ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
50 அடி உயரத்தில் இருந்து விழுந்து சீனப் பிரஜை பலி! அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கடுவெவ பிரதேசத்தில் மேம்பால நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயதான குறித்த சீனப் பிரஜை, நிர்மாணப் பணிகளின் போது சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளார். இதனால் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சீனப் பிரஜையின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.adaderana.lk/tamil/news.php?nid=40797
-
- 3 replies
- 646 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலை செப்டம்பர் 14ஆம் திகதிக்குப் பின்னரே நடத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18826
-
- 0 replies
- 343 views
-
-
தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வினை கோரி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் வலுவிழக்கச் செய்யப்படுவதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட முயற்சிக்க வேண்டுமே தவிர, எதிராக செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு காணிப் பிரச்சினை மற்றும் யுத்த…
-
- 1 reply
- 697 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலம் பெயர் தமிழிர்களின் ஆதரவின்றி அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும் என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தொடர்ந்த வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18767
-
- 1 reply
- 572 views
-
-
13ஐ பலவீனப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது: பிள்ளையான் ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் கிழக்கில் நிருவகித்தவன் என்ற அடிப்படையிலும் அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால் 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். சி. சந்திரகாந்தன் நேரடி விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 180 இலட்சம் ரூபாய் செலவில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லையில…
-
- 1 reply
- 460 views
-
-
நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18551
-
- 1 reply
- 464 views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தன்? கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தன்-? கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை கலைத்து புதிய அமைச்சரவை ஒன்றை நியமிப்பதா அல்லது மாகாண சபையை கலைத்து விட்டு புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவரது அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோருடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சரை மாற்றுமாறு அரசதரப்ப உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஆளுநரை மாற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்த…
-
- 1 reply
- 703 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இந்தோனேஷியாவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் அம்பலப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18775
-
- 0 replies
- 567 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து உள்நாட்டில் வாழ்பவர்களுக்கு மீண்டும் அவர்களது சொந்த இடங்களிலேயே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18764
-
- 0 replies
- 282 views
-
-
தமிழகத்திலிருந்து இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் வெளியேறினர் வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்தின் நுழைவு வாயில் இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார். இலங்கையைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க தமிழக அரசு உட்பட பல்தரப்பிலிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில், இந்த இரு அதிகாரிகளும் கடந்த…
-
- 1 reply
- 460 views
-
-
சற்று நேரத்துக்கு முன்னர் லண்டன் காடிஃப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த சிங்கள இளைஞர்களை தமிழிளைஞர்கள் குறிவைத்து தாக்கியுள்ளார்கள். இதில் சிங்கள காடையர் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தாக்குதலை நடத்திய தமிழர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் , ஈழத் தமிழ் பெண் ஒருவரை சிங்களக் காடையர்கள் சூ காலல் உதைந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதற்கான எதிர் ஆர்ப்பாட்டமாக இது நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் பெரும் உணர்ச்சியோடு கலந்துகொண்டார்கள். ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்திய இலங்கை கிரிகெட் போட்டி என்பதால் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அனைத்து இந்தியர…
-
- 218 replies
- 17.2k views
-
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் ரி 56 ரக துப்பாக்கியுடன் முசக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18579
-
- 2 replies
- 623 views
-
-
தேர்தலுக்கு முன்னர் வட மாகாண ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் - TNA தேர்தலுக்கு முன்னர் வட மாகாண ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. படையதிகாரி ஒருவர் வட மாகாணத்தின் ஆளுனர் பதவியை வகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.வட மாகாணசபைத் தேர்தல்கள் நீதியானதும், சுயாதீனமானதுமான முறையில் நடத்தப்பட வேண்டுமாயின் ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். சிவிலியன் ஒருவரே வட மாகாணசபையின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். வட மாகாணசபையின் ஆளுனர் பதவியை இராணுவ அதிகாரியொருவர் வகித்து வரும் வரையில்…
-
- 0 replies
- 484 views
-
-
தெரிவுக்குழு குறித்து விரைவில் முடிவு : ததேகூ இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார்.இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை இலங்கை அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. இந்த தெரிவுக்குழுவில் சேரும்படி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு வந்ததாகவும், ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தியா செல்வதற்கு முன்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த சம்பந்தர், தற்போது தமிழ் தேசிய க…
-
- 0 replies
- 362 views
-
-
கிழக்கின் முதலமைச்சருடன் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையினால் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நியமிப்பதா அல்லது கலைத்துவிட்டு தோ்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசித்து வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சா் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையினான குழுவினா் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் புதிய முதலமைச்சா் தொடா்பாக பேசியதாகவும் அறியமுடிகின்றது. கொழும்பில் நேற்றிரவு நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் கிழக்கு மாகாண சபை தொ்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தமிழத்தேசிய க…
-
- 1 reply
- 415 views
-
-
தமிழகத்தின் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் இலங்கை படை அதிகாரிகள் இருவரையும், வேறெந்த பயிற்சி கல்லூரிக்கும் இடம்மாற்றுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை படை வீரர்களுக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதனை தமிழக அரசும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வெலிங்டனில் பயிற்சி பெற்று வரும் இரு படை அதிகாரிகளையும் புனேயில் உள்ள இராணுவத் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரிக்கு இடம்மாற்றும் யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டினை அடுத்து பாதுகாப்பு செயலர் இந்தியாவுடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளார். அதன…
-
- 0 replies
- 534 views
-
-
இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்: ஹெல உறுமய இங்கிலாந்தில் வசிக்கும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசாங்கம், பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்த போதிலும், பிரித்தானிய அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவினரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு முறைமுகமாக வழங்கி வரும் ஒத்துழைப்பு காரணமாகவே, பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் நடைபெற்…
-
- 6 replies
- 1.1k views
-
-
மாத்தளை புதைக்குழி இருந்த இடத்தில், 88-89 ஆம் ஆண்டுகளில் இராணுவ சித்ரவதை முகாம் இருந்தது எனவும் இந்த முகாமிற்கு தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் அன்று பொறுப்பாக இருந்தார் எனவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்த நிலையில், குறித்த வழக்கை விசாரணை செய்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18581
-
- 0 replies
- 436 views
-
-
-
- 1 reply
- 512 views
-
-
பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை தோட்ட பகுதியிலுள்ள நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் குறித்த பகுதியிலுள்ள 14 குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 395 views
-
-
இலங்கையிலுள்ள 49 லட்சம் தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு காணப்படுவதாக இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=18500
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கை அரசாங்ம் குற்றமிளைக்கவில்லை, தமிழர்களுக்கான ஜனநாயக உரிமைகளை சிறைசெய்யவும் இல்லையெனின் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்திய விஜயத்திற்கு ஏன் அச்சப்படவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=18495
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கையின் தேசிய விவகாரங்களில் தலையிட்டு மீண்டுமொரு அமைதியின்மையை நாட்டில் தோற்றுவிக்க முயற்சிக்கும் சர்வதேச சதியாளர்களுக்கு, களம் அமைத்து கொடுக்கும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=18492
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளிலுள்ள புலம் பெயர் தமிழர்கள் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18504
-
- 0 replies
- 379 views
-
-
'புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே காரணம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூன், 2013 - 17:27 ஜிஎம்டி விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் மகிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிடுகிறார் இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறுகிறார். வட- மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது, தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவி…
-
- 3 replies
- 783 views
-