Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசுமீது சுமத்தப்பட்டு வரும் தொடர் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.[/size] [size=4]எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். யுத்த நிறைவைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மிகவும் சுதந்திரமான முறையில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]யுத்தம் இடம்பெற்ற மாவட்டங்களில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில…

  2. முல்லைத்தீவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த இக்கவனவீர்ப்புப் போராட்டம் 12 மணிக்கு முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியவர்கள்…

  3. தேர்தல் முடிவுகளால் பயண்டு போன மஹிந்த அரசு கிழக்கு மாகாணத்தினை முழுமையாக விழுங்கும் ஓர் தந்திரோபாயத்தினை நடைமுரைப்படுத்த திட்டமிட்டுள்ளது. கிழக்கில் அனைத்து அரச உயர் அதிகாரிகளையும் சிங்களவர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளது. தற்போது மாகாண சபையில் புதிதாக சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது 13ஆவது திருத்தச் சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மீதான, சிறுபான்மைச் சமூகத்துக்கு விடுக்கப்படும் சவால் என மாகாண சபை உறுப்பினர் துரை ரட்னம் கூறியுள்ளார். அப்படியானால் இதனை எதிர் கொள்வதற்கு சிறுபான்மைச் சமூகம் தயாராக வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். புதிய கிழக்கு…

  4. ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தமிழர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைகள் இங்கே அதிகரித்துள்ளன. ஐ.நா. தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் அழுத்தம் போதாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பிரதிநிதிகளிடம் சுட்டிக் காட்டியிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஒரு வாரகாலம் பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு வடஅமெரிக்க பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியான ஹன்னி மெஹாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சோலர்ஸ் அடங்கிய 4 பேர் கொண்ட…

  5. பாகிஸ்தானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.இந்தக் குழுவினர் சிறிலங்கா படை அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளனர். இது இரு நாட்டு ஆயுதப்படைகளுக்கும் இடையிலான முறைப்படியான முதலாவது அதிகாரிகள் மட்ட சந்திப்பாகும். இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பரந்துபட்ட விவகாரங்கள், ஒத்துழைப்புகளை மையப்படுத்தி இந்தப் பேச்சுக்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானிய குழுவுக்கு, அந்த நாட்டின் கூட்டுப்படைத் தலைமையகத்தின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இனாம் உல் ஹக் தலைமை தாங்கினார். சிறிலங்கா குழுவுக்கு இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தலைமை வ…

  6. ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நியுயோர்க்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சிறிலங்கா அதிபரின் வருகை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவருக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தனது அமெரிக்கப் பயணத்தைத் திடீரெனக் கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபருக்குப் பதிலாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. ஐ.நா பொதுச்சபைக் …

  7. கேப்பாபிலவில் சிறீலங்காப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நில அபகரிப்பிற்கு எதிராக நாளை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரால் முல்லைத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் எவரும் செல்லக்கூடது என்று சிறீலங்காப்படையினர் வீடு வீடாக சென்று அறிவுறுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவில் சிறிலங்கா படையினரால் அமைக்கப்டும் பாரிய படைமுகாமிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலும் பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தினை முடக்கும் முயற்ச்சியில் சிறிலங்கா படையினர் மிக மும்மரக செயற்பட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு …

  8. லண்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சென்ற புதன் கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த 60 பேரில் பலர் கடைசி நேரத்தில் தாம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடைசி நேரத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்கள். திருப்பி அனுப்பப்படவிருந்த 60 பேரையும் ஏற்றி சென்ற பேரூந்து விமான நிலையத்தை அடையும் குறிகிய நேரத்தில் அவர்களை திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்துவதற்காக அகதிகளுக்கான மனிதநேய அமைப்புகளை சார்ந்த மனிதவுரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினார்கள் .அவ்வகையில் அகதிகளை ஏற்றி சென்ற பேரூந்துக்கு அடியில் புகுந்து தம்மை அந்த பேரூந்தோடு விலங்கிட்டு பூட்டினார்கள் . இச் சம்பவத்தை அடுத்து பல ஊடகவியாளர்கள் , மற்றும் காவல்த்துறை குறிப்பிட்ட இடத்திற்கு…

  9. மானிடத்திற்கெதிராகக் குற்றம் புரிந்தவரும் லட்சத்திற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகளைத் துடிக்கத் துடிக்க உயிரோடு படுகொலை செய்வதற்கு காரணமாக இருந்த சூத்திரதாரியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா வருவதை முன்னிட்டு, மாபெரும் கண்டனப் பேரணியைக் கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணிவரை யூனிவசிற்றி அவனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக இக்கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் பிரித்தானியாவிற்கு வருகை தந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை ஐரோப்பிய வாழ் எம் தமிழ் உறவுகள் தொடர் முற்றுகைப் போராட்ட மூலம் திரும்பியோட வைத்த வரலாறு எமக்குண்டு. அதேபோல் இந்தியாவிற்…

  10. By General 2012-09-21 04:08:03 கிழக்கு மாகாண மக்கள் இன, மத, மொழி பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் இணைந்து நிற்கின்றனர். அடுத்த வருடம் வடமாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் ௭ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற் இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஜனாதிபதி பிராணப் முகர்ஜியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=745

  11. [size=1] [size=4]தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டின் சிறுபான்மை இனங்கள் என்பது மட்டுமே அவர் களின் உரிமை இழப்புகளுக்கும் சுதந்திரமற்ற வாழ்வுக்கும் காரணமல்ல. மாறாக சமகாலத்து தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளின் ஆரோக்கியமற்ற தன்மைகளும் விலைபோகும் பண்பாடுகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடம் ஒன்றும் அரசிடம் இன்னொன்றுமாக பேசும் கபடத்தனம் என்பன காரணமாகவும் சிறுபான்மை இனங்கள் தங் கள் உரிமைகளை வென்றெடுக்க முடியவில்லை. கிழக்கு மாகாணத் தேர்தல் நிலைமைகள் இதற்கு நல்ல உதாரணம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தேர்தல் பிரசா ரம் செய்யும்போது கூறியவை, தேர்தல் முடிந்த பின் அவர் காவிக்கொண்ட தந்திரங்கள் முஸ்லிம் மக்க…

    • 19 replies
    • 735 views
  12. அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தனக்குள்ள விருப்பத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். வடமாகாண சபையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இதற்காக அரசாங்கம் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்து, தென் பகுதி மக்களுடன் சிறந்த தொடர்புகளை கொண்டிருப்பதற்காக தான் ஏற்கனவே அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளா…

    • 9 replies
    • 1.4k views
  13. [size=3]தமிழ் இனத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற போதிலும் தமிழினத்தினைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் அந் நடவடிக்கைளுக்கு துணை நிற்கும் தமிழினத்தின் சில சக்திகளும் ஒத்துழைக்கின்ற செயற்பாடுகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. நில ஆக்கிரமிப்பு அத்துமீறிய குடியேற்றம் எனத் தொடரும் நடவடிக்கையின் தொடராக தமிழ் மக்களின் கல்வியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தலைதூக்கியிருக்கின்றன. தமிழ் மக்களின் அடையாளமாக குறிப்பாக கல்வியிலும் அறிவார்ந்தவர்கள் பலரதுதோற்றுவாயாகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் பணத்திற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்குகின்ற நடவடிக்கை தொடர்பிலான திடுக்கிடும் தகவல்கள் தமிழ்லீடருக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. யாழ்ப்பாணத்தி…

  14. [size=3][/size] [size=3][size=4]“நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தின் அமைதி, நிர்வாகம் எல்லாவற்றையுமே குழப்பி விட்டிருக்கின்றது. இந்த முறை நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஒரு சிங்கள அமைச்சருமாக ஐந்து அமைச்சர்களும்தான் இந்த மாகாணத்தை நடத்தப் போகின்றார்கள் என்பது உண்மை. இருந்தாலும் தமிழர்களை எதிரணியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று வரலாற்றில் திரும்ப திரும்ப பிழை விட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக சம்பந்தன் அவர்கள் தான் இதையிட்டு கவலைப்பட வேண்டும். வெட்கப்படவேண்டும். அவர்தான் கிழக்கு மாகாண தமிழர்களை நடு ஆற்றில் விட்டிருக்கின்றார் என்பதுதான் அரசியல் ரீதியான உண்மை” – இவ்வாறு கவலை வெளியிட்டிருக்கின்றார் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் …

  15. [size=2][/size] [size=2][size=4]இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய இறுவட்டுடன் இலங்கை வர முயன்ற தஞ்சை இளைஞனுடன் தொடர்புடையதான சந்தேகநபர்களை விசாரணை செய்வதற்காக இந்திய உளவுப் பிரிவு பொலிஸார் (கியூ பிரிவு) இலங்கை வரவுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஞ்சையை சேர்ந்த மேற்படி இளைஞன், பாகிஸ்தானின் உளவாளியாக செயல்பட்டு வருவதாகவும், இந்திய இராணுவ ரகசியங்களை பணத்திற்காக விற்க இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் கியூ பிரிவு பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விளைஞன் இலங்கைக்கு வரவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து இந்திய இராணுவ ரகசி…

  16. [size=3][size=4]முல்லைதீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் அடாவடியாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சிங்கள மீனவர்கள் நடத்திய தாக்குதலில் அதே இடத்தை சேர்ந்த உள்ளுர் பொதுமகனான தமிழ் மீனவரொருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த தண்ணி முறிப்பு குளத்தில் அண்மைக்காலமாக அடாத்தாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சிங்கள குடியேற்ற வாசிகளான மீனவர்களுடன் உள்ளுர் பொதுமக்கள் முரண்பட்டே வருகின்றனர். இதனால் சீற்றமுற்றிருந்த சிங்கள மீனவர்களும்; உள்ளுர் பொதுமக்களுடன் முரண்பட்டுவந்திருந்தனர்.இது தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது[/size][/size] [size=3][size=4]நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தமிழ் மற்றும் முஸ்லீம் கிராமிய அமைப்புக்களே குறித்த …

  17. [size=4]ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் எதிராக ஜாதிக ஹெல உருமய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வியாழக்கிழமை, கொழும்பில் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள், கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை சென்று அதற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். [/size] [size=4]அத்துடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் ஐ.நா.அலுவலக அதிகாரியிடம் கையளித்தனர்.[/size] http://www.tamilmirror.lk/--main/49023-2012-09-20-14-29-03.html

  18. தழிழ் மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கு அமெரிக்க என்றும் உறுதுணையாக நிற்கும் - புதிய அமெரிக்கத் தூதுவர் September 19, 2012 04:36 pm தழிழ் மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கு அமெரிக்க என்றும் உறுதுணையாக நிற்கும் என இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜெ.சிசன் தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகத்திற்கு இன்று (19) விஜயத்தை மேற்கொண்ட அவர் யாழ்நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தெற்காசியாவில் சிறந்த நூலகமாக கருதப்பட்ட நூலகத்தை பார்த்தமையை நான் பெருமையாக நினைக்கின்றேன். யாழ்.குடநாட்டில் முதல் தடவையான எனது பயணம் அமைந்துள்ளது. இதில் மக்களின் உண்மையான அன்மைப் பெற்றிரக்கின்றேன் என…

  19. [size=4]கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணையில் வாக்குமூலமளிப்பதற்காக யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி, அச்சுவேலி பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்க யாழ். நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதமன்றத்தில் நீதவான் க.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குகனின் மனைவியான முருகானந்தன் ஜெனதா மற்றும் லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராஜ் ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.…

  20. [size=4]தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மீளிணக்கம் சாத்தியமில்லையென மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது. இரண்டு இலட்சம் படையினரில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர் வடக்குக் கிழக்கில் உள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் அகியோர் கலந்துகொண்டு நிலைமைகளை விளக்கியதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். படிப்பினைகள் ஆணைக்க…

  21. [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.[/size] [size=4]இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.[/size] [size=4] [/size]…

    • 3 replies
    • 1.3k views
  22. [size=4] [/size] [size=4]கிழக்கு மாகாணமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசம் ஆகும். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருப்பதானது பாரம்பரிய பிரதேச தன்மையினை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைவரம் குறித்த கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் விஜயசந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இம்முறை தேர்தலில் தமது பாரம்பரிய பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் சிந்தித்து வாக்களித்த…

  23. [size=3][size=4]சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[/size][/size] [size=3][size=4]சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் தமிழின உணர்வாளர். தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேச…

  24. [size=4]பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்ற, தமிழர்கள் 50 பேர், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, வீடுகளை இழந்த ஏராளமான தமிழர்கள், மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். போதுமான வசதி இல்லாததால், பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே, இலங்கையிலிருந்து சமீபத்தில், 50 பேர் பிரிட்டனில் தஞ்சம் அடையச் சென்றனர். [/size] [size=4]ஆனால், அவர்களை, பிரிட்டன் எல்லையோர காவல் படையினர், அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து, இந்த 50 பேரும், தனி விமானத்தில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று இவர்கள், கொழும்பு வந்தடைகின்றனர்.[/size] [size=4]மனித உரிமை மீறல் ந…

    • 5 replies
    • 1.2k views
  25. சிறிலங்காவில் போர் முடிந்திருக்கலாம் ஆனால் ஊடகர்களுக்கு அங்கு பாதுகாப்பில்லை - பிபிசி முன்னாள் செய்தியாளர் [ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 11:38 GMT ] [ நித்தியபாரதி ] மிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு புலம்பெயர்வது அதிகரித்து வருகின்றது. இவ்வாறு பிபிசியின் முன்னாள் செய்தியாளர் Frances Harrison* அண்மையில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.