Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனையே இறக்குமதி செய்யப்பட்ட மேற்குலக வெளிநாட்டு சிந்தனை என்று சொல்லி சிங்கள மக்களை தவறாக வழி நடத்தி ஏமாற்றும் அரசியலை சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, குணதாச அமரசேகர மற்றும் ஞானசார தேரர் ஆகியோர் செய்கிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 1965லும் இந்நாட்டு சிங்கள பிரதமர்கள் தமிழ் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அதிகாரப் பரவலாக்கல் கொள்கையை மிகத் தெளிவாக ஏற்றுக்கொண்டு இருந்தன. அந்த சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் மீது எந்தவித அமெரிக்க மற்றும் மேற்குலக அழுத்தங்களும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே அதிகாரப்பகிர்வு என்பது இறக்குமதி செய்யப்பட்ட மேற்குலக வெளிநாட்டு சிந்தனை என்பது பொய்யாகும். இந்த …

  2. கிளிநொச்சி கண்ணகைபுரம் பகுதியில் கிராமிய சங்க தலைவர் மற்றும் அவரது சகோதரர் இருவர் படைத்தரப்பினாலும் அரச ஆதரவு குழுக்களினாலும் கொலை அச்சுறுத்தல்களை எதிர் கொண்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்த நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட தமது கிராமத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அனுசரணையுடன் புலம்பெயர் தரப்பினது உதவிகளை பெற்று வழங்கியதற்காகவே இக்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கண்ணகை கிராம அபிவிருத்தி சங்க தலைவரான 32 வயதுடைய கந்தையா கேதீஸ்வரனை தேடி சுமார் 18 பேர் வரையிலான படையினர் நேற்றுக் காலை வேளை வாகனமொன்றில் வீட்டிற்கு சென்றுள்ளனர். எனினும் அவ்வேளையில் அவர் அங்கு நின்றிராமையினால் அருகாகவுள்ள சகோதரரான 45 வயதுடைய கந்தையா கனகசுந்தரம் என்பரை விசாரணைக்கு…

  3. ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் இந்திய- ரஷ்ய கூட்டுச் சதியின் பிரகாரம் நடைபெற்றதாக ரஷ்யப் பத்திரிகையொன்று பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் வெளிவரும் முன்னணி செய்திப் பத்திரிகைகளில் ஒன்றான Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதுவித தொடர்புகளும் கிடையாது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஷ்யா நாட்ட…

  4. இந்தியாவை இலங்கை மறைமுகமாக எச்சரிக்கிறதா..?- பாகிஸ்தான் இராணுவதளபதி நாளை இலங்கை வருகிறார்.. பாகிஸ்தான் இராணுவதளபதி ஜெனரல் ஆஸாப் பர்வேஸ் கயானி வரும் 27ம் திகதியில் இருந்து மூன்றுநாள் பயணமாக இலங்கை வருகிறார் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2011 தை மாதம் இடம்பெற்ற அவரது முன்னைய பயணத்தின் பின்னர் இடம்பெறும் இலங்கைக்கான அவரது இரண்டாவது பயணம் இதுவாகும். இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் ஜெனரல் ஆஸாப் பர்வேஸ் கயானி இலங்கையின் உயர் ராணுவ அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார்.அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவையும் சந்தித்து உரையாட இருக்கிறார். மேலும் 28 ஜூன் 2013 அன்று தியத்தலாவை இராணுவப் பயிற்ச…

    • 2 replies
    • 722 views
  5. மத்திய அரசின் இடமாற்றத்தை மறுத்து இலங்கை தனது படை அதிகாரிகளை இந்தியாவில் இருந்து திருப்பி அழைக்கிறது.. தமிழ்நாடு வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்திருந்த தனது இரண்டு படை அதிகாரிகளையும் தமிழ்நாட்டு மக்களின் அழுத்தத்தை அடுத்து இந்திய மத்திய அரசு புனேக்கு மாற்றியதை ஆட்சேபித்து இலங்கை மீண்டும் தனது நாட்டுக்கு திருப்பி அழைத்துள்ளது. கடந்த மே மாதம் 27 ஆம் திகதியில் இருந்து வெலிங்டன் பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரியில் ஒருவருட பயிற்சியை மேற்கொண்டு வந்த விங் கமாண்டர் எம்.எஸ் பண்டார திஸாநாயக்கா மற்றும் மேயர் சி.எஸ் கரிச்சந்திரகெட்டியாராய்ட்ச்சி ஆகிய இரண்டு அதிகாரிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை திரும்பி உள்ளனர்.. எனினும் இந…

  6. இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் 810 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கைதிகள் கிடையாது எனவும், கொலை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில்ழ ஆதாரங்கள் உடைய புலி உற…

  7. கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க முயற்சித்துள்ளனர். சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது மீட்கப்பட்ட செய்மதி தொலைபேசிகளின் ஊடாக இந்தத் திட்டம் அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளையை, மகசீன் சிறைக்கு அழைத்து சந்திப்பதற்கு கைதிகள் முயற்சித்துள்ளனர். புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறையிலிருந்து 18 செய்மதித்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. புதிய மகசீன் சிறையில் 300 புலிக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்…

  8. முல்லைத்தீவு, கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில், போர் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரால் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாகக் கேப்பாபிலவில் பொது மக்களின் காணிகள் உட்பட 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதில் ஆயிரத்து 500 ஏக்கர் வரையிலான காணி அரச காணி என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 526 ஏக்கர் காணி தனியா ருக்குச் சொந்தமானது. 4 ஆயிரம் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காகவே மேற்படி காணியைச் சுவீகரிக்கும் நடவட…

  9. 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென இரண்டு மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபரகமுவ மற்றும் தென் மாகாணசபைகளில் 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. சபரகமுவ மாகாணசபையில் இந்தத் தீர்மானம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர விடயமாக மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் இந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தார். இந்தத் தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, தென் மாகாணசபையிலும் 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு மேலதிக வாக்கினால் இந்தத…

  10. "13'ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்காமல் மாகாணசபை முறைமையை மேலும் பலப்படுத்தி தமிழர்களின் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதைவிடுத்து "13' இல் கைவைத்து இந்தியாவை எதிர்த்தால் கச்சதீவு பறிபோய்விடும்.'' இவ்வாறு நேற்று அபாயச் சங்கு ஊதியுள்ளனர் "13' ஐ பாதுகாப்பதற்காக அணிதிரண்ட ஆளுந்தரப்பிலுள்ள இடதுசாரி அமைச்சர்கள். "13' ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆளுந்தரப்பின் இடதுசாரி அமைச்சர்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள லங்கா சம சமாஜக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, ராஜித சேனாரட்ண, ரெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்துகொண்டனர். …

  11. 13 ஆவது திருத்தத்தில் கை வைக்காமைக்கு இந்தியா, ஜப்பானின் அழுத்தங்களே காரணம்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எம் மீது சுமத்திய இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை …

  12. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை இலங்கை திரும்புமாறு கோரிக்கை 24 ஜூன் 2013 இலங்கையில் நடந்த போர் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தின் பொருளாதார நிலைமை, ஸ்தீரமடைந்துள்ளதால், மீண்டும் இலங்கை திரும்புமாறு, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாது, நாட்டின் அனைத்து பிரதேசங்களும் தற்போது துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் தொடர்ந்தும் அகதிகளாக இருக்கும் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள அமைச்சர், அங்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்முகத்தின் போ…

    • 8 replies
    • 1.2k views
  13. முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபரிக்கா பிராந்தியத்தின் தென் கெமரூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18987

  14. வடக்குத் தேர்தல் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் பின்னணியாக வைத்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் நெருக்கடிகளை அதிகரிக்கப்படும் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18962

  15. இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18983

    • 0 replies
    • 683 views
  16. வீழ்ந்துபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களதும் உலகத் தமிழர் மக்களதும் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் விசுவாசிக்களாகச் சொல்லிக்கொள்கின்ற ஒரு அணி சமூக வலைத்தளங்கள் ஊடாக தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் ஈழவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளையும் கொச்சைப்படுத்தி மிகக் கேவலமான பரப்புரை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. புலத்தில் உள்ள மக்களது போராட்டங்களைக் கைவிடுமாறு ‘சோ’வினுடைய ‘துக்ளக்’ இதழுக்கு தமிழின விரோதி கருணா வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றினை துணையாக கையிலெடுத்து கலைஞரின் பரிவாரக் கும்பல் எமது இனவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் மிகத் தீவிரமாக எழுதி வருகின்றது, தமிழனுக்கு உலகில் முகவர…

  17. 25 ஜூன் 2013 யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னோடு அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. கொக்­கு­விலில் அமைந்­துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்­சி­யா­ளர்­களைக் கொண்ட குழு­வினர் கடந்த நவம்பர் மாதம் கந்­த­ரோடைப் பகு­தியில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்­சியின் போது இவற்றைக் கண்டு பிடித்­தனர். கண்டு பிடிக்­கப்­பட்ட பொருட்­களில் அம்­மியின் புகைப்­ப­டத்­தையும் அம்­மியின் ஒரு பகு­தி­யையும் சில ஓட்டுத் துண்­டு­க­ளையும் எக்…

  18. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்ல உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கல் பிரதேசத்திற்கு நேரடியாக சென்று நிலைமைகளை ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது. நவநீதம் பிள்ளை தனது இலங்கைக்கான பயணத்தை பல முறை ஒத்திவைத்தார். இந்த நிலையில், அவர் ஆகஸ்ட் 25 ஆம் திகதி இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு செல்லும் அவர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்…

  19. அனுமதிப்பத்திரமின்றிய சிறிய லொறியொன்றில் கொண்டுசெல்லப்பட்ட 21 ஆடுகளை அலவத்துகொடை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை அக்குறணை, பங்கொல்லாமட பிரதேசத்திலிருந்து கம்பளை பிரதேசத்திற்கு லொறியொன்றில் இந்த ஆடுகளை கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, அக்குறணை நகரில் இந்த ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர். ஆடுகளை கொண்டு செல்லுவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/72285-21-.html

  20. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஈ.பி.டி.பி. ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈ.பி.டி.பியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது. இதன்போது மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் இது குறித்த முடிவுகளை நேற்று எடுக்கமுடியாத நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தனித்துப் போட்டியிடுவதா இல்லையா என்று ஈ.பி.டி.பி. தீர்மானிக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 40 வீதமான ஆசனங்களையே அரசு ஈ.பி.டி.பிக்கு ஒதுக்க உள்ளதாக செய்திக…

  21. 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுவுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கூட்டாக சூளுரை விடுத்தனர். இலங்கையை பாதுகாக்க சீனா ஒருபோதும் முன்வரமாட்டாது என்பதை சிங்கள அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைச்சர்கள் தெரிவித்தனர். மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக ஐக்கிய இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சம…

  22. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் விக்கிர உடைப்பு இடம்பெற்ற குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் பிரிவின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அரசியல் அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டனர். இதன்போது இவர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடயமாக தெரிவித்ததாவது! வடக்கு கிழக்கு மாகாணங்களிலே கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று அம்பாறை,…

  23. தமிழக மக்களினதும் தமிழக அரசினதும் அழுத்தத்தை அடுத்து தமிழ்நாடு வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த இரண்டு இலங்கையை சேர்ந்த படை அதிகாரிகள் நேற்று தமிழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 27 ஆம் திகதியில் இருந்து வெலிங்டன் பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரியில் ஒருவருட பயிற்சியை மேற்கொண்டு வந்த விங் கமாண்டர் எம்.எஸ் பண்டார திஸாநாயக்கா மற்றும் மேயர் சி.எஸ் கரிச்சந்திரகெட்டியாராய்ட்ச்சி ஆகிய இரண்டு அதிகாரிகளுமே அவர்களது குடும்பங்களுடன் பலத்தபாதுகாப்பின் மத்தியில் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 10 இராணுவண்டிகளில் ஆயுதம் தரித்த இந்திய இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் இரண்டு இலங்கை இராணுவ அதிகரிகளும் கோயம்பு…

  24. ஈழத்தில் முள்ளியவளை ஹிக்கிராபுரத்தில் வசிக்கும் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தும் நோக்கோடு நேற்று முன்தினம் அதிகாலை வேளை அங்கு சென்ற இலங்கை படையினர் மூவர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் ஓடித்தப்பியுள்ளனர். ஆயினும் ஒரு படைச்சிப்பாய் பொதுமக்களால் பிடித்துக் கட்டி வைக்கப்பட்டார். படைச் சிப்பாய் கட்டி வைக்கப்பட்ட செய்தியறிந்த ஏனைய படையினர் நேற்று திங்கட்கிழமை காலை அந்த இடத்திற்கு வருகை தந்து பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு குறித்த சிப்பாயை மீட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முள்ளியவளை ஹிக்கிராபுரத்தில் முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் கிராமத்திற்கு அண்மையில் சிறிலங்கா படையினரின் காவலரண் உள்ளது. இந்தக் காவலரணிலுள்ள மூன…

    • 0 replies
    • 779 views
  25. தமிழீழ மக்களுக்கு அடித்தால் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தி நியாயம் கேட்கும் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு அறிக்கை வெளியிட்டுள்ளனர் : அறிக்கை பின்வருமாறு : கடந்த 20 ஆம் நாள் வியாழக்கிழமை லண்டனில் இடம்பெற்ற சம்பவம் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி மௌனித்திருந்த தமிழ் மக்களை, மீண்டும் ஒருமுறை சீண்டித் தட்டியெழுப்பியுள்ளது சிங்களம். அமைதியான வழியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய சிங்களம், தமிழர்களைப் போராட்டக் களத்தில் இழுத்ததுடன் நிற்காமல், தனது சுய உருவத்தை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு நிருபித்துக் காட்டியுள்ளது. லண்டனில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியைப்…

    • 0 replies
    • 550 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.