ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143431 topics in this forum
-
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியமைக்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் மன்னார் பேராயர் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு முன்னர் சில தடவைகளும் மன்னார் ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தைரிமான முறையில் மன்னார் பேராயர் குரல் கொடுத்து வருவதாகவும், இது பெருமையளிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜனநாயகத்திற்காகவும், நீதிக்காகவும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் எழுப்பப்படும் குரல்களுக்கு புலி ஆதரவு முத்திரை குத்தப்படு…
-
- 0 replies
- 490 views
-
-
சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜேஎம் லொக்குபண்டார ஆகியோர் பயணம் செய்த உலங்குவானூர்தி, விபத்து ஒன்றில் இருந்து தப்பியுள்ளது. ஆழிப்பேரலைக்கு இரையானோரை நினைவு கூரும் சிறிலங்கா அரசின் பிரதான நிகழ்வு பதுளையில் கடந்த 26ம் நாள் நடைபெற்றது. இதில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதில் பங்கேற்க முடியாது போனதால், அவருக்குப் பதிலாக சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார ஆகியோர் கொழும்பில் இருந்து சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றில் பதுளைக்குப் புறப்பட்டனர். புதுளையில் ஒரு மைதா…
-
- 1 reply
- 660 views
-
-
அகதி அந்தஸ்துகோரலில் இலங்கைக்கு 12வது இடம்: ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் [sunday, 2012-12-30 10:45:02] இலங்கை அகதி அந்தஸ்து கோருவதில் 12 வது நாடாக உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் 2011 ஆம் ஆண்டைக்காட்டிலும் இலங்கையர்கள் அகதி நிலைக்கோரல் தரப்படுத்தல் குறைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் இலங்கை அகதிநிலைக் கோரலில் 10வது நாடாக தரப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கை அகதிகள் கடந்த வருடத்தில் மாத்திரம் 44 கைத்தொழில் மய நாடுகளில் அகதி அந்தஸ்தை கோரியிருந்தனர். இலங்கையில் இருந்து கடந்த வருடத்தில் 8, 521 அகதி விண்ணப்பங்கள் இந்த நாடுகளுக்கு கிடைத்துள்ளன. இதன்படி இலங்கையர் உட்பட 136, 605 அகதிகள் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, இந்…
-
- 2 replies
- 595 views
-
-
(சுமித்தி) தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு, தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு யாழ். நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இப்பொதுச்சபை கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் 15 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தீர்மானங்களாவன: கட்சி வலுவடைய வேண்டுமாயிருந்தால் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தாம் எ…
-
- 2 replies
- 562 views
-
-
அன்புடன் வைத்தியர் சிவதாஸ் நான் கூற நினைத்ததை சொலமன் சொல்லி இருக்கிறார். உண்மையில் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டை அங்கீகரித்தால் விக்கிலீக்ஸ் மீது அமரிக்கா வைக்கும் குற்றச்சாட்டு நியாயமானது. இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானது. காரணம் விடயம் சரியாக இருந்தாலும் ஊடகங்களின் கெட்டித்தனங்களால் வெளிவருவதும்போது அவை அனுமதியில்லாமல் பிரசுரித்து விட்டார்கள். திருடிவிட்டார்கள் எனக் குற்றம் சுமத்துவது. இங்கே நீங்கள் கட்டுரை எழுதியது உண்மை. அதனை பிரசுரிக்க அனுப்ப இருந்தது உண்மை. வீரகேசரிக்கு அனுப்ப இருந்த கட்டுரை குளோபலில் பிரசுரமானது தான் உங்கள் பிரச்சனையா? இல்லை பகிரங்க கேள்விகளை கேட்காமல் கட்டுரையை தனியே பிரசுரித்திருந்தால் என்னை நோக்கி…
-
- 0 replies
- 854 views
-
-
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமரை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். Rochdale Simon Danczuk என்ற இந்த உறுப்பினர், பிரதமர் கெமருன், இலங்கை மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் மீண்டும் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் இந்த வருட ஆரம்பத்தில் ஆளும் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதி ஒருவரால் கொலை செய்யப்பட்டார். எனினும் இந்தக்கொலை தொடர்பில் காத்திரமான விசாரணைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. இந்தநிலையில் அந்தநாட்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது கெமரூனுக்கு உகந்த செயற்பாடாக இருக்காது என்றும் Rochda…
-
- 1 reply
- 350 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று யாழ்ப்பாண கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் படையினர் விழிப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. எனினும் அவற்றின் கோரிக்கைக்காக படை முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்…
-
- 2 replies
- 549 views
-
-
(எஸ்.எம்.மும்தாஜ், ஜுட் சமந்த) தங்கொட்டுவை பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றினைச் சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கிருந்து பல்வேறு சட்டவிரோத ஆவணங்களுடன் இரு பெண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாராவில பிரதேசத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை மறித்து அதிலிருந்த பெண்கள் இருவரைப் சோதனைக்குட்படுத்திய மாராவில பொலிஸார் அப்பெண்களிடமிருந்த போலியாக தயாரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை மற்றும் போலியாக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் காணி உறுதி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இப்பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையினையடுத்தே குறித்த போலி கச்சேர…
-
- 0 replies
- 478 views
-
-
அனுராதபுரத்தில் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் இராணுவத்தால் கைது? [sunday, 2012-12-30 10:29:49] அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர். எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத…
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கையின் பிரபல கலைஞரான ”உபாலி” செல்வசேகரன் அவர்கள் தனது 64 வது வயதில் கொழும்பில் மாரடைப்பால் காலமானார். இலங்கையில் திரைவானில் எழுபதுகளில் பிரபலமாகப் பேசப்பட்ட கோமாளிகள் என்னும் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்ப்படத்தில் சிங்கள பாணியில் தமிழ் பேசும் ”உபாலி” என்ற பாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி, பலராலும் மெச்சப்பட்டவர் செல்வசேகரன். ‘உபாலி என்ற பாத்திரத்தின் மூலம் ஜனரஞ்சக கலைஞனாக அனைவராலும் அறியப்பட்ட செல்வசேகரன் உண்மையில் ஒரு பல்துறைக் கலைஞர்.’ வானொலி, மேடை, தொலைக்காட்சி முதல் திரைப்படம் வரை இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும், இலங்கையின் இரு மொழிகளிலும் முத்திரை பதித்த செல்வசேகரன், தினகரன் நாளிதழின் சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சரசவிய வ…
-
- 11 replies
- 1.2k views
-
-
இராணுவத்திடம் சரணடையாத ஆயிரம் முன்னாள் புலிகளை கைது செய்ய நடவடிக்கை! [Friday, 2012-12-28 18:52:45] ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்படாத, சரணடையாத மற்றும் கைது செய்யப்படாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர். முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 48 புலி உறுப்பினர்கள் ஏற்கனவே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர வ…
-
- 10 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைக்கான றொய்ட்டர்ஸ் நிலையத்தில், மிக அண்மையில் சிறிலங்கா தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘போருக்குப் பிந்திய சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் அதன் தாக்கங்கள்‘ என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல பத்தாண்டுகளாகத் சிறிலங்காவில் தொடர்ந்த போர் 2009இல் முடிவுக்கு வந்த போதிலும், ஊடகவியலாளர்கள் அங்கு தொடர்ந்து இம்சைகளை எதிர்கொண்டு வருவதாக இந்த ஆய்வறிக்கையில், கூறப்பட்டுள்ளது. பிபிசி தமிழ்சேவை தயாரிப்பாளர் சுவாமிநாதன் நடராஜன் எழுதியுள்ள 41 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், 2005 நவம்பரில் சிறிலங்கா அதிபர் பதவிக்கு மகிந்த ராஜபக்ச வரமுன்னர், 2004 …
-
- 1 reply
- 445 views
-
-
நடுவானில் தடுமாறிய உலங்குவானூர்தியை பிரித் ஓதி தரையிறக்கிய லொக்குபண்டார [ ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 01:33 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜேஎம் லொக்குபண்டார ஆகியோர் பயணம் செய்த உலங்குவானூர்தி, விபத்து ஒன்றில் இருந்து தப்பியுள்ளது. ஆழிப்பேரலைக்கு இரையானோரை நினைவு கூரும் சிறிலங்கா அரசின் பிரதான நிகழ்வு பதுளையில் கடந்த 26ம் நாள் நடைபெற்றது. இதில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதில் பங்கேற்க முடியாது போனதால், அவருக்குப் பதிலாக சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்…
-
- 5 replies
- 674 views
-
-
அரசமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்கினால் கடுமையாக எதிர்ப்போம். அத்தகைய முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். 23 ஆம் பிரிவு விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் பதினோராவது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதம பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்புக்கான பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும். அதனூடாக மாகாண சபைகளையும் இல்லாதொழிக்க வேண்டும் என இனவாதக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் எத…
-
- 4 replies
- 678 views
-
-
அரசு என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து அபிவிருத்திகளையும் எமது பரம்பரைக்கு சேர்க்கும் சொத்தாக சிலர் கருத்து வெளியிடுகின்றனர். அது தவறாகும்.நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் மறுமலர்ச்சிக்காகவே நாம் இவ்வளவு தூரம் அபிவிருத்திகளையும் தியாகத்தை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (29.12.2012)வத்துகாமத்தில் வைத்துத் தெரிவித்தார். பாத்ததும்பறை பிரதேச சபைக்கான 250 இலட்ச ருபா பெறுமதியுள்ள புதிய நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது- இன்றைய இளைய தலைமுறையினர் முன்னேற்றப் பாதையில் செல்ல இது மட்டும் போதாது. கல்வியிலும் முன்னேற வேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றால…
-
- 3 replies
- 691 views
-
-
போரை வெற்றி கொண்ட போதும், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வெற்றி கொள்ளவில்லை என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தை வெற்றி கொள்வதற்கென காணப்பட்ட சவால்கள் அபிவிருத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மீண்டும் விடுதலைப் புலிகளை தலை தூங்க அரசாங்கம் விடா வோவதில்லை என கோத்தாபய சூளுரைத்துள்ளார். மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழித்தொழிந்த போதிலும், அவர்களின் சர்வதேச வலையப்பு தொடர்ந்தும் சக்தி பெற்றுள்ளமையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய கிழக்கின் சில நாடுகளைப் போன்று சிறிலங்காவும…
-
- 3 replies
- 680 views
-
-
தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன் இன்று இலங்கையின் வடகிழக்கு மக்களின் ஒவ்வோர் அசைவிலும் ஒடுக்குமுறை இராணுவையும் தனது கோரக்கரங்களால் கட்டுப்படுத்துகிறது. சிவில் நிர்வாகம் இராணுவ தலைமையகத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வின் ஒவ்வோர் நகர்வும் இராணுவத்திற்கும் அதன் துணைக் குழுக்களுக்கும் தெரியாமல் நடந்தேற முடியாது. ஒரு தேசிய இனத்தை, ஒரு மக்கள் கூட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து சிதறடிப்பதற்கு அப்பாவி மக்களின் மீது ஒவ்வொரு முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாத அரசு தனது இனச் சுத்திகரிப்பு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கருத்தியல் தளத்திலும், பொருளாதாரத் தளத்திலும், பௌதீக இருப்பிலும் தனது தாக்குத…
-
- 0 replies
- 740 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி பிரசாரம் செய்து, போரின் மூலமே இலங்கையின் தனிநாட்டை உருவாக்கலாம் என சர்வதேச ரீதியில் கொள்கைளை பரப்பி வரும், நெடியவன் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து, இரா. சம்பந்தனை நீக்கி விட்டு, சிறிதரனை தலைவராக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் ஆற்றிய உரையை அடுத்த நெடியவன் அணியினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் எனவும், ஐரோப்பாவில் இருந்து இயங்கும் தமிழர்களின் சர்வதேச மனிதாபிமான அமைப்பின் ஊடாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசி…
-
- 1 reply
- 462 views
-
-
கடும் மழை காரணமாக வட பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளி நொச்சி ஆகிய இடங்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் தமது இல்லிடங்களை விட்டு வெளி யேறி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர் என்ற தகவல் வேதனை தருவதாகும். போரினால் பாதிக்கப்பட்டு தற்காலிக வீடு களில் தஞ்சமடைந்த மக்களை இயற்கையும் பழிதீர்ப்பது கண்டு உள்ளம் பதைக்கிறது. இறைவா! எங்கள் மீது நீ பகை கொண்ட னையோ! எங்கள் வாழ்வில் ஏன்தான் இப்படி யான சோதனைகள் என்ற ஏக்கத்தின் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குகின்ற தார்மீகப் பொறுப்பை நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ளோம் என்ற உண்மையையும் மறந்துவிடக் கூடாது. எனவே வட பகுதியில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு பொத…
-
- 0 replies
- 511 views
-
-
கடந்த 7ஆம் நாளன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கூற்றை மறுதலிக்காது இறுமாப்புடன் சம்பந்தர் நடந்து கொள்ளும் நிலையில், அதனை அவரது தனிப்பட்ட கருத்தாக தணித்துவிட்டு நழுவிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகம் கொண்டிருந்த பார்வை பற்றிய தனது கருத்தை மட்டுமே சம்பந்தர் வெளிப்படுத்தினார் என்ற தொனியில் தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ‘மேதாவிகள்’…
-
- 1 reply
- 2.9k views
-
-
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையால் இதுவரை 109672 குடும்பங்களைச் சேர்ந்த 400003 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 40 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 7 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். மேலும் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 11144 குடும்பங்களைச் சேர்ந்த 38837 பேர் இன்னும் 245 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வட மாகாணத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக வடமாகாணத்தில் இதுவரை 29305 குடும்பங்களைச் சேர்ந்த 105333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9522 குடும்பங்களைச் சேர்ந்த 33374 பேர் 195 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் …
-
- 2 replies
- 371 views
-
-
மீண்டும் தமிழ் வர்த்தகர்களை நோக்கி வெள்ளை வான்! கம்பளையில் ஒருவர் கடத்தல் கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் நேற்று (28) இரவு 9.40 அளவில் இடம்பெற்றுள்ளதென தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்டவர் 56 வயதுடைய கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். (அத தெரண - தமிழ்)
-
- 0 replies
- 490 views
-
-
சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி வருவாய் அதிகரித்த போதும், நவம்பர் மாத ஏற்றுமதி வருமானம் 6.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் நவம்பர் மாத ஆடை ஏற்றுமதி வருவாய், 4.6 வீதத்தினால் (360 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், ஏற்றுமதி வருவாய் 6.6 வீதத்தினால் (827.6 மல்லியன் டொலர்) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி சிறியளவிலேயே, (0.6 வீதம்- 126 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், ஒட்டுமொத்த விவசாயப் பொருள் ஏற்றுமதி 8 வீதத்தினால் (190.2 மில்லியன் டொலர்)…
-
- 3 replies
- 387 views
-
-
கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சீனர்களின் எண்ணிக்கை திடீரென 164 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தகவல் ஒன்று கூறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறிலங்கா வந்த சீனர்களின் எண்ணிக்கை, 164 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டு 3353 சீனர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். அதேவேளை, இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 22,176 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 46 சதவீத அதிகரிப்பாகும். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு சீனர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் அல்ல என்றும் கூறப்படுகிறது. சிறிலங்காவில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பணியாற்றுவதற…
-
- 2 replies
- 460 views
-
-
நீதித்துறையை காரணங்காட்டி இலங்கையை சீர்குலைக்க தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றார். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக சதி முயற்சிகளின் வெற்றியளிக்காமல் போய்விட்டன என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55804-2012-12-29-11-09-41.html
-
- 0 replies
- 301 views
-