ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலிச் சந்தை adminNovember 3, 2025 யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்களால் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது திருநெல்வேலி சந்தையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை , சந்தைக்குள் சனநெருக்கடி மிகுந்த நேரம் இளைஞன் ஒருவர் கடும் போதையில் தனது ஆடைகளை களைந்து , சந்தை வியாபரிகள் மற்றும் மக்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி வம்பிழுத்துக்கொண்டும் , வியாபாரங்களும் இடையூறு விளைவித்த வண்ணம் இருந்துள்ளார். அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற…
-
- 0 replies
- 180 views
-
-
அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது. எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451865
-
- 2 replies
- 157 views
-
-
பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது! பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி, வாய்மொழியாக திட்டிய சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், குறித்த பெண் பிக்குவை வாய்மொழியாக திட்டுவதையும் அச்சுறுத்துவதையும் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டி பகுதியில் நேற்று (02) இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் 58 மற்றும் 67 வயதுடையவர்கள், அவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் இன்று (03) வெலிசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். …
-
- 0 replies
- 89 views
-
-
Nov 2, 2025 - 08:08 PM வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் (03) கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhhtfzno01cyqplp5a1j2ogs
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு நெடியகல்மலை பகுதியில் பொலன்னறுவையிலிருந்து வந்து பிக்குமார் விகாகரை அமைத்து வருகின்றார்கள் - ஸ்ரீநேசன் எம்.பி SayanolipavanNovember 2, 2025 தற்போது நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்கள் நேரடியாக எம்மிடம் விடயங்ளைத் தெரிவித்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் அமைந்துள்ளது நெடியகல் மலை எனும் பிரதேசமாகும். அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அந்த 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருப்பது பொலன்னறுவை மாவட்டமாகும். அப்பகுதிய…
-
- 0 replies
- 105 views
-
-
தமிழ் - முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்புது பற்றி கலந்துரையாடல் 02 Nov, 2025 | 03:01 PM வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்றது. வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக குறித்த கலந்துரையாடலில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், வடக்கில் இருந்து வெளியேற்ற முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடம் நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் இரு தரப்பினரும் உறவை வளர்துக்கொள்ள இதய சுத்த…
-
- 3 replies
- 242 views
-
-
சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி : சட்டமா அதிபரின் ஆலோசனைப்படியே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு 02 NOV, 2025 | 03:14 PM (நா.தனுஜா) மரணதண்டனைக்கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி கும…
-
- 0 replies
- 67 views
-
-
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு 02 Nov, 2025 | 04:46 PM மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின் தலைமையகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மாவீரர் வாரத்தை முன்னிட்டு குறித்த கட்சியை தேசிய அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, கட்சியின் தலைமைச் செயலகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடை…
-
-
- 3 replies
- 261 views
-
-
சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு 02 Nov, 2025 | 05:10 PM சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சனிக்கிழமை (01) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் அமைந்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ம…
-
- 0 replies
- 140 views
-
-
கொழும்பிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள் – ஐவர் கைது – பலகோடி சிக்கியது! adminNovember 2, 2025 இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். இதன்போது …
-
- 0 replies
- 125 views
-
-
யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்! adminNovember 2, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.11.25) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண பயணம் மேற்கொண்டனர். இவ் விஜயத்தின் போது குறித்த குழுவினர் நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன…
-
- 0 replies
- 149 views
-
-
02 Nov, 2025 | 03:02 PM வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புர…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு! பொலன்னறுவையில் இந்திய மானியத்தில் கட்டப்பட்ட பல்லின மும்மொழிப் பாடசாலை , பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் நேற்றையதினம் (31) திறந்துவைக்கப்பட்டது. மேலும் குறித்த நிகழ்வில் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் துணை அமைச்சர் டி.பி. சரத், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி, கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவ, வடமத்திய மாகாணத்தின் முதன்மை அமைச்சின் செயலாளர் ஜெயலத், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பல்லின மற்றும் பன்முக கலாச்சார சூழலில் தரமான கல்வி வாய்ப்பு…
-
- 0 replies
- 141 views
-
-
ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்; அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிவிப்பு : சினோபெக் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளதாகவும் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:33 AM ஆர்.ராம் நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலீட்டாளர்களிடையே ஏற்படும் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புதிய சட்ட…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
ஐ.நா வெளியகப் பொறிமுறை தொடர்பில் முறைப்பாடு உத்தியோகபூர்வமாக ஆராய்வதாக ஐ.நா. உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:14 AM நா.தனுஜா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வெளியகப் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகமானது உள்ளகக் கணக்காய்வு, விசாரணை, மேற்பார்வை மற்றும் சேவை மதிப்பீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஊழியர்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் கொண்டிருக்கும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழ…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
01 Nov, 2025 | 04:51 PM ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (31) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் வைத்தியர் கீதா ஹரிப்பிரியா ஆகியோரின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. (படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/229242
-
-
- 1 reply
- 203 views
- 1 follower
-
-
யாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்! 02 Nov, 2025 | 09:31 AM யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229260
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம் 01 Nov, 2025 | 05:23 PM முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட…
-
- 4 replies
- 342 views
- 1 follower
-
-
01 Nov, 2025 | 04:30 PM சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழமை (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, "அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு, செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இன…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
01 Nov, 2025 | 12:34 PM இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, வெள்ளிக்கிழமை (31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் மற்றும் கடற்படை விமான நடவடிக்கைகள் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைகள் செலுத்திய பின்னர் பயிற்சி முடிவடைந்தது. மேலும், இத்தகைய உத்தியோகபூர்வ வருகைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு…
-
- 1 reply
- 131 views
- 1 follower
-
-
விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..! Vhg அக்டோபர் 31, 2025 இன்றைய (31.10.2025)தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின் பெயரில் சென்றனர். அதற்கான காரணம், குருந்தூர் மலையிலே நடந்த ஒரு மிக முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி தெரிவிப்பதற்கு ஆகும். குருந்தூர் மலை சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலே ஒரு விகாரை கட்டப்பட்டது அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான வழக்கினை எமது கட்சியினை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பா…
-
- 1 reply
- 228 views
-
-
பிள்ளையானை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு.! Vhg அக்டோபர் 31, 2025 இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை இன்று(31.10.2025) நடைபெற்றது. அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார். இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துவருகிறது. எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ…
-
- 0 replies
- 178 views
-
-
வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு adminNovember 1, 2025 யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அச்செழு பகுதியை சேர்ந்த மேசன் தொழிலாளியான சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை வெளியில் மழை பெய்து கொண்டிருந்தமையால் , மேல் மாடியில் இருந்து கீழே வெற்றிலையை துப்ப முயன்ற வேளை கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். https://globaltamilne…
-
- 0 replies
- 134 views
-
-
Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீ…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள். நேற்று முன்தினம் (2025.10.30) வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, கிறிஷாந்த ,லக்மால்,தர்ஷன் ஆகியவர்களினால் நடாத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் கொற்றாவத்தை பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை (30) அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவது தொடர்பாக விஷேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் பாராட்டபட வேண்டியது. Vadali Media News & media website
-
- 0 replies
- 132 views
-