Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. என்னுடைய மகளை கொலைச்செய்த சவூதி அரசாங்கத்தினதோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களின் எந்த உதவிகளும் தங்களுக்கு வேண்டாம் என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானாவின் தாய் அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ள ரிஷானாவின் தாயார், சவூதியைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57169-2013-01-18-07-17-08.html

    • 12 replies
    • 921 views
  2. தடுப்பு முகாம் அகதித் தாயும் - குடியுரிமை கொண்ட குழந்தையும்: ஓர் அவுஸ்திரேலியா சிக்கல் [ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 12:01 GMT ] [ நித்தியபாரதி ] அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011…

  3. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர், விலகி கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்துமாறு கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட்டிடன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 21 ஆம் திகதி கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அரச சட்டத்தரணி ரொபர்ட் சீ. பிரவுண் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சட்டத்தரணிகள், நொத்தாரிசுகள், சட்ட மாணவர்கள், சட்ட கலாநிதிகள் என 37 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சட்டத்தின் சுயாதீன தன்மையை…

  4. மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழர்களின் எல்லைக் கிராமங்களான வாகனேரி மற்றும் புணானை பகுதிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழர் காணிகளை கபளிகரம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்ப…

  5. உடல் நலக்குறைவினால் பிரதமர் தி.மு.ஜயரத்ன அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு யார் தெரிவுசெய்யப்படுவார் என்ற கேள்வி மீண்டும் தென் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்பில் கூறப்படுகின்ற நிலையில், இதற்கு ஆளும் தரப்பிற்குள் எதிர்ப்புகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில், ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல சிரேஷ்ட உறுப்பினர் இந்தப் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போதைய பிரதமர் தி.மு.ஜயரத்ன அண்மைக்காலமாக சுகவீனமடைந்துள்ளதால் பிரதமர் பதவிக்கான போட்டி…

  6. முன்னொரு காலத்தில் “ட்குலா”, “மக்கேப்பிறே” போன்ற சினிமாப்படங்கள் வெளிவந்து மக்களை அச்சமூட்டின. அவை வெளிவந்தகாலத்தில் பலர் இரவில் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அஞ்சியதுண்டு. அவை சினிமாப்படங்கள்! உண்மை போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தவல்லவை. படங்களின் சலனத் தோற்றங்களுக்கு ஏற்ப இசையும் சேர்ந்து பயத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் இப்போது சில நிழற்படங்கள் அசைவு எதுவுமின்றி, இசையோ, பயங்கர ஓசையோ இல்லாமல் பலரைப் பயமுறுத்திவிடுவதுடன் அடங்கி ஒடுங்கி நடுங்கிப் பணிவையும் ஏற்படுத்திவிடுகின்றன. கடந்த வருடத்தில் இப்படி ஒரு நிழற்படம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது. அந்தப் படத்தில் ஒரு அரச உத்தியோகத்தர் மரத்தில் கட்டப்பட்டு தலைகுனிந்தவாறு நின்றார். அருகில் அமைச்சர் மேர்வின் சில்வா சண்டிக்கட…

  7. யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று ஆரம்பம் யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகின்றது. நான்காவது தடவையாக நடைபெறும் இந்த கண்காட்சி இன்று 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தை ஒரு அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை வர்த்தக சங்கங்களின் சம்மேளனம், யாழ் வர்த்தக சம்மேளனம், யாழ் மாநகர சபை இலங்கை மகாநாடுகள் பணியகம் மற்றும் யாழ் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்…

    • 2 replies
    • 508 views
  8. முன்னாள் பெண் போராளிகள் 400 பேருக்கு ஆசிரியர் நியமனம். [Friday, 2013-01-18 08:20:25] புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 400 முன்னாள் பெண் போராளிகளுக்கு பாலர் பாடசாலை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னி இறுதிப் போரின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட இந்தப் போராளிகளுக்கு தற்போது ஆசிரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போரின் பின்னர் இவ்வாறு ஆசிரியப் பணியில் இணைந்து கொள்ள வாய்ப்பு கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். பயிற்சி பெற்று வரும் முன்னாள் போராளிகளுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப…

  9. மக்கள் குடியமராத மயிலிட்டியில் படையினரின் யோக்கட் ஆலை மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டிப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 23 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்வதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று மயிலிட்டிப் பகுதியில் படையினரால் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று திறந்து…

    • 1 reply
    • 3.1k views
  10. இந்திய அரசு காங்கேசன் துறைமுகத்தை புனரமைப்பது வர்த்தக தேவைகளுக்கே; இந்தியத் துணைத் தூதர் மகாலிங்கம் கூறுகிறார் காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக தேவைகளுக்காகவே இந்திய அரசால் புனர் நிர்மாணம் செய்து கொடுக்கப் படுகின்றது. இதன் இரண்டாம் கட்டப் புனர்நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று இந்தியத் துணைத் தூதர் பி.மகாலிங்கம் தெரிவித்தார். இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசு புனரமைத்து வருகின்றது. இந்தத் துறைமுகம் வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்தத்தக்க வகையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. முதற் கட்டமாகத் துறைமுகப் பகுதியில் மூழ்கியிருந்த பழைய கப்பல்கள…

  11. SRI LANKAN HIGH COMMISSION FAILS TO STIFLE PROTESTS Sydney, Friday -- The Sri Lankan Government has failed dismally in its attempts to shut down the protests against itscricket team, according to Boycott Sri Lanka Cricket Campaign. BSLCC spokesperson Trevor Grant said today the Sri Lankan High Commissioner, Admiral Thirasa Samarasinghe, hadtried to stop the rallies, as he forecast he would, but had not been successful. “I have recently learned through my cricket contacts that the High Commissioner rang the authorities at theMelbourne Cricket Ground and demanded that they stop the protests,” said Grant, a former cricket writer and sportswriter at The Age and Heral…

  12. யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி இணையத்தள மகஜர் தயாரிப்பு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இணையத்தள மகஜரில் கையெழுத்திடும் போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மகஜரில் கையெழுத்திட வேண்டுமாயின் http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் கையெழுத்திட முடியும் என்று மேற்படி சம உரிமை இயக்கம் அறிவித்துள்ளது. (படப்பிடிப்பு - நிசல் பதுகே) http://tamil.dailymirror.lk/2…

  13. எவ்வாறான சவால்கள் வந்தாலும் தனியார் உயர்கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்தே தீருவேன் என உயர்கவ்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சபதம் விடுத்துள்ளார். இசெட் புள்ளி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உயர் நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்புகளால் தாம் சிக்கலில் விழுந்ததாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=74059&category=TamilNews&language=tamil

  14. தங்கமாடுகளா? பசுமாடுகளா?: ஊடகவியலாளர்கள் கேள்வி . அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 'பேப்பசியா' என்ற இனத்தைச்சேர்ந்த பசுமாடுகளின் உலக சந்தை பெறுமதி இலங்கை ரூபாவின் பெறுமதியில் 2 இலட்சம் ரூபாவாகும். எனினும், அங்கீகரிக்கப்பட்டுள்ள தொகையை பார்த்தால் பசுமாடு ஒன்றுக்கு 7 இலட்சம் ரூபா செலவாகும் இவைகள் பசுமாடுகளா? இன்றேல் தங்க மாடுகளா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஊடகவியலாளர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, மாடுகளின் தர…

    • 2 replies
    • 753 views
  15. சனல் 7 தொலைக்காட்சியின் செய்தியில் வந்த காணொலியினைப் பார்வையிட http://au.news.yahoo.com/video/sa/watch/dda044e2-a369-3f8d-9b96-19736d828dd2/sri-lankans-want-exile-from-cricket/

  16. ஊடக சுதந்திர தரவரிசையில் 163ஆவது இடத்தில் இலங்கை வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 11:56 -ஹனீக் அஹமட் ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 163 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு 2011 – 2012 ஆம் ஆண்டுடினை அடிப்படையாகக் வைத்து மேற்கொண்ட தரவரிசைக்கமைவாகவே இலங்கை மேற்படி இடத்தினைப் பெற்றுள்ளது. குறித்த தரவரிசை பட்டியலில் 179 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இப்பட்டியலில் முதலாம் இடத்தைப் பிடித்து – உலகில் சிறப்பான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக பின்லாந்து இனங்காணப்பட்டுள்ளது. அதேவேளை, 179 ஆவது இடத்தில், உலகில் மிகவும் மோசமான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக எதிரியா உள்ளது. ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு 2010 ஆம் …

  17. ‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013′ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் மாலைநேர இரவுநேர வகுப்புக்களை கிராமங்கள் தோறும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஒரு பிரதேசத்திற்கான மாலைநேர இரவுநேர வகுப்புகளை நடாத்துவதற்கு மாதாந்தம் 10555,00ரூபா (அண்ணளவாக 65€) தேவைப்படுகிறது. எமது முதல்கட்ட தெரிவில் 6வளாகங்களை தெரிவு செய்துள்ளோம். எமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்தையும் கருணையாளர்கள் பொறுப்பேற்று எங்கள் எதிர்…

    • 0 replies
    • 442 views
  18. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் நிறைவடைந்து விட்டது. அந்த குற்றப்பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக யாரும் வழக்குத்தாக்கல் செய்யமுடியாது. என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந் தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், பிரதம நீதியசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை தொடர்பில் யாருமே இனி எதனையும் செய்யமுடியாது. குற்றப்பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எ…

    • 0 replies
    • 423 views
  19. யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை கிடைக்கும் தருணங்கள் அனைத்திலும் அரசு கெளரவிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30 வருட யுத்தத்தில் இராணுவத்தினரின் உயிர் தியாகத்தால் இன்று நாம் சுதந்திரமான நாட்டில் வாழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை ஒருபோது அரசு மறக்காது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=74057&category=TamilNews&language=tamil

  20. பிரித்தானியப் பாரளுமன்ற விவாதத்தில் கூறப்பட்ட தமிழர்களுக்கு பாதகமான கருத்துக்கள் சிறு குறிப்பு 1. எமக்கு ஆதரவாக பேசிய பெரும்பாலான பாரளுமற உறுப்பினர்கள் ஒரு போதும் இலங்கைக்கு வந்து உண்மை நிலயை அறியவில்லை என எதிர்க்கருத்து கூறியவர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது மட்டுமல்லாது இறுதியாகப் பேசிய இராஜாங்கச் செயலாளர் அலிஸ்டர் பேர்ட்டும் அதை ஆமோதித்தார். 2. இலங்கைக்கு இறுதியாக பயணம் செய்த இலங்கை அரசால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரித்தானியப் பாராளுமன்றக் குழுவிற்கு சம்பந்தனால் வழங்கப் பட்ட செய்தியில் சம்பந்தன் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மாத்திரம் பேசியதாகவும், மக்கள் கானாமல் போனமை, மற்றும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும…

    • 13 replies
    • 835 views
  21. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இணையத்தள மகஜரில் கையெழுத்திடும் போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மகஜரில் கையெழுத்திட வேண்டுமாயின் http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் கையெழுத்திட முடியும் என்று மேற்படி சம உரிமை இயக்கம் அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57141-2013-01-17-…

    • 0 replies
    • 386 views
  22. காரைநகர் ஊரிக்கிராமத்தின் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15.01.2013) காரைநகர் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு ஊடக மாணவர்களாலும் காரைநகர் அமெரிக்கன் மிசன் திருச்சபையாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன் அவர்கள் 'பல்கலைக்கழக மாணவர்கள் சமுதாயத்திற்கு முன்னோடிகளாக விளங்க வேண்டும். அந்த வகையில் இம்மாணவர்கள் இச்சிறுவர்களுக்கு உதவிசெய்வதற்காக தம்மாலான முயற்சியை செய்து கற்றல் உபகரணங்களை வழங்கியமை பாராட்டத்தக்க விடயம்' என தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் தமது அறிக்கையிடலுக்காக காரைநக…

  23. கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றிற்கு அருகில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. (படங்கள்:குஷான் பத்திராஜ)

  24. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட துணுக்காய் மாந்தை கிழக்கு செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் மாணவர்களுக்கான் பாடசாலை உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பிஸ்கற் வகைகளை வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுத்தாளர் சண் மாஸ்ரர் துணுக்காய் பிரதேசசபை தலைவர் ராஜரத்தினம் மாந்தை கிழக்கு பிரதேசசபை உபதலைவர் செந்தூரன் ஆகியோர் பொருட்களைக் கையளிப்பதையும துனுக்காய் பிரதேசசபை உறுப்பினர்களான அமுர்தலிங்கம் யோகலிங்கம் ஆகியோருடன் பாதிப்புக்குள்ளான பொதுமக்களையும் படத்தில் காணலாம் ; …

  25. நுவரெலியாவில் ஆகவும் குறைந்த வெப்பநிலை வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 15:48 நுவரெலியா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை இம்மாதத்துக்கான ஆகவும் குறைந்த வெப்பநிலை 4.3 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் விடியலின்போது உறைந்த பனித்துளிகள் காணப்படும் சாத்தியம் உள்ளது. -சத்துரங்க பிரதீப் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/57110-2013-01-17-10-20-28.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.