Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 17 JUN, 2024 | 05:32 PM (இராஜதுரை ஹஷான்) சட்டமா அதிபரின் பதவி காலத்தை நீடிப்பது குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு கிடையாது. அரசியலமைப்பு பேரவையை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார் எனச் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் பொருளாதாரம் இன்றும் கத்தி முனையி…

  2. 17 JUN, 2024 | 08:43 PM தேசிய மக்கள் சக்தி இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையின் புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க லண்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொ…

  3. 17 JUN, 2024 | 05:31 PM இன்று சமூகத்தில் மீள முடியாத அழுத்தம் உருவெடுத்து மக்களைச் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் வறுமையில் வாடினாலும் வரிக்கு மேல் வரி விதிக்கும் வரி சுனாமி விதிப்பது நின்றபாடில்லை. சர்வதேச நாணய நிதியம் கூறியதாக வாடகை வீட்டிற்கும் வரி விதிக்கும் சூத்திரத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் சொல்வதை எல்லாம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. அரசாங்கம் வினை திறன் மிக்கதாக இருந்தால், மக்களுக்காக நல்லதொரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவ்வாறான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்த…

  4. இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் . யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர் . கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில், இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில…

  5. வாய்ப்புக்களைச் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தைக் கோடிட்டுக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை நல்ல…

  6. Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயி…

  7. 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்…

  8. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும…

  9. Published By: VISHNU 16 JUN, 2024 | 10:48 PM வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த மாணவன் அவரது நண்பருடன் இன்று மதியம் கடைக்கு சென்று உள்ளார். இதன் போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சடலம் மீதான மரண விசா…

  10. Published By: DIGITAL DESK 3 17 JUN, 2024 | 09:29 AM இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (17) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் தெற்கின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோரில் பிரதானமானவர்களாக கருதப்படுவோர் தமது தேர்தல் களச் சந்தையை வடக்கிலும் விரித்து தமது முகவர்களோடு இரகசிய பேச்ச…

  11. போலி கடவுச்சீட்டின் மூலம் நாட்டை விட்டு தப்பிக்க சென்ற யுவதி கைது! Published By: VISHNU 16 JUN, 2024 | 08:06 PM போலி கடவுச்சீட்டின் மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற பெண் திருகோணமலையில் வசிக்கும் 24 வயதுடையவர். விமான நிலைய குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்லவதற்கு உதவியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை கவுண்டருக்கு வந்து பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்கள…

  12. Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 05:43 PM அரசாங்க வேலைகளை வழங்குமாறு கோரி பெருந்தோட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இடம்பெற்றது. ஹட்டன் நகர மத்தியில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஹட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றது. தற்போது தோட்டப் பகுதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பதவிகளை வழங்க முடியும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு அர…

  13. தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் – சுமந்திரன் அறிவிப்பு! தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்த…

      • Like
    • 3 replies
    • 503 views
  14. இலங்கை வரும் இந்திய பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளன. இதன்படி இந்திய பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட…

  15. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் வடமாகாண மீனவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்திய மீனவர் விவகாரம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்து…

    • 1 reply
    • 291 views
  16. 16 JUN, 2024 | 02:17 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல…

  17. 16 JUN, 2024 | 01:25 PM திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது இஸ்லாமிய நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார். தரம் 10இல் கல்வி கற்கும் 15 வய­துடைய இவர், கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு…

  18. பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மா…

  19. மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 16 JUN, 2024 | 02:22 PM மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் விஜயத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல இடங்களிலும் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. …

  20. யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்! யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த நிலையில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் மீசாலைப் பகுதியை சேர்ந்த 25 வயதுடைள சிவகுமார் ராகுலன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை மடக்கிப்பிடித்த பிரதேச மக்கள் அவா்களை மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து கொடிகாம பொலிஸார் சந்தேக நபர்களை மீட்டு பொ…

  21. பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் …

  22. இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங…

  23. வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏம…

  24. Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 09:56 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்றிருந்த அவர் தன்னை முழுமையாக அடையாளப்படுத்துவதற்கு விரும்பாத நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்து ஒரே அணியாக…

  25. Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 09:34 AM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். அத்துடன், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்றார்கள் என்றால் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் முன்வைக்கப்போகின்றார்கள் என்பதை தமது விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் எமது மக்களி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.