Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கப்பல் செல்லாத துறைமுகம், விமானம் செல்லாத விமான நிலையம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளது - சரத் [Friday, 2013-04-26 09:08:23] மக்கள் மீது சுமைகளை திணிப்பது பொருளாதார வளர்ச்சியாகாது என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காபட் செய்த பாதைகளை கடக்கும் போது எமக்கு சிரிப்பு வருகிறது. ஏனெனில், இந்த பாதையின் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 50 மில்லியன் ரூபா தரகுப் பணத்தை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொள்கின்றனர். நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கு 7000 கோடி ரூபா ஒதுக்கப்படும் அதேவேளை, நாட்டை ஆட்சி செ…

  2. தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் 24 ஏப்ரல் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி தயா மாஸ்டரும், புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரும் புதுமத்தளான் பிரதேசத்தில் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்திருந்தனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91060/language/t…

    • 14 replies
    • 1.1k views
  3. ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்றைய தினம் குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த 11 அகதிகளும் நேற்றைய தினம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கு குடியுரிமை பெற்ற குறித்த 11 பேர் உள்ளடங்களாக 44 இலங்கை அகதிகளின் குழு கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழகத்துக்கு அகதிகளாக தப்பி சென்றனர். இந்த நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். எனினும் பயணத்தின் இடையில் அவர்களின் படகு பழுதடைந்தநிலையில், ஐக்கிய…

  4. நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்க உள்ளது சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கிய மிகப்பெரிய கடனான 1350 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த முடியாமல் உள்ளதால் நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை அந்த சீன நிறுவனத்திடம் கையளிக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்சார விலையை அதிகரிப்பதா இல்லை சீன நிறுவனத்திடம் தொழில்சாலையை கையளிப்பதா என்ற இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு இரண்டாவது தெரிவை நடமுறைப்படுத்த உள்ளதாகவும் அறியப்படுகின்றது. Norochcholai coal plant to be transferred to Chinese company Discussions are underway to transfer the Norochcholai coal power plant to the Chinese company in l…

  5. வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் 29 கோடி ரூபா பணம் அபேஸ்? ON 25 APRIL 2013. சுமார் 29 கோடி ரூபா பணத்தை மோசடிசெய்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள அரச வங்கியொன்றின் முகாமையாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது. இந்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வந்து சரணடைந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் சில சந்தேகநபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள முகாமையளார் உதவி செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் இதுவரையில் 14 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரா…

    • 1 reply
    • 633 views
  6. சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் மிச்செல் ஜே. சிசன்.... By General 2013-04-22 18:31:00 சர்வதேச புவி தினமான இன்று திங்கட்கிழமை அமெரிக்கத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையின்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிசன் மற்றும் தூதரக ஊழியர்கள் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் காணப்பட்ட குப்பைகளை சேகரித்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=4126

  7. 'வலிகாமம் காணிகளை பொதுமக்கள் சென்று பார்க்கக்கூடாது' - ததேகூ கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஏப்ரல், 2013 - 06:53 ஜிஎம் வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் 6400 ஏக்கர் பொதுமக்களின் குடியிருப்பு காணிகளை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அந்தக் காணிகளைப் பொதுமக்கள் சென்று பார்வையிடக் கூடாது என்று கோரியிருக்கின்றது. காணி உரிமையாளர்கள் சென்று பார்க்க முடியாதவாறு அதியுயர் பாதுகாப்பு நிலையில் வைத்துள்ள இந்தக் காணிகளை காணி எடுத்தல் சட்டப்படி சுவீகரிக்கப் போவதாகக் கூறி, அதற்கான அறிவித்தல்களை அந்தக் காணிகளில் அரசாங்கம் ஒட்டியிருக்கின்றது. ஆயினும் அந்தக் காணிகள் யாருடையவை என்பது…

  8. ரத்தினபுரியில் களியாட்ட விடுதியை சுற்றி வளைத்ததன் விளைவு: பிரசாந்த ஜயகொடிக்கு கொலை மிரட்டல்! [Thursday, 2013-04-25 10:26:50] "அதிகமாக ஆட்டம் போடாதே குடும்பத்துடன் கொன்று விடுவோம்" என தொலைபேசி மூலம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் ரத்தினபுரி நகரில் இயங்கி வந்த இரவு நேர களியாட்ட விடுதி மற்றும் கரோக்கே ஒன்றை சுற்றி வளைத்ததன் காரணமாக இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேரடியாகவே இந்த சுற்றி வளைப்பில் ஈடுப…

  9. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது: மனித உரிமை கண்காணிப்பகம் 2013-04-25 19:52:41 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய சாதகமான மாற்றங்கள் ஏற்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என கோரியுள்ளது. பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் தற்போதைய இலங்கை அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளது என தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கிரமமான விசாரணைகளோ நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிர…

  10. இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தவேண்டாம்! - கெலும் மக்ரே, ஷர்மாவிடம் கோரிக்கை இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லை எனவே அங்கு பொதுநலவாய உச்சி மாநட்டை நடத்தவேண்டாம் என சனல் 4 கொலைக் களங்கள் ஆவணப்பட தயாரிப்பாளரான கெலும் மக்ரே, பொதுநலவாய நாடுகளின் தலைவர் கமலேஷ் ஷர்மாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி சுழற்ச்சி முறையில் மாற்றப்படுவது வழக்கம்.அதன் தற்போதைய தலைவராக இந்திய இனத்தவரான கமலேஷ் ஷர்மா அவர்களே உள்ளார். அவரது மின்னஞ்சலுக்கு (asksharma@commonwealth.int ) ஆயிரக்கணக்கான ஈமெயில்களை தமிழர்களும் மற்றும் வேற்றின மக்களும் அனுப்பவேண்டும் என்று கெலும் மக்ரே தனது டிவீட்டர் ஊடாக தெரிவித்துள்ளார். இதேவேளை கனடா…

  11. அரசை சிக்கலுக்குள் உள்ளாக்கும் விதத்திலேயே மனிதஉரிமை மீறல் தீர்மானங்கள் : ஹக்கீம் By Farhan 2013-04-25 13:57:59 ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனிதஉரிமை மீறல் சம்பந்தமான தீர்மானங்கள், இலங்கையை ஐ.நா. பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபையிலும் சிக்கலுக்கும், இக்கட்டான நிலைமைக்கும் உள்ளாக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம்-வியட்நாம் பிரதமர் நகுயென் டான் டுங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், யுத்…

  12. வடமாகாண தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் உதயனை முடக்க அரசு முயற்சிக்கிறது. இதற்காக தம்மிடம் உள்ள விசேட உடை அணிந்த குழு ஒன்றினை உதயன் மீது ஏவிவிட்டு தாக்குதல் நடத்துகின்றது. இந்த சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு. இவ்வாறு தெரிவித்தார் ஐ.தே.கவின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தவைலர் இன்று நண்பகல் உதயன் பத்திரிகை நிறுவனத்தைப்பார்வையிட்டார். இதன் பின்னர் அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உதயன் எங்களை கருத்துக்களால் தாக்குகிறது. உதயனை அரசாங்கம் ஆயுதங்களால் தாக்குகிறது. ஊடகங்கள் மீதும் ஊடக வியலாளர்கள் மீதும் அரசு திட…

  13. இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு…

  14. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிறது. இதில் சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககர காப்டனாக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளை காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் . எந்த வழியிலாவது போராட்டகாரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மேலும் நூறு…

    • 0 replies
    • 481 views
  15. காசல்; மருத்துவமனையில் பரவியிருக்கும் விஷக்கிருமி இன்புளுவொன்சா ஏ என்ற வைரஸ் கிருமி கொழும்பு காசல் பெண்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார். விஷக்கிருமி ஒன்று பரவியதன் காரணமாக ஆபத்தான நிலையில், கர்ப்பிணி தாய்மார் சிலர் காசல் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் இரண்டு பெண்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் மாலை உயிரிழந்த பெண் பல காலமாக குழந்தை பாக்கியமில்லாமல் இருந்து, முதல் தடவையாக கர்ப்பமடைந்து, பிள்ளை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்…

  16. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறுகின்ற மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் அரசியலாக்கப்பட்டு, தமிழ் முஸ்லிம் சமூகத்தினரை இன ரீதியாகப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று இலங்கையின் பெண்கள் அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. ''இந்த நிலைமையினை, நிதியுதவி வழங்குபவர்களும், உதவி நிறுவனங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமது உதவிகளும், அவற்றின் பயன்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் சென்றடைவதற்கு ஏதுவாக, அரசியல் கலப்பற்ற சிவில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றுக்காக அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்னும் அமைப்பு கோரியிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் முஸ்லிம் மக்களைக் குடியேற்று…

  17. இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான இந்த பரீட்சையில் 37000க்கும் அதிகமானோர் பரீட்சை எழுதியதாகவும், அதில் 410 பேர் தேறியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத அரசியல் செல்வாக்குப் பெற்ற 60…

  18. தனக்கு எதிராக சேறுபூசும் இணையத்தளங்களின் உரிமையாளர்கள் இருக்கும் இடத்தை தான் சரியாக அறிந்து கொண்டால், அவ்வாறான நபர்கள் உலகில் எங்கிருந்தாலும் அங்கு சென்று அவர்களை சந்தித்து மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, தன்னை குறித்து இணையத்தளம் ஒன்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மறைந்திருந்து சேறுபூசாமல், நேருக்கு நேர் மோதலுக்கு வருமாறு தான் இணையத்தள உரிமையாளர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எதிர்வரும் 06 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கு முன்னர் …

  19. இணையத்தின் ஊடாக பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் By General 2013-04-24 22:58:37 இணையத்தின் ஊடாக பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் பிரித்தானியாவிற்கான சகல வீசா விண்ணப்பங்களும் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் கையெழுத்து மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளது. வீசா விண்ணப்பத்திற்கான நேர்முகத் தேர்வின் விண்ணப்பங்களை கணனிப் பிரதி எடுத்துக் கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=4177

  20. இலங்கையில் மற்றுமொரு தமிழ் இளைஞன் மீது சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ABC´s 7.30 செய்திக்கு அழைப்பை ஏற்படுத்தி இலங்கை பிரஜையான குமார் என்பவர் தனக்கு நடந்த துன்பத்தை கூறியுள்ளார். குமார் குறித்த ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தேன். இலங்கையிலுள்ள எனது உறவினருக்கு சுகவீனம் ஏற்பட்டபோது அண்மையில் இலங்கை சென்றிருந்தேன். அப்போது நானும் என்னுடைய சகோதரரும் ஆயுதம் தாங்கிய குழுவினர…

    • 0 replies
    • 485 views
  21. வலிகாமம் வடக்கு பிரதேச காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "இராணுவமே வெளியேறு, வலி. வடக்கு, கிழக்கு எங்கள் தாயகம், சிங்கள கூலிப்படையே அங்கு உனக்கு என்ன வேலை, வேண்டும் வேண்டும் எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு தமது கோஷங்களை எழுப்பினர். தழிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நவ சம சமாஜ கட்சி தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணா…

    • 8 replies
    • 538 views
  22. மூன்று மாதங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் டக்ளஸ் எட்டு மாதங்கள் கடந்தும் அது தொடர்பில் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார். எங்கள் காணிகள் பறிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எங்களை எங்கே கொண்டு சென்று மீள்குடியமர்த்தப் போகிறார் என்று வலி.வடக்கு மக்கள் நேற்றுக் கேள்வியெழுப்பினர். தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுவிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது பிரதேசங்கள் நிரந்தரமாக இராணு வத்தினரால் பறிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் கேட்டன…

    • 2 replies
    • 798 views
  23. மசாஜ் நிலைய போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை (படங்கள்) திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி ஒன்று பிரதேச மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதில் அந்நிலையத்தின் முகாமையாளர் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிசாரால் அங்கிருந்த இரண்டு யுவதிகள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் போது அங்கு மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உப்புவெளி பொலிசார் இவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக இப்பிரதேசத்தில் புதிதாக பல வீடுகள் விடுதிகளாக மாற்றப…

    • 0 replies
    • 724 views
  24. செங்கலடி இரட்டை கொலை: சந்தேக நபர்களுக்கு 8ஆம் திகதிவரை விளக்கமறியல் பேரின்பராஜா சபேஷ் செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது. பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். செங்கலடி …

  25. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையென்பது அம்பலமாகியுள்ளது. இன்று கள யதார்த்தத்தை பார்வையிட நேரில் சென்ற சட்டத்தரணிகள் குழு ஒன்றின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. தமது கட்சிக்காரரென அடையாளப்படுத்தப்பட்ட வலிவடக்கின் காங்கேசன்துறையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அழைத்துச்சென்ற சட்டத்தரணிகள் குழு அவரது காணியினை பார்வையிட அனுமதிக்குமாறு கோரியிருந்தது. எனினும் அவர்களை உள்ளே செல்ல அனமதி மறுத்த படையினர் பின்னர் அதிகாரிகளை தமது காவல் நிலையத்திற்கு உடனடியாக அழைத்துள்ளனர். இதைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.