ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
சென்னை: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவரான பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தவறுகளுக்கு மரணத்தண்டனை ஒருபோதும் ஈடாகாது என்று விகடன் டாட் காமிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் அவர் கூறியுள்ளார். " நாடாளுமன்ற தாக்குதல் போன்ற குற்றங்கள் தவறானதுதான். ஆனால் இதற்கு மரணத்தண்டனைகள் தீர்வாகாது. தீவிரவாதத்தை மேலும் தூண்டுவதற்குத்தான் இது பயன்படும். எவரோ ஒருவர் புத்திக்கெட்டுபோய் கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக,அவரை தூக்கில்போடும் செயலுக்கும், அந்த புத்திக்…
-
- 0 replies
- 843 views
-
-
யாழ். தினக்குரல் பத்திரிகையின் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவர் மீது காடையர் கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடும் காடையர்களையும், அவற்றின் சூத்திரதாரிகளையும் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தரப்பினர் கைது செய்து அத்தகையோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க தவறுவார்களேயானால், விளைவு பாரதூரமானதாக அமைந்து விடுவதை தவிர்க்க முடியாமல் போகலாம் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவர் மீது வியாழக்கிழமை அதிகாலையில் பருத்தித்துறை வீதியில் காடையர் கும்பல் மூர்க்கத்தனமாக மேற்கொண்ட தாக்குதலையும் பத்திரிகைகள் எ…
-
- 2 replies
- 294 views
-
-
ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசு முயற்சித்து வருகிறது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசு இனவாதத்தைத் தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் சபை, சர்வதேச நாணய நிதியம் என பல்வேறு வழிகளிலும் அரசு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சோனியா காந்தியும் தெரிவித்திருக்கிறார். சோனியா காந்தி கவலை வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும் இந்த அரசு மிகவும் நெருக்கடியான நிலையை …
-
- 11 replies
- 1k views
-
-
எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே..! - ராஜபக்சே ' பெருமிதம்' Posted by: Mathi Published: Saturday, February 9, 2013, 10:46 [iST] திருப்பதி: தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபர் மகிந்தர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் வந்த அவர் புத்தகயாவில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலையை சென்றடைந்தார். வழியெங்கும் அவருக்கு…
-
- 5 replies
- 577 views
-
-
எதிர்ப்புகளால் பாதுகாப்பு சிக்கல் – இரவோடு இரவாக சுவாமி தரிசனம் செய்கிறார் மகிந்த [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 00:06 GMT ] [ அ.எழிலரசன் ] பாதுகாப்புக் காரணங்களால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரவோடு இரவாக திருப்பதியில் சுவாமி தரிசம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று திருமலைக்கு வரவுள்ளார். இவரது வருகைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்றன. சென்னை, கோவை, சேலம், மதுரை, இராமநாதபுரம், புதுவை, சிதம்பரம் என்று பரவலாக இடம்பெறும் போராட்…
-
- 30 replies
- 1.3k views
-
-
அரசு இனவாத செயற்பாடுகளை நிறுத்தும்வரை தமிழக கொந்தளிப்பு அடங்காது : மனோ இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இன்று தமிழகம் கட்சி பேதம் இல்லாமல் எழுந்துள்ளது. ஆளும்கட்சி முதல்வர் ஜெயலலிதா, பிரதான எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், நெடுமாறன், திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இலங்கை ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக கடும் எதிர்ப்புகளை முன்னெடுக்கின்றனர். இந்த கடும் எதிர்ப்புகளை கண்டு ஆத்திரப்பட்டு தமிழக தலைவர்களை திட்டி தீர்ப்பதில் எந்த வித பிரயோஜனமும் இல்லை என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்களின் அரசி…
-
- 0 replies
- 311 views
-
-
2012 ஆம் ஆண்டு வர்த்தக பிரிவில் 3 ஏ சித்தி பெற்றவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல்கலைகழக வாய்ப்பை இழக்கு நிலை தோன்றியுள்ளதாக இளமையின் குரல் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது. மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவ்வமைப்பின் இணை ஏற்பாட்டாளர் கயான் ஜானக்க தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர உயர்த்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் பல்கலைக்கழக கல்வித்துறையில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. வருடத்திற்கு சராசரியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 3 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாடசாலைக்கு செல்கின்றனர். அவர்களில் 22…
-
- 5 replies
- 586 views
-
-
நவிப்பிள்ளை அறிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரால் அனுப்பப்பட்ட அறிக்கையைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை நிலைவரங்கள் குறித்தான ஐ.நா.வின் கணிப்பீடு தவறானதென்றும் சாடியிருக்கின்றது. ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் முன்வைப்பதற்காக விசேட அறிக்கையொன்றைத் தயார் செய்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அதனை இலங்கை அரசின் முன்கூட்டிய பார்வைக்காக கடந்த வாரம் அனுப்பியிருந்தார். …
-
- 1 reply
- 702 views
-
-
சிறீலங்கா அதிபர்தி மஹிந்த ராஜபக்ச இந்திய ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிப் 9, 2013 சிறீலங்கா அரசாங்கத்திற்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் அதிகரிகத்துவரும் கடும் எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காக சிறீலங்கா அதிபர் மகிந்த இந்திய ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிறீலங்கா அதிபர், இந்திய விஜயத்தின் போது தமிழகத்தில் தமிழக உணர்வாளர்கள் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்திவரும் நிலையில், மகிந்த இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். சிறீலங்காவின் தற்போதை நிலையை பார்வையிட இந்திய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு சிறீலங்கா அதிபர்தி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்கள் ம…
-
- 1 reply
- 725 views
-
-
வடக்கு கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கு ஜப்பான் அரசு நிதி உதவி வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலும் 107 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ தெரிவித்துள்ளார். கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு உதவும் வகையிலேயே இந்நிதியுதவி வழங்கப்படவிருப்பதாகவும், இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஹலோடிரஸ்ட் அமைப்பின் ஊடாக இந்நிதியுதவி வழங்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 3,025 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. ஜப்பானின் அடிமட்…
-
- 0 replies
- 407 views
-
-
கொலைக்கு கொலை: மூவருக்கு மரணதண்டனை சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013 00:10 -எஸ்.மாறன் கொலைக்காக மற்றுமொருவரை கொலைச்செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கல்முனை நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் தமது உறவினர் ஒருவரை கொலை செய்தவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியினால் வெட்டியும் கொலைசெய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கு கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இறக்காமம் நான்காம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜ.நூர்தீன் அல்லது ரசாக் என்றழைக்கப்படுபவரை கடந்த 2002 ஆம் ஆண்டு அதேபிரதேசத்தில் வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கத்தியால் வெட்…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை இந்திய உறவுகளில் தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தாது - டலஸ் அழகப்பெரும! [saturday, 2013-02-09 08:34:12] தமிழக அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளினால் இலங்கை இந்திய உறவு பாதிப்படையாது என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தோ்தல்களில் வெற்றிபெற முடியாத தமிழக அரசியல்வாதிகளினால் தமது அரசியல் இருப்பை நீடித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீர்த்திக்கு எந்த இழுக்கும் ஏற்படப் போவதில்லை, இந்தியாவில் தமிழகத்தின் இனவாத அரசியல்வாதிகள் சிலர் மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான உறவில் எவ்விதமான விரிசலும் ஏற்படப் போவதில்லை. தேர்…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் தேசிய அடையாள அட்டைகளை இழந்தவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு குடியேறியுள்ள மக்களுக்கென நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. வலிகாமம் வடக்கில் நடந்த நடமாடும் சேவையொன்றில் மனித உரிமை, துஷ்பிரயோகம் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் அனுசரணையில் இந்த சேவை நடத்தப்பட்டிருக்கின்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். 'தமக்குரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை சட்டரீதியாகப் பொதுமக்கள் பெற்றிரு…
-
- 0 replies
- 398 views
-
-
ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தந்த உறுதிமொழிகளின்படி கற்றுக்கொண்ட ஆணைக்குழு செய்துள்ள சிபாரிசுகளை முறையாக நிறைவேற்றி வருகிறோம் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகத்துக்கு சொல்லி வருகிறார். இப்போதும் இதற்காகவே இங்கிலாந்துக்கு ஓடோடி போயுள்ளார். இந்நிலையில் தான், யாழ் தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது புத்தூர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மூலம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆயுதக்குழு செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு செய்துள்ள மிக முக்கியமான ஒரு சிபாரிசு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. அதேபோல் ஊடகதுறையாளரின் பாதுகாப்பு தொடர்பிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு செய்துள்ள முக்கியமான ஒரு சிபாரிசு மீண்டும் ஒருமுறை …
-
- 0 replies
- 373 views
-
-
Print this யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய தோற்றம் இதுதான் (படங்கள்) எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அன்று காலை ஜப்பான் அரசின் நிதியுதவியால் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் மூன்று மாடி கட்டத்தினை திறந்துவைக்கவுள்ளார். இதில் சுகாதார அமைச்சர் மைதிரிபால சிறிசேன, பாராம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் குனியோ டகஹஷூ ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். இதேவேளை அன்றைய தினம் சுன்னாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்சார நிலையத்தினையும் ஜனாதிபதி அவர்கள் திற்ந்து வைக்கவுள்ளார். …
-
- 3 replies
- 660 views
-
-
யாழ்.நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப் பட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இப்பிரதேசத்தின் நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அப்பகுதியில் உள்ள சிங்கள மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள தமிழ் மக்களுடைய நிலமைகள் குறித்துப் பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை சென்றிருந்தார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பிரை அழைத்த சிங்கள மக்கள், இந்த இடத்தில் நாங்கள் வாழப்போகின்றோம். நாங்கள் இங்கேதான் இருப்போம் என கூறினர். இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், நீங்கள் இருக்கும் இந்த இடத்தில் முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்தனரே, அவர்களுடைய நிலை என்ன? அவர்களுக்கு யார் பொறுப்புக் க…
-
- 2 replies
- 468 views
-
-
ஜனாதிபதி மஹிந்தவை தூக்கில் போட்ட அணு உலை போராளிகள் February 8, 2013, 3:34 pm|views: 332 இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுடெல்லியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிணைவாக இடிந்தகரையில் அணு உலை போராளிகள் தங்கள் எதிர்ப்பை இன்று கடுமையான முறையில் வெளிப்படுத்தினர். தமிழக காவல்துறையினரின் கெடுபிடிகள், அடக்குமுறைகள் இல்லாத இடிந்தகரை ஊரில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஊர் மக்கள் ஒன்று கூடி ராஜபக்ஷவின் உருவ பொம்மையைத் துடைப்பத்தால் அடித்தும், செருப்பால் அடித்தும் பின்னர் ஊர்வலமாக சென்று கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தூக்கு மேடையில் ராஜபக்ஷவின் உருவபொம்மையை த…
-
- 0 replies
- 468 views
-
-
யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களின் எங்கள் கதைகள்- 2 புகைப்படக் கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறுகின்றது. ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களினால் எடுக்கப்பட்ட 75 மேலான புகைப்படங்கள் காட்சிப்படத்தப்பட்டுள்ளன. இதில் செய்திப் படங்கள் மற்றும் கட்டுரைகளுக்கான படங்கள் என வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உள்ள விசேட அம்சம் என்னவெனில் கட்டடங்களுக்குள் வைத்து இந்தக் கண்காட்சியினை நடத்தாது கலைப்பீட முன்றலில் கொழுத்தும் வெய்யிலில் வைத்தே இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மாணவி ஒருவரிடம் கேட்ட போது, எங்களைத் தேடி ஆர்வம் உள்ளவர்கள் வரக்கூடாது அவர்களைத் தேடி நாங்கள் செல்ல வேண்டும் என …
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கை குறித்த ஐ.நா மீளாய்வு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – நவனீதம்பிள்ளை இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீளாய்வு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், கடந்த ஆண்டு இந்த மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் மூலம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறுப்புகள் உணர்த்தப்பட்டுள்ளதாக நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கையை வழிகாட்டியாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமா…
-
- 1 reply
- 426 views
-
-
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பாகவும் தமிழக சட்டசபை வளாகத்திலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று சட்டசபைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டசபைக்குள் நுழைவதற்கு முன்பாக நுழைவாயிலில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குணசேகரன், இலங்கையில் இனப்படு கொலை செய்த அதிபர் ராஜபக்சே இந்தியாவில் நுழைய அனுமதிக்கக் கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வ…
-
- 0 replies
- 544 views
-
-
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமாகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், தங்களது பயண ஒழுங்கை மாற்றிய நிலையில் புதுடில்லிக்குச் செல்லாமல் நேரடியாக புத்தகாயாவுக்கு சென்று அங்குள்ள மகாபோதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் புதுடில்லியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதியின் பயண ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் புதுடில்லி சென்று அங்கு இந்திய அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்த பின்னர், புத்தகாயாவுக்கும் அதன்பின்னர் திருப்பதிக்…
-
- 9 replies
- 461 views
-
-
இலங்கையில் தமிழர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் இந்தியா கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்து தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை வழங்காமலிருக்கவே இலங்கை அரசு முயற்சிக்கிறது என இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இலங்கையில் தமிழர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் இந்தியா கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்…
-
- 4 replies
- 325 views
-
-
ஜே.வி.பியும், முன்னணி சோசலிச கட்சியும் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்துகின்றனர் – எஸ்.பி. ஜே.வி.பியும் முன்னணி சோசலிச கட்சியும் பல்கலைக்கழக மாணவர்களை தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களை வங்குரோத்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இவ்வாறு ஜே.வி.பி மற்றும் முன்னணி சோசலிச கட்சி ஆகியன முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களை கட்டுப்படுத்த அனுமதியளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் செய்வதில் தவறில்லை எனவும், அரசியல் கட்சிகள் அவர்களது தேவைக்காக மாணவர்களை பயன்படுத்திக் கொள்வதனை ஏற்றுக…
-
- 0 replies
- 269 views
-
-
புலிகளின் டோபிடோ வகை கைக்குண்டுகள் மீட்பு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட டோபிடோ வகை கைக்குண்டுகள் சில இன்று (08) வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புதுறை மேற்கு உதயபுரம் பகுதி கடற்பரப்பில் இருந்தே இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இராணுவத்தினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இக்கைகுண்டுகள் மீட்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் அப்பகுதி மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (அத தெரண - நிருபர் )
-
- 0 replies
- 763 views
-
-
இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து புளொட் அதிருப்தி நேற்றையதினம் (07.02.2013) புத்தூர் பகுதியில் இனந்தெரியாதோரால் தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மோசமாக தாக்கப்பட்டமையையும், இதே நபர்களால், விநியோகத்திற்கிருந்த தினக்குரல் பத்திரிகைகளும், மோட்டார் சைக்கிளும் எரியூட்டப்பட்டமையையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகவியலாளர்களும், ஊடக ஊழியர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாவதும், மிரட்டப்படுவதும் இலங்கையில் அதிகரித்துள்ளதை அண்மைக்கால நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் ஒரு வாடிக்கை நிகழ்வாகவே மாறிவிட்டுள்ள நிலைமை தோன்றியுள்ளது. வடக்கு - கிழக்கு பகுதிகளின் உண்மை நிலவரங…
-
- 0 replies
- 345 views
-