ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 02:59 PM இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டபர் மக்லெனனை சந்தித்தவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜயவர்த்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கை வருவாய் ஈட்டல் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இலங்கை பொருளாதார இராஜதந்திரத்திற்கு கொடுத்துள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து வெளிவிவகார செயலாளர் எடுத்துரைத்துள்ளார்…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 31 MAY, 2024 | 02:54 PM யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது, கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு, நெடுந்தீவு, எழுவை தீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்தன. பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே குறித்த சேவையினை நிறுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. படகு சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில், யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 12:36 PM கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்ட்டமை தொடர்பில் டிரையல் அட்பார் விசாரணையிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவை விடுவிப்பதற்கான முயற்சிகளிற்கு எதிராக காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் கடற்படை தளபதியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவின் மீதான விசாரணை எதிர்வரும் மூன்றாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2008-2009 இல் 11 இளைஞர்களை …
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863
-
-
- 21 replies
- 1.6k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 11:38 AM இலங்கையில் மேலதிகமாக உள்ள வெடிமருந்துகளை உக்ரைனிற்கு விற்பனை செய்வதற்கு போலந்து இடைத்தரகர்களை பயன்படுத்துகின்றது என வெளியாகியுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. இவ்வாறான தகவல்களில் எந்த உண்மையிலும் இல்லை ஆதாரங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். எனினும் காலவதியான வெடிமருந்துகள் இராணுவத்தின் முகாம்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் இந்த வெடிமருந்துகள் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமானவை இல்லை தனியாருக்கு சொந்தமானவை என தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இவ…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 31 MAY, 2024 | 11:33 AM இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே …
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 MAY, 2024 | 11:42 PM வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கான் இயந்திரம் கடந்த சிலமாதங்களாக பழுதடைந்துள்ளமையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். வவுனியா பொது வைத்தியசாலையில் ஒரேயொரு CT இயந்திரம் மாத்திரமே உள்ளது. அது கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் CT ஸ்கான் எடுக்கவேண்டிய நோயாளர்கள் அனுராதபுரம், பொலனறுவை மற்றும், யாழ் போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அங்கு கொண்டுசெல்லப்படும் ஒரு நோயாளிக்காக நோயாளர்காவுவண்டியில் ஒருவைத்தியர் தாதியர் சிற்றூழியர் ஆகியோர் பயணிக்கவேண்டும். …
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
Published By: VISHNU 31 MAY, 2024 | 03:10 AM இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலைய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ம் இந்தியாவின் புனித கங்கைகளின் தீர்த்தம் இலங்கையிலுள்ள புனித கங்கைகளின் தீர்த்தங்கள் கொண்டு இந்தியாவின் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் இந்தியா, இலங்கையிலுள்ள பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளது என அகில பாரத சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார் பக்த அடியார்கள் அழைப்பு விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்லத் தடை! உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்டத்தில் அகழப்படும் சுண்ணாம்புக் கற்களை எவ்வித அனுமதியும் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தொடர்பாக …
-
- 0 replies
- 165 views
-
-
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்! சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “நண்பா, போதைக்கும், புகைத்தலுக்கு முற்றுப்புள்ளிவைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திண…
-
- 5 replies
- 451 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 MAY, 2024 | 08:40 PM படைத் தரப்பினருக்காகக் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எம்.எஸ் சாள்ஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுவின் அனு…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 30 MAY, 2024 | 04:10 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/ar…
-
- 2 replies
- 457 views
- 1 follower
-
-
ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைச் செய்யப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். அதற்காக மாற்று ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன. கடதாசியில் செய்யப்பட்ட ‘ஸ்டோ‘,‘ ‘கடதாசி மட்டை கரண்டி’, ‘கடதாசி கப்’, ‘கடதாசி பிளேட்’ இவ்வாறு பல வடிவங்களில் பொருட்கள் சந்தைகளில் புழக்கத்தில் உள்ளன. யோகட் வாங்கும் போது, பெரும்பாலான கடைகளில் மட்டை கடதாசி கரண்டியே வழங்கப்படுகின்றது. சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தூங்கிவீசிவிட்டு, விரைவாக உக்கும் மண்ணுக்கு உரம்கொடுக்கும் இந்த கடதாசி மட்டை கரண்டியின் பயன்பாடு வரவேற்கத்தக்கது. எனினும், அக்கடதாசி மட்டை கரண்டியில் குழி இருக்காது, வாங்குவோர்தான் இரண்டுபுறங்களும் மடித்து, குழியைப்போல செய்துக்கொள்ளவேண…
-
- 0 replies
- 318 views
-
-
30 MAY, 2024 | 11:01 AM பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைக…
-
-
- 3 replies
- 364 views
-
-
30 MAY, 2024 | 12:39 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு எதிரான ஜெனீவா வெளிக்கள விசாரணை பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தின் பதிலளிப்புக்கள் திருப்திகரமாக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர, இது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுக…
-
- 0 replies
- 322 views
-
-
30 MAY, 2024 | 02:51 PM உக்ரைனுடன் மீதான ரஸ்யாவின் போரில் இலங்கையின் முன்னாள் இராணுவவீரர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுவது குறித்து மேற்குலகின் முன்னணி நாடொன்று கவலை தெரிவித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. மேற்குலகம் வெளியிட்ட கரிசனையை தொடர்ந்தே இலங்கை அரசாங்கம் கூலிப்படையினராக போர்புரியும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது எனவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்தே பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. ரஸ்ய …
-
- 0 replies
- 246 views
-
-
30 MAY, 2024 | 06:17 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா ஊடாக செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். ரஷ்ய யுத்தக்களத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள 37 இலங்கையர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.455 இலங்கையர்களில் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். வெளிவிவகாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு …
-
- 0 replies
- 177 views
-
-
30 MAY, 2024 | 06:34 PM (நா.தனுஜா) இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என 'நோ ஃபையர் ஸோன்' ஆவணப்படத்தின் இயங்குநர் கெலம் மக்ரே வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படம் 11 வருடங்களுக்கு முன்னர் 'சனல் 4' என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது. …
-
- 0 replies
- 245 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்க…
-
- 2 replies
- 240 views
-
-
ஜெனீவாவினால் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால்சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி தேசிய பாதுகாப்ப…
-
- 0 replies
- 233 views
-
-
Published By: DIGITAL DESK 7 30 MAY, 2024 | 04:17 PM கறையானால் அறிக்கப்பட்ட மின்கம்பங்களை மாற்றி தரும்படி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த ராத்துங்கொட தோட்டப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள மரத்தூன்களிலான மின்கம்பங்கள் அடியில் கறையான்களால் அறிக்கப்பட்டு விழும் தருவாயில் உள்ளது. ஹங்குரன்கெத பிரதேச சபைக்குட்பட்ட ஹேவாஹெட்ட ராத்துங்கொட தோட்ட பகுதியில் காணப்படும் மரத்திலான மின்கம்பங்கள் கறையானால் அறிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதனால் பலத்த காற்று காரணமாக அது உடைந்து வீடுகளின் மேல் விழும் அபாயம் உள்ளது. இதனால் இப்பிரதேச மக்களுக்கு மின்கம்பங்களினால…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
30 MAY, 2024 | 01:43 PM மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நாளை வெள்ளிக்கிழமை (31) மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெறவுள்ளது. கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிள்ள இந்த நினைவேந்தலில் இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் வடக்கு, கிழக்கு ஊடக அமைப்புக்கள் உட்பட பல தரப்பினர் பற்கேற்கவுள்ளனர். இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமும் இடம்பெறவுள்ளது. இதில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்…
-
- 3 replies
- 344 views
- 1 follower
-
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு (ஆதவன்) வவுனியாவின் எல்லையில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களில் ஒன்றான நந்திமித்திரகம கிராமத்தில் விகாரை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி ஒதுக்கியுள்ளார். அங்குள்ள விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 இலட்சம் நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கான அடிக்கலையும் நட்டுள்ளார். அதேவேளை, கம்பிலிவெவ சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக 19 இலட் சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.(ச) …
-
-
- 13 replies
- 1.5k views
-
-
ரணிலின் முகவரே சுமந்திரன் எம்.பி.! கஜேந்திரன் எம்.பி. கடும் தாக்கு (ஆதவன்) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசியத்தின் தேசவிரோதி. விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்க முயன்ற ரணிலின் முகவர். பொது வேட்பாளர் கருத்துப் பரிமாற்றம் ஒரு கண்துடைப்பு நாடகம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- சுமந்திரன் அரசாங்கத்தைப் பாதுகாத்துச் செயற்படுபவர். இந்திய, மேற்குலக நாடுகளின் நலன்களின் அடிப்படையில் அந்தத் தரப்புகளுக்காகச் செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் முகவர். இப்போதும் அவர் அதை…
-
- 0 replies
- 322 views
-
-
சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது. நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவத…
-
-
- 2 replies
- 230 views
- 1 follower
-