ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143438 topics in this forum
-
பிரபாகரன் - கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு! By Kavinthan Shanmugarajah 2013-01-09 12:08:57 இந்தியாவின் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுழுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான சுவரொட்டிகளிலேயே இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் நடிகர் கமல்ஹாசனை கலையுல போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2462
-
- 4 replies
- 1.2k views
-
-
நாடாளுமன்றத்திற்கு ரிட் ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு கிடையாது! - ரவூப் ஹக்கீம் உரை!! நாடாளுமன்றத்திற்கு ரிட் ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் நாட்டின் நீதித்துறைக்கு கிடையாது என சிறிலங்காவின் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தவைருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 'நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின்படி நாடாளுமன்றத்திற்கோ அல்லது அதன் தெரிவுக்குழுவுக்கோ ரிட் ஆணை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சிறிலங்காவின் அரசியலமைப்பின் 67ஆம் பிரிவில் இந்த சட்ட ஏற்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது' என அவர் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலு…
-
- 2 replies
- 276 views
-
-
வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழ் பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையிலே சிறந்த தொழில் நிலைகளை உருவாக்கி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் தொடர்பில் சிந்திக்குமாறு அவர் கேட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ரிசானா சவூதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளையும் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த அரசாங்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தனது மகளை பறிகொடுத்துத் துயருறும் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வத…
-
- 2 replies
- 438 views
-
-
மாவை எம்.பி. குற்றச்சாட்டு உதயன் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற போதும் இதுவரை அரசு தாக்குதல் மேற்கொண்டவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் வடமராட்சிப் பகுதி விநியோகத்தர் நா.பிரதீபன் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொண்டு சென்ற உதயன் பத்திரிகை ஆயிரக்கணக்கில் அவர் சென்ற மோட்டார் சைக்கிளுடன் சேர்த்துத் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அச்செயலை நாம் கண்டிக்கின்றோம். பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்…
-
- 1 reply
- 301 views
-
-
நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவரால் வழங்கப்படும் தீர்மானத்துக்கமைய பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை அரசியலமைப்பின் 107 (2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்படும் அதிகாரப் பத்திரத்தின் ஊடாக பிரதம நீதியரசர் கலாநிதி உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்ச ராலஹாமிகே ஷிராணி அன்ஷுமாலா பண்டாரநாயக்கவை பதவிலியிலிருந்து நீக்க முடியும் என அரசியலமைப்பின் 107 (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56743-2013-01-11-14-54-37.html
-
- 2 replies
- 674 views
-
-
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் சவால்களை எதிர்நோக்கியதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். விஜய் நம்பியார் தற்போத பான் கீ மூனின் மியன்மாருக்கான விசேட பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார். பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு மேம்டுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முரண்பாட்டு நிலைமைகளின் போது பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பாடங்களை கற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். முரண்பாட்டு நிலைமைகளின் போது அரசியல் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு போன்றன குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்…
-
- 4 replies
- 1k views
-
-
மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப் பறிகொடுத்து விட்டேன். அந்த வேதனை எனக்கு மாத்திரம் தான் தெரியும் என்று ரிஸானாவின் தயார் பரீனா அழுது கொண்டே தனது ஆதங்கத்தை வெளியிட்டார். ரிஸானாவின் தாயாரை தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், மகளின் செய்தியை அறிந்து கொள்ளும் வரை மகள் வீடு வந்து சேருவாள். அரசாங்கம் இதனைச் செய்யும் என்று நம்பியிருந்தேன். எனது நம்பிக்கை வீணாகி விட்டது. மகளைப் பறிகொடுத்து விட்டேன். மகளுக்காக எல்லோரும் துஆ செய்யுங்கள் என்றார். இதேவேளை சுகயீனமுற்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று விடுதலையா…
-
- 1 reply
- 600 views
-
-
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றி பெறலாம். ஆனால் முடிந்தால் புதிய பிரதம நீதியரசரை நியமியுங்கள். இவ்வாறு அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இதுவரை பதவி விலகாமல் இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். மேலும் குற்றப் பிரேரணையில் கையொப்பம் இட்ட அனைத்து ஆளும் கட்சி எம்.பி.க்களையும் நாங்கள் நீதிமன்றத்துக்கு அழைப்போம். அரசாங்கம் புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க முற்பட்டால் 500 பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டியேற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.seithy…
-
- 1 reply
- 525 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்திலிருந்து இன்று (12) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனை தொடர்பு கொண்டு கேட்ட போது, இச்சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேலன் என்று அழைக்கப்படும் வேலமா லிகிதன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த வசந்தன் நேற்று (11) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கிடைக்கப்ப…
-
- 2 replies
- 603 views
-
-
கடந்த மாவீரர் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் சதுக்கத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளிவந்திருந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் வல்வெட்டித்துறையில் முன்னாள் போராளிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றிருந்த சிறீலங்கா ராணுவ புலனாய்வு பிரிவினர் வீட்டில் இருந்த அனைவரையும் கைது செய்து விசாரணைக்காக என்று கூட்டிச்சென்றுள்ளதாக ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=18372:2013-01-12-12-13-54&catid=1:aktuelle-nachrichten&Itemid…
-
- 0 replies
- 496 views
-
-
ஜனநாயக கோட்பாடுகளை மதித்து தற்போதைய பிரதம நீதியரசர் மற்றும் அவரது சட்டத் தொழில் என்பவற்றை பாதுகாக்க முன்வருமாறு இலங்கைக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்து செயற்படுத்திய குற்றப்பிரேரணை தொடர்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகப் பேச்சாளர் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். இலங்கையில் உள்ள பலர் வெளியிட்டது போலவே தாங்களும் முன்னதாகவே குற்றப்பிரேரணை நடவடிக்கை குறித்தும் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்தும் கவலை வெளியிட்டதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி குற்றப்பிரேரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானியா …
-
- 0 replies
- 293 views
-
-
இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளுக்கும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளார். பயோமெற் பார்மசிற்றிக்கல்ஸ் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளொக்சசிலின் ஊசிமருந்தில் கண்ணாடித்துண்டு ஒன்று இருந்ததை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொழும்பு தெற்கு மருத்துவமனையில் இருந்த, குறிப்பிட்ட இந்திய நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட 600 மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொற்றுக்கு எதிரான குளொக்சசிலின் ஊசிமருந்து பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உடனடி விசாரணை நடத்துவதற்கான குழுவொன்றை சிறிலங்காவின் சுகாதா…
-
- 1 reply
- 492 views
-
-
சர்ச்சைக்குரிய, சட்டவிரோத குற்றப்பிரேரணைக்கு கனேடிய லிபரல் கட்சி கண்டனம் இலங்கையில் அரசியல் யாப்பை மீறி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் மற்றும் பொதுநலவாய அமைச்சர் அதிரடி குழுவிடம் உடனடியாக பிரச்சினை எழுப்புமாறு கனேடிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடனாவின் லிபரல் கட்சித் தலைவர் பாப் ரே கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இலங்கை அரசியன் பொறுக்கூறும் கடப்பாட்டையும் வலியுறுத்தும்படி அவர் கனேடிய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் சட்ட விரோதமான குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றிய இலங்கை அரசுக்கு கனடாவின் லிபரல் கட்சித் தலைவர் தனது கண்டனத்தை வெளிய…
-
- 0 replies
- 381 views
-
-
நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றின் உத்தரவினை மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரப் பொறிமுறைமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அஹிம்சை வழியில் நடத்தப்படும் போராட்டங்களிற்கு பூரண பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டமென தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அரசாங்கம் முக்கியத…
-
- 1 reply
- 259 views
-
-
பதுளையில் கறுப்பு மழை By General 2013-01-12 10:52:35 சீரற்ற காலநிலையினையடுத்து பதுளை, லுணுகலைப் பகுதியில் நேற்று காலை கறுப்பு மழை பெய்துள்ளது. இம்மழை சுமார் அரை மணித்தியாலம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. லுணுகலைப் பகுதியில் அடாவத்தை பெருந்தோட்டத்திலேயே இக்கறுப்பு மழை பெய்துள்ளது. தோட்ட மக்கள் இம் மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துள்ளனர். இது தொடர்பாக வானிலை அவதான நிலையம் மற்றும் இடர்முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம் மழை பெய்த போது வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை உடைகள் கறுப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2518
-
- 3 replies
- 495 views
-
-
வெளிநாடுகளில் இருந்து வரும் பெண் தொழிலாளர்களுக்கு சவுதியில் பாதுகாப்பு இல்லை்; ரிசானாவை சிரச்சேதம் செய்ததற்கு பான் கீ மூன் கண்டனம்! [saturday, 2013-01-12 10:53:43] இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக், குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டி சவுதியில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ரிசானா நபீக் மீது குற்றம் சுமத்தப்பட்டமை மற்றும் அவர் மீது தடுத்து வைத்து நடவடிக்கை எடுத்தமைக்கு பான் கீ மூன் தனது கவலையை தெரிவித்துள்ளார். அத்துடன் சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாடு அதிகரித்துச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து ஆண், பெண்கள் அவர்களின் குடியேற…
-
- 0 replies
- 991 views
-
-
யாழ்.நகரப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களிடம் புலனாய்வாளர்கள் விபரங்களைத் திரட்டுகின்றனர் : 12 ஜனவரி 2013 யாழ்.நகரப் பகுதியிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களிடம் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று தினங்களாக இந்தச் சம்பவம் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. யாழ்.நகரின் மையப்பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் நீண்டகாலமாக இயங்கி வருகின்றன. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மணிக்கூட்டு நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சிவில் உடையில் சென்ற இருவர் தம்மை படைப்புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் யார்…
-
- 0 replies
- 284 views
-
-
இந்தியாவில் புலிகள் மீதான தடை நீடிப்பு சரியானது: தீர்ப்பாயம் தீர்ப்பு வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2013 12:28 0 COMMENTS தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் அந்தத் தடை இந்திய மத்திய அரசாங்கத்தினால் நீடிக்கப்படுவதும் சரியானது என இந்திய தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புலிகள் மீதான தடை சரியானதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயமானது விசாரணைகளை நடத்தி வந்தது. இந்நிலையிலேயே, தனது விசாரணைகளை முடித்துக்கொண்ட தீர்ப்பாயம், தனது தீர்ப்பினை இந்திய வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு படுகொலை செய்…
-
- 3 replies
- 622 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு 11 ஜனவரி 2013 எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, உறுதி செய்திருந்தார் என உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கையுடன் கனடா பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகளை எட்ட முடியும் என அவுஸ்திரேலியா பரிந்துரை செய்துள்ளது. நல்லிணக்க முனைப்புக்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு உண்மையைக் கண்டறியும்…
-
- 2 replies
- 305 views
-
-
அறிவாயுதத்தை பெற்றுக்கொண்டு படிப்பதற்காக போராடுங்கள். அரசியல் உரிமை முதற்கொண்டு, கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடி பெற்று தர தயாராக இருக்கின்றேன் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டால்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களின் விடுதலை தொடர்பில் ஐனாதிபதியுடன் பேசி முவெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் பின்வருமாறு நான் உங்களிடமிருந்து எதுவித சொ…
-
- 66 replies
- 3.8k views
-
-
இன்றிரவே ஜனாதிபதி - சபாநாயகர் சந்திப்பு; கடிதமும் சமர்ப்பிக்கப்படும் வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2013 21:00 பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான கடிதத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கையளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதம நீதியரசரை பதிவியிலிருந்து நீக்குவதான தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட கடிதத்தை பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைப்பார் என்பதே அடுத்தகட்ட நடவடிக்கையாகும். இதேவேளை, நாடாளுமன்றத்தில்…
-
- 1 reply
- 501 views
-
-
உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குற்றப்பிரேரணை நடைமுறைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் ஆழ்ந்த கரிசனையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த குற்றப்பிரேரணையானது இலங்கையிலுள்ள ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது. இதேவேளை, பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் போதும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் தூதரகம்; கரிசனைகொண்டுள்ளது. அமைதியான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குள்ள உரிமையை மதித்து நடக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் தூதரகம் கேட்டுக்கொள்கின்றது. வன்முறையற…
-
- 6 replies
- 907 views
-
-
சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ரிசானாவின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56649-2013-01-10-13-46-38.html
-
- 12 replies
- 812 views
-
-
By Farhan 2013-01-11 15:02:16 சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் மர்ஹீமா ரிசானா நபீக்கிற்காக நாடளாவிய ரீதியில் உள்ள ஜூம்மாப் பள்ளிவாயல்களில் ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையின் பின் இடம்பெற்றது. இதற்கமைவாக காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்மாப் பள்ளிவாயலிலும் ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது. ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையையும் முகைதீன் மெத்தை பெரிய ஜூம்மாப் பள்ளிவாயல் பிரதம பேஸ்இமாம் மௌலவி அமீன் பலாஹி நடாத்தியதோடு விசேட சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தினார். இதில் மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் அலியார் பலாஹி …
-
- 3 replies
- 525 views
-
-
முக்கிய செய்தித்திருப்பம் பாரிசில் சுட்டுகொல்லப்பட்ட மூன்று போராளிகளும் பருதியுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்.பருதியின் கொலைக்கான காரணங்கள் கூட இவர்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தவர்கள்.அதேவேளை பருதியின் மரண சடங்கில் கலந்து கொண்டவர்கள் கூட.இதை வைத்து சுய விளம்பரங்களுக்காக பருதியை கொன்றவர்கள் தான் இவர்களையும் கொன்றார்கள் என்று கதை விட்டு விடாதீர்கள் அன்புடன் நீலக்குருவி http://www.yarl.com/forum3/index.php?showtopic=114662
-
- 0 replies
- 796 views
-