Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வாயைத் திறந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று கடும் போக்கு சிங்கள அமைப்புகள் எச்சரித்துள்ளன. பொறுமைக்கும் எல்லை உண்டு. அயல் நாடென அனைத்தையும் பொறுத்தோம். கடைசியில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி இலங்கையை துண்டாக்க சதி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அதே சதித்திட்டத்தை சர்வதேச மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்க நினைத்தால் நீண்ட நாள் உறவை துண்டிக்க நேரிடும் என்றும் அவ் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை ஒரு சுயாதீன நாடு. உள்ளக தீர்மானங்களை நிறைவேற்றவும் தீர்மானிக்கவும் யாரிடமும் அனுமதியினை…

  2. திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது 05 ஜூலை 2013 திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற் கரையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மனித உரிமை அமைப்ப…

  3. காணி, காவல்துறை அதிகாரங்களில் திருத்தம் செய்யப்படும் - அரசாங்கம் 05 ஜூலை 2013 காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களில் திருத்தம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாகாணசபை முறைமையில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து இந்தியாவுடன் கலந்தாலோசிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவிற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் தொடர…

  4. இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் - நாரயணசுவாமி 05 ஜூலை 2013 இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் வீ.நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை என்பதனால், இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவித்துள்ளா…

  5. வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 05 ஜூலை 2013 வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி இன்று கையெழுத்திட உள்ளார் வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு அமைய விரைவில் வட மாகாணசபை தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தேர்தல் திணைக்களம் வட மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான ஆரம்பகட்ட பணியாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைகள் இன்று நள்ளிரவு கலைக்கப்பட உள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 27ம் திகதியில் வட, மத்திய மற்றும் வட மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம் என…

  6. இந்தியாவின் முன்னால் இலங்கை அரசாங்கம், மண்டியிடும் தேவையில்லை 05 ஜூலை 2013 ராஜீவைத் தாக்கிய விஜித ரோஹன விஜேமுனி 30 வருடகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால் இலங்கை அரசாங்கம், மண்டியிடும் தேவையில்லை என இந்திய முன்னாள் பிரதமரை தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜித ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையில் அணி வகுத்து நின்றவர்களின் விஜேமுனி ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கினார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட விஜேமுனி, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பின்னர் விடுவிக்கப்பட…

  7. அமைச்சர் டக்களசால் முடியவில்லை! ஊர் பார்க்கச் சென்ற மக்கள் திருப்பி அனுப்பட்டனர் 05 ஜூலை 2013 குளோல் தமிழ் விசேட செய்தியாளர் உயர் பாதுகாப்பு வலயக் கோயில்களுக்கு சென்ற மக்கள் திருப்பி அனுப்பட்டனர். யாழப்பாணம் வலிகாமம் பிரிவில் உள்ள மயிலிட்டி பிரதேசத்தில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயம், முருகன் ஆயலம் உட்டப சிலர ஆலயங்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவால் அழைத்துச் செல்லப்பட்ட மக்களே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர். இராணுவத்தின் அதியுயர் பாததுகாப்பு வலயம் காரணமாக கடந்த 25 வருடங்களாக இந்தப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் தமது பிரதேசங்களில் காடு மண்டி பாழடைந்த கடவுகளின் வீடுகளை ஒரு முறையாவது தரிக்க மக்கள் அங்கலாய்த்தனர். ஊரை சென்று பார்வையி…

  8. 13 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதினூடாக மாகாண சபைகளுக்கு புதிய அதிகாரங்கள் கிடைக்கப் பெறும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=20562

  9. 13 ஆவது சட்டத்தை நீர்த்துப் போவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20568

    • 0 replies
    • 437 views
  10. ''ஊவா மாகாணத்தில் எச்.ஐ.வி. தொற்றுதலுக்கு உள்ளானவர்களாக ஒன்பது பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.''இவ்வாறு ஊவா சமூக வானொலி நிறுவன பணிப்பாளர் ரஞ்சித் அமரசிங்க தெரிவித்தார். மொனராகலை ‘‘மிகிரங்க கெஸ்ட்’’ விடுதியில் நடைபெற்ற எச்.ஐ.வி வேலைத்திட்ட செயலமர்வின் ஊவா வானொலி நிறுவனப் பணிப்பாளர் ரஞ்சித் அமரசிங்க தொடர்ந்து பேசுகையில்;- ‘‘ஊவா மாகாணத்தில் மொனராகலை, பதுளை என்ற இரு மாவட்டங்களில் 26 பிரதேச செயலகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஆகச் சிறிய பிரதேச செயலக எல்லைகளைக் கொண்டது கதிர்காமப் பிரதேச செயலகமாகும். இச் செயலகப் பிரிவிலேயே. எச். ஐ.வி தொற்றுக்குரியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். ஏனைய ந…

  11. சாம்பல்தீவு கிராம சேவகர் மீது கடும் தாக்குதல்: மக்கள் எதிர்ப்பு (படங்கள்) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சாம்பல்தீவு கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் இன்று (04) வியாழக்கிழமை கடமையில் இருக்கும் போது கோணேசபுரி இரு நபர்களால் தாக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோணேசபுரியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக் 397 நிரந்தர வீடுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தன. இதில் சிலர் பலவந்தமாக குடியேறியுள்ளதுடன் காசுக்கும் வாங்கியுள்ளனர். கடந்த மாதம் பிரதேச செயலகத்தினால் காணி உரிமையாளர்கள் மட்டும்தான் காணியில் இருக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது. இவ்வாறு அத்து மீறி குடியிருப்பவர்களுக…

    • 0 replies
    • 517 views
  12. லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கையருக்கு எதிராக கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனின் கார்டிப் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் இலங்கையர் ஒருவர் புலிக்கொடி ஏந்தி, மைதானத்திற்குள் அத்து மீறி பிரவேசித்திருந்தார். அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகை ஒன்றையும், புலிக்கொடி ஒன்றையும் ஏந்தி குறித்த நபர் மைதானத்திற்குள் பிரவேசித்தார். லோகேஸ்வரன் மணிமாறன் என்ற புலி ஆதரவாளருக்கு எதிராக இவ்வாறு திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பிரதான நீதவ…

  13. ஈழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த 'தமிழ் மாணவர் பேரவை’ அமைப்பை நிறுவிய சத்தியசீலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது... தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20384

    • 3 replies
    • 1.5k views
  14. நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்தேன் - ரம்மித் ரம்புக்வெல்ல நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்ததாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 35000 அடி உயரத்தில் நடு வானில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்ததாக ரம்மித் ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எனினும், நித்திரையில் நடக்கும் நோய் காரணமாக இவ்வாறு விமானக் கதவினை திறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மதுபானம் அருந்திய காரணத்தினால் விமானக் கதவினை திறந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் நித்திரை விழித்திருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட களைப்பின…

    • 9 replies
    • 829 views
  15. நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கூடி ஆராய்ந்தனர். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20490

    • 0 replies
    • 386 views
  16. இந்தியாவின் றோ உளவுப் பிரிவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு பயிற்சி அளித்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் சநிரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் சரியான தீர்மானங்களை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1970களின் கடைக் கூற்றில் தமிழ் ஆயுதக் குழுக்கள் தலையெடுக்கத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் விசாலமான ஓர் அமைப்பாக உருவெடுப்பதற்கு பிரதான ஏதுவாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அக்காலத்தில் நிலவிய உறவு விரிசலையே கருத வேண்டும். அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிற்கு…

    • 1 reply
    • 782 views
  17. இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், விளையாட்டுத்துறை அமைச்சும் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன? சஜீத் தமது புதல்வர் மது அருந்த மாட்டார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்திடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளாகக் குறிப்பிட்டுள்ளார். விமான சேவை நிறுவனத்தின் அறிக்கையில் எந்தவிதமான விடயங்களும் தவறாக குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்கள் இந்த விடயத்தை பூதாகாரமாக்கி பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது புதல்வர் மது அருந்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். விமானத்தின் பிரதான கதவும், கழிவறையின் கதவும் அருகருகே அமைந்திருந்ததானால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமது புதல்வர…

  18. கிரிக்கெட் வீரரான எனது மகன் ரமித் ரம்புக்வெல, பிரித்தானிய விமான சேவைக்குரிய விமானத்தில் முகம் கொடுத்தது ஒரு சின்ன விடயமாகும் என்று ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது ஒரு சிறிய விடயமாகுமென அந்த விமான சேவை நிறுவனமே கூறியிருக்கின்றது. இந்நிலையில் இலங்கை ஊடகங்கள், டெய்லி மெயிலில் வெளியான செய்திக்கு கடும் பாரத்தை கொடுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு திரும்பியவுடன் இதுதொடர்பில் மகன் என்னிடம் கூறினார். விமானத்திலிருந்தவர்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்தார் என்றும் மகன் என்னிடம் தெரிவித்தார் என்றார். விமானத்தின் பின்னால் உள்ள கதவிற்கும் மலசல கூட கதவிற்கும் இடையில் இரண்டு மீற்றர் தூரம்…

  19. வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தியாவட்டவானில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட 55 வயதுடைய நபரொருவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் நேற்று புதன்கிழமை ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த ஏழு வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவ்வீதியால் வந்த 55 வயதுடைய நபரொருவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று அவரின் கையை பிடித்து இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளார். குறித்த சிறுமி கூச்சலிட்ட சத்தம் கேட்டு வீதியால் சென்ற பொதுமக்கள் மேற்படி நபரைப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருக…

  20. ஹல்தும்முல்லை நகரில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இப்பிரதேச வர்த்தகர்களும் பொது மக்களும் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் நகரின் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தனது கடையின் மேல்மாடியிலுள்ள பூச்சாடிகளுக்கு நீர் ஊற்றச் சென்றவேளையில் குரங்கு ஒன்று அவர் மீது பாய்ந்ததால் கீழே விழுந்து அவர் காயங்களுக்கு உள்ளாகினார். மேலும் ஹல்தும்முல்லை, வல்ஹபுத்தன்னை தேசிய பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் குரங்குகளால் கடியுண்டு ஹல்தும்முல்லை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மா…

  21. தந்தைமார் 35 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது, புதல்வர்கள் 35000 அடி உயரத்தில் இருந்து குதிக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துளளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அதேவளை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் புதல்வர்கள் பலர் போட்டியிட உள்ளதாகவும் அமைச்சர்கள் பலரின் புதல்வர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் பல இடங்களில் தற்போது, உரத்திற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. 350 ரூபாவுக்கு உரத்தை வழங்குவதாக கூறி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போது உர பொதி ஒன்றின் விலை 1500 ரூபா. இதனை விவசாயிகளால் கொடுக்க முடியாத…

  22. நாளை கரும்புலிகள் தினம்! தயார் நிலையில் இலங்கை இராணுவம்!! நாளைய தினம் உலகளாவிய ரீதியில் விடுதலைப் புலிகளது கரும்புலிகள் தினத்திற்கு பல தமிழ் அமைப்புகள் தயாராகிவருகின்ற நிலையில் இலங்கைப் படையினரும் அதற்கு தயாராகி வருகின்றனர். அதற்காக அவர்கள் தமிழ் பிரதேசங்கள் எங்கும் அலைந்து திரிகின்றனர். வல்வெட்டித்துறையினை சேர்ந்தவரான 46 வயதுடைய செல்லப்பன் அருமைரத்தினம் என்பவர் ஓட்டோ சாரதியாவார். புற்றுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவரிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வல்வெட்டித்துறை நகரப்பகுதியில் அவரது சகபாடிகளான ஓட்டோ சாரதிகள் தமது ஓட்டோ தரிப்பிடங்களில் கறுப்பு கொடிகளை கட்டி பறக்கவிட்டுள்ளனர். எனினும் அவ்விடத்திற்கு விர…

  23. மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் பிரிவினை வாதத்தை தோற்றிவிப்பதுடன் ஆபத்தான நிலைக்கும் இட்டுச் செல்லும் என பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் முதலமைச்சர்களினால் நிர்வகிக்கப்படும் மாகாணங்களிலும் 9 காவற்துறைகள் உருவாகும். இந்த காவற்துறை நிலையங்களின் நேரடியான நிர்வாகம் காவற்துறை மா அதிபரிடம் இருந்து மாகாண முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும். முதலமைச்…

  24. விடுதலைப் புலிகளுக்கு உதவியதை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் கனேடியத் தமிழர் சுரேஸ் [ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:09 GMT ] [ கனடா செய்தியாளர் ] விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா. 2004 செப்ரெம்பருக்கும். 2006 ஏப்ரலுக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு, விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு இவர் உதவியுள்ளார். நியூயோர்க், புரூக்லின் நீதிமன்றத்தில், சுரேஸ் சிறீஸ்கந்…

  25. ரத்மலானையில் உள்ள இராணுவக் கல்லூரி ஆசிரியை ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து, அவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக விமானப்படை வீரர் ஒருவரை பொலிசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் இராணுவ வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது; ரத்மலானை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றும் பெண் ஒருவருக்கு விமானப்படை வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த ஆசிரியையுடன் அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கிய விமானப்படை வீரர், அதன்போது அவரின் நிர்வாணப் புகைப்படங்களையும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார். தற்போது அதனை வைத்துக் கொண்டு அவர் ஆசிரியையை மிரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியை பொல…

    • 3 replies
    • 533 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.