Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 வது சீர்திருத்தத்தினை நீக்குமாறு கோருவோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கருத்துக்களைக் கூறலாம் என நேற்று பாராளுமன்றில்ல் கூறியுள்ளார் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பெனாண்டோ. இந்திய – இலங்கை கூட்டுறவை குலைக்கவே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார் குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அவ்வாறாயின் கோத்தபாயவும், பசில் ராஜபக்‌ஷவும் வெளியேறுவார்களா? மஹிந்த அரசு தமது கருத்தினை சிங்கள இனவாத சிறு கட்சிகள் ஊடாகவே முதலில் வெளிப்படுத்தும் பின்னர் மக்களைத் தூண்டி விடுவார்கள். அதன் பின்னர் பொதுமக்களின் கருத்து என அதனை சட்டமாக்க முடிவு செய்வார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது என்பது தமிழ் மக்களுக்கு புரியாத ஒன்றல்ல. http://thaaitamil.c…

  2. சிறிலங்கா அரச கட்டுப்பாட்டு ஊடக நிறுவனமான லேக்ஹவுஸ் வெளியிடும் ஆங்கில பத்திரிகையான “டெயிலி நியூஸ் ன் பிரதம ஆசிரியரான லின் ஒக்கர்ஸ் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மஹிந்தையரதும் அவரது அரசினதும் விருப்பத்துக்கு ஏற்பச் செயற்படாமை காரணமாகவே இவர் பதயிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://thaaitamil.com/?p=36614

  3. முஸ்லிம் தேசியமும் தமிழ்த் தேசியமும் ஒருபோதும் இணையாது! - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம் உரை!! முஸ்லிம் தேசியம் தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்து போக முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.ஐ.முகம்மத் மன்சூருக்கு சம்மாந்துறையில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தவம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு: 'சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரசாங்கத்துடன் ஆட்சியமைத்திருக்கின்றது. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை அரசாங்கத்துடனான உறவுகளிலே இருக்கின்ற விரிசல்களைக் கருத்திற்கொண்டு அரசாங்…

  4. சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் கொள்கை அறிக்கை, வேலைத்திட்டம் என்பன ஆங்கிலத்திலோ அல்லதுதமிழிலோ கிடைக்கப் பெற்றிருக்காத இன்றைய சூழலில், தோழர் குமார் குணரத்தினத்தின்ஐரோப்பிய பயணத்தின் போதான அவரது கருத்துக்களில் இருந்தும், சம உரிமைஇயக்கத்தின் வேலைத்திட்டதில் இருந்தும் அவர்களை புரிந்த…

  5. தமிழக அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு தமிழர் பிரச்சினையை பயன்படுத்திக் கொள்கின்றனர் – 25 அக்டோபர் 2012 தயா மாஸ்டர் தமிழக அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வை.கோ போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், முன்னாள் புலி உறுப்பினர் என்ற ரீதியில் தாம் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் உயிரிழப்பு தொடர்பில் எவ்வித சந்தேகங்களும் கொள்ளத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

  6. வடமாகாண சபை அமைந்தால் தனி நாட்டுப் பிரகடனம் உறுதி; -கூட்டமைப்பின் திட்டம் அதுவே - மேத்தானந்த தேரர் 25 அக்டோபர் 2012 வடமாகாணசபை அமைந்தால் தனி ஈழத்துக்கான நகர்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் முன்னெடுக்குமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே, பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அரசு உடனடியாக அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எல்லாவெல மேத்தானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். இது விடயத்தில் அரசு இனியும் காலம் கடத்து மானால், அன்று வரதராஜப் பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை அறிவித்தது போல் கூட்டமைப்பும் தனி நாட்டுக்கான பிரகடனத்தை முன்வைக்கும் என்றும் அ…

  7. http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/302713_10151074181917377_70429488_n.jpg இல கோபால்சாமி Subscribe · 2 hours ago சமீபத்தில் கிருஷ்ணா கோதாவரி டெல்டா (KGD) பகுதியில் ரிலையன்ஸ் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது தங்களுக்குத் தெரியும். அது இந்தியாவின் எரிவாயு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளதும் அறிவீர்கள். வட இலங்கைக்கும் தென் தமிழகத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதி ´காவேரி டெல்டா பேசின்´ எனப்படுகிறது. நமது ராமர்(!) பாலத்திற்கு மேலே உள்ளது காவேரி பேசின், கிழே உள்ளது மன்னார் பேசின். இங்கே படிமப் பாறைகளில் எண்ணை மற்றும் எரிவாயு வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதற்கான வேலை 1970 களில் ரசிய எண்ணை நிறுவனம் மூலமாகத் தொ…

  8. [size=2][size=4]நாட்டின் தென்மேற்கு கரை புவித்தட்டில் பிளவு ஏற்பட்டிருப்பதனால் நிலநடுக்கத்தின் தாக்கமும் பாதிப்புகளும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய கட்டடங்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டு உபகுழுவின் தலைவர் சகபந்தே இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார். கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்து தெரிவிக்கையில், 'நாட்டின் தென்மேற்கு கரைக்கு அப்பால் 500 - 700 கிலோ மீற்றர் தொலைவில், இந்தோனேசிய - அவுஸ்திரேலிய புவித்தட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புவியியல் ஆய்வுகளில் க…

  9. சீன தூதுவரின் அழைப்பின்பேரில் சம்பந்தன் ௭ம்.பி. தலைமையில் ௭ம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ௭ம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் சீனத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லிக்கு விஜயம்செய்து இந்தியத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இது குறித்து மாவை சேனாதிராஜா வழங்கிய பேட்டி காணொளி கீழே தரப்படுகிறது. http://youtu.be/LU90kACtLt8 http://www.seithy.co...&language=tamil

  10. 13 அல்ல! 19ஆம் திருத்தச் சட்டம் வருகிறது “வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்” என இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்…

  11. குவைத்தில் நடைபெற்ற முதலாவது ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடல் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனது இரண்டுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை குவைத்தில் சந்திப்பதற்கு ஜனாதிபதி சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை. மகிந்த ராஜபக்‌ஷ குவைத்தில் தங்கியிருந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரப், தாய்லாந்துப் பிரதமர் ஜிங்லக் சினவத்ரா, ஈரானிய அதிபர் மொகமட் அகமடிநிஜாட் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசக்கூடும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. …

    • 4 replies
    • 677 views
  12. [size=4]முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை - இந்திய உறவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. த டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தோடு உள்ள பலரும் அரசியலாமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ள நிலைமையில் இலங்கை அரசாங…

    • 12 replies
    • 1.8k views
  13. இராணுவத்திற்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்யும் முன்னாள் போராளிகள். சிறீலங்கா | ADMIN | OCTOBER 25, 2012 AT 09:12 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் சுமார் மூவாயிரம் பேர் இதுவரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டுள்ளனராம்.இவர்களில் 2,200 பேர் ஆண்கள் என்றும் 800 பேர் பெண்கள் என்றும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 350 பேர் இன்று (24) சிவில் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ளனராம்.மேலும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்களும் இந்தப் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனராம். இவ்வாறு சிவில் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படும் புலிகளின் முன்னாள் உறுப்பினர்ள். வடபகுதியில் இராணுவத்தி…

  14. வடக்கிற்கான தீர்வுத் திட்டம் குறித்து ஐ.நா சந்தேகம் வெளியிட்டுள்ளது? 25 அக்டோபர் 2012 வடக்கிற்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. யுத்த நிறைவின் பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தி ஏற்படடுள்ளதாக, உள்ளக இடம்பெயர்வு மற்றும் மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி சலோகா பியானி தெரிவித்துள்ளார். எனினும், நாட்டின் வடபகுதியில் தற்போது அமுல்படுத்தப்படும் தீர்வுத் திட்டத்தின் ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முகாம்களை மூடி, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்கள் மூடப்பட வேண்டும் என்ப…

  15. புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்த அவுஸ்திரேலியா தீர்மானம் 25 அக்டோபர் 2012 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரே ஒரு தடவை இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் பலவந்தமாக நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மெல்பர்னில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளார். 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்த 40 வ…

  16. இலங்கை இராணுவ பொறியியல் துறையில் மிதிவெடி அகழ்வு பணியில் பணியாற்றும் இராணுவ வீரர் D.K.N Rohan க்கும், அவரது பயிற்சிபெற்ற நாய்க்கும் மிதிவெடி அகற்றல் தொடர்பில் "Mine Detection Dog Team of the Year" என்ற சர்வதேச விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் வாசிங்டனை தளமாக கொண்ட Marshall Legacy Institute (MLI) நிறுவனத்தால் இவ் விருதுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். http://www.seithy.co...&language=tamil

  17. [size=2][size=4](சுபுன் டயஸ்)[/size][/size] 'அதிகளவான இராணுவத்தினர் யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ளனர் என்று புலம்பெயர் தமிழர்களும், சில கட்சியினரும் குரலெழுப்பி வருகின்ற போதிலும், இராணுவத்தினரின் உதவும் மனோபாவம் தொடர்பில் யாழ். மக்கள் நன்கு அறிந்துள்ளனர்' என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். [size=2][size=4]'பொதுமக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், பெரும்பாலான நேரத்தை கொழும்பில் வாழ்வதிலேயே செலவளிக்கின்றனர். ஆனால், இராணுவம் எந்நேரமும் யாழ். மக்களுடனேயே இருக்கின்றது. அதனால், இராணுவம் தமக்கு எவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றது என்பதை அம்மக்கள் அறிவர்' என்றும் அவர் குறிப்பிட்டார். அச்சுவேலி பகுதியில் பாதுகாப்பு …

  18. மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்க லண்டன் செல்கிறார் வைகோ. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 11:49 அடுத்த மாதம், நடக்கவுள்ள, மாவீரர் தின கூட்டத்தில் பங்கேற்க, ம.தி.மு.க பொதுச்செயலர், வைகோ லண்டன் ‌செல்கிறார். இம்முறை லண்டனில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வில் உரை நிகழ்த்துவதற்கு, தமிழகத்திலிருந்து, இரு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒருவர், வைகோ . இதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம், அவர் ஏற்கனவே தனது பாஸ்போட்டை பெற்றுள்ளார். லண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வைகோ அடுத்த மாதம் லண்டன் செல்வார் எனதெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=36382

  19. சீற்றத்தில் கோத்தா 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போருக்குப் பிந்திய அரசியல் மூலோபாயம் இதை விட மாற்று வழி எதையும் விட்டுவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, இலங்கை அரசும், எதிர்க்கட்சிகளும், அனைத்துலக சமூகமும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். வடக்கில் நிரந்தரப் படைத்தளங்களை அமைப்பதற்கான உதவிகளை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் முன்வைத…

    • 3 replies
    • 1.1k views
  20. பிரித்தானியாவில் இருந்து சிலரை நாடு கடத்துவது இறுதி நேரத்தில் ரத்து சிறீலங்கா | ADMIN | OCTOBER 24, 2012 AT 09:36 பிரித்தானியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தடையுத்தரவு கோரல் மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. அவர்களின் வழக்குகளில் வாதாடிய சட்டத்தரணிகள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு கடத்தலுக்கு எதிராக சுமார் 12 சட்ட அமைப்புகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தன. இந்த மனு மீதான விசாரணையை அடுத்து,…

  21. இலங்கையின் ஆயுதக் கப்பல் அரபு குடியரசில் தடுத்து வைப்பு இலங்கை அரசுக்குச் சொந்தமான மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து விசாரித்துள்ளது. கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல் களுக்குப் பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்குக் கொடுக்கும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசுக் கடலில் தரித்து நின்ற சிந்துபாத் என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் திகதி அந்த நாட்டுக் கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை இலங்கைப் பாதுகாப்பு அ…

  22. கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறாள் தமிழினி என்ற சிறுமி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வரும் தமிழினி கடந்த புலமை பரீட்சையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருக்கிறார். மாவட்டத்தில் இந்த பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இரண்;டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பலர் இருக்க வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகளை பெற்ற இந்த தம்ழினியை பற்றி ஏன் எழுதவேண்டும்? தமிழினியின் வாழ்க்கை பெரும் துயரத்தில் மிதக்கிறது. அவளது வாழ்வில் இந்தப் புள்ளிகள் ஒரு சாதனையாகின்றன. தமிழினியின் தந்தை தனபாலளை யுத்தம் இந்த உலகை விட்டு அழித்துவிட்டது. தாய் புவனேஸ்வரி வறுமையினால் வெளிநாட்டில் உழ…

  23. பிரித்தானியாவில் இன்று மாலை 4 மணி தொடங்கி 7 மணிவரை India House, Aldwych, London WC2B4NA எனும் இடத்தில் அமைந்துள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு உலையை நிறுத்துவது உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் நடைபெற்று கொண்டு உள்ளது .தமிழ் சொலிடாரிட்டி எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்திற்கு பிரித்தானியாவில் உள்ள பல அமைப்புகள் கைகோர்த்துள்ளது. பல இன மக்களின் ஆதரவுடன் இப்போராட்டம் நடைபெற்று கொண்டு உள்ளது . நீதியான போராட்டங்கள் ஒரு போதும் தோற்காது எழுச்சி கொண்ட மக்களுக்கு முன்னால் அது தாக்குப் பிடிக்காது என்பது வரலாற்று உண்மை. அணு உலைகளுக்கு எதிராக திரளுவோம் நம்மையும் எதிர்கால சந்ததிகளையும் காத்திடுவோம். http://thaaitamil.…

  24. யாழ்.வரணிப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சுட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வரணி மகாவித்தியாலத்திற்கு அண்மையில் இருந்த பொது மக்களை துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்து கலைந்து போகுமாறு மிரட்டியுள்ளார். இருப்பினும் காரணத்தை அறியாமல் பொது மக்கள் கலைந்து செல்லாதைத் தொடர்ந்து அவர் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தின் போது தெய்வாதீனமாக உயிர் இழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. இதன்பின்னர் அங்கிருந்து…

  25. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக 46 அறிக்கைகள் சமர்ப்பணம். [Wednesday, 2012-10-24 09:49:20] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக 46 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இவை இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கைகள் என்ற போர்வையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 17 அறிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் அனுப்பி வைத்துள்ளன. வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை, அரச சார்பற்ற நிறுவனங்கள் எந்த இடத்திற்கும் சுதந்திரமாக செல்ல முடியாமை, விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை விடுதலை செய்யாமை, அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை போன்ற குற்றச்சாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.