ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=dF4XQaJZTGQ
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் நாட்டில் மாணவர் சமுதாயத்தால் முன்னெடுக்கப்படும் அறநெறிப் போராட்டங்களையும் நன்றியோடு வரவேற்பதோடு அங்கு ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டத்தகாத வன்முறைச் செயல்கள் எமக்கு வருத்தமளிப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்டு இந்தியா வந்திருந்த பௌத்த மத பிக்கு ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தபோதும், மற்றொரு பௌத்த பிக்கு சென்னை மத்திய புகையிரத நிலையத்திலும் தாக்கப்பட்ட சம்பவங்களை ஊடகம் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றோம். ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களையும், அதுவும் மதத்தலைவர்களையும் தாக்கும் செயற்பாடுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தலுக்கு உள்ளாக்க முடியாது. இது மனி…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி 1 மணிக்கு TRAFALGAR SQUARE எனும் முகவரியில் இந்த மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கின்றது. பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் தவராமல் வரலாற்றுக் கடைமையை செய்வோம் வாருங்கள்… http://rste.org/2013/03/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86/
-
- 0 replies
- 530 views
-
-
மட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையில் தேர்தல் வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 04:04 மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வட்டார முறையின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. "உள்ளூராட்சி சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தத்தின் அடிப்படையில் வட்டார முறையிலேயே ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களும் நடத்தப்படும்" என பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.மோஹமட் - தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அதுவரையில் தேர்தல் திணைக…
-
- 0 replies
- 350 views
-
-
யாழ்.குடாநாட்டினை சூழுவுள்ள தீவகப் பகுதிகளிலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறி வருகின்றனர்:- 29 மார்ச் 2013 சின்னச் சிங்கப்பூர் ஆக மாற்றும் ஜனாதிபதியின் கூற்றும் காற்றில் பறந்தது. யாழ்.குடாநாட்டினை சூழுவுள்ள தீவகப் பகுதிகளிலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறி வருவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமையே அதற்கு காரணமென கூறப்படுகின்றது. குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருந்த கணிசமான மக்கள் தீவகப் பகுதிகளிலேயே விருப்பத்திற்கு மாறாக குடியேற்றப்பட்டிருந்தனர். அவ்வாறு குடியேற்றப்பட்ட பல குடும்பங்கள் கூட மீண்டும் வன்னிக்கோ அல்லது யாழ்.குடாநாட்டினுள்ளோ நகர்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. போதிய போக…
-
- 0 replies
- 478 views
-
-
சவுதி அரசின் அதிரடி முடிவு: இலங்கையர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்? By Kavinthan Shanmugarajah 2013-03-29 10:18:58 சவுதி அரேபியாவில் சிறிய மட்டும் நடுத்தர நிறுவனங்களுகளில் தொழில்புரியம் இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர் பலர் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு அரசாங்கமானது உள்நாட்டில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முடிவை எடுத்துள்ளமையே இதற்கான காரணமாகும். எகிப்து உட்பட மத்திய கிழக்கில் வெடித்த இளைஞர்களின் புரட்சி போன்று தனது நாட்டிலும் ஏற்படுவதைத் தவிர்க்க சவுதி அரசு எச்சரிக்கையாக உள்ளதாகவும் அதன் ஓர் அங்கமாகவே இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின…
-
- 0 replies
- 767 views
-
-
மட்டக்களப்பில் விபத்து; மூவர் பலி வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 09:07 -ரவீந்திரன், எம்.எஸ்.நூர்தீன், ஜவ்பர்கான் மட்டகளப்பு, புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். இவ் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் ஏனைய இருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். வீதியால் பயணித்த டொல்பின் ரக வான் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, மற்றும் துவிச்சக்கர வண்டி, வீதியில் நின்றுகொண்டிருந்தவர்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது), ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர். டொல்ப…
-
- 0 replies
- 384 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சவால்கள் நீடித்து வருவதாக பிரித்தானியா தெரிவிப்பு 29 மார்ச் 2013 யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சவால்கள் நீடித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக பணிப்பாளர் நீல் கொரம்படன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் பௌதீக ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நி;லக்கண்ணி வெடி அகழ்வு மற்றும் மீள் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னமும் காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்…
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் புலிகள் இயக்க அமைப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார். இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், கருணாவின் கருத்தை வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயற்பட விட முடியாது என தெரிவித்துள்ளார். கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, பல குற்ற…
-
- 13 replies
- 1.2k views
-
-
வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன? - லண்டனிலிருந்து வன்னியன். ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த சில வாரங்களாக படைநடவடிக்கை ஒரு மந்த நிலையை அடைந்திருப்பதை அவதானிப்பதோடு புலிகளின் எதிர்ச்சமர் வலுவடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் படையினரின் இழப்பு அதிகரித்துக் கொண்டு செல்வதும் பலமுனைகளில் நகர்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும் பூநகரி நோக்கிய நகர்வு மாத்திரம் முழங்காவில் பிரதேசத்தை கடந்த வாரம் படையினர் கைப்பற்றியதோடு அரசின் மிகப்பெரும் பரப்புரையே மிக உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. எனினும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என்பதை அறிய சிங்கள தேசமும், புலிகள் என்ன செய்யப் போகின்றார்கள்? என அறிய உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களும், …
-
- 38 replies
- 7.7k views
-
-
இலங்கையின் அதிகாரங்களை பரவலாக்க வேண்டுமாயின், சர்வதேசம் மற்றும் புலம்பெயர் புலிகளுக்கு தேவையான வகையில் அல்ல எனவும் இலங்கையில் வாழும் பெருபான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமையவே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போருக்கு பின்னர் அதிகாரப்பரவலாக்கம் குறித்து சிலர் பேசுகின்றனர். இது தொடர்பாக சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆலோசனை வழங்குகின்றன. அழுத்தங்களை கொடுக்கின்றன. தமிழக அரசியல்வாதிகள் அங்கிருந்து கொண்டு சத்தமிடுகின்றனர். அவர்கள் எப்படி இலங்கையில் அதிகார பரவலாக்கம் குறித்து பேசமுடியும். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. ஜனாதிபதியும், அரசாங்கம் அதிகாரத்தை பரவலாக்கினால், அது நாட்டின் பெருபான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமை…
-
- 7 replies
- 692 views
-
-
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரின் அறப்போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் கொடுப்பீர்! தமிழகத்து மாணவர்கள் தோற்றுவித்த எழுச்சிப் பேரலையின் அதிர்வொலிகள் இன்னும் அடங்கமறுத்து எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. தமிழகத்து மாணவர்களினதும்,மக்களினதும், ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு அதனைப் பிரதிபலிக்கும் வகையில் தனித்தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் முன்மொழிந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னதான, ஈழவிடுதலைப்போராட்டத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனைக்கு தமிழக மாணவர்களின் பேரெழுச்சியே அடித்தளமாக அ…
-
- 0 replies
- 388 views
-
-
மாணவி திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப் சென்ற காவல்துறை [வீடியோ] பிரிவு: தமிழ் நாடு சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அகில இந்திய வானொலி நிலையத்தைச் சுற்றிலும் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விண் அதிரும் கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். மத்திய அரசின் அலுவலகங்களை முற்றிலும் முடக்கும் போராட்டமாக இந்தப் போராட்டம் அமைந்திருந்தது. இந்த அறவழிப் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் வானொலி நிலையத்தை நோக…
-
- 2 replies
- 978 views
-
-
பிரான்சு நாடாளுமன்;ற தமிழ் மக்களுக்கான ஆய்வுக் குழுவினர்;, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினர் மற்றும் ஐரோப்பிய தமிழர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோருக்டையிலான சந்திப்பொன்று, தமிழ மக்களுக்கான ஆய்வுக் குழுவின் அழைப்பின் பேரில் 27-03-2013 பிரான்சு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. சிறிலங்காவிற்கெதிராக அமெரிக்காவினால், ஐ.நா மன்றத்தின் மனிதவுரிமைகள் அவையில் கொண்டுவரப்ரபட்டுள்ள தீர்மானம், தமிழக மாணவர்களின் எழுச்சி, உலக நாடுகளில் சிறிலங்காவுக்கு எதிராக அதிகரித்துவரும் எதிர்ப்பு என ஈழத்தமிழர்களின் பிரச்சனை உலக அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கும் இன்றைய காலச்சூழலில் இந்தச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. உத்தியோகபூர்வமாக உருவாகியிருக்கும் பிரான்சு நா…
-
- 0 replies
- 509 views
-
-
ஜெனிவா தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை மார் 28, 2013 ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என்று தெரிவித்துள்ள யாழ். குடாநாட்டு மக்கள் தமிழக சட்டப் பேரவையில் தமிழருக்கு சார்பான தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தாங்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்மானம் எமது இனத்தின் விடிவுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக விடிவிற்காகப் போராடி வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் மனங்களில் பால் வ…
-
- 0 replies
- 556 views
-
-
11 நாடுகள் புலிகளுக்கு உதவின, அதைக் காட்டிக் கொடுப்பேன்... சொல்கிறார் கேபி Posted by: Sudha Published: Thursday, March 28, 2013, 11:33 [iST] கொழும்பு: ஈழப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன் என்று கேபி கூறியுள்ளார். இலங்கைக்கு சர்வதேச அளவில் தற்போது நெருக்கடி அதிகரித்து வருகிறது. போர்க்குற்றம், மனித உரிமை மீறல், மனிதாபிமானமற்ற படுகொலைகள் என்று சர்வேதேச சிக்கலுக்குள் மேலும் மேலும் வலுவாக சிக்கி வருகிறது இலங்கை. மேலும், இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்காவும் கூறியுள்ளது. இந்…
-
- 4 replies
- 928 views
-
-
தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என்றார். இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இரு…
-
- 16 replies
- 1.1k views
-
-
எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் ஈழ ஆதரவுப் போராட்டம் தொடர்பிலான சிறப்புக் கவனவீர்ப்பு விவாதம் தமிழக சட்டச் சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்களை, இனப்படுகொலையை கண்டித்து இங்குள்ள மாணவ மாணவியர் போரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ள…
-
- 3 replies
- 933 views
-
-
முன்னால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், சிஹல உறுமயக் கட்சியின் ஆரம்பகால துணை ஸ்த்தாபகர்களில் ஒருவரும், இன்றைய சிங்களப் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபல சிங்கள இனவாதி அர்ஜுன ரணதுங்க இந்தியா டுடேயிற்கு வழங்கிய செவ்வியில், முரளீதரனைச் சென்னைப் போட்டிகளில் விளையாட அனுமதிப்பதில்லை எனும் ஐ.பி.எல் நிர்வாகச் சபையின் முடிவிற்கெதிராக கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். ஒரு நாட்டின் தென்பகுதியில் விளையாட அனுமதிப்பதில்லை என்றால், அந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் நாம் விளையாடக் கூடாது என்று கூறியிருக்கிறார். அத்துடன், இலங்கையைச் சேர்ந்த 10 வீரரகளும், பணத்தினைப் பார்க்காது தாய்நாட்டின் கவுரவத்தை முன்னிறுத்தி இப்போடிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறா…
-
- 8 replies
- 836 views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்புப் படைகள் பொதுமக்களைக் கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவித்து, அவர்களைத் தப்பிக்க வைக்கும் வகையில் உள்ளக இராணுவ விசாரணையின் அறிக்கை அமைந்துள்ளதானது, சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பாக சுயாதீனமான, நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுமா சந்தேகத்தை அனைத்துலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 'சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் இந்த அறிக்கை இன்னமும் முழுமையாக வெளியிடப்படாத போதிலும், இவ்வாறான அறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் இணைந்து தயாரிக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல அனைத்துலக நாடுகள் தமது சந்தேகத்தை எழுப்ப…
-
- 0 replies
- 718 views
-
-
இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள், இந்தியாவுக்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இனி ஒருபோதும் இடமில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இந்நாட்டில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பில் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று இனவாதிகள் கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இது முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதாகும். இந்தியாவுடன் கட்டிபிடித்து உறவு கொள்ளும் போது இந்நாட்டு சிங்கள மக்களும் வங்காளத்தில் …
-
- 0 replies
- 584 views
-
-
ஈழத் தமிழினத்தை கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக திட்டமிட்டு அழித்துவரும் இலங்கை அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தனி தமிழ் ஈழத்தை அமைக்க, இலங்கையில் வாழும் தமிழர்களிடமும், புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் ஒரு பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்திட வேண்டும் என்கிற தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது. தமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்புமுனையாகும். தமிழீழ மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்ற கோர…
-
- 0 replies
- 338 views
-
-
மலேசியா நடு வீதியில் அசிங்க பட்ட மகிந்த ராஜபக்சே.[படங்கள்] மலேசிய எங்கும் தமிழர் முன்னேற்ற அமைப்பும் இளையோர்களும் மாணவர்களும் வீதி எங்கும் தொடரும் ஆர்ப்பாட்ட பேரணிகள், தமிழீழத்துக்கான கோசங்களும் மற்றும் தமிழகத்து மாணவர்களுக்கான ஆதரவாக குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. மேலும் மலேசிய மக்களில் கவனத்தை ஈர்த்து மகிந்த ராஜபக்சேவின் புகைப்படத்தை வீதியில் போட்டும் செருப்பால் அடித்தும் அதன்மேல் வாகனங்களை ஏற்றியும் வினோதமான முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மலேசிய எங்கும் இளையோர்களாலும் மாணவர்களாலும் சுதந்திரத் தமிழீழத்துக்கான வழிகோல் கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என மலேசியாவில் உள்ள இளையோர்களும் மாணவர்களிலும் தெரிவித்துள்ளனர். Share this post …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்தியாவுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். தீர்மானம் தொடர்பான யோசனை சமர்ப்பிக்கப்பட்டது முதல் இந்தியாவின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சில திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு திருப்தி அளிக்கும் வகையில் அமையப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதே பொருத்தமானது எனவும், இலங்கை மீது இந்தியா கூடுதல் தாக்கத்தை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் மென்மையா…
-
- 2 replies
- 441 views
-
-
புலிகளுக்கு ஆயுதங்கள் உதிரிபாகங்கள் வழங்கிய நாடுகள் தொடர்பில் சாட்சியாக கே.பி 27 மார்ச் 2013 விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, 11 நாடுகளிடம் இருந்து ஆயுதங்களும், உதிரிபாகங்களும் கிடைத்தது என்பதை சாட்சியங்களுடன் சர்வதேசத்திற்கு முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை இராணுவம் போர் குற்றங்களை செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க போவதாக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முள்ளிவாய்க்கலில், புலிகளின் பதுங்குழிகளில் இருந்து கிடைத்த ஆவணங்கள் மூலம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் எம்.16 ரக…
-
- 3 replies
- 2.8k views
-