Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்காவை அமெரிக்கா கவனமாக அவதானித்து வருவதாக, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள ஐ.நா செயலகத்தில், நேற்று செய்தியாளருக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “சிறிலங்காவில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்படாதது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது …

  2. வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15923

  3. வட மாகாணசபை தேர்தலின் போது சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் வடமாகாணசபை தேர்தலுக்கு முதல் வட மாகாணத்தில் ஆளுநராக பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி அகற்றப்பட்டு, அம்மாகாண ஆளுநராக குடியியல் நிர்வாக அதிகாரி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15879

  4. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் வழமையாக செயற்படுவதைப்போன்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். ஏனைய மாகாணங்களில் இடம்பெற்ற தேர்தலைப் போன்று வடக்குத் தேர்தலையும் நடத்துமாறும் அவ்வாறில்லாது போனால் எமது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனக் கோரி அரசாங்கத்திற்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கடிதம் ஒன்றையும் அனுப்…

  5. பாங்கொக்கிலிருந்து சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்த முயற்சித்த நபர் ஒருவர் மத்தள விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15909

  6. அரசாங்கம் தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடாத நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் அவசரமாக சமர்ப்பிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களை தேர்தல் நடைபெற முன்னர் பதிவுசெய்யும் சட்டமூலமானது இறுதி நேரத்தில் அவசரமில்லை எனக் கூறி வே…

  7. இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து எங்களுக்கு தடை விதித்தவர்களுக்கு நாங்கள் தடை விதிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15940

    • 0 replies
    • 565 views
  8. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என தென்னிலங்கை சக்திகளே பிரசாரங்களை மேற்கொண்டிருக்கிறார்களே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கள் எந்த பிளவும் கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=15880

    • 0 replies
    • 356 views
  9. வேலுடன் முருகன் இருக்கையில் அரச மரத்துடன் புத்தர் எதற்கு? - சீ.யோகேஸ்வரன் அம்பாறை - உகந்தை முருகன் ஆலயத்தில் கட்டப்படவுள்ள பௌத்த விகாரையை உடன் நிறுத்துமாறு கோரி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அம்பாறை மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவசர கடிதமொன்றை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,, இலங்கை இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக பல ஆயிரம் ஆண்டு காலமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள உகந்தை முருகன் ஆலய சூழலில் சில பௌத்த துறவிகளினது ஆலோசனையில் திட்டமிட்ட வகையில் தாபிக்க திட்டமிட்டுள்ள பௌத்த விகா…

    • 5 replies
    • 1.5k views
  10. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டாம் என கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த12 பேர் விடுத்திருந்த கோரிக்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக அரசசார்பற்ற நிறுவனங்களுடனோ, மத அமைப்புகளுடனோ எவ்விதமான இணக்கப்பாடுகளுக்கும் செல்வதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இந்த கோரிக்கையை நிராகரிக்க நேர்ந்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் கருத்துக்களை கேட்டறியாது, இந்தியாவினால், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது. அப்போது மேற்படி அமைப்புகள்…

  11. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக யுத்தக் குற்றச் செயல்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீவன் ரெப் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எவ்வாறான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகஸ்ட…

  12. வட மாகாணசபைத் தேர்தலர் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டம் மாகாணசபை முறைமை போன்றன தொடர்பில் நிலவி வரும் சர்ச்சைகள் காரணமாக வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து இந்தப் பிரச்சினைகளுக்கு அதன் மூலம் தீர்வு காணப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவான தரப்பினரது கருத்துக்களையும் எதிரான தரப்பினரது கருத்துக்களையும் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு வழியமைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வெகு விரைவில்…

  13. ஆலய முன்றலில் பாதுகாப்பு மிக்க இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளன. ஆலய முன்றலில் பாது காப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பலவந்தமாக உடைக்கப்பட்டு அதனுள் ளிருந்த பணம் திருடப் பட்டுள்ளது. ஆலய வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது கைகூடாததால் கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிறு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு செய்யப்பட்ட தாகத் தெரி விக்கப்பட்டது. பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன…

  14. முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் உற்சவம் ஆரம்பமாகிறது. கடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும்…

    • 22 replies
    • 1.5k views
  15. யார் அழைத்து நுழைந்தார் அமைச்சர்? யாழ். போதனா வைத்தியசாலையின் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ஒருவர் கலந்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கிழக்கு ரோட்டரிக் கழகத்தினால் யாழ். போதனா வைத்தியசாலை சிறுவர் புற்றுறோய் விடுதிக்கு நவீன வசதிகளுடனான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. காலை 11 மணிக்கு ரோட்டரிக் கழகத்தினால் குறித்த விடுதி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் சப்பிரதாய பூர்வமாக கையளிக்கப்படவிருந்த வேளை திடீரென நுழைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடா வெட்டி திறந்து வைத்தார். இது குறித்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டபோது, அமைச்சரை நாங்கள் அழைக்கவில்லை. அவரை ரோட்டரிக் கழகத்தினரே அழை…

    • 3 replies
    • 651 views
  16. மன்னார் மாவட்டத்தில் காலகாலமாக வாழ்ந்து வருகின்ற கழுதைகளை பராமரித்து பாதுகாப்பதே தமது நோக்கமென இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவரும் கால்நடை இணைப்பாளருமான ரமேஸ் குமார் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலுள்ள கழுதைகளை பராமரித்து அவற்றை பாதுகாக்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கே தாம் மன்னாருக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். மன்னார் நகரசபையும் டயஸ்போரா லங்கா அமைப்பும் இணைந்து மன்னார் மாவட்டத்திள்ள கழுதைகளின் பராமரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெமன்னார் மாவட்டத்தில் காலகாலமாக வாழ்ந்து வருகின்ற கழுதைகளை பராமரித்து பாதுகாப்பதே தமது நோக்கமென இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவரும் கால்நடை இணைப்பாளருமான ரமேஸ் குமார் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலுள்ள க…

    • 9 replies
    • 955 views
  17. 13இல் திருத்தம் செய்யாது புதிய அரசியலமைப்பை உருவாக்குக; கத்தோலிக்க பேராயர் பேரவை கோரிக்கை 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றத்தை எற்படுத்தாது நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக பேச்சுநடத்தி புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தோலிக்க பேராயர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல் அல்லது மாற்றங்களை ஏற்படுத்துவதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான நிலைமை குழப்பம் அடையும் எனவும் பேரவை சுட்டிக் காட்டியுள்ளது. கத்தோலிக்க பேராயர் பேரவையின் தலைவர் ஆயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 13வது திருத்தத்தை மாற்றம் செய…

    • 0 replies
    • 428 views
  18. வடக்கு தேர்தலில் 5000 கண்காணிப்பாளர்கள்: 10 பேர் வெளிநாட்டவர்கள் வட மாகாண சபைத்தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தங்களுடைய குழு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என்றும் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேரை வரவழைக்கவிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் வடமாகாணத்திலேயே கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வடமாகாண சபையுடன் இணைந்து நடாத்தப்படும் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுவ…

    • 4 replies
    • 654 views
  19. ரணில் குழுவினர் மீது தாக்குதல்! எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலபிட்டிய - மீகெட்டுவத்த பிரதேசத்தில் இன்று (11) மாலை 4.30 அளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். மீன்பிடி தொழிலுக்குச் சென்று கடும் காற்று காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர். அதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும்…

    • 0 replies
    • 503 views
  20. இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் முகாமிற்கு பலத்த பாதுகாப்பு இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய தகவர்கள் தெரிவிக்கின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் இராணுவ முகாம் மற்றும் இராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறுநாடுகளை சேர்ந்த இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் திகதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தார தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திர ஹெட்டியராச்சிகே ஆகியோ…

    • 0 replies
    • 706 views
  21. முள்ளிவாய்க்கால் பேரவல இறுதி இரு தினங்கிளிலும் சுமார் 40 ஆயிரத்திற்குமதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் யாழ். ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் அதற்கு முன்னதாக வன்னியில் இறுதி யுத்தகாலத்தில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதே வேளை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில் 'நான் ஒன்றும் சம்பந்தன் போன்று சிங்கக்கொடியினை பிடித்திருக்க…

  22. யுத்தத்தில் உயிர் நீத்தோர் நினைவு நிகழ்வில் பங்கேற்கக் கூடாது என இலங்கைக்கு தடை விதிக்க முடியாது என பிரித்தானியா அறிவித்துள்ளது. முதலாம் உலக யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் நினைவு நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இலங்கைக்கு அனுமதியளிக்கக் கூடாது என மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மனித நிலைமைகள் மோசமாக காணப்படுவதாகவும் இதனால் இந்த நிகழ்வில் இலங்கையை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஸ்கொட்லாந்து கிளை தெரிவித்துள்ளது. கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்கும் தலைவர்கள் பற்றிய இறுதி பட்டியல…

  23. வட மாகாண சபைத் தேர்தலிலேயே இலங்கையின் எதிர்காலம் உள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வட மாகாணம் கூட்டமைப்பினரிடம் சென்று விட்டால் அது தனி ஈழமாகவே பிரகடனப்படுத்தப்படும். இதற்கு ஒரு போதும் இடமளிக்கக்கூடாது வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் ரத்துச் செய்ய வேண்டும். தமிழீழ பேராட்டத்திற்கான இரண்டாவது சந்தர்ப்பத்திற்கு இடமளிக்கப்போவதில்லை. சம்பந்தன் குழுவினர் இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது தமது தனி ஈழக் கனவை நனவாக்கிக் கொள்வதற்கேயாகும். வடக்கு தேர்தல் தற்போதுள்ள அதிகாரங்கள் பிரகாரமே நடைபெற்றால் வடக்கிலிருந்து அனைத்து இராணுவமும் விரட்டியடிக்கப்படும். அதற்கு பின்னர் மத்தியரசு தூக…

  24. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் நாளை புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியலமைப்பு வரைபு தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எமது அரசியலமைப்பு வரைவு பற்றி ஜாதிக ஹெல உறுமய எம்முடன் கலந்துரையாடுவதற்கு விரும்புவதாக அறிவித்துள்ளது. நாம் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இதுவொரு நல்ல ஆரம்பமாக அமையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகள் மற்றும் மதகுருமார்களுடன் இந்த அரசியலமைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். http://tamil.dailymirror.lk/201…

  25. அம்பாறையில் புதிதாக பெளத்த விகாரை அமைக்கும் திட்டத்தை உடன் கைவிடுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்திலுள்ள உகந்தை முருகன் ஆலய சூழலில் சில பெளத்த துறவிகளினது ஆலோசனையில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்ற பெளத்த விகாரை அமைக்கும் செயற்பாட்டையும் அரச மரம் நடும் செயற்பாட்டையும் நிறுத்த உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். 50 வருடங்களுக்கு தமிழ் மக்களை பெரும்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.