Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனீவாவில் தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபைமனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது. இலங்கையின் போர் குற்றங்களுக்கு எதிராகவும், போருக்கு பின் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றதை கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, அந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்தது. இந்நிலையில் போருக்கு பின் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஐ.நா. குழு ஆய்வு மேற்கொண்டதில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் இலங்கை மனித உரிமை மீறலில் ஈட…

    • 9 replies
    • 1k views
  2. ( ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் வரைவு - http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1 என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கில வரைவின் தமிழாக்கம் ) ஐ.நா மனித உரிமைக் குழு ஐ.நா பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும்,சர்வதேச மனித உரிமைகள் குறித்த அதன் பிரேரணைக்கு ஏற்பவும், அது தொடர்பிலான இன்னபிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கேற்பவும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான ஐநா மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து , தனது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் உத்தரவாத…

    • 20 replies
    • 2.3k views
  3. முள்ளியவளையில் புதிதாக முகாம் அமைக்க அவசரமாக நிலம் கேட்கும் இராணுவத்தினர்: சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்தியில் இராணுவ முகாம் ஒன்றை புதிதாக அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் காணியை உடனடியாக வழங்குமாறு இராணுவம் பொது மக்களை அச்சுறுத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இராணுவத்தின் இந்த முயற்சியைத் தடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதாநயகத்திடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். முள்ளியவளை மத்தியில் சுமார் 70 தமிழ்க் குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்துவருகின்றன. இந்தக் குடியிருப்புக்கு மத்தியில் ஐந்து ஏக்கர் காணியை முதிய முகாம் …

  4. அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு : இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, றஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு ! - சிறிலங்கா எதற்கும் ஒத்துழைக்கவில்லை : அமெரிக்கா - இன்னும் வலுவான பிரேரணை தேவை : கனடா - இறுதிவரை மௌனம் காத்த இந்தியா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்று நேற்று வெள்ளிக்கிழமை (08-03-2013) இடம்பெற்றுள்ளது. எதிர்வரும்13-13ம் திகதிகளில் இந்த பிரேரணை இறுதி வரைவினை சபையில் அமெரிக்காஉத்தியோகபூர்வமாக சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. இந்நில…

  5. தான் செய்த தவறை தானே உணர்ந்து இலங்கை பிராயச்சித்தம் தேட வேண்டும்; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தான் செய்த தவறை இலங்கையே உணர்ந்து பிராயச்சித்தம் தேட வேண்டும். என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற இலங்கை பிரச்சனை குறித்த சிறப்பு விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகையிலேயே குர்ஷித் இவ்வாறு கூ…

  6. போர்க்குற்றச் செயல்களுக்கு கூட்டமைப்பினர் வழங்கிய பங்களிப்பு தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன: கருணா [Friday, 2013-03-08 10:27:30] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்களுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பங்கிருப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளது என பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு போர்க் …

  7. பிளேக்கை சந்தித்தார் சுப்பிரமணியம் சுவாமி – ஜெனிவா தீர்மானத்தை பலவீனப்படுத்த முயற்சி [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 12:07 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைப் பலவீனப்படுத்துவதற்கும், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை சிறிலங்கா அரசாங்கம் தரகராக களமிறக்கியுள்ளது. கடந்தவாரம், சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற சுப்பிரமணியம் சுவாமி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியிருந்தார். இதையடுத்து, அமெரிக்கா சென்ற சுப்பிரமணியம் சுவாமி, தெற்கு மத்திய ஆசிய பிராந்திய …

  8. யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், காணிகளின் விவரங்களை இராணுவச் சீருடையில் வருவோர் வீடு வீடாகச் சென்று திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுகின்றனர் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மீண்டும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் குடும்பப் படங்களும் படையினரால் எடுக்கப்பட்டன. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்ததுடன் நாடாளுமன்றில் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து இந்தக் குடும்ப ஒளிப்பதிவு நடவடிக்கைகளைப் படையினர் நிறுத்திக் கொண்டனர். இந்த நிலையில் கடந்த சி…

  9. http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share Palaniswamy இந்துத்வா கட்சியின் ஆங்கிலப் பெயர் கொண்ட ஒரு தொலைகாட்சியில் தேசிய தலைவர் பிரபாகரனை புகழ்ந்து 'சரித்திரத்தின் சரித்திரம்' என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப் படம் இது. ராஜபக்சேவுடன் கூட்டு ஒப்பந்தம் போட்ட இக்கட்சியின் தொலைக்காட்சி இப்படி ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளது நமக்கு அதிர்ச்சியை தான் தந்துள்ளது. பாஜகவின் கொள்கை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஈழம் பற்றியும் தமிழ்த் தேசிய தலைவரை பற்றியும் தமிழர் பார்வையில் இருந்து தெளிவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் இந்த தொலைக்காட்சி குழுவினர் . நாளை…

    • 51 replies
    • 4.8k views
  10. வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன: சுமந்திரன் எம்.பி. வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பெண்களை இராணுவம் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியமையினாலேயா தென்னிலங்கையின் பெண்கள் அமைப்புகள் அவற்றுக்கு எதிராக குரல்கொடுப்பதில்லை என கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சித் தலைவரின் இவ் விசேட ஆணைக்குழுவேனும் வன்னிப்பெண்களின் அவலங்களை கண்டறிய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எதிர்க் கட்சித் தலைவரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை விசாரித்து அறிக்கை …

    • 2 replies
    • 1.8k views
  11. இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் நேற்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய அரசு குழப்பமற்ற ஒரு தெளிவான தீர்மானத்தை ஐ.நா.வில் முன்மொழிய வேண்டும். சர்வதேச விசாரணைக் குழுவில் ஆசிய நாடுகள் இடம்பெறக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திலிபன், பிரிட்டோ, தமிழ்மாறன் உள்ளிட்ட மாணவர்கள் லயோலா கல்லூரி அருகில் உண்ணாவிரதம் இருந்தனர். 1.திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு 2.ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு 3.அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு 4.பார்வைதாச…

  12. இது தமிழினப் படுகொலையா...? மார் 9, 2013 தற்போது சிறீலங்கா மீது சர்வதேசத்தின் பார்வைகள் திரும்பியிருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்கள் பரப்பப்பட்டு வருவதனால் உண்மைகளை மழுங்கடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அண்மையில் குறிப்பிடக்கூடிய (கீழே உண்டு) படம் ஒன்று இந்தியத் தொலைக்காட்சி உட்பட பேஃஸ் புக் மற்றும் டிவீட்டர் மூலமாகவும் வெளியிடப்பட்டு வருகின்றது. மூலம்: www.sheikyermami.com இது தமிழீழத்தில் நடைபெற்ற இனவழிப்பில் எடுக்கப்பட்ட படம் போல் தோற்றம் கொண்டதால் இலகுவில் யாரையும் நம்பவைக்கும் தன்மையைக் கொண்டது. ஆனால் இது நைஜீரியாவில் நடைபெற்ற மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட 500ற்கும் மேற்பட்ட ஆபிரிக்க மக்களின் சடலங்கள் எரிந்த நிலையில் காணப்படுகின்றன…

    • 2 replies
    • 462 views
  13. - சிறிலங்கா எதற்கும் ஒத்துழைக்கவில்லை : அமெரிக்கா - இன்னும் வலுவான பிரேரணை தேவை : கனடா - இறுதிவரை மௌனம் காத்த இந்தியா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்று நேற்று வெள்ளிக்கிழமை (08-03-2013) இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 13-13ம் திகதிகளில் இந்த பிரேரணை இறுதி வரைவினை சபையில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. இந்நிலையில் பிரேரணை இறுதி வரைவினை மேற்கொள்வதற்காக, நாடுகளது கருத்துக்களை உள்வாங்கும் பொருட்டு நேற்றைய உப மாநாட்டினை அம…

  14. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்ற தீயை பற்ற வைத்துள்ளனர். இந்த தீ இதோடு அணைந்து விடாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களிடமும் பெரும் தீயாக பரவ வேண்டும். என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த ராஜபக்சவை தண்டிக்க வேண்டியும், தமிழீழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தமிழின உணர்வாளர்களும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை நாம…

  15. தமிழீழத்தில் தமிழினத்தை சிங்களப் பேரினவாத அரசு அழித்துக் கொண்டிருக்கும் போது உலகம் அதனைத் தடுக்கத் தவறியிருந்தது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உறவுகள் தான் குரல் கொடுத்து வந்தீர்கள். இன்று 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உச்சமாகத் தமிழினத்தை அழித்ததை ஆதாரபூர்வமாக தெரிந்து கொண்டு உச்சமாகப் போராடிவருகின்றீர்கள். தனியரசியலுக்கு அப்பால் தங்களின் போராட்டம் இன்று உலகத்தை நோக்கி உறுதியான கேள்வியை எழுப்பியுள்ளது. சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் எட்டு மாணவர்கள். காலவரையின்றி உணவைப்புறக்கணித்துப் போராட்டம் நடத்துவது இன்று தமிழீழ இளையோரின் நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றது. நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து உலகம் நீதி வழங்க வேண்டும்…

  16. சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை இணைத்திருக்கலாம்' http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130309_tgteonresolu.shtml இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவை புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவு வரவேற்றிருக்கிறது. இந்தத் தீர்மானங்களின் மூலம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளதாக தாம் பார்ப்பதாகக் கூறும், அந்த அமைப்பின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் குறித்த விடயங்களுக்கான இணைப்பாளரான முருகையா சுஜிந்தன், ஒன்றுமே இல்லாத நிலையில் …

  17. போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி இலங்கை தமிழர் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை: சவேந்திர சில்வா இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கோரி, 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தவொரு இலங்கை தமிழரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் ஐ.நாவுக்கான இலங்கை பிரதி தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா. விடுதலைப் புலிகளின பிடியில் இருந்து தப்பித்து அமைதி மற்றும் உறுதித்தன்மையை அனுபவித்துக் கொண்டு அரசியல் நோக்கத்துடன் சில சக்திகள் இலங்கை அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக் கோரி தமிழ்நாட்டில் மணி என்பவர் தீக்…

  18. 'Unspeakable truth' - இலங்கைக்கு எதிராக ஐ.நா. திரட்டிய 105 முக்கியமான ஆதாரங்கள்! [saturday, 2013-03-09 18:01:57] இலையுதிர் காலம், வசந்தகாலம் போல் ஜெனீவா காலம் என்ற புதிய காலத்தை தமிழர் வாழ்வில் இணைத்திருக்கிறது ஈழப் படுகொலை. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் பெரும் சோகத்தையும், ஆறாத காயங்களையும், தழும்புகளையும், மிச்சசொச்சத்‌ தடயங்களையும் ஏகாதிபத்தியங்களின் நிழலான ஐ.நாவிடம் காட்டி, நீதி கேட்டு கைகட்டி வரிசையில் காத்திருக்கிறது கையறுந்த தமிழ்ச் சமூகம். இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இறந்தவர்​களைவிட, படுமோசமான நிலையில்தான் இன்றும் ஈழம் இருக்கிறது. இலங்கை அரசின் கொடூரங்களைத் தட்டிக்கேட்காமல் உலக சமூகம் இன்னமும் வேடிக்கை பார்க்கிறது. நீதி வழங்…

  19. பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலா​சிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் கவிஞர் மஞ்சுள வெடி​வர்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்​ததால், ராஜபக்ச அரசு இவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது. உயிருக்குப் பயந்து இலங்கையைவிட்டு வெளியேறிவிட்டார். இவர் பிறப்பால் ஒரு சிங்களவர். ஆனால், அந்த இனவாதத்துக்கு எதிராய், சரியாய் குரல் கொடுப்பவர். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம் கேள்வி: ராஜபக்ச சொல்வதைப்போல இலங்கையில் தமிழர்​களும், சிங்களர்களும் ஒற்றுமையாக வாழமுடியுமா? பதில்: வாய்ப்பே இல்லை. சிங்கள அரசு காலம் காலமாகத் தமிழர்களை ஏமாற்றி வருகிறது. இறுதி யுத்தத்தில் மட்டும் 40,000 பேரைக் கொன்று குவித்துவிட்டு, நல்லிணக்கம் உருவாகவேண்டும் என எப்படி எதிர்பார்க்கலாம்…

  20. இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கவலை மட்டும் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மிக கனத்த மௌனம் சாதித்தார். இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துப் பேசுகையில், இலங்கை தமிழ் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் பற்றிய உறுப்பினர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள ம…

    • 3 replies
    • 378 views
  21. இதைபோன்று இன்னும் எத்தனை குடும்பங்கள்..? (படங்கள்) யாழில் போரின் வடுக்களை தாங்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு சமூக சேவைகள் அமைச்சால் மாதாந்தம் ஊக்குவிப்பு உதவி தொகையாக 3 ஆயிரம் ரூபாயும் சுயதொழில் கடனும் வழங்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இன்று (09) காலை 10.30 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களை பார்வையிட்ட சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர், அவர்களுக்கு மூன்று மாத கொடுப்பனவாக 9 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையை வழங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை நிலையினை இலத்திரனியல் ஊடகம் ஒன்றின் ஊடாக எமது அமைச்சர் பார…

    • 0 replies
    • 408 views
  22. தரவுகளைப்பெறவே அமெரிக்க குழு குடா நாட்டிற்கு வந்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் அவற்றுக்கான ஆதாரங்களைத் தேடியே அமெரிக்க ராஜதந்திரிகள் கொண்ட குழுவொன்று யாழ். குடாவுக்குச் சென்றிருந்ததாக விமல் வீரவன்சவின் இணையமான “லங்கா சீ நியுஸ் செய்தி“ வெளியிட்டுள்ளது. இவ்வாறு கிடைக்கக் கூடிய புதிய தகவல்களையும் உள்ளடக்கியே மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது. இந்தக் குழுவினர் யாழ். குடாவில் தங்கியிருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிக…

    • 2 replies
    • 829 views
  23. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைபேரவைக்கூட்டத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்திற்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்வேண்டும் என்று மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் குருட்டுக் கண் கொண்டு பார்க்காமல் மலேசியாஇலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும…

    • 0 replies
    • 363 views
  24. இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வரைவுத் தீர்மானம் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய நடவடிக்கைத் திட்டமும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எழுந்த பாரிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறுகிறது. மேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள், மக்கள் காணாமல் போகடிக்கப்படுவது, மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவது, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எழும…

    • 1 reply
    • 319 views
  25. இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார். இக்கோரிக்கையானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் தங்கள் அரசியல் நலனுக்காக ஈழமக்கள் விடயத்தைக் கையெலெடுத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள சூழ்நிலையில் அரசியல் சாராமல் ஈழத் தமிழ் மக்கள்பால் உண்மையான அக்கறையுடன் லயோலாக் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ள போராட்டமானது அரசியல் இலாபத்துக்காக ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையிலெடுத்திருக்கும் சில அரசியல் தலைவர்களை கிலிகொள்ள …

    • 3 replies
    • 471 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.