ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143417 topics in this forum
-
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவுத் தூபி அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.9000 படைவீரர்களின் உயிர்த் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் படைவீரர் நினைவுத் தூபியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்த் தளவாடங்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஆகியவற்றை அகற்றிக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த அருங்காட்சியகம் மற்றும் நினைவுத் தூபி என்பன நல்லிணக்க முயற்சிகளுக்கு தடையாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர். எனினும், இந்த நினைவுத் தூபியை அகற்றிக…
-
- 0 replies
- 277 views
-
-
எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டவரை இலங்கை அரசாங்கம் ஆதரித்தது – விக்கிலீக்ஸ் 24 அக்டோபர் 2012 விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள் நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்ட நபரை இலங்கை அரசாங்கம் ஆதரித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. கொலை குற்றச் செயல் ஒன்றுக்காக 1997ம் ஆண்டு சிறை வைக்கப்பட்ட பால்க் ருனே ரோவிக் என்பவரே இவ்வாறு, எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ருனே ரோவிக்கின் நடவடிக்கைகளை நோர்வே புலனாய்வுப்…
-
- 17 replies
- 1.8k views
-
-
தமிழர் என்பதாலா இந்த சோதனை? மட்டுவில் தமிழ் பொலிஸ் அதிகாரி கண்ணீர்! மட்டக்களப்பு - மங்கலராமய விகாரைக்கு அருகில் இருந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்ற குறித்த விகாரையின் விகாராதிபதி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியதனால் அச்சம் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரி இடம்பெயர்ந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு நகரில் மங்கலராமய விகாரை உள்ளது. அதன் விகாராதிபதியாக அம்பிட்டியே சுமங்கல தேரர் உள்ளார். இந்த விகாரைக்கு அருகில் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடு உட்பட பல வீடுகள் உள்ளது. எனினும் அவர் மட்டுமே தமிழராகவுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உப…
-
- 0 replies
- 716 views
-
-
[size=4]"எனக்கு முன்னால் சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்படுவதை நான் பார்த்தேன்" என சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான யுத்தத்தை நேரடியாக அனுபவித்த புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த ஜொகன்னஸ் சண்முகன் மீளநினைவுபடுத்துகிறார். சிறிலங்காவின் சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழ் கிளர்ச்சி அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கால உள்நாட்டுப் போரின் போது இரு தடவைகள் தன் மீது துப்பாக்கி நீட்டப்பட்டதாக தற்போது ஸ்பிறிங்பாங் என்ற இடத்தில் வாழும் திரு.சண்முகன் கூறுகிறார். சிறிலங்காவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கணினிகளை அன்பளிப்புச் செய்வதற்காகவும், Help4Heroes என்கின்ற காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு ஆதரவளிக்கின்ற பிரித்தானிய தொண்டர் அமைப்புக்கு உதவி …
-
- 2 replies
- 345 views
-
-
புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் ஆபத்தான நிலையில்… சிறீலங்கா | ADMIN | OCTOBER 25, 2012 AT 22:43 இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பாம்புகள், வெடிப்பொருட்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருதாகக் கூறுகின்றார்கள். மிகமோசமான சண்டைகள் நடைபெற்ற புதுக்குடியிருப்பு நகரப் பகுதியிலும், கிராமங்களிலும் உள்ள பல வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் அழிந்து கிடக்கின்ற வீடுகள் கட்டிடங்களின் இடிபாடுகள், காணிகளில் படர்ந்துள்ள பற்றைகள், காடுகள் என்பவற்றில் பாம்புகள் நிறைந்திருப்பதாக மீள்குடியேறியுள்ளவர்கள் கூற…
-
- 1 reply
- 805 views
-
-
கோத்தபாய ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவது அம்பலம்! விக்கிலீக்ஸ் சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:06 இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அமெரிக்க தூதரகம் தகவல் அளித்து வந்துள்ளது. இது விக்கிலீக்ஸ் இணையம் மூலம் கசிந்துள்ளது. கோத்தபாய ராஜபக்ச, டெய்லி மிரர் ஆசிரியரை அழைத்து அவர் கருணாவை பற்றி எழுதியமைக்காக அச்சுறுத்தியுள்ளார். இதன் பின்னர் தாம் குறித்த ஆசிரியரை அச்சுறுத்தியதை ஏற்றுக்கொண்ட கோத்தபாய, தொடர்ந்தும் கருணாவை பற்றி எழுதினால், தாம் குறித்த ஆசிரியருக்கு எதிரியாக மாறவேண்டியிருக்கும் என்று எச்சரித்ததாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது. இதேவேளை, இலங்கையி…
-
- 0 replies
- 437 views
-
-
நான்கு கொலைகளைச் செய்து விட்டு சாதாரனமாகத் திரிகின்றார் யாழ்ப்பாண மருத்துவர். சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:55 கடவுளுக்கு அடுத்தபடியாக மக்களால் நினைக்கப்படுபவர்கள் வைத்தியர்கள். இறப்பு, பிறப்பு ஆகியவற்றுக்கு இடையில் நடக்கும் வாழ்க்கை என்னும் மனித சுற்று வட்டத்தில் மிக முக்கிய இடத்தில் மக்களால் வைக்கப்படுபவர்கள் வைத்தியர்களே ஆவர். இவ்வாறான புனிதமான வைத்தியத் தொழில் யாழ்ப்பாணத்தில் என்ன நிலையில் இருக்கின்றது என்பதற்கு உதாரணமாக அமைந்தது அண்மையில் இரு தாய்மார்களின் மரணமும் இரட்டைக் குழந்தைகளின் மரணமுமாகும். பெரும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் சேவை புரிந்த வைத்தியர்கள் இங்கு இருந்துள்ளார்கள். இருக்கின்றார்கள். இந்திய இராணுவத்தால்; யாழ்…
-
- 0 replies
- 728 views
-
-
ஈழத் தமிழர்கள் குறித்து லண்டன் பாராளுமன்றில் திருமாவளவன் பேச்சுராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நவம்பர் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை லண்டன் பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக சமத்துவம், சம உரிமை குறித்து விவாதம் நடக்கிறது. இதில் தமிழக எம்.பி-க்கள் எம்.பி. அல்லாதவர்களும் நானும் கலந்து கொள்கிறோம். பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கூடங்குளம் அணு உலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்றவைகள் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பேசுவேன். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 455 views
-
-
போர்க்குற்றவாளி மகிந்தவின் பிறந்த நாளை கொண்டாடுமாறு நிர்ப்பந்தம் – இராணுவம் கடுந்தொனியில் உத்தரவு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:17 போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தின நிகழ்வையும், போர் வெற்றியின் 3 ஆவது ஆண்டு நிறைவையும் அடுத்தமாதம் கொண்டாடுமாறு இராணுவத்தினர் முல்லைத்தீவு அரச அதிகாரிகளை கடுந்தொனியில் நிர்ப்பந்தித்துள்ளதாகத் தெரியவருகிறது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த 23 ஆம் திகதி மு.ப. 9.30 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பிரிகேடியர் டயஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வர…
-
- 0 replies
- 316 views
-
-
தலைமை நீதியரசரின் கணவருக்கு எதிராக லஞ்ச ஊழல் வழக்கு [size=3][size=2]கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 அக்டோபர், 2012 - 16:52 ஜிஎம்டி[/size][/size] [size=3][size=1][size=1][size=1][size=2]தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் கடந்த ஆண்டு ஜனாதிபதியால் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.(படம் -டெய்லி நியூஸ்)[/size][/size][/size] [size=3]அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கு சுமார் 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசத்துக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தி…
-
- 2 replies
- 572 views
-
-
KPயை இலங்கை விடுதலை செய்தாலும் தொடர்ந்தும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது 19 அக்டோபர் 2012 விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத விநியோக வலையமைப்பின் முன்னாள் தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்திருந்தாலும், இந்தியா அவரை தொடர்ந்தும் சர்வதேச காவற்துறையினரால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில், கே.பி தேடப்பட்டு வரும் சந்தேக நபர் என இந்திய காவற்துறை, சர்வதேச காவற்துறையினருக்கு அறிவித்துள்ளது. பிரபாகரனின் நெருங்கிய சகாவான கே.பி தற்போது வன்னியில் இருந்தவாறு நேர்டோ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நட…
-
- 6 replies
- 704 views
-
-
5 இலட்சம் ரூபா அதிஷடலாப சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாக கைத்தொலைபேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அவ்வறிவுறுத்தலின் படி வங்கியில் 98,000 வைப்பிலிட்ட இளைஞன் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(19.10.2012) நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசிக்கு 5 இலட்சம் பணப்பரிசு சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 98,000 ரூபாவை முத்திரை வரியாக செலுத்த வேண்டும் எனவும், இந்தப் பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு உடனடியாக வைப்பிலிட வேண்டும் எனவும் குறுந் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய அந்த இளைஞன் குறிப்பிட்ட பெறுமதிக்கு தனது நகைகளை அடகு வைத்து குறிப்பிட்ட வங்கிக் கணக்கு…
-
- 5 replies
- 756 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத், சுமித்தி) இலங்கைக்கான சீன தூதுவர் வூ ஜியங்கோ இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவை மாநகர சபையில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போது, யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீன தூதுவரிற்கு யாழ். மேயர் விளக்கமளித்தார். இதன் பின்னர், யாழ் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் நூலகத்தை பார்வையிட்டதுடன் யாழ் நூலகத்தின் வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ரூபாவினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதேவேளை, சீன தூதுவர் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட ச…
-
- 11 replies
- 525 views
-
-
பாதுகாப்பின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர்களது ஓய்வறைகள் சோதனை! [Thursday, 2012-10-25 09:28:24] எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களது ஓய்வறைகள் ஆடை அலுமாரிகள் உட்பட பாராளுமன்றத்தின் ஏனைய அனைத்து பகுதிக்கும் பாதுகாப்பின் நிமித்தம் சோதனைக்கு உட்படுத்தப்படுமென பிரதி சபாநாயகர் சந்திர வீரக்கொடி நேற்று புதன்கிழமை சபையில் அறிவித்தார். வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவிருப்பதை முன்னிட்டே இவ் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதி சபா நாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் அறிவுறத்தல்களை விடுக்கும் போதே பிரதி சபாநாயகர் வீரக்கொடி இதனைத் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவ…
-
- 2 replies
- 321 views
-
-
பிரச்சாரங்களின் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை தப்பித்துக்கொள்ள முடியாது என உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் கொழும்பில் சந்திப்பு நடத்துவார் என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் எந்தவிதமான அடிப்படையும் கிடையாது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். முக்கியமான தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரையில் அரசாங்கம் தொடர்புகளைப் பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அர…
-
- 2 replies
- 385 views
-
-
"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 அக்டோபர், 2012 - 18:19 இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன. அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளி…
-
- 163 replies
- 14.4k views
- 1 follower
-
-
[size=4][/size] [size=4]By V.Priyatharshan இலங்கையின் வீசா விண்ணப்பப்படிவங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் அதிகமானவை சென்னையிலேயே பரிசீலிக்கப்பட்டு வந்தன. அந்தவகையில் தற்போது கொழும்பில் கையளிக்கப்படும் வீசா விண்ணப்பங்களை சென்னையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஐக்கிய இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கையாளுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகராலயத்தின் வீசா பிரிவு இம்மாதம் 31ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாகவும் விண்ணப்பங்களை முன்னர் போன்று வீசா விண்ணப்பநிலையத்தில் ஒப்படைக்கலாமெனவும் 90 சதவீத விண்ணப்பப்படிவங்கள் 15 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெள…
-
- 0 replies
- 759 views
-
-
கொக்கிளாய் கடலில் அத்துமீறிய சிங்கள மீனவர்களை கைது! சிறீலங்கா | ADMIN | OCTOBER 25, 2012 AT 22:49 முல்லைத்தீவு-கொக்கிளாய் முகத்துவாரம் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிங்கள மீனவர்களை கைதுசெய்ய முற்பட்ட பொலிஸாரையும், கடற்றொழில் திணைக்கள ஊழியர்களையும் சிங்களவர்கள் தாக்க முற்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை கைவிட்டு அனைவரும் தப்பியோடியுள்ளனர். கடந்த 23ம் திகதி அதிகாலை கொக்கிளாய் முகத்துவாரம் கடற்பகுதியில் அத்துமீறி தடைசெய்யப்பட்ட கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய கடற்றொழில் திணைக்களமும், மாவட்ட பொலிஸாரும் இணைந்து திட்டமொன்றை வகுத்து அதிகாலை 3.00 மணிக்கு முகத்துவாரத்தினுள் இறங்கி சுமார் 15வரையான சிங்கள கடற்றொழிலாளர்களை…
-
- 0 replies
- 660 views
-
-
[size=3] [/size][size=3] ஈழத்தமிழர் விவகாரத்தை கொள்கையில் இணைக்க கனடிய லிபரல் தலைமைத்துவ வேட்பாளர் இணக்கம் Oct 25 2012 08:22:49[/size] [size=3] [size=3]கனடாவின் பெரும்பாண்மைக் கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பாளர் ஜஸ்ரின் ரூடோ ஈழத்தமிழர் விவகாரத்தை தனது கொள்கை விஞ்ஞாபனத்தில் இணைப்பதாக கனடிய மனிதவுரிமை மையத்திடம் உறுதியளித்துள்ளார்.[/size] [size=3]கனடாவின் புகழ்பூத்த பிரதமரான பிய ரூடோவின் மகனான இவரின் தலைமைத்துவப் பதவிக்கான போட்டி கனடாவின் தேசிய ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறியுள்ள நிலையில், கனடிய மனிதவுரிமை மையம் இவருடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நேற்றைய தினம் கனடியத் தலைநகரில் மேற்கொண்டது.[/size] [size=3]சுமார் மூன்…
-
- 0 replies
- 567 views
-
-
[size=4]புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் என்பவரிடம் இருக்கும் புலிகளின் பெருந்தொகையான சொத்துக்களுக்காகவும் தமக்கு தேவையான புதிய புலம்பெயர் வலயமைப்பொன்றை உருவாக்குவதற்காகவுமே அரசாங்கம் கே.பி. யை பாதுகாத்த வருகின்றது. என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். சந்தேகத்தின்பேரில் கைது சொய்யப்பட்ட அப்பாவி இளைஞர் யுவதிகளை எவ்வித விசாரணையுமின்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்கும் அரசாங்கம் கே.பி. போன்ற புலித்தலைவர்களை பாதுகாத்த வருவதானது அவர்களின் அரசியல் ”யலாபங்களை வெளிச்சம்போட்டு காட்டுகிறது எனவும் அவர் தெரிவி…
-
- 1 reply
- 889 views
-
-
[size=4]ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில், இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.[/size] [size=4]இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-[/size] [size=4]ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நவம்பர் மாதம் முதல் நாளன்று இடம் பெற உள்ள கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன. [/size] [size=4]நவம்பர் மாதம் முதல் தேதி ஐ.நா.வின் மனித உரிமைக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக பல முனைகளிலும் நெருக்கடி கொடுக்கப்படும் ஒரு சூழ்நிலையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். [/size] [size=4]இதை தி.மு…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் வாகனம் இன்று புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் மட்டக்களப்பு திரும்பும் போதே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தூதுவர் பயணித்த வாகனம் இராணுவ வீரரொருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியமையினாலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றது என கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டனர். "எனினும் இந்த வாகன விபத்தினால் அமெரிக்க தூதுவரிற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. அத்துடன் அவர் பயணித்த வானம் சிறியளவிலேயே சேதத்திற்குள்ளாகியுள்ளது" எனவும் பொலிஸார் தெரிவித்தனர…
-
- 6 replies
- 920 views
-
-
13 வது சீர்திருத்தத்தினை நீக்குமாறு கோருவோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கருத்துக்களைக் கூறலாம் என நேற்று பாராளுமன்றில்ல் கூறியுள்ளார் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பெனாண்டோ. இந்திய – இலங்கை கூட்டுறவை குலைக்கவே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார் குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அவ்வாறாயின் கோத்தபாயவும், பசில் ராஜபக்ஷவும் வெளியேறுவார்களா? மஹிந்த அரசு தமது கருத்தினை சிங்கள இனவாத சிறு கட்சிகள் ஊடாகவே முதலில் வெளிப்படுத்தும் பின்னர் மக்களைத் தூண்டி விடுவார்கள். அதன் பின்னர் பொதுமக்களின் கருத்து என அதனை சட்டமாக்க முடிவு செய்வார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது என்பது தமிழ் மக்களுக்கு புரியாத ஒன்றல்ல. http://thaaitamil.c…
-
- 0 replies
- 654 views
-
-
சிறிலங்கா அரச கட்டுப்பாட்டு ஊடக நிறுவனமான லேக்ஹவுஸ் வெளியிடும் ஆங்கில பத்திரிகையான “டெயிலி நியூஸ் ன் பிரதம ஆசிரியரான லின் ஒக்கர்ஸ் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மஹிந்தையரதும் அவரது அரசினதும் விருப்பத்துக்கு ஏற்பச் செயற்படாமை காரணமாகவே இவர் பதயிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://thaaitamil.com/?p=36614
-
- 0 replies
- 420 views
-
-
முஸ்லிம் தேசியமும் தமிழ்த் தேசியமும் ஒருபோதும் இணையாது! - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம் உரை!! முஸ்லிம் தேசியம் தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்து போக முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.ஐ.முகம்மத் மன்சூருக்கு சம்மாந்துறையில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தவம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு: 'சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரசாங்கத்துடன் ஆட்சியமைத்திருக்கின்றது. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை அரசாங்கத்துடனான உறவுகளிலே இருக்கின்ற விரிசல்களைக் கருத்திற்கொண்டு அரசாங்…
-
- 2 replies
- 745 views
-