ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143432 topics in this forum
-
பிறையன் செனவிரட்ன சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். “An 81-year-old Brisbane doctor was locked in a small cell without food, water or toilet access for more than five hours yesterday before being deported back to Australia from Singapore. Dr Brian Senewiratne, a Sri Lankan-born Australian who has been a long-time critic of the Sri Lankan Government over its treatment of Tamils, was on his way to Malaysia and Indonesia to speak at forums on the Tamil refugee issue.” says Tamil Refugee Council. Brian_Senewiratne_ colombotelegraph Dr. Brian Senewiratne He said yesterday he was locked up during his Singapore airport stop-over after being told he was not…
-
- 6 replies
- 777 views
-
-
மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். எனவே, இவ்விரு தரப்பினரதும் போராட்டங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனிடம் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத…
-
- 7 replies
- 590 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் நான்கு அம்சத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழித்துக்கட்டுவதற்கும், நீர்ப்பரப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்பு, உளவறியும் தகவல்கள் பகிர்வு, சட்டவிரோத ஆட்கடத்தலில் கிடைக்கும் வருமானக் குறைப்பிற்குமான நான்கு அம்சத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நான்கு அம்சத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் கடற்படை அதிகாரிகளும் ஆராயவிருக்கின்றனர் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேல…
-
- 3 replies
- 763 views
-
-
ராஜபக்ஷ புதல்வர்கள் பந்தய கார்கள் வாங்குவதற்கு 993 லட்சம் ரூபா எவ்வாறு கிடைத்தது? :ஜே.வி.பி கேள்வி [Monday, 2012-12-17 18:13:10] ராஜபக்ஷ புதல்வர்களுக்கு றேசிங் கார் வாங்குவதற்கு 993 லட்சம் ரூபா கிடைத்தது எவ்வாறு என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, றேசிங் கார்களை வரி இன்றி இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டிற்கு 2000 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள விடயங்கள் ஏற்கனவே ராஜபக்ஷ புதல்வர்களுக்கு தெரிவிக்கப்…
-
- 1 reply
- 808 views
-
-
பலியாடுகளாவது தமிழ்ப்பெண்கள் மட்டுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன் 17 டிசம்பர் 2012 தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் கடப்பாடு யாருக்கு? அண்மைய நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெரும் பதற்றம் நிலவியது. இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு பேய்பிடித்துள்ளதாக சொல்லி அப்பெண்களை இராணுவத்தினர் மனநலப்பிரிவில் அனுமதித்திருந்தனர். அந்தப் பெண்களை பேய்கள்தான் பிடித்துச் சென்றனர் என்று வைத்திசாலையில் இருந்த மூதாட்டி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுத்தான் கொண்டுவரப்பட்டார்கள் என்று செய்தி உடனேயே வெளியானது. 13 பெண்கள் அவ்வாறு அனுமதிக்கப்ட்டிருந்தார்கள். யாரும் அந்தப் பெண்களை பார்க்க அனுமதிக்கப்படாமல் இராணுவ…
-
- 0 replies
- 664 views
-
-
இலங்கையின் சில இடங்களில் விண்கல் விழுந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விண்கற்கள் விழுந்து உலகம் அழியப்போகிறது என்று பரவலாக செய்தி பரப்பபட்டு வந்தது. இது உண்மையாக இருக்குமோ என்ற அச்சம் நேற்று சில இடங்களில் விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிகப்பு மழையும் பெய்கிறது. சிகப்பு மழை பெய்யும் இடங்களில் நாய்கள் இறந்துபோகின்றன. இன்று மலையக பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் அழியப் போகிறது என்ற பீதி அனைத்து நாடுகளையும் உலுக்கி வரும் நிலையில் இலங்கையில் விண்கல் விழுந்து பீதியை பன்மடங்காயிருக்கிறது. வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் நேற்று விண்கல் விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்ததில் பலா மரம் எரிந்துள்ளது. …
-
- 11 replies
- 8.2k views
-
-
நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு. தமிழ் மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தவும் தொழில் வாய்ப்புத் தேடும் இளையோருக்கான மற்றும் கணணிக்கல்வியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெரியவர்களுக்குமான கணணிக்கற்கையை வழங்கவும் நடராஜா ஆனந்தா வீதி , நாவற்குடா கிழக்கு , மட்டக்களப்பில் 15.12.2012அன்று கணணி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நேசக்கரம் தகவல் தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பாளர் செல்வி.கம்சனா தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் இணைப்பாளர் ஜனனன் மற்றும் உதயகாந், திவாகரன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினர்களாக நாவற்குடா முத்துமாரியம்மன் ஜெயகிருஸ்ணா குருக்கள் , நாவற்குடா கிழக்கு இந்து ஆலயங்களின் பரிபாலன தலைவர் திரு.சிவகுமார் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சுரே…
-
- 3 replies
- 669 views
-
-
முன்னாள்புலிகள் இன்னாள் EPDPயானாலும் கோத்தபாயவின் புனர்வாழ்வு வலையத்துள் சிக்கினர் அதிர்ச்சியில்பலர் 17 டிசம்பர் 2012 விடுதலைப் புலிகளது முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இவர்களுள் அரசின் பங்காளிக்கட்சியான ஈபிடிபியில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் சுதந்திரக்கட்சியின் அமைப்புக்கனில் இணைந்தவர்களென பலரும் அடங்கியுள்ளமை அவ் உறுப்பினர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. யாழ்.குடநாட்டின் பல பகுதிகளிலும் இத்தகைய போராளிகள் கடந்த சில தினங்களாக முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது தற்போதைய வாழ்க்கை பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் விரல் அடையாளங்களும…
-
- 0 replies
- 852 views
-
-
மதிப்புமிக்க சம்மந்தர் அய்யா அவர்களுக்கு! புலத்திலிருந்து எழுதும் ஈழ தமிழனின் மடல். [Friday, 2012-12-14 23:14:22] தங்களின் கடைசி உரையின் தாக்கத்தினால் எழுதும் மடல். தங்களிடம் இருந்து பதில் வரும் எனும் ஒரு சிறு நம்பிக்கையோடு இதை எழுதுகின்றோம். விடுதலைப் புலிகள் யாரையும் இலகுவாக நம்புபவதில்லை. ஆனால் அவர்களினால் நேசிக்கப்பட்டவரும் , இலட்சியவாதியுமான தங்களையும் இணைத்தே தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு என்கின்ற எங்களிற்கான கூட்டைக் கட்டியெழுப்பினார்கள். பேச்சுக்கு பேச்சு சம்மந்தர் அய்யாவை கேட்டுச்செய்யுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அவர்களின் மதிப்புகுரியவராக இருந்தீர்கள். ஆயுதப் போராட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறைநிலை கட்சியாக மாற்…
-
- 6 replies
- 1.5k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று திடீரென பெய்த மழை காரணமாக பலத்த வெள்ளம் ஏற்பட்டதுடன் கல்முனைப் பிரதேச பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது. காரைதீவு மாவடிப்பள்ளி தாம்போதியின் மேலாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள உள்ளுர் வீதிகளில் நீர்தேங்கி நிற்பதுடன் வயல் நிலங்கள், தாழ்நிலப் பிரதேசங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடலும் வழமைக்கு மாற்றமாக கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்றொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. www.Thikkathir.com
-
- 0 replies
- 451 views
-
-
புலிகளின் பாரிய திட்டமே கொழும்பில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் 15 டிசம்பர் 2012 விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அரசசார்பு சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில் வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தன. இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். இலங்கை முதலீட்டுச் சபையில் பணியாற்றிய …
-
- 42 replies
- 3k views
-
-
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு:- http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ytUWWxuqqPw[/xml] சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு அம்சத் திட்டமொன்று தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுப்பது தொடர்பில் இலங்ழைக அரசாங்கததுடனும், கடற்படையினருடனும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பொப் கார் இன்றைய தினம் தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டார். இந்த விஜயம் தொடர்…
-
- 0 replies
- 394 views
-
-
ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த கடிதம் ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012 15:54 அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத மர்மமனிதன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சான்டி ஹக் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவமானது என்னையும் நாட்டு மக்களையும் ஆழந்த சோகத்தில் தள்ளியது. இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நானும் இலங்கையர்களும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அவர்களின் …
-
- 4 replies
- 677 views
-
-
குணரத்ன வன்னிநாயக்க மீது தாக்குதல் முயற்சி! By Kavinthan Shanmugarajah 2012-12-17 19:14:41 தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான குணரத்ன வன்னிநாயக்க மீது இன்று மாலை தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவவில் வைத்தே இத்தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. பிஸ்டல்களுடன் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் தனது ஜீப் வண்டியை சூழ்ந்து தாக்க முயன்றதாகவும், தான் ஒருவாறு தப்பித்து வீட்டுக்குள் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான் உடனே பொலிஸ் அழைப்பினை மேற்கொண்டு இது தொடர்பில் முறைப்பாட்டை மேற்கொண்டதாகவும் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஃப்ரீ மார்ச் ச…
-
- 0 replies
- 466 views
-
-
தாயக மாணவர்கள், மக்கள் நிலை : நாம் என்ன செய்யலாம்? யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று தாயகத்தில் மீண்டும் ஒரு வித அடக்குமுறையை அச்ச உணர்வை சிங்கள பேரினவாதம் அடக்குமுறையாளர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த மாணவர் அடிப்படை உரிமைகளை அடக்க அவர்களை கைது செய்து, மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்துவைத்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கு, இணங்க புலம்பெயர் இளையவர்கள் குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் தாயக மக்களின் நிலையை உலக அரங்குகளில் எடுத்து உரைத்தவண்ணம் உள்ளனர். #1: உலகளாவிய மாணவர் / மக்கள் முன்னெடுப்புக்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112234 #2: கடிதங்கள் எழுத விரும்புவர்கள் : http://www.…
-
- 12 replies
- 1.5k views
-
-
சென்னையில் பேராசிரியர் தெய்வ சுந்தரம் ஒருங்கிணைத்த கணினித் தமிழ் மாநாடு வெகு சிறப்பாக சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது . முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் , தமிழ் அறிஞர்கள் , மொழி ஆர்வலர்கள் , பேராசிரியர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் . மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழக அரசு சார்பில் கணினித் தமிழ் வளர்ச்சி துறை உருவாக வேண்டும் , அதற்கான நிதி ஒதுக்குதல் வேண்டும் , அரசு துறைகள் அனைத்தும் கணினித் தமிழ் படுத்தப் பட வேண்டும் என்பது தான் . இந்த மாநட்டில் அரசு தரப்பில் இருந்து திரு சேகர் இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை , திரு விசய ராகவன் இயக்குனர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் , திரு சீனிவாசன் , கணினித் தமிழ் சங்கம் , திரு ப…
-
- 1 reply
- 470 views
-
-
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள், வரம்பு மீறி திமிருடன் செயற்படும் கோத்தபாயவுக்கே புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. "நீதிமன்றத்தின் செயற்பாடுகளைத் தன்னிச்சையாகச் செய்வதற்கு கோத்தபாய யார்? அவர் ஒரு சாதாரண அரச அதிகாரி. எனவே, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள்தான் அவர் செயற்பட வேண்டும்'' என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் …
-
- 1 reply
- 734 views
-
-
அரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க இதுவரை எந்த வகையில் முயற்சித்திருக்கிறார். இவ்வாறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி. யாழ்ப் பாணத்தில் அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவித்த தாவது: தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி யெழுப்புகிறார். நாம் கேட்கின்றோம், அரசுடன் இணைந்து அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்? வடபகுதியில் இடத்துக்கு இடம் அமை…
-
- 1 reply
- 431 views
-
-
16.12.2012 - ஞாயிற்றுக்கிழமை வடபகுதிக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என இந்துசமய விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் பிரம்மசிறி ராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபையின் மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திட்டம் அறிமுகவிழாவில் இன்றையதினம் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதியில் நிலவிய யுத்தத்தால் நீண்டகாலமாக ஜனநாயகம் இல்லாதொரு சூழல் நிலவி வந்த நிலையில் மீண்டும் ஜனநாயகத்தை இப்பகுதியில் நிலைநாட்டுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெரும்பங்காற்றி உழைத்தார். ஜனாதிபதியாக காலஞ்சென்ற பிரேமதாசா அவர்கள் இருந்த காலப்பகுதியில் வடபகுதிக்கு ஜனநாயகத…
-
- 4 replies
- 630 views
-
-
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார், இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, சட்டவிரோத குடியேற்றம், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் ஜனாதிபதி செயலக ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரவிக்கிரம ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54955-2012-12-17-09-51-14.html
-
- 0 replies
- 184 views
-
-
படைப்பலத்தை வைத்துக்கொண்டு எந்தப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது. அரசியல் ரீதியான அனுகுமுறைகள் மூலமே பிரச்சினைகளுக்கான நிநந்தர தீர்வினை எட்டமுடியும் என கடற்றொழில் நீரியியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளிநொச்சி பூநகரி இரனைமாதா நகரில் கடலுணவு பதனிடல் நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்த நாட்டில் நிலவுகின்ற நீண்ட கால பிரச்சினைக்கு நல்லதொரு அரசியல் வழிமுறைகள் மூலமே நல்ல தீர்வினை காணவேண்டும் எனவும் லிபியாவில் ஏற்பட்ட பிரச்சினையில் அந்நாட்டு படைகளினால் லிபியத்லைவர் கடாபியினை காப்பாற்ற முடியாமல் போனமையினையும் சுட்டிக்காட்டினார். மேலும் இனவாதங்கள் பேசிக்…
-
- 0 replies
- 466 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் கடந்தவாரத்தில் நிகழ்தியிருந்த இருவேறு அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களை குமுறவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. அந்த நகர்வுகள் தொடர்பிலான தெளிவுறுத்தலை மேற்கொள்வதற்கு தமிழ்லீடர் முற்படுகின்றது. பாராளுமன்றில் உரையாற்றிய போது தமிழீழ விடுதலைப்புலிகளை தீண்டத்தகாதவர்கள் என்ற பாணியில் சம்பந்தன் உரையாற்றியமை மற்றும் மஹிந்த விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச்சுக்களில் கலந்து கொள்ளாமை ஆகிய இரண்டு விடயங்களும் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தன. சம்பந்தனின் உரை தொடர்பில் கடும் அதிர்ப்தி அடைந்திருந்த மக்கள் மஹிந்தவின் அழை…
-
- 1 reply
- 566 views
-
-
இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களில் மிகவும் மோசமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தை அடையாளப்படுத்த முடியும் என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தினியாவெல பாலித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் உருவான மிகவும் மோசமான, ஊழல் மிக்க அரசாங்கமாக இதனைக் கருத வேண்டும். அத்துடன் ஆட்சியிலுள்ள அரசாங்கம் தம்மை கொலை செய்தாலும் பரவாயில்லை. யாருக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ இந்தக் கருத்தை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் வரிப் பணத்தை விரயமாக்காது, மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தக் கூடாது. அத்துடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக பெற்றோல் கிடைக்கின்றது. இந்தச் சலுகை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கோர…
-
- 1 reply
- 517 views
-
-
கடந்த பல ஆண்டுகளாகக் கைது செய்யப்பட்டும் இனம்தெரியாதோர் என்ற போர்வையில் கடத்தப்பட்டும் காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளை விடுவிக்கக்கோரி மன்னாரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சேரி முன்பு காணாமல்போனோரின் உறவுகள் ஒன்றுகூடி தமது உணர்வுகளையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொண்டனர். அப்போது காணாமல் போனோரின் உறவுகள் அங்கு கண்ணீர்விட்டு கதறியழுதனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உறவுகள், "எனது அப்பா எங்கே?', "வெள்ளைவானும் அரசுதான் கடத்தியதும் அரசுதான்', 'காணாமல்போவதும் அரசாலே, கடத்திச் செல்வதும் அரசாலே', "தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்காதே! கொள்ளையிடாதே!' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு …
-
- 1 reply
- 513 views
-
-
ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுவதற்கான, பொது செயலாளர் பான் கீ மூன் விசேட குழு ஒன்றை நியமிக்கவுள்ளமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.வெளியுறவுகள் துறை அமைச்சர் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றி தலைமையிலான குழு, அண்மையில் தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளித்திருந்தது. இதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் பொது மக்களை பாதுகாக்க தவரிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது. …
-
- 6 replies
- 975 views
-