ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
சிறிலங்காவுக்கு எதிராக வாய்திறந்தார் சோனியா [ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 15:21 GMT ] சிறிலங்காவில் தமிழர்களுக்கு சொற்களால் விபரிக்க முடியாத கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இன்று காலை, ஆளும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதற்கு முன்னர், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு எதிரான கடும்போக்கை முதல்முறையாக சோனியா காந்தி வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது வழக்கத்துக்கு மாறானது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. “எமது இதயங்கள் சிறிலங்கா தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது. 2009இல் போரின் இறுதி நாட்க…
-
- 17 replies
- 1.9k views
-
-
நோர்வேயில் கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் – தமிழ் இளையோர். இலங்கைத் தீவில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக நீதி வேண்டிய தாய்த் தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவாகவும் பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் கால வரையரையற்ற கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ் இளையோர்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் முன்வைத்துள்ள ஆறு கோரிக்கைகளை ஆதரித்தும் அதே கோரிக்கைகளை நோர்வே அரசிடமும் சர்வதேச நாடுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் இந்திய வல்லரசிடமும் முன்வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கான நீதி கோரிய கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நோர்வே தமிழ் இளையோர் சமுகம…
-
- 1 reply
- 602 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சேனல் 4 வெளியிடும் மூன்றாவது திரைப்படமான No Fire Zone நேற்று ஜெனிவாவில் பொதுமக்கள் காட்சிக்கு வந்தது. No Fire Zone இன், 90 நிமிட ஆவணத்திரைப்படமும் முதன்முறையாக இங்கு தான் பொதுமக்கள் காட்சிக்கு வருகிறது என முன்கூட்டியே தெரிந்திருந்தால் திரையரங்கு முழுவதுமாய் நிரம்பி வழிந்திருந்தது. படம் தொடங்குவதற்கு முன்னர், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சுவிற்சர்லாந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட அம்மையார், இலங்கை அரசு கூறும் பதில்கள் தங்களுக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறினார். இறுதிப்போர் 2009 இல் முடிவடைந்த பிறகும் தொடரும் சித்திரவதைகள், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து ஆதாரத்துடன் தகவல்களை வெளிக்கொணர்ந்தோம். இக்க…
-
- 4 replies
- 874 views
-
-
அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்காத தீர்மானம் ஒன்று மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படுவதால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பயன் எதுவும் இல்லைனெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அமெரிக்காவின் நலன்களுக்காகத்தான் ஜெனீவா மனித உரிமைச் சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார். அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையில் அனைத்துலக விசாரணை என்ற வாசகம் நீக்கப்பட்டமை இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான விடயமெனவும், இலங்கைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்குமெனவும் இன்று முற்பகல் எமது கொழும்பு செய்தியாளரிடம் அவர் கருத்து வெளியிட்டார். உள்ளக விசாரணை நடத்துமாறு கோருவதற்கும் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதற்கும் ஜெனிவா…
-
- 0 replies
- 351 views
-
-
ஒரு தாலி அறுந்ததை காரணம் காட்டி ஒரு நூறாயிரம் பேர் தாலியை அறுத்த பாவி fb
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=86z-XSydq5s&feature=share&list=UUCK2hmE-RK3zP1Mu9ZyyFWA
-
- 0 replies
- 637 views
-
-
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை 40 நிமிடம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஜல்லிகற்களில் தரதரவென இழுத்தும், லத்தியால் அடித்தும் போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடரும் மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதிலும் இலங்கை அரசிற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டக்களத்தில் குதித்து, தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 18ந்தேதி முதல் கல்லூரிகள் காலவரையரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டு அரசு உத்தரவுபிரப்பித்தது. இருப்பினும் மாணர்வகள் போராட்டம் என்பது தமிழகத்தில் ஓயாது நடந்து வருகிறது. உண்ணாவிரத போராட்டம் அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொளஞ்சி…
-
- 4 replies
- 972 views
-
-
இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - நவனீதம்பிள்ளை இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கோரியுள்ளார். இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி நவனீதம்பிள்ளையின் பிரதிநிதியான, பதில் ஆணையாளர் குயாங் வாங் காங் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தெரிவு செய்யப்பட்ட சில விடயங்களை மட்டுமே இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்ற…
-
- 0 replies
- 518 views
-
-
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை பிரேiணையின் வரைவு நான்கில் சஅனைத்துலக சுதந்திரமான அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்பட வில்லை என்ற விடயம் உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில் அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் புலம்பெயர் தமிழர்கள் தீவிரமாக அனுப்பி வைத்து வருவருகின்றனர். நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் ஓர் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்துமாறு கோரும் இந்த தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்திருந்தது. இந்த தபால் அட்டைகளை தாங்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சக்கு அனுப்பளுக்கு புலம்பௌர் தமிழர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்…
-
- 0 replies
- 417 views
-
-
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சில இனவாத வன்முறை சம்பவங்களை எதிர்த்து, இந்த நாட்டில் இன்று இன-மதவாதம் பேசித் திரியும் கும்பல்கள் குரல் எழுப்புவது பெரும் வேடிக்கை. இவர்கள் ஊர்வலமாக இந்திய தூதரகத்திற்கு சென்று மகஜர் கொடுப்பது அதைவிட பெரும் வேடிக்கை. என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக தாக்குதல் சம்பவங்களை கேள்வியுற்றவுடன் முதன்முதலாக கண்டனம் தெரிவித்து, நமது கண்டன செய்திகளை தமிழ், சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்களில் அறிவித்த தமிழ் கட்சியின் தலைவன் நான். ஏனென்றால் நாங்கள் இனவாதிகள் இல்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று எல்லா இனவாதங்களையும் நாம் கண்டிக்கிறோம். ஆகவே எங்களுக்கு தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கண்டிக்க உரிமை இருக்கிறது. ஆனால், இந்நாட்டில் இன்று தமிழ், முஸ்லிம், …
-
- 0 replies
- 406 views
-
-
ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்கியோ வாழ் தமிழர்களின் கோரிக்கை எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் செந்தில்குமார் இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள், எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும், வெளியுறவுதுறையின் ஓசாகி (Takeshi Ozaki) அவர்களும் இணைந்து செவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் றுபுர்சு கோரிக்கை விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தீர்மானம் குறித்த வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு இந்திய மனித உரிமை செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கு எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், இது தீர்மானமிக்க நகர்வாக அமைந்தது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் பொறுப…
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு: நாராயணசாமி தகவல் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று (20.03.2013) மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் மத்திய மந்திரி நாராயணசாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்…
-
- 4 replies
- 852 views
-
-
இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - நவனீதம்பிள்ளை 20 மார்ச் 2013 இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கோரியுள்ளார். இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி நவனீதம்பிள்ளையின் பிரதிநிதியான, பதில் ஆணையாளர் குயாங் வாங் காங் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தெரிவு செய்யப்பட்ட சில விடயங்களை மட்டுமே இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல…
-
- 0 replies
- 783 views
-
-
சென்னைக்கான விமான சேவையினை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் குறைத்துள்ளது. தமிழ் நாட்டில் இலங்கையர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையினை அடுத்தே இந்த குறைப்பு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலாகும் இந்த குறைப்பின் ஊடாக வாரத்திற்கு 28 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விமான சேவைகள் 14 ஆக குறைக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61050-2013-03-19-12-06-22.html
-
- 5 replies
- 546 views
-
-
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சில இனவாத வன்முறை சம்பவங்களை எதிர்த்து, இந்த நாட்டில் இன்று இன-மதவாதம் பேசித் திரியும் கும்பல்கள் குரல் எழுப்புவது பெரும் வேடிக்கை. இவர்கள் ஊர்வலமாக இந்திய தூதரகத்திற்கு சென்று மகஜர் கொடுப்பது அதைவிட பெரும் வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக தாக்குதல் சம்பவங்களை கேள்வியுற்றவுடன் முதன்முதலாக கண்டனம் தெரிவித்து, நமது கண்டன செய்திகளை தமிழ், சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்களில் அறிவித்த தமிழ் கட்சியின் தலைவ…
-
- 0 replies
- 481 views
-
-
பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன் [Wednesday, 2013-03-20 10:35:02] தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணையவழி காணொளியூடாக இடம்பெற்றிருந்த ஊடக மாநாட்டிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய சிறிலங்கா விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதொரு விடயமாக கருத்தபடுவதோடு, இந்தியா…
-
- 0 replies
- 519 views
-
-
மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ‘தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார். பணியில் இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும் சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே கருகினார். அ…
-
- 32 replies
- 2.1k views
-
-
பழைய மஹாபலிபுர சாலையில் புதிய துறையினரின் மாபெரும் சங்கிலி கைகோர்ப்பு ![படங்கள்] பிரிவு: தமிழ் நாடு ஷேவ் தமிழ் இயக்கம் (Save Tamils Movement-STM ) என்ற அமைப்பின் சார்பில், பழைய மஹாபலிபுர சாலையில் தகவல் தொழில் நுட்ப துறையினரின் , தனி ஈழ கோரிக்கைக்கு வலு சேர்க்கும் படிக்குமான, சங்கிலி கை கோர்ப்பு கவன ஈர்ப்பு போராட்டம் , கிட்டதட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் நீண்டு இருந்தது . இந்த போராட்டத்தில் டைடல் பார்க் பகுதிகளில் வேலை பார்க்கும் அனைவரும் கலந்து கொண்டார்கள் . இயக்குனர் அமீர் , கவிஞர் அறிவுமதி ஆகியோர் இவர்களிற்கு ஆதரவு தெரிவித்து போராட்ட நிகழ்விடம் வந்து இருந்தனர். Share this post
-
- 0 replies
- 367 views
-
-
மதுரை உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம். [படங்கள்] பிரிவு: தமிழ் நாடு இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை மிது பன்னாட்டு அரசு விசாரணை நடத்த வேண்டும் .ஈழத் தமிழர்கள் மத்தியில் ஐநா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இன்று காலை மதுரை உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடை பெற்றது. ராஜபக்சேவை எதிர்த்து இன்று பேரணியாக சென்று பின்னர் ஈழத்தில் உயிர் இழந்த மக்களிற்க்காக மலர்கள் வைத்தும் ,5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள் . தமிழக அரசு தீர்மானம் சட்டமன்றத்தில் இலங்கை இனபடுகொலை கண்டித்தும்,அந்த நாட்டுடன் பொருளாதார தடை விதிக்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது. அதனை உடனடிக்க மத்திய அரசு அமுல்படுத்த வேண்ட…
-
- 0 replies
- 270 views
-
-
மாணவர்கள் போராட்டத்தை சாதாரணமாகக் கருத முடியாது: அமெரிக்கா ! பிரிவு: தமிழ் நாடு தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பை நடத்து மற்றும் எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற து என்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத்து கருத்து வெளியிட்ட அவர், தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டத்தை சாதாரணமான ஒரு விடயமாக கருதி விடமுடியாது என்று க…
-
- 0 replies
- 316 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக கைவிடப்பட்டது' என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு தனது அறிக்கை மூலம் அவர் பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தது. இந்தத் தீர்மானத்தில் நவநீதம்பிள்ளையின் …
-
- 4 replies
- 828 views
-
-
பிரிவு: தமிழ் நாடு இன்று மதுரையில் இதுவரை இல்லாதவகையில் மாபெரும் மக்கள் எழுச்சி மாணவர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது., தமிழீழ விடுதலை மாணவர் இயக்கம் சார்ப்பில் ஒரு மாபெரும் பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது , இந்த பேரணி தமுக்கம் தமிழன்னை சிலையில் தொடங்கி பெரியார் கட்டபொம்மன் சிலை வரை பதினைந்தாயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்வாக இருந்தது . ஏற்கனவே இன்னமும் அடையாளம் காணப்படாத வகையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு இறந்து போன ஒரு மாணவர் மற்றும் போலீசாரால் தாக்கப்பட்ட சட்ட கல்லூரி மாணவர் அய்யாதுரை போன்ற நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அது இன்று பிரதிபலித்தது . இதுபோல உண்மையான உணர்வோடு நடந்த மாணவர் கூட்டம் அறுபதுகளின்…
-
- 0 replies
- 764 views
-
-
கிழக்கில் முஸ்லிம் பெண்களின் ஆடையிலும் கைவைத்துள்ளது கோத்தபாயவின் பொதுபலசேனா! – கொதிப்பில் முஸ்லிம்கள் ஹலாலில் வெற்றிகொண்ட கோத்தபாய ராஜபக்ஷவின் பொதுபலசேனா, முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஒழிப்பு நடவடிக்கையை கிழக்கில் முஸ்லிம்களின் கோட்டையென வர்ணிக்கப்படும் ஓட்டமாவடியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளது. ஓட்டமாவடி முஸ்லிம் பெண் ஒருவரின் ஹபாயாவில் கைவைத்தே தமது அராஜக செயலை ஆரம்பித்துள்ளது பொதுபலசேனா. முஸ்லிம் சமூகத்தைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் நேற்றையதினம் திங்கட்கிழமை காலை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்று கடும் அதிர்ச்சியும் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.…
-
- 24 replies
- 5.2k views
- 1 follower
-
-
சென்னை தமிழர் கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த மாபெரும் மாணவர் தொடர்முழக்க போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது . ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் , தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு கோரியும் , இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கோரியும் இன்று மாணவர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . இந்த போராட்டதிற்கு பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவ மாணவியர்கள் குவித்தனர் . தொடக்கத்தில் குறைவாக இருந்த மாணவர்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல பெரும் கூட்டமாக ஒன்றிணைந்தனர் . இதை பார்த்த காவல் துறையே மிரண்டனர் . பின்பு மாநிலக் கல்லூரி மாவர்கள் சாலையில் பெரும் திரளாக ஓடி வந்து காந்தி சிலை அருகே அமர்ந்து சாலை ம…
-
- 1 reply
- 792 views
-