ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. மக்களால் கையளிக்கபட்ட மகஜர் வருமாறு: கிளிநொச்சி. 2012.09.27. பொதுச்செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் அமையம், ஜெனீவா. அடிப்படை மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துங்கள். இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நில ஆக்கிரமிப்புக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்நிலை 2009 அரசு, புலிகள் இறுதிப்போரின் பின்னர் அதி…
-
- 3 replies
- 569 views
-
-
[size=4]மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான் என 91 அகவை நிரம்பிய இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனிடம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங் இப்படி கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து தலைவர்களையும் செவ்வி கண்டிருக்கும் இவர் இப்பொழுதும் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறார் என ஆனந்த விகடன் குறிப்பிடுகிறது. இவரிடம் ''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?'' எ…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களில் ஈடுபடுவது புதிய விடயமல்ல. காலா காலமாக அவர்கள் இதனையே செய்துவருகின்றனர். ஆனால் ௭ஸ்.ஜே.வி. செல்வநாயகம் இதுபோன்று டில்லிக்கு அடிக்கடி சென்று அவர்களை அசெளகரியப்படுத்தவில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 9 replies
- 857 views
-
-
[size=2] [size=4]தரம் ஐந்து மாணவர்களுக்காக நாடாளாவிய ரீதியில் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருக்கின்றது. புலமைப்பரிசில் முடிவுகள் இன்று அதிகாலை 12.20 மணிக்கு இணையத்தில் வெளியாகின. [/size][/size] [size=2] [size=4]இணைய முடிவுகளின் படி:[/size][/size] [size=2] [size=4]யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் [/size][/size] [size=2] [size=4]பாலேந்திரன் அபிராம் 193 புள்ளிகளைப்பெற்று முதலாவது இடத்தையும், [/size][/size][size=2] [size=4]கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். [/size][/size] [size=2] [size=4]யாழ்.மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக 148 புள்ளிக…
-
- 14 replies
- 1.5k views
-
-
[size=3]முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரியிடம் முறையிட்டுள்ளார்.[/size] [size=3]கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகள் சிலரின் உத்தரவுக்கு ஏற்ப மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விருப்பு வாக்குகளை 22ஆயிரமாக அதிகரித்ததாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.[/size] [size=3]விருப்பு வாக்குகள் அதிகரிக்கப்பட்ட விடயத்தை ஊடகவியளலாளர்களிடம் கூற வேண்டாம் என தனக்கு நெருக்கமான அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியதாக இராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழ…
-
- 4 replies
- 507 views
-
-
[size=4]றயர்சன் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பொறியியலாளரும் விஞ்ஞானியுமான கவிஞருமான உதயகரன் துரைராஐாவிறகு அர்ப்பணிப்பிற்கும் மிதமிஞ்சிய கொடைக்குமான பாராட்டு விருது (Dedication and Outstanding Contribution Appreciation Award) ஒன்று புளோறிடாவில் நடந்த சர்வதேச நகராட்சி சம்மந்தமான சமிக்கைச் சங்கத்தின் (International Municipal Signal Association - IMSA) 117வது ஆண்டு மாநாட்டில் வைத்து வழங்கிக் கொளரவிக்கப்பட்டது.[/size] [size=4]புளோறிடாவில் உள்ள ஓம்னி றிசோட்டில் (Omni Resort, Orlando, FL) நடைபெற்ற மேற்படி மாநாட்டில் உலகின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பழமையான இச் சங்கத்தில் மின்விளக்கை முதலில் கண்டுபித்த…
-
- 0 replies
- 662 views
-
-
தமது போராட்டத்தை முன்னெடுத்து கண்டியிலிருந்து கொழும்புக்கான பாத யாத்திரை மேற்கொண்டுள்ள அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் இரு உறுப்பினர்கள் இன்று (27) காலையில் உயிரிழந்துள்ளனர். இவர்களது பாத யாத்திரை கம்பஹா இம்புல்கொட ராஜசிங்க வித்தியாலயத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது வாகன விபத்தொன்றில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றன. ஆனால் பாதுகாப்பு படையினரின் இரகசிய படையே தம்மை வாகனத்தால் திட்டமிட்டு நெரித்துக் கொன்றதாக மாணவர்கள் கூறியுள்ளார்கள். களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பிரிவைச் சேர்ந்த நான்காவது ஆண்டு மாணவனான ஜானக பண்டார, ருகுணு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவனான எச்.பீ. சிசித பிரியங்கர ஆகியோரே…
-
- 1 reply
- 818 views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசுகளின் தமிழர் மீதான போர்க் கொடுமைகளின் சாட்சியாக இருந்து வந்த கிளி நொச்சி மத்திய கல்லூரி சிறிலங்கா அரசாங்கத்தினால் அபிவிருத்தி என்ற பேரில் இடிக்கப்பட்டன. ஆனால் அவை இன்னமும் கட்டிக் கொடுக்கப்படவில்லை. வெளி நாட்டவர்கள் சிங்களத்தின் கோரமுகத்தினை இந்த கட்டடம் ஊடாகவும் அறிந்து வந்துள்ளார்கள் இதனாலேயே இந்த கட்டிடத்தினை இடித்தார்கள். ஆனால் புதிய கட்டடம் அமைக்க என்றே இந்த கட்டடம் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது கிளி நொச்சி புத்திஜீவிகள் மத்தியில் சினம் ஏற்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=33602
-
- 0 replies
- 444 views
-
-
[size=5]அரசு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவு எதிர்பார்க்காத ஒன்றா..?[/size] முத்துக்குமார் கிழக்கு மாகாணத் தேர்தல் ஆரவாரங்கள் முடிவடைந்து விட்டன. தேர்தல் முடிந்த பின்னரும் யார் மாகாண நிர்வாகத்தை அமைப்பது (இங்கு ஆட்சி அமைப்பது என்ற பதத்தினை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் மாகாணசபைகளுக்கு சில நிர்வாக அதிகாரங்கள் மட்டுமே உண்டு) என்பது தொடர்பில் ஆரவாரங்கள் இருந்தன. தமிழ் ஊடகங்களும், தமிழ்ப் பத்தி எழுத்தாளர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தான் அதிகளவில் ஆரவாரங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தனர். எப்படியாவது முஸ்லிம் காங்கிரஸூடன் சேரவிடாது தடுப்பது என்பதே அவர்களது இலக்காக இருந்தது. யதார்த்த நிலமைகளுக்கு அப்பால் கற்பனை உலகிலேயே அதிகளவில் அவர்கள் மிதந்து கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 669 views
-
-
[size="5"]இந்தியாவுக்கல்ல எந்த நாட்டுக்கு சொன்றாலும் தீர்வுக்கு கூட்டமைப்பு எம்மிடமே வரவேண்டும்: அரசாங்கம் [/size] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களில் ஈடுபடுவது புதிய விடயமல்ல. காலா காலமாக அவர்கள் இதனையே…
-
- 0 replies
- 487 views
-
-
தற்போது தடுப்புக் காவலில் 500 போராளிகள் மட்டுமே உள்ளதாகவும் அதில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று சிங்கள போர்குற்ற இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர்.எனக் கூறியுள்ளார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அரச தகவல் திணைக்கள அறிக்கையின் படி 15 000 போராளிகள் சரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறாயின் அரசின் தற்போதைய கணக்கின்படி மீதி மூவாயிரம் போரா…
-
- 1 reply
- 533 views
-
-
[size=2][size=4] (சுமித்தி) இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தை கண்டித்து யாழ். மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரதி மேயர் சட்டத்தரணி ரமீஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினரான எம்.எம். முஸ்தபா இந்த கண்ட பிரேரணையை சபையில் முன்வைத்தார். இந்த பிரரேணை யாழ். மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என பிரதி மேயர் ரமீஸ் குறிப்பிட்டார். இந்த கண்டன பிரேரணையின் பிரதி கொழும்பிலுள்ள அமெ…
-
- 0 replies
- 385 views
-
-
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலத்தை உடன் வழங்கு; கிளிநொச்சியில் திரண்ட மக்கள் அரசின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு உடனே வெளியேறு, தமிழர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களா? எமது நிலத்தில் சுதந்திரமாக வாழ விடு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்,போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின…
-
- 1 reply
- 410 views
-
-
[size=4]இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பொறுப்புக்கூறுதல், உறுதியான அமைதியை மீளக்கொண்டு வருதல் குறித்து சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம் 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.[/size] [size=4]மத்திய கிழக்கு, தெற்காசிய விவகார உபகுழுவைச் சேர்ந்த பில் ஜோன்சன், வில்லியம் கீற்றிங், மைக்கல் கிரிம், வோல்டர் ஜோன்ஸ், ஸ்டீவ் சபொற், ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.[/size] [size=4]ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசுக்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்கும…
-
- 0 replies
- 293 views
-
-
[size=4][/size] [size=4]முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வொன்றுக்கென அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நிகழ்வுக்கு உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை ௭ன தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:[/size] [size=4]மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று மீள்குடியேற்றத்திற்கென அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாபிலவு மக்கள் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (நேற்று முன்தினம் 25-09-12) ஜனாதிபதி வருவதாக தெரிவித்து முல்லைத்தீவு கிராமங்களில் இருந்து விதவைகள், ஊனமுற்றோர், கர்ப்பிணிகள் ௭ன ஐவர் வீதமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.[/size] [size=4]இந்…
-
- 0 replies
- 261 views
-
-
கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பையேற்று அதற்கு ஆதரவு வழங்காதது முஸ்லிம் காங்கிரஸ் செய்த பெரும் துரோகமாகும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். …
-
- 2 replies
- 678 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய , கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எதிர்ப்பு காட்டுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பற்றி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இதை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்த தாகவும், இப்போது, போருக்குப் பின்னர் இதற்கான அவசியம் அதிகரித்திருப்பதாகவும் கூறினார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளும் இதற்கு இணங்கினாலும், தமிழரசுக் கட்சி மட்டும் …
-
- 0 replies
- 532 views
-
-
இன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பங்கேற்றார் . இறந்து போன மீனவர் சகாயத்தின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அங்குள்ள தேவாலயத்தை சுற்றி வந்தார். பின்பு மக்கள் எல்லோரும் மண்ணில் புதையும் போராட்டத்தை முன்னெடுக்கச் சென்றனர் . அப்போது மண்ணில் தங்களை தாங்களே புதைத்துத் கொண்டு நடைபெற்ற போராட்டத்திலும் திரு வைகோ பங்கேற்றார் . உடல் முழுவதும் மணல் ஒட்டிக் கொண்டதால் வைகோ அவர்கள் கடலில் மூழ்கி தன்னை குளிப்பாட்டிக் கொண்டார். இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஒரு பெரிய கட்சியின் தலைவர் தானே முன்வந்து பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. http://thaaitamil.com/?p=33430
-
- 2 replies
- 818 views
-
-
180 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் தற்போது தடுப்புக் காவலில் உள்ள 500 முன்னாள் புலிகளில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்களில் 320 பேருக்கு நீண்டகாலப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிற…
-
- 1 reply
- 660 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
காலி துறைமுகத்தை அண்மித்தான காலி கடற்பரப்பில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை தனியார் நிறுவனம் ஒன்று நிறுவ உள்ளது. இதற்கான அனுமதியைப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளது. சிறிலங்காவின் தென் கடலின் ஊடாகச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த ஆயுதக் களஞ்சியம் அமைக்கப்படவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. Avern Guard Off shore Services (Pvt.) Ltd என்ற தனியார் நிறுவனமே இந்த ஆயுதக் களஞ்சியத்தை நிறுவ உள்ளது. தென்னாசியப் பிராந்தியக் கடற்பரப்பின் ஊடாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்படுவதனைத் தடுக்கும் வகையிலேயே இந்த ஆயுதக் களஞ்சியசாலை அமைக்கப்படவுள்ளது. இதே போன்று மேலும் 35 வெளிநாட்டு நிறுவனங்கள் காலி கடல் பிராந்…
-
- 1 reply
- 449 views
-
-
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த 24 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்தையர் விடுத்த பணிப்பினையடுத்து தனது பயணத்தினை ரத்துச் செய்துள்ளார்.இருப்பினும் இவரது சீன விஜய குழுவில் இடம்பெற்றிருந்த ஏனையோர் திட்டமிட்டபடி குறித்த தினத்தில் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். என நம்பகமான வட்டாரங்கள் எமது இணையத்துக்குத் தெரிவித்தன. கடந்த 24 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக நிலையில் அன்றிரவே இவர் சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார். இது இவ்வாறிருக்க, அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவருமான அமீர் அலியைத…
-
- 1 reply
- 933 views
-
-
கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்தையரின் சகோதரனான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதியமைச்சராக மோகன் லால் குரேறு நியமிக்கப்படவுள்ளார். சிறிலங்காவின் கல்வித்துறையில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு தனது தம்பியை கல்வி அமைச்சராக நியமிப்பதே சிறந்த வழி என ஜனாதிபதி மஹிந்தையர் தீர்மானித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களதும் விரிவுரையாளர்களதும் போராட்டங்கள் உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில் இந்த அமைச்சு மாற்றம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதாரத்தை ஏப்பமிட்ட பஸில் போதாக்குறைக்கு எதிர்காலத்தில் கல்வித்துறையையும் ஏப்பமிடவுள்ளார். http://thaaita…
-
- 1 reply
- 437 views
-
-
வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குமாறு சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது. வரும் ஒக்ரோபர் 10ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது தொடர்பான கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோருடனான சந்திப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றக் கோரும் விவகாரம் குறி…
-
- 0 replies
- 291 views
-
-
கோண்டாவில் கிழக்கு வல்லிபுர ஆலய தேர்த்திருவிழாவில் விமானப்படை உலங்கு வானூர்தி பூக்களைத் துவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூக்களைத் தூவுவதற்காக ஆலைய நிர்வாகத்தினர் உலங்கு வானூர்தியை வாடகைக்கு வாடகைக்கு அமர்த்தியதாக தெரியவருகிறது. இந்த ஆலையத்திற்கான திருவிழா தற்போது நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் (25.09.12) தேர் திருவிழாவாகும். தேர் வீதியுலா வரும் போது சிலர் விமானப்படை உலங்கு வானூர்தியை வாடகைக்கேனும் பிடித்து மலர் தூவ முற்பட்டிருந்தனர். எனினும் அதற்கு வாடகையாக சுமார் ஒன்றரை இலட்சம் கட்டணத்தை விமானப்படை கோரியிருந்தது. இக்கட்டணத்தை செலுத்தியதுடன் இருவர் நேரில் பலாலி சென்று குறித்த விமானப்படை உலங்கு வானூர்தியில் ஏறி ஆலயத்தை அடையாளம் காட்ட அழைத்தும் சென்றுள்ளனர்…
-
- 8 replies
- 1k views
-