2013 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் கட்சிகள் உள்நாட்டு கண்காணிப்பு பொறிமுறைமை குறித்து நம்பிக்கை கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தீய நோக்கங்களின் அடிப்படையிலேயே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு கோரி வருவதாகவும், குறிப்பாக வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈட…

  10. வடக்கு தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 13 ஜூலை 2013 வட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பார்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முக்கியமான தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது வழமையானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தல்களில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்தக் கூடாது என எந்தவிதமான நியதிகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.' http://www.globaltamilnew…

  11. மஹியங்கனை நகரில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் இராக்கால வணக்கமான தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று குறித்த மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா மீது கல் வீசியுள்ளனர். இதனால் பள்ளிவாயலின் நான்கு ஜன்னல் கண்ணாடிகளும், ஒரு கதவின் கண்ணாடியும் சேதமாகியுள்ளதுடன் பள்ளியின் உற்பகுதிக்குள் பன்றி இறைச்சியையும் வீசியுள்ளனர். பள்ளியின் கழிவறைப் பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பொலிசார் பள்ளிவாயலில் காவல் கடமையில் ஈடுபட்டுள்…

    • 6 replies
    • 834 views
  12. வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சாவகச்சேரி பிரதேச மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவ விடுதிகளைப் பார்வையிட்டதோடு அங்கிருந்த சிறுவர்களை தூக்கி ´வாங்க மச்சான் வாங்க´ என்ற பாடலைப்பாடி மகிழ்வித்தார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22185

    • 0 replies
    • 298 views
  13. வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கானத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22142

    • 0 replies
    • 292 views
  14. பொதுபல சேனா, இராவணா சக்தி ஆகிய அமைப்புக்களை சட்டரீதியாக தடைசெய்யும் முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க களமிறங்கியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22136

    • 0 replies
    • 400 views
  15. நுவரெலியா மாவட்டத்தில், நான்கரை கோடி ரூபா செலவில் சீதைக்கு கோயில் கட்ட இந்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. காத்தல் கடவுளான கண்ணனின் பத்து அவதாரங்களின் ஒன்றாக இராமனை இந்துக்கள் வழிப்படுகிறார்கள். இராமன் அவரது மனைவியான சீதையின் சரிதம் கூறுகின்ற இதிகாச புராணமே வால்மீகி எழுதிய இராமாயணமாகும். அதில் இலங்கையின் அரசனான இராவணனால் சீதை கவரப்பட்டு இலங்கையின் மலைக்காடுகளில் சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையின் கற்பின் மீது மக்கள் முன்வைத்த சந்தேகத்தை தீர்க்க 'அக்கினிப் பிரவேசம்' செய்த இடம் இலங்கையின் நுவரெலியாவை அண்மித்த பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 'சீதா எலிய'…

  16. -எஸ்.கே.பிரசாத் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசத்திற்கான அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா இந்த அலுவகத்திற்கச் சென்று அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/74787-2013-07-12-15-14-36.html

  17. நாளை இரவு 8.40 பிரான்சின் அரசு தொலைக்காட்சியான பிரான்ஸ் 2 சனலில் Envoyé Spécial என்ற தலைப்பில் சிறீலங்கா பற்றிய ஆவணப்படம் ஒன்று காண்பிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் சிறீலங்காவின் உல்லாச பயணம் போருக்கு பிந்திய நிலைமைகள் பற்றி விபரணங்களும் தேசியத்தலைவர் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி செய்திகளும் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது. இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு பணிபுரியும் சில சிங்கள ஊடகவியலாளர்களின் உதவி பெறப்பட்டதாகவும் அறிய முடிந்தது. பிரான்சிலுள்ளவர்கள் குறிப்பாக இளையோர் தவறாது இந்த ஆவணப்படத்தை பார்த்து 'உண்மைகளை திட்டமிட்டு மறைத்தல்' 'தவறான வரலாற்றை கூறுதல்' சிறீலங்காவுக்கு உல்லாசப்பயணம் செய்யும்படி பிரெஞ்சு மக்களை துண்டும் விதத்தில் காட…

    • 9 replies
    • 1.1k views
  18. (ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சம்பந்தர் நேற்று வியாழன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்) இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் நேற்று வியாழக்கிழமை அவரை சந்தித்துப் பேசினார். இது தவிர, காணி விடயங்கள், மக்களை அவர்களின் ஆரம்ப இடங்களிலேயே மீளக்குடியேற்றுதல் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே முடக்குதல் அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளி்ட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட…

    • 2 replies
    • 732 views
  19. பதுளை மாவட்டம் மஹியங்கனை அரபா ஜூம்ஆப் பள்ளிவாசல் இனந்தெரியாத காடையர்களால் அடித்து நாசமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22093

  20. -எஸ்.கே.பிரசாத் தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வாவை சாவகச்சேரியில் உள்ள சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரிவித்தார். இன்றைய வருகை தொடர்பில் கேட்டபோது... நான் மக்கள் தொடர்பாடல் அமைச்சர். நான் இங்கு வருவது பிழையில்லை. முப்பது வருடகாலமாக இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மக்கள் பிரபாகரனுக்கு பயந்து வெளியில் வரமுடியாத நிலை காணப்பட்டது. அந்தக் காலத்திலும் நான் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கின்றேன். கடந்த…

  21. முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை அனுஷ்டித்துவரும் வேளையில், மஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது நேற்றிரவு 11.20 மணியளவில் கற்களால் தாக்குதல் நடாத்தியதோடு, அங்கு பன்றி இறைச்சியையும் வீசியெறிந்துள்ள சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவ+ப் ஹக்கீம், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதுபற்றி பள்ளிவாசல் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்த நீதியமைச்சர் ஹக்கீம், மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் கதைத்து அங்கு சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் அப் பகுதியில் மின்சா…

  22. ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், செல்லப்பா பத்மநாதனின் 50 வருடகால சமூக, அரசியல் பணிகளைக் கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வொன்று இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். வடமாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இன்னமும் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:/…

  23. ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளரின் இலங்கை விஜயம், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு ஆகியவற்றை மையப்படுத்தி, மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பல்வேறு வழிகளில் அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22013

  24. 13வது திருத்தச்சட்டத்தில் கைவைப்பதென்ற பேச்சிற்கே இடமில்லை. தேவையாயின் 13 பிளஸோ அல்லது 13 டபிள் பிளஸோ தான் இனி சாத்தியம். இந்திய அரசின் தற்போதய நிலைப்பாடு அதுவே என இலங்கைக்கான இந்திய துணைதூதுவராலய கொன்சிலர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். வாசு தேவநாணயக்காரவின் செயலாளர் கலாநிதி மோகனினால் எழுதப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பான தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான நூலினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. அங்கு கலந்த கொண்டு சிறப்புரையாற்றிய அவர், அண்மைய இரு நிகழ்வுகள் முக்கியமானவை எனக் குறிப்பிட்டார். ஓன்று பஸில் ராஜபக்ஸவினது இந்திய விஜயம். இரண்டாவதுஇந்திய தேசிய பாதுகாப்பமைச்சின் ஆலோசகர் மேனனினது இலங்கை விஜயம். இவற்றின் போது 13வது திருத்தச்சட…

  25. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், மனித உரிமை நிலைப்பாடானது மோசமாகக் காணப்படுவதாக, தற்போது பிரித்தானியாவின் புதிய குடிவரவு நடைமுறை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புகலிடம் கோரிய ஒருவர் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ்ப் புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்பட்டிருப்பின் அதுதொடர்பான முழுமையான விசாரணை தேவைப்படுவதாக தற்போது பிரித்தானியாவால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் தொடர்பான ஆதாரங்களை வழங்கிய தமிழ் புலம்பெயர் ஆர்வலர்கள், தமிழ்ப் புலி உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்கள் கொழும்பு வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.